10TH-TAMIL-NEW EDTION BOOK -25-26-UNIT-5 -MOZHIYODU VILAYADU

  

பத்தாம் வகுப்பு 

தமிழ்

புதிய பாடத்திட்டம் - 2025 -26

இயல் - 5 

மொழியோடு விளையாடு

இளந்தமிழ் வழிகாட்டி

______________________________________________________________________________________________________

மொழியோடு விளையாடு

தொடரில் விடுபட்ட வண்ணங்களை உங்களின் எண்ணங்களால் நிரப்புக:-

1. வானம் கருக்கத் தொடங்கியது. மழை வரும் போலிருக்கிறது.

2. அனைவரின் பாராட்டுகளால்,வெட்கத்தில் பாடகர் முகம் சிவந்தது

3. வெள்ளந்தி மனம் உள்ளவரை அப்பாவி என்கிறோம்.

4. கண்ணுக்குக் குளுமையாக இருக்கும் பசும் புல்வெளிகளில் கதிரவனின் மஞ்சள் வெயில் பரவிக்கிடக்கிறது.

5. வெயிலில் அலையாதே; உடல் கருத்து விடும்


பொருத்தமானவற்றைச் சொற்பெட்டியில் கண்டு எழுதுக.

தங்கும்,மரம் வீடு, அவிழும், தயங்கும்,மரவீடு, பார்ப்பவர், விருது, தோற்பவர்,கவிழும்,விருந்து

1. விரட்டாதீர்கள்பறவைக்கு மரம் வீடு

   வெட்டாதீர்கள்மனிதருக்கு அவை தரும் மரவீடு

2. காலை ஒளியினில் மலரிதழ் அவிழும்

    சோலைப் பூவினில் வண்டினம் கவிழும்

3. மலைமுகட்டில் மேகம் தங்கும் அதைப்

    பார்க்கும் மனங்கள் செல்லத் தயங்கும்

4. வாழ்க்கையில் தோற்பவை  மீண்டும் வெல்வர்இதைத்

    தத்துவமாய்த் பார்ப்பவர் முயற்சி மேற்கொள்வர்.

5. கைதட்டலே கவிஞர்க்கு விருந்து அவையோரின்

    ஆர்வமே அவருக்கு  விருது.


 அகராதியில் காண்க.

தால்

நாக்கு

உழுவை

புலி

அகவுதல்

குரல் எழுப்புதல்

ஏந்தெழில்

மிகுந்த அழகு

அணிமை

அண்மை,பக்கம்

 

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத        

    என்னை எழுது என்று

சொன்னது இந்தக் காட்சி

    கலை என் சிறப்பை எழுது என்றது

கலைஞர் என் கலையை எழுது என்றார்

     நான் எழுதுகிறேன்

 கலையே உயிர் என்று

 

 செயல் திட்டம்

கலைஞர் தம் வாழ்க்கை வரலாற்றை “ நெஞ்சுக்கு நீதி “ என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.


இதைப் போன்று தம் வாழ்க்கை வரலாற்றை நூலாக எழுதியுள்ள ஆளுமைகளின்


பெயர்களையும், அந்நூலின் தலைப்புகளையும் படத்தொகுப்பாக்கி வகுப்பறையில்


காட்சிப்படுத்துக.

        

எனது போராட்டம்   -        ம.பொ.சிவஞானம்

          

அக்னிச்சிறகுகள்   -        டாக்டர்,ஏ.பி.ஜே.அப்துல் கலாம்

          

சத்தியச் சோதனை -        மகாத்மா காந்தி

          

என் சரிதம்             -        உ.வே.சாமிநாதர்

          

சுய சரிதை             -        வ.உ.சிதம்பரனார்

          

நெஞ்சுக்கு நீதி      -        கலைஞர். மு. கருணாநிதி

          

என் கதை             -        நாமக்கல் கவிஞர்.வெ.ராமலிங்கம்

           

நிற்க அதற்குத் தக.

தமிழர், தமிழர், தமிழ்நாடு என்று வாழ்ந்து மறைந்தவர் கலைஞர். அவர் எழுதியது தமிழின் சுவையை; அவர் எண்ணியது தமிழரின் உயர்வை; அவர் உயர்த்தியது தமிழ்நாட்டின் கலைகளை! நீங்கள் படித்து முடித்தப்பின் உங்கள் துறையின் அறிவைக் கொண்டு தமிழுக்குச் செய்யக் கூடிய தொண்டுகளை வரிசைப்படுத்துக


1.  என் துறையில் வல்லுநரானபின், அத்துறையினைப் பற்றிய நூல்களைத்

    தமிழாக்கம் செய்வேன்

2. என் துறையில் இருக்கும் கலைச் சொற்களைத் தமிழில் மாற்றி மக்களின்

    பொதுப் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவேன்.


3. என் துறையில் உள்ளவற்றை இணையத்தில் தமிழில் வெளியிடுவேன்.


4. என் துறை கலைச்சொற்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து உலகம்

    அறியச் செய்வேன்.


5. தமிழ்மொழியை பெருமையை எனது துறையில் வெளிபடுத்துவேன்.

6. என் துறை சார்ந்த நூல்களை தமிழ் மொழியில் எழுதுவேன்.

 

படிப்போம்; பயன்படுத்துவோம்!


Play wright

 நாடக ஆசிரியர்

Screen play

திரைக்கதை

Story teller   

கதை சொல்லி

Aesthetics - 

அழகியல்,முருகியல்

 

அறிவை விரிவு செய்

v  தக்கையின் மீது நான்கு கண்கள்       -      சா. கந்தசாமி


v  திருக்குறள் – கலைஞர் உரை          -      கலைஞர். மு. கருணாநிதி

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post