பத்தாம் வகுப்பு
தமிழ்
புதிய பாடத்திட்டம் - 2025 -26
இயல் - 5
ஒரு மதிப்பெண் - வினாக்கள்
பலவுள் தெரிக
1 கூற்று
1 : போராட்டப் பண்புடனே வளர்ந்தவர் கலைஞர்.
கூற்று 2 : அவருக்குள் இருந்த கலைத்தன்மை வளர அது
உதவியது
அ) கூற்று 1 சரி 2 தவறு
ஆ) கூற்று 1 மற்றும் 2 தவறு
இ) கூற்று 1 தவறு 2 சரி
ஈ) கூற்று 1 மற்றும் 2 சரி
2. “ மையோமர கதமோமறி கடலோ மழைமுகிலோ “ இப்பாடல் அடியில்
குறிப்பிடப்படாத நிறத்தைக் கண்டறிக.
அ) கருமை
ஆ) பச்சை
இ) பழுப்பு
ஈ) நீலம்
3. தூக்குமேடை என்னும் நாடகத்தின் பாராட்டு விழாவில்தான் கலைஞர்
என்ற சிறப்புப்பெயர் வழங்கப்பட்டது. இத்தொடருக்கான வினா எது?
அ) தூக்கு மேடை நாடகத்தில் நடித்தவர் யார்?
ஆ) கலைஞர் என்ற
சிறப்புப்பெயர் எப்போது வழங்கப்பட்டது?
இ) தூக்கு மேடை என்பது திரைப்படமா? நாடகமா?
ஈ) யாருக்குப் பாராட்டு விழா நடத்தப்பட்டது?
4. சித்திரை, வைகாசி மாதங்களை _______________ காலம் என்பர்.
அ) முதுவேனில்
ஆ) பின்பனி
இ) முன்பனி
ஈ) இளவேனில்
5. குளிர் காலத்தைப்
பொழுதாகக் கொண்ட நிலங்கள்__________________
அ) முல்லை,குறிஞ்சி,மருத நிலங்கள்
ஆ) குறிஞ்சி,பாலை,நெய்தல் நிலங்கள்
இ) குறிஞ்சி,மருதம்,நெய்தல் நிலங்கள்
ஈ) மருதம்,நெய்தல்,பாலை நிலங்கள்