10TH-TAMIL-NEW EDTION BOOK -25-26-UNIT-5- BIG QUESTION

  

பத்தாம் வகுப்பு 

தமிழ்

புதிய பாடத்திட்டம் - 2025 -26

இயல் - 5 

நெடு  வினாக்கள்

இளந்தமிழ் வழிகாட்டி

----------------------------------------------------------------------------------------------------------------------------

நெடுவினா

1. போராட்டக் கலைஞர் – பேச்சுக் கலைஞர் – நாடகக் கலைஞர் – திரைக் கலைஞர் – இயற்றமிழ்க் கலைஞர்  ஆகிய தலைப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.

குறிப்புச்சட்டம்

 

போராட்டக் கலைஞர்

 பேச்சுக் கலைஞர்

 நாடகக் கலைஞர்

 திரைக் கலைஞர்

இயற்றமிழ்க் கலைஞர்  

முன்னுரை :

        பன்முக ஆற்றலைக் கொண்ட கலைஞரின், போராட்டக் கலைஞர், பேச்சுக் கலைஞர்,

 நாடகக் கலைஞர், திரைக்கலைஞர், இயற்றமிழ் கலைஞர்  என்ற பன்முகத்தன்மையை நாம்

 இக்கட்டுரையில் காண்போம்.

போராட்டக் கலைஞர் :


Ø  பள்ளி வயதிலேயே போராடியவர் கலைஞர்.


Ø  இந்தி திணிப்பை எதிர்த்து போராட மாணவர்களைத் திரட்டி திருவாரூர் வீதிகளில்


 போராடியவர்.

பேச்சுக் கலைஞர் :


Ø  மேடைப் பேச்சில் பெருவிருப்பம் கொண்டவர் கலைஞர். “ நட்பு “ என்னும் தலைப்பில்


 கலைஞர் ஆற்றிய சொற்பொழிவை பலரும் பாராட்டினர்

நாடகக் கலைஞர் :


Ø  1944 இல் “பழநியப்பன்“ என்னும் முதல் நாடகத்தை எழுதி அரங்கேற்றினார்.


Ø  தூக்குமேடை நாடகத்தில்  மாணவராக நடித்து “ கலைஞர் “ என்னும் சிறப்பு பட்டம்


 பெற்றார்.

திரைக் கலைஞர் :


Ø  “ ராஜகுமாரி “ திரைப்படம் மூலம் வசன எழுத்தாளாராக அறிமுகமானார்.


Ø  மருதநாட்டு இளவரசி, நாம், பூம்புகார், மந்திரிகுமாரி போன்ற பல படங்களுக்கு கதை


 மற்றும் வசனங்களை எழுதியுள்ளார்.

இயற்றமிழ் கலைஞர்:


Ø  நளாயினி, சித்தார்த்தன் சிலை, சந்தனக் கிண்ணம், தாய்மை, புகழேந்தி முதலிய


 சிறுகதைகள் எழுதியுள்ளார்.


Ø  ரோமாபுரி பாண்டியன், பொன்னர் சங்கர், தென்பாண்டி சிங்கம் உள்ளிட்ட


 புதினங்களையும் எழுதியுள்ளார்.


முடிவுரை :    

    அரசியல் மட்டுமன்றி, கலைத்துறை, பேச்சுக்கலை, பட்டிமன்றம், கவியரங்கம் என

 பலத்துறைகளிலும் தன்னுடைய பன்முக ஆற்றலை வெளிப்படுத்தி பல்துறை வித்தகராக 

விளங்கினார் கலைஞர்.

2 . சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன் என்ற தலைப்பில் இலக்கிய உரை எழுதுக.

   அன்பும் பண்பும் குணச்சித்திரமும் கொண்ட தலைவர் அவர்களே! தேர்ந்தெடுத்த பூக்களைப்

 போன்று வரிசை தொடுத்து அமர்ந்திருக்கும் ஆன்றோர்களே! அறிஞர் பெருமக்களே! வணக்கம்,

இயற்கை கொலு வீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலைநிகழ்வே நடப்பதான தோற்றமாகக்

 கம்பன் காட்டும் கவி..... தண்டலை மயில்கள் ஆட.......  இவ்வுரையைத் தொடர்க.

குறிப்புச்சட்டம்

முன்னுரை

பொருள்

முடிவுரை

முன்னுரை :-

        இயற்கை கொலு வீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலைநிகழ்வே நடப்பதான தோற்றமாகக்

 கம்பன் காட்டும் கவியில்  தண்டலை மயில்கள் ஆட எனத் தொடங்கும் உரையைக் காண்போம்.

பொருள் :-

Ø  மயில்கள் அழகுற ஆடுகிறது.


Ø  தாமரை மலர்கள் விளக்கு போல் விரிகிறது.


Ø  மேகங்களின் இடி மத்தளமாய் ஒலிக்கிறது.


Ø  குவளை மலர்கள் கண்கள் விழித்துப் பார்ப்பது போல உள்ளது.


Ø  அலைகள் திரைச்சீலைகளாய் விரிகிறது.


Ø  வண்டுகளின் ரீங்காரம் மகர யாழின் இசை போல இருக்கிறது


முடிவுரை :-

        

இயற்கை கொலு வீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலைநிகழ்வே நடப்பதான தோற்றமாகக் 


கம்பன் காட்டும் கவியில் தண்டலை மயில்கள் ஆட எனத் தொடங்கும் உரையைக் கண்டோம்.


3. பாய்ச்சல் கதையின் மையக்கருத்தைக் குறிப்பிட்டுக் கதையைச் சுருக்கி எழுதுக.

பாய்ச்சல்

குறிப்புச்சட்டம்

முன்னுரை


அனுமார்


அனுமாரி நெருப்பாட்டம்


அழகுவின் உதவி


அழகுவின் ஆட்டம்


அனுமார் மகிழ்ச்சி


முடிவுரை

முன்னுரை:

                            தன் கலையைப் பின்பற்ற தகுந்த வாரிசு உருவாகிற போது, ஏற்படும் கலைஞனின்

 மகிழ்ச்சி அளப்பரியது. பாய்ச்சல் கதையின் மையக் கருத்தை இக்கட்டுரையில் காண்போம்.


அனுமார்:


Ø  இரண்டு கால்களும்  மின்னல் வெட்டி மறைவது போலத் துள்ளிப் பாய்ந்து சென்றன.


Ø  ஆளுயர குரங்கு ஒன்று மரத்தின் மேலிருந்து  இறங்குவதை அழகு கண்டான்.


அனுமாரின் நெருப்பாட்டம்:


Ø  பெருங்குரல் எழுப்பியபடி அனுமார் பந்தல் கால் வழியாகக் கீழே குதித்தார்.


Ø  அனுமார் வாலில் பெரிய தீப்பந்தம்  புகை விட்டு எரிந்து கொண்டிருந்தது.


அழகுவின் உதவி:


Ø  வாலை அழகு இடத்தில் ஒப்படைத்து விட்டுச் சென்றனர்.


Ø  அனுமார் சென்ற இடத்திற்கெல்லாம் அழகு வாலைத் தூக்கிக் கொண்டு சென்றான்.


அழகுவின் ஆட்டம்:


Ø  அனுமார் கழற்றி வைத்திருந்த துணி, சலங்கை,முகத்திற்குப் போடப்படுபவை ஆகியவற்றைத்

 தான் அணிந்து கொண்டு அனுமார்  போல ஆடினான் அழகு.


Ø  அனுமார்  தூணில்  சாய்ந்து கொண்டுபரவாயில்லை கட்டிக்கிட்டு என்றார்”. அவனும் நன்றாக 

ஆடினான்.

அனுமார் அடைந்த மகிழ்ச்சி:

Ø  அனுமார் அழகுக்கு ஆட்டத்தை சொல்லிக்கொடுத்தார்.

 

Ø  அனுமார் தன்னை மீறிய மகிழ்ச்சியோடு,” பேஷ் பேஷ் உடனே பிடிச்சுகிட்டியே”  என்றார்.

 

Ø  நிறைந்த மனதோடு அழகுவைப் பார்த்தார்.

 

முடிவுரை:


          தன் கலையைப் பின்பற்ற தகுந்த வாரிசு உருவாகிற போது, ஏற்படும் கலைஞனின் மகிழ்ச்சி

 அளப்பரியது என்பதை பாய்ச்சல் கதையின் மையக் கருத்தைக் கொண்டு  கண்டோம்.

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post