பத்தாம் வகுப்பு
தமிழ்
புதிய பாடத்திட்டம் - 2025 -26
இயல் - 5
திருக்குறள் - குறு வினாக்கள்
குறுவினா
1. கரப்பிடும்பை இல்லார் – இத்தொடரின் பொருள்
கூறுக:-
கரப்பிடும்பை இல்லார் – தன்னிடம் உள்ள பொருளை மறைத்து வைத்துக் கொண்டு இல்லை
எனக் கூறாதவர்.
2. தஞ்சம் எளியர் பகைக்கு – இவ்வடிக்குரிய அசைகளையும் வாய்பாடுகளையும் எழுதுக.
சீர் |
அசை |
வாய்பாடு |
தஞ்/ சம் |
நேர் – நேர் |
தேமா |
எளி/ யர் |
நிரை – நேர் |
புளிமா |
பகைக்/ கு |
நிரைபு |
பிறப்பு |
3. வறுமையின் காரணமாக உதவி கேட்டு வருபவரின் தன்மானத்தை எள்ளி
நகையாடுவது
குறித்துக் குறளின்
கருத்து என்ன?
ஏளனம் செய்யாமல் பொருள் கொடுப்பவரைக் காணும் போது உள்ளத்தில் மகிழ்ச்சி
உண்டாகும்.
4. பின் வருவனவற்றுள் கூரான ஆயுதம் எது என்று செந்நாப்போதார் கூறுகிறார்? ஏன் என்பதை
எழுதுக.
பெரிய கத்தி, இரும்பு ஈட்டி, உழைத்தால் கிடைத்த
ஊதியம், வில்லும் அம்பும்
v
கூரான ஆயுதம் - உழைத்ததால் கிடைத்த
ஊதியம்.
v
பகைவரை வெல்லும் கூர்மையான
ஆயுதம் உழைத்ததால் கிடைக்கும் ஊதியமே ஆகும்.