சேலம் – முழு ஆண்டுத் தேர்வு- ஏப்ரல் -2025
ஒன்பதாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
உத்தேச விடைக் குறிப்பு
நேரம் : 3.00 மணி மதிப்பெண் : 100
பகுதி – 1 மதிப்பெண்கள் - 15 | ||||||||||||||||||||||||||||||||||||||
வினா.எண் | விடைக் குறிப்பு | மதிப்பெண் | ||||||||||||||||||||||||||||||||||||
1. | அ) கீழே | 1 | ||||||||||||||||||||||||||||||||||||
2. | ஈ) தொகைச்சொற்கள் | 1 | ||||||||||||||||||||||||||||||||||||
3. | ஆ) ஊரகத் திறனறித் தேர்வு | 1 | ||||||||||||||||||||||||||||||||||||
4. | க) அ-3,ஆ-4,இ-1,ஈ-2 | 1 | ||||||||||||||||||||||||||||||||||||
5. | இ) முல்லை | 1 | ||||||||||||||||||||||||||||||||||||
6. | அ) ஆராயாமை, ஐயப்படுதல் | 1 | ||||||||||||||||||||||||||||||||||||
7. | ஆ) யசோதர காவியம் | 1 | ||||||||||||||||||||||||||||||||||||
8. | ஆ) தொல்காப்பியம் | 1 | ||||||||||||||||||||||||||||||||||||
9. | ஈ) அறிவு | 1 | ||||||||||||||||||||||||||||||||||||
10. | ஆ) மலையுச்சி | 1 | ||||||||||||||||||||||||||||||||||||
11. | இ) இடவாகு பெயர் | 1 | ||||||||||||||||||||||||||||||||||||
12 . | ஆ) யசோதர காவியம் | 1 | ||||||||||||||||||||||||||||||||||||
13 . | இ) யார் என அறியப்படவில்லை | 1 | ||||||||||||||||||||||||||||||||||||
14 . | ஆ) போக்குவது – நோக்குவது | 1 | ||||||||||||||||||||||||||||||||||||
15 | ஈ) சினம் | 1 | ||||||||||||||||||||||||||||||||||||
பகுதி – 2 / பிரிவு -1 எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடையளிக்க 4×2 =8 | ||||||||||||||||||||||||||||||||||||||
16 | பொருத்தமான விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக. | 2 | ||||||||||||||||||||||||||||||||||||
17. | தம்மை இகழ்பவரையும் பொறுப்பது சிறந்தது | 2 | ||||||||||||||||||||||||||||||||||||
18. | ü தொலைநகல் இயந்திரம் ( FAX ) ü தானியங்கு பண இயந்திரம் ( ATM ) ü ஆளறி சோதனைக் கருவி ( BIOMETRIC DEVICE ) ü வங்கி கணக்கு அட்டை அச்சுப்படி இயந்திரம் ü அட்டை தேய்ப்பி இயந்திரம் | 2 | ||||||||||||||||||||||||||||||||||||
19 | · போரில் விழுப்புண் பட்டு இறந்தவருக்கு நடப்படும் கல், நடுகல். · அக்கல்லில் அவ்வீரரின் உருவம் பொறிக்கப்படும் | 2 | ||||||||||||||||||||||||||||||||||||
20 | நெற்பயிர்கள் தோற்றத்திற்கு உவமையாக்கப்பட்டுள்ளது | 2 | ||||||||||||||||||||||||||||||||||||
21. | எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும். | 2 | ||||||||||||||||||||||||||||||||||||
பகுதி – 2 / பிரிவு -2 எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடையளிக்க 5×2 =10 | ||||||||||||||||||||||||||||||||||||||
22 | · செந்தமிழும் நாப் பழக்கம் · இடமெல்லாம் சிறப்பு | 1 1 | ||||||||||||||||||||||||||||||||||||
23 | அ) ௩ ௨ ஆ) ௬ ௧ | 1 1 | ||||||||||||||||||||||||||||||||||||
24. | அ) நேற்று தென்றல் காற்று வீசியது. ஆ) கொடியிலுள்ள மலரைக் கொய்து வா | 2 | ||||||||||||||||||||||||||||||||||||
25 | உணர்த்த – உணர் + த் + த் + அ உணர் – பகுதி த் – சந்தி , த் – இடைநிலை அ – பெயரெச்ச விகுதி | 1 1 | ||||||||||||||||||||||||||||||||||||
26 | அ) அகழாய்வு ஆ) நடுகல் | 1 1 | ||||||||||||||||||||||||||||||||||||
27 | வீணையோடு வந்தாள் – வேற்றுமைத் தொடர் கிளியே பேசு – விளித்தொடர் | 1 1 | ||||||||||||||||||||||||||||||||||||
27 | செவி மாற்றுத்திறனாளர்களுக்கான மாற்று வினா அ. கால் ஆ. அலை | 1 1 | ||||||||||||||||||||||||||||||||||||
28. | அ) மா ஆ) சால | 2 | ||||||||||||||||||||||||||||||||||||
பகுதி – 3/பிரிவு-1 எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்கவும் 2×3 =6 | ||||||||||||||||||||||||||||||||||||||
29 | அ) முத்துலெட்சுமி ஆ) தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டம், இரு தார தடைச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், குழந்தைத் திருமண தடைச் சட்டம். இ) 1930 | 3 | ||||||||||||||||||||||||||||||||||||
30 | Ø ஒளவையார் Ø ஒக்கூர் மாசாத்தியார் Ø காவற்பெண்டு Ø ஆதிமந்தி Ø பாரிமகளிர் Ø நச்செள்ளையார் | 3 | ||||||||||||||||||||||||||||||||||||
31 | முழு உருவச் சிற்பங்கள் : சிற்ப உருவத்தின் முன் பகுதியும், பின் பகுதியும் தெளிவாகத் தெரியும். புடைப்புச் சிற்பங்கள் : உருவத்தின் முன்பகுதி மட்டும் தெரியும்படி அமைக்கப்பட்ட சிற்பங்கள். | 3 | ||||||||||||||||||||||||||||||||||||
பகுதி – 3/பிரிவு-2 எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்கவும் 2×3 =6 | ||||||||||||||||||||||||||||||||||||||
32 | இடம் : கல்யாண்ஜி எழுதிய அக்கறை என்னும் கவிதை. பொருள் : கூடை சரிந்து பழங்கள் உருண்டதை யாரும் கண்டுகொள்ளவில்லை. விளக்கம் : Ø சைக்கிளிலிருந்து தக்காளி கூடை சரிந்து பழங்கள் உருண்டது. தங்களுக்கு தலைக்கு மேல் வேலை இருப்பதாய்க் கூறி கடந்தும்,நடந்தும் போயினர். பழங்களை விட நசுங்கிப் போனது. அடுத்தவர் மீதான அக்கறை | 3 | ||||||||||||||||||||||||||||||||||||
33 | · விளக்குகளையும், கலசத்தையும் ஏந்தியவாறு கண்ணனை இளம் பெண்கள் எதிர்கொண்டு அழைத்தார்கள். · கண்ணன் நடந்து வருகின்றான். இசைக்கருவிகள் முழங்குகின்றன.சங்குகளை ஊதுகின்றனர். · கண்ணன் முத்துமாலைகள் தொங்கவிடப்பட்ட பந்தலின் கீழ் தன்னைத் திருமணம் செய்து கொள்கிறான். · இக்காட்சிகளை ஆண்டாள் கண்டது. | 3 | ||||||||||||||||||||||||||||||||||||
34 | காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம் கடல்அன்ன நாடெல்லாம் நீர்நாடு தனைஒவ்வா நலமெல்லாம்* - சேக்கிழார் | 3 | ||||||||||||||||||||||||||||||||||||
34 | அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ வெள்ளம்தீப் பட்ட(து) எனவெரீஇப்பு ள்ளினம்தம் கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ நச்சிலைவேல் கோக்கோதை நாடு. - யார் என அறியப்படவில்லை | 3 | ||||||||||||||||||||||||||||||||||||
பகுதி – 3/பிரிவு-3 எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்கவும் 2×3 =6 | ||||||||||||||||||||||||||||||||||||||
35 | ஏதேனும் மூன்று சான்றுகள் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் | 3 | ||||||||||||||||||||||||||||||||||||
36 | · உவமை, உவமேயம் என்னும் இரண்டும் ஒன்றே என்று தோன்றக் கூறுவது உருவக அணி, எ.கா : மையோ மரகதமோ மறிகடலோ - இஃது உருவக அணி விளக்கம் : கண்ணனை மை, மரகதம், மறிகடல் என உருவகிக்கப் படுகிறது. | 3 | ||||||||||||||||||||||||||||||||||||
37 |
| 3 | ||||||||||||||||||||||||||||||||||||
பகுதி – 4 எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்கவும் 5×5 =25 | ||||||||||||||||||||||||||||||||||||||
38அ | v காவிரி ஆறு புதிய பூக்களை அடித்து வர அதனை வண்டுகள் மொய்த்து ஆராவாரம் செய்கின்றன. v நட்டபின் வயலில் வளர்ந்த நாற்றின் முதல் இலை சுருள் விரிந்து. இதனைக் கண்ட உழவர் இது தான் களை பறிக்கும் பருவம் என்று அறிந்தனர். v காடுகளில் எல்லாம் கரும்புகள் உள்ளன. v வயல்களில் சங்குகள் நெருங்கி உள்ளன. v சோலைகள் எல்லாம் செடிகளின் புதிய கிளைகளில் அரும்புகள் உள்ளன. v பக்கங்களில் எல்லாம் குவளை மலர்கள் உள்ளன. v கரை எங்கும் இளைய அன்னங்கள் உலவுகின்றன. v குளங்கள் எல்லாம் கடல் போல் பெரிதாக உள்ளன. v அன்னங்கள் விளையாடும் நீர் நிலைகளில் எருமைகள் வீழ்ந்து மூழ்கும். அதனால் அதில் உள்ள வாளை மீன்கள் அருகில் உள்ள பாக்கு மரங்கள் மீது பாயும் இக்காட்சியை நிலையான வானத்தில் தோன்றி மறையும் வானவில் போன்றுள்ளது. v செந்நெல்லின் சூடுகள், பலவகைப்பட்ட மீன்கள் ,முத்துக்கள், மலர்த் தொகுதிகள் ஆகியவற்றைத் திருநாட்டில் குவித்து வைத்திருந்தனர். v தென்னை, செருந்தி, அரசமரம், கடம்பமரம்,பச்சிலை மரம், குராமரம், பனை,சந்தனம், நாகம், வஞ்சி,காஞ்சி மலர்கள் நிறைந்த கோங்கு முதலியன எங்கும் நிறைந்தது இந்த திருநாட்டில். | 5 | ||||||||||||||||||||||||||||||||||||
38ஆ | · கரிகாலன் புகழைக் கணினியுள்ளே பொறுத்துங்கள். · திசையில் ஏவும் அன்பைப் போல இருந்த இனத்தை மாற்றுங்கள். · ஏவுகணையில் தமிழை எழுதி அனைத்து கோள்களிலும் ஏற்றுங்கள். | 5 | ||||||||||||||||||||||||||||||||||||
12, தெற்கு வீதி, மதுரை-2 19,செப்டம்பர் 2024. அன்புள்ள நண்பனுக்கு, வணக்கம் . நலம். நலமறிய ஆவல் என்னுடைய பிறந்தநாள் பரிசாக நீ அனுப்பிய எழுத்தாளர் எஸ் . இராமகிருஷ்ணன் எழுதிய கால் முளைத்த கதைகள் என்ற கதைப்புத்தகம் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். இந்நூலில் பூனையை நாய் ஏன் துரத்துகிறது? போன்ற தலைப்புகளில் உள்ள கதைகள் விரும்பிப் படிப்பதற்கு ஏற்ற வகையில் இனிய எளிய சொற்களால், கதைகள் சிறியனவாக அமைந்துள்ளன. எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நன்றி இப்படிக்கு, அன்பு நண்பன் முகிலன் உறைமேல் முகவரி: பெறுதல் வெ.ராமகிருஷ்ணன், 2,நெசவாளர் காலணி, சேலம் – 1 | 5 | |||||||||||||||||||||||||||||||||||||
39ஆ | அனுப்புநர் ரா. முகிலன் மாணவச்செயலர், 10ஆம் வகுப்பு ’ஆ’ பிரிவு, அரசினர் உயர்நிலைப்பள்ளி, கோரணம்பட்டி, பெறுநர் மேலாளர், நெய்தல் பதிப்பகம், சென்னை-600 001. பெருந்தகையீர், பொருள் :- பள்ளி நூலகத்திற்கு புத்தகங்கள் வேண்டுதல் - சார்பு சுமார் 500 மாணவர்கள் படிக்கும் எங்கள் பள்ளிக்கு தமிழ்மொழியில் உள்ள அருஞ்சொற்களின் பொருளை அறிய உங்கள் பதிப்பகத்தில் வெளியிட்டுள்ள தமிழ்- தமிழ்-ஆங்கிலம் அகராதியின் பத்துபடிகளை எங்கள் பள்ளி நூலகத்திற்கு பதிவஞ்சலில் அனுப்பிவைக்க வேண்டுகிறோம். நாள் : 01-09 -2021 தங்கள் உண்மையுள்ள இடம் : கோரணம்பட்டி ரா. முகிலன் (மாணவர் செயலர்) உறைமேல் முகவரி: பெறுதல் மேலாளர், நெய்தல் பதிப்பகம், சென்னை-600 001. | 5 | ||||||||||||||||||||||||||||||||||||
40 |
| 5 | ||||||||||||||||||||||||||||||||||||
41அ | 1) என்னால் முடிந்த உதவிகளைப் பிறருக்குச் செய்வேன். 2) மழைநீர் சேகரிப்பின் இன்றியமையாமையை வலியுறுத்துவேன். 3) பெண்கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துவேன். 4) இயற்கையைப் பேணிப் பாதுகாக்க மரங்களை நடுவேன். 5) சாலை விதிகளைப் பின்பற்றுவேன். பிறரையும் பின்பற்ற செய்வேன். 6) முதியோர்களுக்கு உதவி செய்வேன் | 5 | ||||||||||||||||||||||||||||||||||||
41ஆ | ஒருமுறை புத்தரும், அவருடைய சீடர்களும் மிகுந்த தாகத்துடன் இருந்தனர். ஓர் ஏரியை அடைந்தனர். யாரோ ஒருவர் தன் துணிகளைத் துவைத்திருந்தபடியால், ஏரி நீர் கலங்கி, சேருடன் காணப்பட்டது. புத்தர் தன் சீடர்களை நோக்கி சற்று நேரம் இம்மரத்தடியில் அமைதியாக இளைப்பாறுவோம் என்றார். அரைமணி நேரம் கழித்து அவருடைய சீடர்கள் ஏரியை உற்றுப் பார்த்தனர்.அழுக்குகள் ஒதுங்கிவிட்டன. சேறும் நீரின் அடி ஆழத்திற்குச் சென்று படிந்து விட்டது. தண்ணீர் மிகவும் தெளிவாகி விட்டது. உங்கள் மனமும் இதைப்போலத்தான், ஏரியை அழுக்கும், சேறும் கலக்கியது போல உங்கள் மனத்தைக் கலக்கும் செயல்கள் நடைபெற்றால் சற்று நேரம் அமைதியாக இருங்கள். அவை கரைந்து, மறைந்து, அழிந்து போய்விடும். அதுவரை அமைதியாக இருந்துவிட்டு பின் உங்கள் முடிவுகளைச் சிந்தித்து எடுங்கள். அதுவே சிறந்த நேர்மையான வாழ்வுக்கு வழியாகும். | 5 | ||||||||||||||||||||||||||||||||||||
42 | திரண்ட கருத்து மையக்கருத்து மோனைத்தொடை எதுகைத்தொடை இயைபுத் தொடை அணிநயம் சொல்நயம் | 5 | ||||||||||||||||||||||||||||||||||||
42 | செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா மானாமதுரை ஒரு அழகான பேரூர். நீண்டவயல்களும் சிற்றோடைகளும் நிறைந்த அவ்ஊரின் நடுவே வானுயர்ந்த கோபுரத்துடன் கூடிய கோவில் குளத்தில் எங்கும் செந்தாமரைப் பூக்கள் மலர்ந்துள்ளன. கதிரவனின் பேரொளி வீசிட சோலைப் பைங்கிளிகளின் இன்னோசை கேட்போரைப் பேரின்பம் அடையச் செய்கிறது. | 5 | ||||||||||||||||||||||||||||||||||||
பகுதி – 5 எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்கவும் 3×8=24 | ||||||||||||||||||||||||||||||||||||||
43அ | ü ஸ்பெயின் காளைச் சண்டையைத் தேசிய விளையாட்டாக கொண்டுள்ளது. ü காளை கொன்று அடக்குபவனே வீரன் ü வென்றாலும் தோற்றாலும் போட்டியின் முடிவில் காளையை சில நாடுகளில் கொல்வதும் உண்டு. ü இவை வன்மத்தையும் போர்வெறியையும் வெளிப்படுத்துவதாகவே உள்ளது. ü தமிழகத்தில் ஏறு தழுவுதலில் ஆயுதத்தைப் பயன்படுத்தக் கூடாது. ü நிகழ்வின் தொடக்கத்திலும் முடிவிலும் காளைக்கு வழிபாடு செய்வர். ü எவரும் அடக்க முடியாத காளைகள் கூட, வெற்றி பெற்றதாக அறிவிப்பர். ü அன்பையும் வீரத்தையும் ஒன்றாக வளர்த்தெடுக்கும் இவ்விளையாட்டில், காளையை அரவணைத்து அடக்குபவரே வீரராகப் போற்றப்படுவர் | 8 | ||||||||||||||||||||||||||||||||||||
43ஆ | சிற்பக்கலை கல், உலோகம், செங்கல்,மரம் முதலியவற்றைக் கொண்டு, கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் உருவங்கள் அமைக்கும் கலை சிற்பக் கலை. பல்லவர் காலச் சிற்பங்கள் : · மாமல்லபுர கடற்கரையில் உள்ள பாறைச் சிற்பங்கள் சிற்பக் கலையின் பெருமையை உலகுக்கு உணர்த்துகின்றன. பாண்டியர் காலச் சிற்பங்கள் : · பாண்டியர் காலக் குகைக் கோவில்களை திருமயம், திருப்பரங்குன்றம், பிள்ளையார் பட்டி போன்ற இடங்களில் காணலாம். சோழர் காலச் சிற்பங்கள் : · தஞ்சைப் பெரிய கோவில், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் ஐராதீசுவரர், திருவரங்கம் விஜய நகர மன்னர்கள் காலச் சிற்பங்கள் : · கோவில் கோபுரங்களில் சுதையாலான சிற்பங்களைக் காணலாம். · பல்வேறு ஓசைகளை எழுப்பும் இசைக் கற்றூண்களையும் அமைத்துள்ளனர். நாயக்கர் காலச் சிற்பங்கள் : · மதுரை மீனாட்சி அம்மன் கோவில், இராமேசுவரம் பெருங்கோவில்,திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆகியவற்றில் கலைநயம் மிக்க சிற்பங்களைக் காணலாம் | 8 | ||||||||||||||||||||||||||||||||||||
44அ | முன்னுரை : கந்தர்வன் எழுதிய தண்ணீர் என்ற இக்கதையில் நீரின் அவசியமும், நீருக்காக கிராம மக்கள் படும் பாட்டையும் அழகாக எழுதியுள்ளார். அதை இக்கட்டுரையில் காணலாம். கிராமத்தின் நிலை : கதையின் கிராமத்தில் குடிப்பதற்கு நீர் பக்கத்து ஊருக்கு செல்ல வேண்டும். அந்த கிராமம் குடிநீருக்காக பிலாப்பட்டிக்கு செல்ல வேண்டும். நிலத்தடி நீர் வற்றி ஆண்டுகள் பல ஆயிற்று. இரயில் நீர் : அந்த ஊருக்கு வரும் இரயிலின் ஊதல் ஒலிக் கேட்டு அந்த கிராம மக்கள் தண்ணீருக்காக பெண்கள் ஒருவருக்கு ஒருவர் முண்டியடித்துக் கொண்டு ஓடுவர். ஸ்டேசன் மாஸ்டர் மிரட்டியும் பயன் இல்லை. இரயிலை விட்டால் பிலாப்பட்டிக்கு போக வேண்டும். இந்திரா : இளம் பெண் இந்திரா தன்னை திருமணம் செய்து கொடுத்தால் நீர் இருக்கும் ஊருக்கு தான் கல்யாணம் பண்ணிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டே இரயில் பெட்டியில் நுழைந்தாள். மக்கள் தேடல் : வீட்டில் நீர் இல்லை என்பதை நினைத்துக் கொண்டே நீர் பிடித்திருந்த இந்திரா இரயில் நகர்ந்ததை கவனிக்கவில்லை. இந்திராவின் தாய் புலம்புகிறாள். இந்திராவைத் தேடி இராமநாதபுரம் பேருந்து நிலையம் சென்று தேடிப் பார்த்தனர். எங்கும் காணவில்லை. திரும்பிய இந்திரா: தண்டாவளத்தில் சிறிது தூரத்தில் பெண் ஒருத்தி தென்பட்டாள். அவள் இந்திரா. ஒரு குடம் நீர் பிடிக்க இரயிலிலேயே உள்ள நீர் பிடித்து அதனை சிந்தாமல் கொண்டு வந்து சேர்த்தாள். முடிவுரை : Ø தண்ணீர் வாழ்வில் மிக முக்கியம். அதனை அறிந்து நீரினை சேமிப்போம். சிக்கனமாகப் பயன்படுத்துவோம். நீர் மேலாண்மையைக் கட்டமைப்போம். | 8 | ||||||||||||||||||||||||||||||||||||
44ஆ | முன்னுரை: தாய்மை வழியே மனிதம் காக்கப்படுவதை சு. சமுத்திரம் அவர்கள் இக்கதையில் படைத்திருக்கும் ஏழைத் தாயின் வழி புலப்படுத்துகிறார். அன்பும் கண்டிப்பும் உடைய மனைவி: தூங்கிக் கொண்டிருக்கும் போது பேரிரைச்சலுடன் வந்த ஜீப் தன் மீதும் தன் கணவன் மீதும் மோதாமல் இருக்க தன் கணவனை உருட்டி விட்டு தானும் அங்கப்பிரதட்சணம் செய்வது போல் உருண்டு காப்பாற்றிய போது ஏழைத்தாய் அன்புடைய மனைவியாகிறாள். செல்வந்தன் தன் கைக்குக் கிடைத்த உணவு வகையறாக்களை அள்ளிப்போட்டு அவள் கணவனைத் தன் குடும்பத்தை நோக்கி நடக்கும்படி முதுகைத் தள்ளுகிறான். கண்களால் இப்படி ஒரு பிழைப்பா என்று தன் தலையில் கைகளால் அடித்தபடியே அவனைத் தண்டிக்கிறார். குழந்தைகளுக்குப் பரிமாறுதல்: குழந்தைகள் அம்மா வாதாடுவதைக் கோபமாய்ப் பார்த்தன. அதனைக் கண்ட தாய் அவர்கள் பசியில் இருப்பதைப் புரிந்துகொள்கிறாள். சப்பாத்தியையும் வெஜிடபிள் பிரியாணியையும் கண்ட குழந்தைகள் காணாததைக் கண்டது போல் சுவைத்தார்கள்.. மனிதநேயம் புரிந்தாள்: அவள் சாப்பிட ஆரம்பித்தபோது உலர்ந்த தொண்டைக்குள் உணவு இறங்க மறுக்கிறது. உணவைக் கொடுத்தவர் தண்ணீரையும் கொடுத்து “உன்னைப் போல கஷ்டப்பட்ட ஒரு தாய்க்குத் தான் மகனாய் பிறந்தேன் உன்னை என் தாயாய் எண்ணி கொடுக்கிறேன்” என்ற போது அவர் உள்ளத்தில் உள்ள மனிதநேயத்தைப் புரிந்து கொள்கிறாள். நாய் குட்டிகளுக்கும் தாயாகிறாள்: எச்சில் கையைத் தரையில் ஊன்றி எழுந்தாள். நாய்க்குட்டியை வாரி எடுத்தாள். அதன் முதுகைத் தடவினாள். மடியிலிட்டு தாலாட்டினாள். தட்டை தன் பக்கமாய் இழுத்தாள். உணவு சிறுசிறு கவளமாக உருட்டி நாய்க்குட்டிக்கு ஊட்டினாள். தட்டில் இருந்த உணவு குறையக்குறைய அவளது தாய்மை கூடிக்கொண்டே இருந்தது முடிவுரை: வறுமையிலும் அன்பு குறையாத மனிதநேயம் மாண்பு குறையாத மறையாத ஏழைத்தாயின் கதாபாத்திரத்தை நம் கண்முன் படைத்துக்காட்டி தாய்மைக்கு என்றும் வறட்சியில்லை என்பதைச் சு.சமுத்திரம் விளக்கி உணர்த்தியுள்ளார். | 8 | ||||||||||||||||||||||||||||||||||||
45அ | முன்னுரை கல்வி பெண் கல்வி பெண் கல்வியின் பயன்கள் சமூக மாற்றம் சாதனை பெண்கள் முடிவுரை | 8 | ||||||||||||||||||||||||||||||||||||
45ஆ | குறிப்புச் சட்டம் , தகுந்த உட்தலைப்புகள் இட்டு தலைப்புக்குரிய கருத்துகளை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம். | 8 |
விடைக்குறிப்பு தயாரிப்பு :
வெ.ராமகிருஷ்ணன், தமிழாசிரியர்,
அரசு உயர்நிலைப்பள்ளி, வளையசெட்டிப்பட்டி
www.tamilvithai.com www.kalvivithaigal.com
மேலும் பல்வேறு கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும். சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான 2025 - 26 கல்வி ஆண்டில் புதிய பாடப்புத்தகத்தின் இளந்தமிழ் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.. மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற சிறப்பு வினா வங்கி உருவாக்கப்பட்டு வருகிறது. இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும் போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும். நன்றி, வணக்கம்