10TH-TAMIL-NEW EDTION BOOK -25-26-UNIT-4- BIG QUESTION

  

பத்தாம் வகுப்பு 

தமிழ்

புதிய பாடத்திட்டம் - 2025 -26

இயல் - 3

நெடு  வினாக்கள்

இளந்தமிழ் வழிகாட்டி

----------------------------------------------------------------------------------------------------------------------------

 நெடுவினா

1. இறைவன், புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் விளக்குக.

குறிப்புச்சட்டம்

முன்னுரை

மன்னனும் இடைக்காடனும்

இறைவனிடம் முறையிடல்

இறைவன் நீங்குதல்

மன்னன் முறையிடல்

புலவனுக்குச் சிறப்பு செய்தல்

முடிவுரை

முன்னுரை :

        கபிலரின் நண்பர் இடைக்காடனாரை மன்னன் இகழ்ந்ததன் பொருட்டு இறைவன் புலவனின் குரலுக்குச் செவி சாய்த்த நிகழ்வை இக்கட்டுரையில் காண்போம்.

மன்னனும் இடைக்காடனும்

v  மன்னன் குலேசப் பாண்டியன் முன் இடைக்காடன் தன் கவிதையைப் பாடினார்

v  மன்னன் அதனை பொருட்படுத்தாமல்  இகழ்ந்தார்

இறைவனிடம் முறையிடல்

v  இடைக்காடன் இறைவனிடம் முறையிடல்

v  மன்னன் தன்னை இகழவில்லை.

v  இறைவனான உன்னை இகழ்ந்தான் என முறையிடுகிறார்.

இறைவன் நீங்குதல்

v  இறைவன் இதனைக் கண்டு கடம்பவன கோயிலை விட்டு நீங்கினார்

v  வையை ஆற்றின் தென் பக்கத்தே ஒரு திருக்கோயிலில் சென்றார்.

மன்னன் முறையிடல் :

v  மன்னன் இறைவன் நீங்கியதைக் கண்டு வருத்தம் அடைந்தான்.

v  இடைக்காடன் பாடலை இகழ்ந்தது தவறு தன்னைப் பொறுத்தருள   வேண்டினான்

புலவனுக்குச் சிறப்பு செய்தல்

v  மன்னன் இடைக்காடனாரிடம் தன்னைப் பொறுத்துக் கொள்ள வேண்டுதல்

v  இறைவன் சொல் கேட்டு இடைக்காடனுக்கு மன்னன் சிறப்பு செய்தான்

முடிவுரை :

v  மன்னனின் சொல் கேட்ட புலவர்களின் கோபம் தணிந்தது.

இடைக்காடனார் புலவரின் பாடலை இகழ்ந்ததன் காரணமாக இறைவன் புலவனின் குரலுக்குச் செவிசாய்த்தார்,

2 ‘ கற்கை நன்றே கற்கை நன்றே *

   பிச்சை புகினும் கற்கை நன்றே ‘ என்கிறது வெற்றி வேற்கை.

 மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில்

 கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை

 விவரிக்க.

குறிப்புச்சட்டம்

முன்னுரை

மேரி

அவமானம்

புதிய நம்பிக்கை

கல்வி

உதவிக்கரம்

மேல்படிப்பு

முடிவுரை

முன்னுரை :

        மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

 மேரி :

v  சாம்பாட்ஸி இணையருக்கு மகளாகப் பிறந்தவள் மேரி.

v  பருத்திக்காட்டில் வேலை செய்து தங்கள் குடும்பத்தை நடத்துகிறார்கள்.

அவமானம் :

v  மேரி பாட்ஸியுடன் பென்வில்ஸன் வீட்டிற்கு செல்கிறார்கள்.

v  மேரி அந்த வீட்டின் அலமாரியிலிருந்த புத்தகத்தை எடுக்கிறாள்.

v  பென்வில்ஸன் இளையமகள் அவளிடமிருந்து புத்தகத்தை பிடிங்கினாள்.

v  உனக்குப் படிக்கத் தெரியாது எனக் கூறினாள்.  மேரி மனம் துவண்டாள்.

புதிய நம்பிக்கை

v  மேரிக்குப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டானது.

v  ஒரு நாள் மிஸ் வில்ஸன் என்பவர்  உன் போன்ற குழந்தைகள் படிக்க வேண்டும். நீ சீக்கிரமாக மேயெஸ் வில்லிக்கு வர வேண்டும்.

v  மேரிக்குப் புதிய நம்பிக்கை பிறந்தது.

கல்வி

v  மேரி ஐந்து மைல்கள் நடந்து சென்று கல்வி கற்றாள்.

v  சில வருடங்கள் கழித்து மேரிக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.

v  அதில் இந்தப் பட்டம் பெறும் மாணவர் எழுதவும் படிக்கவும் கூடியவர் “ என எழுதப்பட்டிருந்தது.

உதவிக்கரம்

v  மிஸ்வில்சன் மூலம் மேரிக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி

v  அவளின் மேல்படிப்பு செலவுக்காக மேற்குப் பகுதியில் வாழ்கின்ற வெள்ளைக்கார பெண் மணி பணம் அனுப்பி இருக்கிறார்.

v  அவள் மேல் படிப்புக்காக டவுனுக்குச் செல்கிறாள்.

மேல்படிப்பு

v  மேரியை மேல்படிப்பு படிப்பதற்காக வழியனுப்ப இரயில் நிலையத்தில் அவளது கிராமமே திரண்டு வந்தது.  மிஸ் வில்ஸனும் இரயில் நிலையத்திற்கு வந்தார்.

முடிவுரை

        எப்படிப்பட்ட நிலையிலும் கல்வி நம்மை உயர்த்தும் என்பதற்கு மேரியின் வாழ்க்கையை நாம் உதாரணமாகக் கொள்ளலாம். மேரியிடமிருந்து பறிக்கப்பட்டப் புத்தகம் அவள் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றியது என்பதனை இக்கட்டுரை வழியாகக் கண்டோம்.

3 தமிழின் இலக்கிய வளம்கல்வி மொழிபிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள்அறிவியல் கருத்துகள்பிறதுறைக் கருத்துகள்தமிழுக்குச் செழுமை

        மேற்கண்ட குறிப்புகளைக் கொண்டுசெம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலைஎன்ற தலைப்பில் வார இதழ் ஒன்றுக்கு நடுப்பக்கக் கட்டுரை எழுதுக.

குறிப்புச்சட்டம்

தமிழின் இலக்கிய வளம்

கல்வி மொழி

பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள்

அறிவியல் கருத்துகள்

பிறதுறைக் கருத்துகள்

தமிழுக்குச் செழுமை

தமிழின் இலக்கிய வளம்

        உலக இலக்கியங்களில் தமிழின் இலக்கியப் பழமையும் பெருமையும் அழிக்கமுடியாது. தமிழின் இலக்கிய வளம் மேலும் சிறக்கப் பிறமொழிகளில் சிறந்து விளங்கும் நூல்களைத் தமிழில் மொழிப்பெயர்க்க வேண்டும்.

கல்வி மொழி :

        மொழிபெயர்ப்பை கல்வி ஆக்குவதன் மூலம் தமிழ்மொழியின் பெருமைகளை பிற மொழியினரும். பிறமொழியின் சிறப்புகளை தமிழ் மொழியிலும் அறிந்து கொள்ள முடிகிறது.

பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள்:

·         பிறமொழிகளின் இலக்கியங்களை அறிந்துக் கொள்ளவும், புதிய படைப்புகளை உருவாக்கவும் மொழிபெயர்ப்பு உதவுகிறது.

·         தாகூர் கீதாஞ்சலி நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தப் பின் தான் நோபல் பரிசு கிடைத்தது.

அறிவியல் கருத்துகள்

·         மொழிபெயர்ப்பு அறிவியல் சார்ந்த துறையிலும் தன் ஆதிக்கத்தைச் செலுத்துகிறது. Tele என்ற ஆங்கிலச் சொல் தொலை என்பதைக் குறிக்கும். இதன் அடிப்படையில் Telephone – Telescope – தொலைபேசி, தொலைநோக்கி என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

பிறதுறைக் கருத்துகள் :

·         கல்வி,இலக்கியம், மருத்துவம் மட்டுமல்லாது பிற துறைகளும் மொழிபெயர்ப்பின் மூலம் வளர்ச்சி அடைந்துள்ளது.

·         பிற மாநில மொழிபடங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.

தமிழுக்குச் செழுமை:

               தமிழ் எங்கும் பரவ வேண்டும். அதற்கு மொழிபெயர்ப்பு அவசியம் வேண்டும்.

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post