10TH-TAMIL-NEW EDTION BOOK -25-26-UNIT-4-MOZHIYODU VILAYADU

 

பத்தாம் வகுப்பு 

தமிழ்

புதிய பாடத்திட்டம் - 2025 -26

இயல் - 4 

மொழியோடு விளையாடு

இளந்தமிழ் வழிகாட்டி

______________________________________________________________________________________________________

புதிர்ப் பாடலைப் படித்து விடையைக் கண்டுபிடிக்க:-

Ø    தார்போன்ற நிறமுண்டு கரியுமில்லை

Ø    பார் முழுதும் பறந்து திரிவேன் மேகமுமில்லை

Ø    சேர்ந்து அமர்ந்து ஒலிப்பேன் பள்ளியுமில்லை

Ø    சோர்ந்து போகாமல் வீடமைப்பேன் பொறியாளருமில்லை

Ø    வீட்டுக்கு வருமுன்னே, வருவதைக் கூறுவேன்.நான் யார்?________காகம்_________


தொழிற்பெயர்களின் பொருளைப் புரிந்து கொண்டு தொடர்களைமுழுமை செய்க.

1. நிலத்துக்கு அடியில் கிடைக்கும் ____புதையல் _____யாவும் அரசுக்கே

 சொந்தம்.நெகிழிப் பொருள்களை மண்ணுக்கு அடியில் ___ புதைத்தல் __ 

நிலத்தடி நீர் வளத்தைக் குன்றச் செய்யும்.(புதையல்,புதைத்தல்)


2. காட்டு விலங்குகளைச் __சுடுதல் __தடை செய்யப்பட்டுள்ளது. செய்த

 தவறுகளைச் __ சுட்டல் __திருத்த உதவுகிறது.(  சுட்டல்,சுடுதல் )


3. காற்றின் மெல்லிய __ தொடுதல் ____ பூக்களைத் தலையாட்ட வைக்கிறது.

கைகளின் நேர்த்தியான ____ தொடுத்தல் ____பூக்களை மாலையாக்குகிறது

.( தொடுத்தல்,தொடுதல் )


4. பசுமையான _ காட்சி ___ஐக்__ காணுதல் _ கண்ணுக்கு நல்லது.

 (காணுதல்,காட்சி)


5. பொது வாழ்வில்_ நடித்தல்__கூடாது _நடிப்பு _இல் அவரை மிஞ்ச ஆள்

 கிடையாது.

( நடித்தல்,நடிப்பு )

அகராதியில் காண்க.

மன்றல்

திருமணம், மணம் ( வாசனை )

அடிச்சுவடு

காலடிச்சுவடு

அகராதி

அகரவரிசையில் பொருள் தரும் நூல்

தூவல்

தூவானம், இறகு, எழுதுகோல்

மருள்

மயக்கம், பேய், வியப்பு

 செயல் திட்டம்

“பள்ளியைத் தூய்மையாக வைத்திருத்தல் “ – குறித்த செயல்திட்ட வரைவு ஒன்றை உருவாக்கித் தலைமை ஆசிரியரின் ஒப்புதல் பெற வேண்டி விண்ணப்பம் வரைக.

அனுப்புநர்

அமுதன்.வெ

10, ஆம் வகுப்பு,

அரசு உயர்நிலைப் பள்ளி, சேலம்.

பெறுநர்

தலைமை ஆசிரியர் அவர்கள்,  

அரசு உயர் நிலைப்லைப்பள்ளி,

சேலம்.

ஐயா,

பொருள்:- பள்ளித் தூய்மை - செயல்திட்ட வரைவு - ஒப்புதல் வேண்டுதல் - சார்பு.

நமது 'பள்ளியைத் தூய்மையாக வைத்திருத்தல்' குறித்த செயல்திட்ட வரைவு ஒன்றை உருவாக்கியுள்ளேன். அதனைச் செயல்படுத்திட ஒப்புதல் வழங்கிடுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

 செயல்திட்ட வரைவு :

1) வகுப்பறைத் தூய்மை – தினமும் காலை 8.00 மணி

2) வளாகத் தூய்மை - தினமும் மாலை 5.00 மணி

3) குடிநீர்த் தொட்டி பராமரிப்பு - திங்கள், வெள்ளி

4) வீணாகும் நீரைசெடிகளுக்கு செல்லுமாறு மாற்றிவிடுதல்

இடம்: சேலம்

நாள்: 16 /05 /2025

இப்படிக்கு,

தங்கள் உண்மையுள்ள,

அமுதன்.வெ

உறைமேல் முகவரி:

பெறுநர்:

தலைமை ஆசிரியர் அவர்கள்,  

அரசு உயர் நிலைப்பள்ளி,

சேலம்.

 

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத        

   என்னை எழுது என்று

சொன்னது இந்தக் காட்சி

    மரம் என் அழிவை   எழுது என்றது

மனிதன் என் அறியாமையை  எழுது என்றான்

   நான் எழுதுகிறேன்  

 மரமே வரம் என்று

 

நிற்க அதற்குத் தக.

பள்ளியிலும், வீட்டிலும் நீ நடந்து கொள்ளும் விதம் குறித்துப் பட்டியலிடுக.

பள்ளியில் நான்

வீட்டில் நான்

1.  நேரத்தைச் சரியாகக் கடைபிடிப்பேன்

1. அதிகாலையில் எழுதல்.

2. உடன் பயிலும் மாணவரின் திறமையைப் பாராட்டுவேன்

2. வீட்டின் அருகில் பயிலும் மாணவர்களின் திறமையைப் பாராட்டுவேன்

3.  ஆசிரியர் சொல்படி நடப்பேன்..

3.  பெற்றோர் சொல்படி நடப்பேன்.

4.  பணிவுடன் நடந்துகொள்வேன்.

4. பணிவுடன் நடந்துகொள்வேன்.

5. நண்பர்களுடன்  கலந்து உரையாடுவேன். ..

5. உறவினர்களுடன் கலந்து உரையாடுவேன்.

6. நண்பர்களுக்கு உதவிகள் செய்வேன்.

6. பெற்றோருக்கு உதவிகள் செய்வேன்

 

படிப்போம்; பயன்படுத்துவோம்

Translation

மொழிபெயர்ப்பு

Culture

பண்பாடு

Human Resource

மனித வளம்

Transfer

மாறுதல்

Multi media

பல்துறை ஊடகம்

 

அறிவை விரிவு செய்

v  சிறந்த சிறுகதைகள் பதின்மூன்று        -        தமிழில் வல்லிக்கண்ணன்

v  குட்டி இளவரசன்                               -        தமிழில் வெ.ஸ்ரீராம்

v  ஆசிரியரின் டைரி                               -        தமிழில் எம்.பி.அகிலா

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post