பத்தாம் வகுப்பு
தமிழ்
புதிய பாடத்திட்டம் - 2025 -26
இயல் - 5
சிறு வினாக்கள்
இளந்தமிழ் வழிகாட்டி
______________________________________________________________________________________________________
சிறு வினா
1. மருத நிலத்தில்
இயற்கை கொலுவீற்றிருக்கும் காட்சியைக் கம்பரின் கலைநயத்துடன்
எழுதுக.
v சோலைகளில் மயில்கள் ஆடுகின்றன.
v விரிந்த தாமரை மலர்கள் விளக்குகள் போல் தோன்றுகின்றன.
v மேகங்கள் மத்தள ஒலியாய் எழுகின்றன.
v குவளை மலர்கள், கண்கள் விழித்துப் பார்ப்பது
போல் காணப்படுகின்றன.
v அலைகள், திரைச்சீலைகளாய் விரிகின்றன.
v வண்டுகள், மகர யாழின் தேனிசைப் போல ரீங்காரம் பாடுகின்றன.
2. கம்பராமாயணப் பாடல் அடிகளுக்கு ஏற்ற பொருளை எழுதுக.
காற்றாடி போல எல்லா இடங்களிலும் திரிகின்ற, வில்லைப் பிடித்த காலனின் தூதர் கையிலே |
|
தெண்டிரை எழினி காட்டத் தேம்பிழி மகர யாழின் வண்டுகள் இனிது பாட |
நீர் நிலைகள் எழுப்பும் அலைகள், திரைச்சீலைகளாய் விரிகின்றன. வண்டுகள், மகர யாழின் தேனிசைப் போல ரீங்காரம் பாடுகின்றன. |
வேழ நெடும்படை கண்டு விலங்கிடும் வில்லாளோ |
யானைகள் கொண்ட படையைக் கண்டு புறமுதுகு காட்டி விலகிச் செல்கின்ற வில்வீரனோ நான். |
3. தமிழ்மொழிக்குக் கலைஞர் செய்த சிறப்புகளுள் நீங்கள் அறிந்து
கொண்ட இரண்டினை
எழுதுக.
v
கல்வித்துறையை
பள்ளிக்கல்வி, உயர்கல்வி என இரண்டாகப் பிரித்தார்.
v
“
தமிழ் வளர்ச்சித் துறை “ எனப் புதியதாக ஒரு துறையை உருவாக்கினார்.
v தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை அனைத்து அரசு விழாக்களிலும் தொடக்கப்
பாடலாக பாடச் செய்தார்.
v 2010 இல் கோவையில் “ உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை “ நடத்தி தமிழின்
பெருமையை உலகறியச்
செய்தார்.
4. “ கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது; மலைப்பகுதிகளில் மலைப் பயிர்களும்
நிலப் பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன.” – காலப் போக்கில் பல மாற்றங்கள்
நிகழ்ந்த போதிலும், பண்டைத் தமிழரின் திணைநிலைத் தொழில்கள் இன்றளவும்
தொடர்வதையும் அவற்றின் இன்றைய
வளர்ச்சியையும் எழுதுக.
v கடற்கரைகளில் ஓய்வு விடுதிகள் பெருகி உள்ளன.எனினும் மீன் பிடித்தல், உப்பு காய்ச்சுதல்
போன்ற தொழில்கள் நடைபெறுகின்றன.
v மலைப்பகுதிகளில் ஓய்வு இல்லங்கள் கட்டப்பட்டுள்ளன.எனினும் காபி,தேயிலைத்
தோட்டங்கள் அமைக்கப் பெற்றுள்ளன.
v நிலப்பகுதிகளில் வீடுகள்,தொழிற்சாலைகள் பெருகி உள்ளன. எனினும் உழவுத் தொழில்
நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.