10TH-TAMIL-NEW EDTION BOOK -25-26-UNIT-5 -2 MARK

 

பத்தாம் வகுப்பு 

தமிழ்

புதிய பாடத்திட்டம் - 2025 -26

இயல் - 5 

குறு  வினாக்கள்

இளந்தமிழ் வழிகாட்டி
----------------------------------------------------------------------------------------------------------------------------

1. சரயு ஆறு பாயும் இடங்களைப் பட்டியலிடுக.


v  மகரந்தம் சிந்தும் சோலைகள்


v  மரம் செறிந்த செண்பகக் காடுகள்


v  அரும்புகள் அவிழ்ந்து மலரும் பொய்கைகள்


v  புதுமணல் தடாகங்கள்


v  கமுகுந்தோட்டங்கள்


v  நெல்வயல்கள்

2. அயற்கூற்றாக எழுதுக.

“ கலைஞர் பழுமரக்கனிப் பயன் கொள்ளும் பேச்சாளர். படித்தவரைக்

 கவரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளர்” – பேராசிரியர் அன்பழகனார்.


        கலைஞரை பேராசிரியர் அன்பழகனார், பழுமரக்கனிப்  பயன் கொள்ளும்

 பேச்சாளர் என்றும், படித்தவரைக் கவரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளர் 

என்றும் பாராட்டியுள்ளார்.


3. உறங்குகின்ற கும்பகன்னஎழுந்திராய் எழுந்திராய்


   காலதூதர் கையிலேஉறங்குவாய் உறங்குவாய்


   கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை


 உறங்கச்     சொல்கிறார்கள்?


Ø  கும்பகர்ணனே எழுந்திடுவாய்! எழுந்திடுவாய்!


Ø  கால தூதர் கையிலே படுத்து உறங்கிடுவாய் உறங்கிடுவாய்.


4. கீழ் வரும் தொடர்களில் பொருந்தாத முதல்,  கருப்பொருளைத் திருத்தி எழுதுக.

உழவர்கள் மலையில் உழுதனர்

முல்லைப் பூச் செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.


v  உழவர்கள் வயலில் உழுதனர்.


v  தாழைப் பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச்

 சென்றனர்.

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post