பத்தாம் வகுப்பு
தமிழ்
புதிய பாடத்திட்டம் - 2025 -26
இயல் - 5
மொழியை ஆள்வோம்
இளந்தமிழ் வழிகாட்டி
-----------------------------------------------------------------------------------------------------------------------
மொழியை ஆள்வோம்
மொழி பெயர்ப்பு
கலைஞர் கருணாநிதி தமிழ்
இலக்கியத்திற்கு தனது பங்களிப்பிற்காக அறியப்பட்டவர். அவரது பங்களிப்புகள் பரந்த
அளவில் உள்ளன;
கவிதைகள், கடிதங்கள், திரைக்கதைகள்,
நாவல்கள், சுயசரிதைகள், வரலாற்று
நாவல்கள், மேடை நாடகங்கள், உரையாடல்கள்
மற்றும் திரைப்படப் பாடல்கள். திருக்குறளுக்கு குறளோவியம், தொல்காப்பியப்
பூங்கா, பூம்புகார், கவிதைகள், கட்டுரைகள், நூல்கள் எனப் பல நூல்களை எழுதியுள்ளார்.
இலக்கியம் மட்டுமின்றி கலை மற்றும் கட்டிடக்கலை மூலமாகவும் கருணாநிதி தமிழ்
மொழிக்கு பங்காற்றியுள்ளார். திருக்குறளைப் பற்றி கலைஞர் எழுதிய குறளோவியம் போல்,
வள்ளுவர் கோட்டம் கட்டியதன் மூலம் சென்னையில், திருவள்ளுவருக்கு கட்டிடக்கலையை அளித்தார். கன்னியாகுமரியில் 133 அடி உயர
திருவள்ளுவர் சிலையை கருணாநிதி நிறுவி
மரியாதை செய்துள்ளார்.
தொடர்களை அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டுள்ளவாறு மாற்றுக.
1. அழைப்பு மணி ஒலித்தது. கயல்விழி கதவைத் திறந்தார். ( கலவைச் சொற்றொடராக
மாற்றுக )
விடை: அழைப்பு மணி ஒலித்ததால் கயல்விழி கதவைத் திறந்தார்
2. இன்னாசியார் புத்தகங்களை வரிசைப்படுத்தினார்.
அவற்றைப் புத்தக அடுக்கங்களில்
அடுக்கிவைத்தார்.புத்தகங்களைக்
கேட்டவர்களுக்கு எடுத்துக் கொடுத்தார்.(தொடர்
சொற்றொடராக மாற்றுக )
விடை: இன்னாசியார் புத்தகங்களை வரிசைப்படுத்தி, அவற்றைப் புத்தக அடுக்கங்களில்
அடுக்கி வைத்து,புத்தகங்களைக் கேட்டவர்களுக்கு எடுத்துக் கொடுத்தார்
3. கலைஞர் எழுத்தைத்
தமது ஆயுதமாகக் கொண்டு வாழ்ந்தார். கலைஞர், எழுத்துவழியாகத் தமது எண்ணங்களைக் கடைக்கோடித்
தமிழனுக்கும் கொண்டு சென்றார்.( கலவைச் சொற்றொடர்களாக மாற்றுக )
விடை: எழுத்தைத் தமது ஆயுதமாகக்
கொண்டு வாழ்ந்த கலைஞர், எழுத்துவழியாகத் தமது எண்ணங்களைக் கடைக்கோடித் தமிழனுக்கும்
கொண்டு சென்றார்.
4. காற்று மாசுபாட்டைக்
குறைக்க குப்பை மேலாண்மையை மேற்கொண்டு பொதுப் போக்குவரத்துக்கு முன்னுரிமை தந்து மின்னாற்றலால்
இயங்கும் ஊர்திகளைப் பயன்படுத்த வேண்டும்.
விடை: காற்று மாசுபாட்டைக் குறைக்க குப்பை மேலாண்மை மேற்கொள்ள வேண்டும்.
பொதுப் போக்குவரத்துக்கு முன்னுரிமை தர வேண்டும்.
மின்னாற்றலால் இயங்கும் ஊர்திகளைப் பயன்படுத்த
வேண்டும்.
5. ஓடிக் கொண்டிருந்த மின் விசிறி சட்டென நின்றவுடன்,அறையில்
உள்ளவர்கள் பேச்சு தடைபட்டது.( தனிச் சொற்றொடராக மாற்றுக
)
விடை: ஓடிக்
கொண்டிருந்த மின் விசிறி சட்டென நின்றது. அறையில் உள்ளவர்கள் பேச்சு தடைபட்டது.
பிறமொழிச்சொற்களைத்
தமிழ்ச் சொற்களாக மாற்றுக
புதிர்
உங்களிடம் ஏழு கோல்டு பிஸ்கட் உள்ளது.
அதில் ஒன்று மட்டும் எடை குறைவானது.
உங்களிடம் உள்ள ஒரு தராசை இரு முறைகள் மட்டுமே யூஸ் பண்ணி
வெயிட் குறைந்த கோல்டு பிஸ்கட்டைக் கண்டுபிடிக்கவும்.
விடை
தராசின்
இரண்டு தட்டுகளிலும் மூன்று மூன்று கோல்டு பிஸ்கட்டுகளை வையுங்கள்.இரண்டு
தட்டுகளும் ஈக்வலாக இருந்தால்,கையில் மிச்சம் உள்ள பிஸ்கட்டே வெயிட் குறைவானது.
பட் ஆனால், ஒரு பக்க தராசுத் தட்டு உயர்ந்தால் அதில் உள்ள மூன்று பிஸ்கட்களில்
ஒன்று வெயிட் குறைவானது. அந்த மூன்று பிஸ்கட்டுகளை மட்டும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இரண்டு தட்டுகளிலும் ஒரு ஒரு பிஸ்கட்டைப் போட்டு இதே எக்ஸ்பெரிமெண்ட்டை
ரிப்பீட் செய்து ஆன்சரைக் கண்டுபிடியுங்கள்! ஆல்
தி பெஸ்ட்!.
பிறமொழிச் சொல் |
தமிழ்ச்சொல் |
பிறமொழிச் சொல் |
தமிழ்ச்சொல் |
கோல்ட் பிஸ்கட் |
தங்கக்கட்டி |
வெயிட் |
எடை |
யூஸ் |
பயன்படுத்தி |
எக்ஸ்பெரிமெண்ட் ரிப்பீட் |
சோதனை மீண்டும் |
ஆல் தி பெஸ்ட் |
வாழ்த்துகள் |
ஈக்வலாக |
ஈடாக |
பட் |
ஆனால் |
ஆன்சரை |
விடையை |
பத்தியைப் படித்து
வினாவிற்கு விடையளிக்க
பத்தி : பாடநூல் பக்கம் : 112 & 113
வினாக்கள் :
அ. நிகழ்த்துக் கலைகள் எத்தைய சிறப்புகளைக் கொண்டவை?
கண்ணுக்குக்
காட்சியையும், சிந்தைக்கு கருத்தினையும் கலைத்திறனோடு வழங்கும் சிறப்பினைக் கொண்டவையாகும்.
ஆ. மரபார்ந்த கலைவடிவங்கள் யாவை?
கரகாட்டமும், காவடியாட்டமும்.
இ. நிகழ்த்து கலைகளில் முத்தமிழும் உள்ளடங்கி உள்ளன. கருத்தை விளக்குக,
இசை,வசனம்,ஆடல்,பாடல் எல்லாம் கலந்து இருப்பதால் முத்தமிழும்
உள்ளடங்கி உள்ளன.
ஈ. நிகழ்த்துக்கலைகளைப் பாதுகாக்க நம்மால் செய்ய இயலும் எவையேனும்
இரண்டு செயல்பாடுகளைக் குறிப்பிடுக.
Ø நமது இல்லங்களில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளுக்கு நிகழ்த்துக்
கலைகளை அரங்கேற்றலாம்.
Ø நிகழ்த்துக் கலைகள் பற்றிய தகவல்களை இணைய தளங்களில் பகிர்ந்து
அவற்றை உலகறியச் செய்யலாம்.
பின்வரும்
செய்தியைப் படித்து வினாக்கள் உருவாக்குக.
தெருக்கூத்தைத்
தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர்; “ நாடகக் கலையை மீட்டெடுப்பதே தமது
குறிக்கோள் “ என்றவர் இவர். தமிழ்நாட்டின் வழிவழி நாடகமுறையான கூத்துக்கலையின்
ஒப்பனை முறை, கதை சொல்லும் முறைகளையும் எடுத்துக்கொண்டு புதுவிதமான நாடகங்களை
உருவாக்கியவர். அதே வேளையில் நாடகத்தில் பயன்படுத்தும் நேரடி இசைமுறையை அறிமுகம்
செய்து இசையிலும் மாற்றங்களை நிகழ்த்தியவர்.
இவரின் நாடகங்கள் பெரும்பாலும்
சமூக அரசியல் மாற்றங்களைப் பேசின. இந்தியாவில் மட்டுமன்றி உலகின் பல்வேறு
நகரங்களிலும் இவரது நாடகங்கள் நடத்தப்பட்டன. இவர் இந்திய அரசின் தாமரைத்திரு
விருதையும் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் பெற்றவர். இவர் தான் கூத்துப்பட்டறை
ந.முத்துசாமி என்ற கலைஞாயிறு.
1. ந,முத்துசாமி அவர்களின் குறிக்கோள் யாது?
2. ந,முத்துசாமி
உருவாக்கிய புதுவிதமான நாடக முறை யாது?
3. ந. முத்துசாமி பெற்ற
விருதுகள் யாவை?
கட்டுரை எழுதுக
உங்கள் பகுதியில் நடைபெற்ற
கலைத்திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.
குறிப்புச்சட்டம் |
முன்னுரை |
அறிவிப்பு |
அமைப்பு |
கரகாட்டம்,
காவடியாட்டம் |
பொய்க்கால்
குதிரையாட்டம் |
கூத்துகள்
அரங்கு |
சிற்ப
அரங்கு |
முடிவுரை |
முன்னுரை:
கிராமப்புற/சிற்றூர் மக்களின் கலை, அழகியல், பண்பாடு ஆகிய்வற்றின்
எச்சங்களாக இருப்பவை கலைகள். எங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத் திருவிழாவிற்குச்
சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாகக் காணலாம்.
அறிவிப்பு:
எங்கள் ஊர் சேலத்தில் அரசு சார்பில் கலைத்திருவிழா
மூன்று நாட்கள் நடப்பதற்கான அறிவிப்பு வந்தது.
அமைப்பு:
சேலத்தில் நேரு கலையரங்கத்தில் ஒவ்வொரு நிகழ்கலைகளுக்கான
அரங்குகள் எத்திசையில் எங்கெங்கு அமைக்கப்ப்பட்டுள்ளன என்பதற்கான வரைபடமும் இருந்தது.
கரகாட்டம்,
காவடியாட்டம் :
·
கலைஞர்கள் பலர் பலவிதமான கரகத்துடன் ஆடிய கரகாட்டம்
கண்ணைக் கவர்ந்தது.
·
தோளில் காவடியைச் சுமந்தவாறு ஆடும் காவடியாட்டமும்
மனதைக் கவர்ந்தது.
பொய்க்கால்
குதிரையாட்டம்:
குதிரை வடிவக் கூட்டுக்குள் இருந்து,
பாதத்துக்குக் கீழ் கட்டையைக் கட்டிக் கொண்டு ஆடிய பொய்க்கால் குதிரையாட்டமும் உற்சாகம்
தரக்கூடிய நிகழ்த்துகலைகளாக இருந்தன.
கூத்து அரங்குகள்: ஆடல் பாடலுடன் தோலால் செய்த வெட்டு வரைபடங்களைத் திரைசீலையில் நாடகம் போல நடைபெற்ற கூத்துகள் அனைத்தும் சூழல்
பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு என்ற கருத்தையொட்டி அமைந்திருந்தது.
சிற்ப அரங்கு :
சிற்ப அரங்கில் சென்றால் சுண்ணக்கட்டியில் சிற்பம்,
காய்கறியில் சிற்பம், களிமண்ணில் சிற்பம், மண்ணில் சிற்பம், சோப்பில் சிற்பம் என பலவிதங்களில் பல்வேறு விதமான சிற்பங்கள் சிறப்பாகவும்,
வியப்பாகவும் அமைந்தது.
முடிவுரை:
அரசு நடத்தி வரும் இந்த
கலைத்திருவிழா கூடத்தில் பல்வேறு விதமான அரங்குகள் இருந்தன. இந்த அரங்குகள்
எல்லாம் சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு ஒரே மையக் கருத்தை மையமாகக்
கொண்டு நிகழ்த்தப்பட்டன.