பத்தாம் வகுப்பு
தமிழ்
புதிய பாடத்திட்டம் - 2025 -26
இயல் - 4
ஒரு மதிப்பெண் - வினாக்கள்
1. கீழ்க்காண்பனவற்றுள் எந்த இலக்கியம் பிறமொழிப் படைப்பினைத்
தழுவித் தமிழில் படைக்கப்பட்டது?
அ) திருக்குறள்
ஆ) கம்பராமாயணம்
இ) கலித்தொகை
ஈ) சிலப்பதிகாரம்
2. இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர்______இடைக்காடனாரிடம்
அன்பு வைத்தவர் __
அ) அமைச்சர், மன்னன்
ஆ) அமைச்சர், இறைவன்
இ) இறைவன், மன்னன்
ஈ) மன்னன்,இறைவன்
3. உவப்பின் காரணமாக அஃறிணையை உயர்திணையாகக்
கொள்வது_______
அ) இடவழுவமைதி
ஆ) பால் வழுவமைதி
இ) திணை வழுவமைதி
ஈ) கால வழுவமைதி
4. இரவீந்திரநாத தாகூர் _________ மொழியில் எழுதிய கவிதைத்
தொகுப்பான கீதாஞ்சலியை ____________ மொழியில், மொழிபெயர்த்த பிறகுதான் அவருக்கு
நோபல் பரிசு வழங்கப்பட்டது.
அ) ஆங்கில, வங்காளம்
ஆ) வங்காள, ஆங்கில
இ) வங்காள, தெலுங்கு
ஈ) தெலுங்கு, ஆங்கில
5. படர்க்கைப் பெயரைக் குறிப்பது எது?
அ) யாம்
ஆ) நீவிர்
இ) அவர்
ஈ) நாம்