
பத்தாம் வகுப்பு
தமிழ்
புதிய பாடத்திட்டம் - 2025 -26
இயல் - 4
சிறு வினாக்கள்
இளந்தமிழ் வழிகாட்டி
______________________________________________________________________________________________________
சிறு வினா
1. மன்னன் இடைக்காடனார்
என்ற புலவனுக்குச் சிறப்புச் செய்தது ஏன்? விளக்கம் தருக.
v மன்னன் இடைக்காடனார் புலவரின் பாடலை இகழ்ந்தார்.
v இடைக்காடனார், மன்னன் இகழ்ந்ததை இறைவனிடம்
முறையிடுகிறார்.
v இறைவன் கோவிலை விட்டு நீங்கினார்
v மன்னன் இறைவனிடம் தன் பிழையைப் பொறுத்து
அருள்புரியுமாறு
வேண்டினார்
v மன்னன் புலவருக்கு மரியாதை செய்து, மன்னிப்பு வேண்டினார்
2. பல்துறைகளின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு எவ்வாறு
பயன்படுகிறது?
v பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு
தேவைப்படுகிறது.
v உலகை எல்லாம் வலையாக பிடித்திற்கும் ஊடக வளர்ச்சி
மொழிபெயர்ப்பின் மூலம் உருவானது.
v விளம்பர மொழிக்கு மொழிபெயர்ப்பு தேவைப்படுகிறது.
v தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மொழிமாற்றம்
செய்யப்பட்டு
அனைத்து மொழி பேசும் மக்களை அடைகின்றன.
v மொழிபெயர்ப்பால் புதுவகை சிந்தனைகள், மொழிக்கூறுகள்
பரவுகின்றன.
3. ஐக்கிய நாடுகள் அவையில்
மொழிபெயர்ப்பு
ஐ.நா.அவையில் ஒருவர் பேசினால் அவரவர் மொழிகளில்
புரிந்துகொள்வதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பு
( translation ) என்பது எழுதப்பட்டதை மொழிபெயர்ப்பது;ஆனால் ஒருவர்
பேசும்போதே மொழிபெயர்ப்பது விளக்குவது (Interpreting) என்றே
சொல்லப்படுகிறது. ஐ.நா. அவையில் ஒருவர் பேசுவதை மொழிபெயர்க்கும்
மொழிபெயர்ப்பாளர் பார்வையாளருக்குத் தெரியாதபடி வேறு இடத்தில்
இருப்பார். ஒருவர் பேசுவதைக் காதணிகேட்பியில் ( Headphone ) கேட்டபடி சில
நொடிகளில் மொழிபெயர்த்து ஒலி வாங்கி வழியே பேசுவார். அவையில்
உள்ள பார்வையாளர் தம்முன் உள்ள காதணிகேட்பியை எடுத்துப்
பொருத்திக்கொண்டு அவரது மொழியில் புரிந்துகொள்வார்.
இப்பகுதியிலிருந்து ஐந்து வினாக்களை உருவாக்குக.
1. எந்த அவையில் ஒருவர் பேசினால் அவரவர் மொழிகளில் புரிந்து
கொள்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது?
2. மொழி பெயர்ப்பு என்பது
யாது?
3. ஒரு மொழியினை மொழிபெயர்க்க ஒலியை உள்வாங்கப் பயன்படும்
கருவி எது?
4. ஐ.நா அவையில் எவ்வாறு
மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது?
5. மொழி பெயர்ப்பில்
காதணி கேட்பியின் செயல்பாடு யாது?
4. நேற்றிரவு பெய்த மழை எல்லாம் தொட்டியை நிறைத்திருந்தது.வாழைத் தோப்பில் குட்டியுடன்
நின்றிருந்த மாடு கத்தியது: தந்தை என்னிடம்,” இலச்சுமி கூப்பிடுகிறாள்,போய்ப் பார்” என்றார். “இதோ சென்றுவிட்டேன்” என்றவாறே அங்குச்
சென்றேன்.துள்ளிய குட்டியைத் தடவிக்கொடுத்து,”என்னடா விளையாட வேண்டுமா?” என்று கேட்டு அவனை
அவிழ்த்துவிட்டேன்.என் தங்கை அங்கே வந்தாள்.அவளிடம்,” நீயும் இவனும் விளையாடுங்கள்” என்று கூறினேன்.அவிழ்த்துவிடப்பட்ட
இலச்சுமி தொட்டியிலிருந்த நீரைக் குடித்தாள்.
இப்பத்தியிலுள்ள வழுவமைதிகளைப்
பட்டியலிட்டு எழுதுக.
|
குட்டியுடன் |
மரபு வழுவமைதி |
|
வாழைத் தோப்பு |
மரபு வழுவமைதி |
|
மாடு கத்தியது |
மரபு வழுவமைதி |
|
இலச்சுமி கூப்பிடுகிறாள் |
திணை வழுவமைதி |
|
இதோ சென்றுவிட்டேன் |
கால வழுவமைதி |
|
என்னடா விளையாட
வேண்டுமா? |
திணை வழுவமைதி |
|
நீயும் இவனும் விளையாடுங்கள் |
திணை வழுவமைதி |
|
நீரைக் குடித்தாள் |
திணை வழுவமைதி |
|
அவனை ( கன்று ) |
திணை வழுவமைதி |
5. ஏதேனும் இரண்டு
வழுவமைதிகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
|
திணை வழுவமைதி |
பால் வழுவமைதி |
|
‘ என் அம்மை வந்தாள் ‘ என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது திணை வழுவமைதி ஆகும். காரணம் : உவப்பின் காரணமாக அஃறிணை உயர்திணையாகக் கொள்ளப்பட்டது |
“ வாடா இராசா, வாடா கண்ணா” என்று தன் மகளைப் பார்த்து அழைப்பது பால் வழுவமைதி ஆகும். காரணம்: உவப்பின் காரணமாக பெண்பால் ஆண்பாலாக் கொள்ளப்பட்டது |