10TH-TAMIL-OCTOBER MONTHLY TEST-2024 - MODEL QUESTION - PDF

 

மாதிரி அக்டோபர் மாதத் தேர்வு – 2024

10 -ஆம் வகுப்பு                             தமிழ்                         

நேரம் : 1.30 மணி                                                                மதிப்பெண் : 50

அ. அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                            6×1=6

1. சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடு:-

அ) உழவு,மண்,ஏர்,மாடு       ஆ) மண்,மாடு,ஏர்,உழவு     

இ) ஏர்,உழவு,மாடு,மண்       ஈ) உழவு,ஏர்,மண்,மாடு

2. ஊர் பெயரின் மரூஉவைக் காண்க:-  கும்பகோணம்

அ) குடம்பை      ஆ) குடந்தை       இ) கும்பை    ஈ) குடவம்பை

3. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்__________

அ) உதியன்; சேரலாதன்     ஆ) அதியன்; பெருஞ்சாத்தன்

இ) பேகன் ; கிள்ளிவளவன் ஈ) நெடுஞ்செழியன்; திருமுடிக்காரி

4. போரில் வெற்றிப் பெற்ற மன்னனைப் பற்றி பாடும் திணை

அ) பாடாண்   ஆ) தும்பை   இ) வாகை     ஈ) வெட்சி

5. மேன்மை தரும் அறம் என்பது ______________________

அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது           

ஆ) மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது

இ) புகழ் கருதி அறம் செய்வது                         

ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது

6. ‘ வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு ‘ என்ற நூலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றவர்.

அ) வள்ளலார்          ஆ) கு.ப.ராஜகோபாலன்      இ) ம.பொ.சி     ஈ) ராஜம் கிருஷ்ணன்

. எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்க.                                    7×2=14

8. மெய்க்கீர்த்தி பாடுவதன் நோக்கம் யாது?

9. வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி என்பதற்குச் சான்று தருக.

10. புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக.

11. தொடர்களைக் கொண்டு பொருத்தமான தொடர் அமைக்க:- அ) கொஞ்சம் அதிகம்

12. உரைப்பாட்டு மடை என்பது குறித்து எழுதுக.

13. கலைச்சொல் அறிக:- அ) Document              ஆ) Irrigation

14. குறிப்பு வரைக:- அவையம்

15. தொகைச் சொற்களைப் பிரித்து எழுதி, தமிழ் எண்ணுரு தருக.

          நானிலத்தில் பசித்தவர்க்கு அறுசுவை உணவுபோல் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் படிப்பவர் மனதிற்கினிமை ஈந்து தமிழ்ப்பெருமை சாற்றுகிறது.

16. பகுபத உறுப்பிலக்கணம் தருக:- மயங்கிய

இ. ஏதேனும் மூன்று வினாக்களுக்கு விடையளி:-                                       3×3=9

17. “ தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” – இடம் சுட்டிப் பொருள் விளக்குக.

18. முதல் மழை விழுந்ததும் என்னவெல்லாம் நிகழ்வதாக கு.ப.ரா.கவிபாடுகிறார்?

19. போர் அறம் குறித்து எழுதுக.

20. பழங்கால நினைவுச்சின்னங்களைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் உங்களால் இயன்ற மூன்று செயல்களை கூறுக.

. மனப்பாடப் பகுதி                                                                                          4+2=6

21. “ தூசும் துகிரும் “ எனத் தொடங்கும் சிலப்பதிகாரப் பாடல்

22. இன்மையின் – எனத் தொடங்கும் குறள்

உ) ஏதேனும் ஒன்றனுக்கு விடையளி                                                     1×4=4

23. அ) நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் “ உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் “ என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி, அந்நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.

                                              ( அல்லது )

ஆ) மொழி பெயர்க்க

      Among the five geographical divisions of the Tamil country in Sangam literature, the Marutam region was the fit for cultivation, as it had  the most fertile lands. The properity of a farmer depended on getting the necessary sunlight,seasonal rains and the fertility of the soil.Among these elements of nature,sunlight was considered indispensible by the ancient Tamils.

ஊ. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக:-                                                4×1=4



24.

 

 

 

 

 

எ) ஏதேனும் ஒன்றனுக்கு விரிவாக விடையளி                                             1×7=7

25. அ) சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.                 ( அல்லது )

ஆ) நாட்டு விழாக்கள் – விடுதலைப் போராட்ட வரலாறு – நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு – குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் “ மாணவப் பருவமும், நாட்டுப் பற்றும் “ என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.

எங்களது தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் குழுவில் இணைந்து பல பயனுள்ள கற்றல் வளங்களை பெற கீழ் உள்ள QR CODE மூலம் வருடி குழுவில் இணையவும்.

வாட்ஸ் அப் சேனல்          வாட்ஸ் அப் குரூப்             டெலிகிராம்            முகநூல்

               

               

               

                               

      JOIN NOW                     JOIN NOW                  JOIN NOW            JOIN NOW

முயற்சி + பயிற்சி = வெற்றி

kindly wait for 10 seconds



நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

2 Comments

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post