10TH-TAMIL-NEW EDTION BOOK -25-26-UNIT-4 - MOZHIYAI ALVOM

  

பத்தாம் வகுப்பு 

தமிழ்

புதிய பாடத்திட்டம் - 2025 -26

இயல் - 4

மொழியை ஆள்வோம்

இளந்தமிழ் வழிகாட்டி 

-----------------------------------------------------------------------------------------------------------------------

மொழியை ஆள்வோம்

மொழிபெயர்ப்பு

Translation is an art in itself. No one can do that. A translator should be neutral and not

attached to any language. Specifically, he should be proficient in both the languages

i.e. both the language and the source language. They should be familiar with the social 

and cultural conditions of the both languages.

மொழிபெயர்ப்பு என்பது தனிக்கலை. அதனை யார் வேண்டுமானாலும் செய்து விட முடியாது. மொழிபெயர்ப்பாளர் என்பவர் எந்த மொழியுடனும் தனிப்பற்றுக் கொள்ளாமல், நடுநிலையில் நின்று மொழிபெயர்க்க வேண்டும். குறிப்பாக அவருக்கு இரண்டு மொழிகளிலும் அதாவது தருமொழி பெறுமொழி ஆகிய இரண்டிலும் புலமை இருத்தல் வேண்டும். இரு மொழிகளின் சமூக, பண்பாட்டுச் சூழ்நிலைகளை நன்கு அறிந்திருத்தல் வேண்டும்.


அட்டவணையில் விடுபட்டதை எழுதுக

வேர்ச்

சொல்

எழுவாய்த் தொடர்

பெயரெச்சத் தொடர்

வினையெச்சத் தொடர்

விளித் தொடர்

ஓடு

அருணா ஓடினாள்

ஓடிய அருணா

ஓடி வந்தாள்

அருணா ஓடாதே!

சொல்

அம்மா சொன்னார்

சொன்ன அம்மா

சொல்லிச் சென்றார்

அம்மா சொல்லாதே!

தா

அரசர் தந்தார்

தந்த அரசர்

தந்து சென்றார்

அரசே தருக!

பார்

துளிர் பார்த்தாள்

பார்த்த துளிர்

பார்த்துச் சிரித்தாள்

துளிரே பார்க்காதே!

வா

குழந்தை வந்தது

வந்த குழந்தை

வந்து நின்றது

குழந்தையே வா!

 

தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க.

1. கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான்.

விடை: அழகிய குளிர்ந்த கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான்

2. மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.

விடை: கனி தரும் மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.

3. வாழ்க்கைப்பயணமே வேறுபட்டப் பாடங்களைக் கற்றுத் தருகிறது.

விடை: இன்பத் துன்பம் நிறைந்த வாழ்க்கைப்பயணமே வேறுபட்ட பாடங்களைக்   

            கற்றுத் தருகிறது.

4. கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்.

விடை: சிறந்த கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்.

5. குழந்தைகள் தனித்தனியே எழுதித் தர வேண்டும்.

விடை: சுட்டிக் குழந்தைகள் தனித்தனியே எழுதித் தர வேண்டும்.

 மதிப்புரை எழுதுக.

பள்ளி ஆண்டுவிழா மலருக்காக நீங்கள் நூலகத்தில் படித்த கதை/கட்டுரை/சிறுகதை/கவிதை நூலுக்கான மதிப்புரை எழுதுக.

குறிப்பு : நூலின் தலைப்புநூலின் மையப் பொருள்மொழிநடை- வெளிப்படுத்தும் கருத்துநூலின் நயம்நூல் கட்டமைப்புசிறப்புக் கூறுநூல் ஆசிரியர்.

குறிப்புச்சட்டகம்

நூலின் தலைப்பு

நூலின் மையப் பொருள்

மொழிநடை

வெளிப்படுத்தும் கருத்து

நூலின் நயம்

நூல் கட்டமைப்பு

சிறப்புக்கூறு

  நூல் ஆசிரியர்

நூலின் தலைப்பு:

போயிட்டு வாங்க சார்!.....

நூலின் மையப் பொருள்:

        இந்நாவலில் கதையின் நாயகனாக வருபவர் இங்கிலாந்தில் ஒரு பள்ளி ஆசிரியர். பெயர் சிப்ஸ், முழுப் பெயர் சிப்பிங். முதன் முதலாக ஆசிரியர் மாணவர் உறவை உணர வைத்தவர். அதன் விளைவாக இந்நாவலை வாசிப்பவரையும் உருக வைப்பவர் சிப்ஸ்.

மொழிநடை:     

        யாவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் எளிமையான தமிழ்சொற்களைக் கொண்டே எழுதப்பட்டுள்ளது. தமிழில் கையாளப்பட்ட இச்சொற்களை படிக்கும் போது நாமும் இந்நாவலின் ஆசிரியர் போல் இருக்க வேண்டும் என எண்ண வைக்கிறது.

வெளிப்படுத்தும் கருத்து:

ஆசிரியரும் மாணவர்களுக்குமான உறவுநிலையை வெளிப்படுத்துகிறது.44 ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணியாற்றிய ஆசிரியரின் அனுபவம் இந்நாவலில் கிடைக்கிறது.

நூலின் நயம்:

        நாவல் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே சீராக ஆசிரியர் சிப்ஸ் உடன் செல்கிறது. வாசிக்க வாசிக்க சோர்வில்லாத எழுத்து நடையும், நூலின் நயமும் சிறப்பாக உள்ளது.

நூல் கட்டமைப்பு:

        புரூக்பீல்டு பள்ளியில் கிடைத்த 44 ஆண்டுகள் பணிகாலத்தில் பல மாணவர்களை சந்தித்தவர் சிப்ஸ். 65 வயதில் பணி ஓய்வு பெற்றார். கற்பனை கதாபாத்திரத்திரம் ஆனால்  அசல் மனிதர் போல நெஞ்சில் நிற்க வைத்து விடுகிறது இந்நாவல்

சிறப்புக்கூறு:            

 பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், பணி ஓய்வுக்குப் பின் சிப்ஸைப் போன்று மாணவர்களுடன் நெருக்கமாக இருப்பதற்கு இந்நாவல் வழிகாட்டுகிறது. இது மொழிபெயர்ப்பு நூல் அல்ல. Good Bye,Mr.Chips -1933 இல் பிரிட்டிஷ் வீக்லி என்ற ஆங்கிலப் பத்திரிக்கையில் வெளியான கதை.

நூல் ஆசிரியர்:             ச. மாடசாமி.

படிவத்தை நிரப்புக

நூலக உறுப்பினர் படிவம்

____________சேலம்________________மாவட்ட  நூலக ஆணைக்குழு

மைய / கிளை/ ஊர்ப்புற நூலகம் _________சேலம் - மைய _____________________

உறுப்பினர் சேர்க்கை அட்டை

அட்டை எண் : 150                                                                   உறுப்பினர் எண் : 150

1. பெயர்                                                        :  ரா. முகில்

2. தந்தை பெயர்                                            : வெ.ராமகிருஷ்ணன்

3. பிறந்த தேதி                                              : 13-10-2009

4. வயது                                                       : 15

5. படிப்பு                                                       : பத்தாம் வகுப்பு

6. தொலைபேசி/ அலைபேசி எண்                :  80724&&&&&

7. அஞ்சல் முகவரி                                       : 50, பாரதி தெரு, காமராஜர் நகர்,

                                                                        சேலம் - 636015

நான் _____________சேலம் – மைய______ நூலகத்தில் உறுப்பினராகப் பதிவு செய்ய

இத்துடன் காப்புத்தொகை ரூ______100_____ சந்தா தொகை ரூ ______50_____ஆக

மொத்தம் ரூ._____150_____ ரொக்கமாகச் செலுத்துகிறேன். நூலக நடைமுறை மற்றும்

விதிகளுக்குக் கட்டுப்படுகிறேன் என உறுதியளிக்கிறேன்.                                              

                                                                                             தங்கள் உண்மையுள்ள,

இடம் : சேலம்                                                                                               ரா. முகில்

நாள் :  25-03-2025

திரு / திருமதி / செல்வன் / செல்வி _____ ரா. முகில்  ________ அவர்களை

எனக்கு நன்கு தெரியும் என சான்று அளிக்கிறேன்.

                                                                                      பிணைப்பாளர் கையொப்பம்

அலுவலக முத்திரை                                                        ( பதவி மற்றும் அலுவலகம் )

   ( மாநில / மைய அரசு அதிகாரிகள், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள்      உயர்/மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், சட்டமன்ற / நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி / நகராட்சி / ஒன்றிய / பேரூராட்சி உறுப்பினர்கள் )


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post