10TH-TAMIL-NEW EDTION BOOK -25-26-UNIT-4 -2 MARK

   

பத்தாம் வகுப்பு 

தமிழ்

புதிய பாடத்திட்டம் - 2025 -26

இயல் - 4 

குறு  வினாக்கள்

இளந்தமிழ் வழிகாட்டி
----------------------------------------------------------------------------------------------------------------------------

குறு வினா

1. “ கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன் பால் பொழிந்த பெரும் காதல் மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் தென்சொல் “

இவ்வடிகளில் கழிந்த பெரும் கேள்வியினான் யார்? காதல் மிகு கேண்மையினான் யார்?


v  கழிந்த பெரும் கேள்வியினான் – குசேல பாண்டியன்


v  காதல் மிகு கேண்மையினான் – இடைக்காடனார்


2. மொழிபெயர்ப்பின் பயன் குறித்து எழுதுக.



v  புதிய சொற்கள் உருவாகி மொழிவளம் ஏற்படுகிறது.



v  பிற இனத்தவரின் பண்பாடு, நாகரிகம், பழக்க வழக்கம்


 போன்றவற்றை அறியமுடிகிறது.



v  கருத்துப் பகிர்வை தருகிறது.



v  மொழிபெயர்ப்பைப் பயன்கலை என்று குறிப்பிடுவர்



3. அமர்ந்தான் – பகுபத உறுப்பிலக்கணம் தருக.


அமர்ந்தான்அமர் + த்(ந்)+த்+ ஆன்


v  அமர்பகுதி   

                         

v  த்(ந்) – சந்தி


v  ந்ஆனது விகாரம் 

                 

v  த்இறந்த கால இடைநிலை


v  ஆன்ஆண்பால் வினை முற்று விகுதி


4. வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை

நேரில் காண்பதற்கு ஆரல்வாய் மொழிக்குச் செல்கிறேன்இத்தொடர்

கால வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?


v  உறுதித்தன்மை நோக்கி சொல்லப்பட்டதால் கால


 வழுவமைதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.


5. சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக்

 கத்துவானே தவிர கடிக்க மாட்டான்என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப்

பற்றிப்  பெருமையாகக் கூறினான். – இதில் உள்ள திணை வழுவமைதிகளைத் திருத்தி எழுதுக.


v  சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்கும். புதியவர்களைப்


 பார்த்துக் குரைக்குமே தவிர கடிக்காது.                   


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post