அனைவருக்கும் வணக்கம். உங்கள் தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளமானது பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக 2023 ஆம் ஆண்டிலிருந்து வழிகாட்டியினை உருவாக்கி வருகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு மெல்லக் கற்போருக்கு மட்டும் உருவாக்கப்பட்ட வழிகாட்டி ஆனது 2024 ஆம் ஆண்டு அனைத்து மாணவர்களுக்கும் பயன்படும் படியாக உருவாக்கப்பட்டு, இதில் இயல் -6 க்கான உரைநடை உலகத்தில் நிகழ்கலை என்ற பாடம் மாற்றப்பட்டு பன்முகக்கலைகலைஞர் என்ற புதிய பாடத்திற்கான வினா விடைகள் தயாரிக்கப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் விநியோகிக்கப்பட்டது. வழிகாட்டி இதுவரை வாங்காதவர்கள் 8072426391 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உங்களுக்கான பிரதிகளின் எண்ணிகையை வாங்கிக் கொள்ளலாம். பிரதிகள் இருப்பு உள்ளது. தற்போது வினாவங்கி உருவாக்கி வழங்க முயற்சித்துள்ளோம். இந்த வினாவங்கி மாற்றப்பட்ட புதிய பாடங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த வினாவங்கியினை இரண்டு வித பொருளுடக்கத்தில் உருவாக்கியுள்ளோம்.
1. புத்தக மதிப்பீடு வினாக்கள்
2. தேர்வு பகுதி வினாக்கள்
என்ற இரு விதமான பொருளடக்கத்தில் வினா வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. புத்தக மதிப்பீடு வினாக்கள் பகுதியில் புத்தகத்தில் உள்ள அனைத்து வினாக்களும் தலைப்பு வாரியாக தொகுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக இயல் 1 முதல் இயல் 9 வரை உள்ள அனைத்து ஒரு மதிப்பெண் வினாக்களும் ஒரு மதிப்பெண் வினாக்கள் பகுதியில் வழங்கப்பட்டு இருக்கும். அதே போன்று குறுவினா, சிறு வினா, நெடு வினா. மொழித்திறன் பயிற்சிகள். கலைச்சொல், அகராதியில் காண்க, காட்சியைக் கண்டு கவினுற எழுதுக, மொழிபெயர்க்க, நிற்க அதற்குத் தக எனவும், தேர்வு பகுதிகள் என்ற தலைப்பின் கீழ் புத்தகத்தில் இடம் பெறாத வினாக்களான
பாடலடி வினாக்கள்
விடைக்கேற்ற வினா அமைக்க
பத்தியைப் படித்து பதில் தருக
செய்யுள் பகுதி
அலகிடுதல்
படிவ வினாக்கள்
என புத்தக மதிப்பீட்டில் இடம் பெறாமல் பொதுத் தேர்வில் மட்டும் இடம் பெறும் வினாக்கள் அனைத்து இடம் பெற்றுள்ளன. இந்த வினாவங்கிக்கான ஆதரவினை பெற்று விரைவில் புத்தகமாக வெளியிடப்படும். தற்போது இந்த வினா வங்கியின் மாதிரி பக்கங்கள் உங்கள் பார்வைக்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கீழ் உள்ள இணைப்பின் மூலம் இளந்தமிழ் பத்தாம் வகுப்பு மாதிரி வினாவங்கியினை பதிவிறக்கம் செய்யலாம்
இந்த வினா வங்கி முன்பதிவு செய்ய :- click here