மூன்றாம் பருவம் - தொகுத்தறி
மதிப்பீடு
மாதிரி வினாத்தாள் -2-2024
ஏழாம்
வகுப்பு
மொழிப்பாடம்
– தமிழ்
பாடம்- தமிழ்
மதிப்பெண்கள்: 60
அ)
பலவுள் தெரிக:
5X1=5
1. ‘ இடர் ஆழி
நீங்குகவே ‘- இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் ______
அ) துன்பம்
ஆ) மகிழ்ச்சி இ) ஆர்வம் ஈ) இன்பம்
2. திருநெல்வேலி
_______ ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
அ) காவிரி
ஆ) வைகை
இ) தென்பெண்ணை ஈ) தாமிரபரணி
3. ‘தேர்ந்தெடுத்து’
என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) தேர்
+ எடுத்து ஆ) தேர்ந்து + தெடுத்து இ) தேர்ந்தது + அடுத்து ஈ) தேர்ந்து + எடுத்து
4. ‘ மலையளவு ‘ என்னும்
சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது__
அ) மலை + யளவு ஆ) மலை + அளவு
இ) மலையின் + அளவு ஈ) மலையில் + அளவு
5 . காயிதே மில்லத் ________ பண்பிற்கு
உதாரணமாகத் திகழ்ந்தார்.
அ) தண்மை ஆ) எளிமை இ)
ஆடம்பரம் ஈ) பெருமை
ஆ)
கோடிட்ட இடம் நிரப்புக :-
5X1=5
6. அறம்
+ கதிர் என்னும் சொல்லைச் சேர்த்தெழுத கிடைப்பது_____
7. காந்தியடிகள்
எப்போதும் _______ பேசினார்
8. பொருளின் பெயர் அதன் உறுப்புக்கு
ஆகி வருவது _______
9. ஒருவர்
எல்லாருக்காகவும் எல்லாரும் ஒருவருக்காகவும் என்பது _____ நெறி
10. உலகம் உண்ண உண்; உடுத்த உடுப்பாய்
என்று கூறியவர்_________
இ)
பொருத்துக:
4X1=4
11. நாற்று – பறித்தல்
12. நீர் -
அறுத்தல்
13. கதிர் - நடுதல்
14. களை - பாய்ச்சுதல்
ஈ)
எவையேனும் ஆறு வினாக்களுக்கு மட்டும் விடை தருக: 6X2=12
15.
பொருளீட்டுவதை விடவும் பெரிய செயல் எது?
16. சிறந்த நாட்டின்
இயல்புகளாக வள்ளுவர் கூறுவன யாவை?
17. காக்கை
ஏன் குயில் குஞ்சைப் போகச் சொன்னது?
18. ‘ பொருள் ஏதும்
இல்லாத வீடுகளே இல்லை ‘ – எவ்வாறு?
19. ஒரு பெயர்ச்சொல் எப்போது ஆகுபெயர் ஆகும்?
20. பொய்கையாழ்வாரும் பூதத்தாழ்வாரும் அகல்விளக்காக எவற்றை
உருவகப்படுத்துகின்றனர்?
21. கொற்கை முத்து பற்றி எழுதுக.
22. உவமை, உவமேயம், உவம உருபு விளக்குக
23 உலகம் நிலைதடுமாறக்
காரணம் என்ன?
உ) எவையேனும் இரண்டு
வினாக்களுக்கு விடை தருக: 2X3 = 6
24. ஊருணியையும் மரத்தையும்
எடுத்துக்காட்டிக் குன்றக்குடி அடிகளார் கூறுவது யாது?
25. உழவுத்தொழிலின் நிகழ்வுகளை வரிசைப்படுத்தி எழுதுக
26. பூதத்தாழ்வார்
ஞானவிளக்கு ஏற்றும் முறையை விளக்குக.
ஊ.அடிமாறாமல்
எழுதுக:
2+4=6
27.
உறுபசியும் எனத் தொடங்கும் குறளை அடி மாறாமல் எழுதுக.
28. வையம் தகளியா எனத் தொடங்கும் பாடலை அடி மாறாமல் எழுதுக
எ)
கடிதம் எழுதுக
1X5=5
29. பாடலைப் படித்து
வினாக்களுக்கு விடையளிக்க:-
பனை
மரமே பனை மரமே
ஏன்
வளந்தே இத் தூரம்?
குடிக்கப்
பதனியானேன்!
கொண்டு
விற்க நுங்கானேன்!
தூரத்து
மக்களுக்குத்
தூதோலை
நானானேன்!
அழுகிற
பிள்ளைகட்குக்
கிலுகிலுப்பை
நானானேன்!
கைதிரிக்கும்
கயிறுமானேன்!
கன்றுகட்டத்
தும்புமானேன்!
வினாக்கள்
1.
பனைமரம் தரும் உணவுப் பொருட்கள் யாவை?
2.
பனை மரம் யாருக்கு கிலுகிலுப்பையைத் தரும்?
3.
‘ தூதோலை ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.
4.
பனைமரம் மூலம் நமக்குக் கிடைக்கும் பொருட்களைப் பட்டியலிடுக.
5.
பாடலுக்கு ஏற்ற தலைப்பை எழுதுக.
ஏ) விரிவான விடையளி
1X7=7
30 .அ.
ஒற்றுமையே உயர்வு என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக
(அல்லது)
ஆ. ‘உண்மை ஒளி‘ படக்கதையைக் கதையாகச் சுருக்கி எழுதுக
எ
.அனைத்து வினாக்களுக்கும் விடையளி
5X2=10
31.கலைச்சொல் தருக : அ) POVERTY;
ஆ) simplicity
32. பெயர்ச்சொல்லாகவும், வினைச்சொல்லாகவும் பயன்படுத்தி தொடர்கள்
உருவாக்குக.
அ. விதை, ஆ.கட்டு
33. தலைப்புச் செய்திகளை
முழுசொற்றொடர்களாக எழுதுக.
எ.கா : தலைப்புச் செய்தி
: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடக்கம் – வானிலை மையம் அறிவிப்பு
34. தமிழெண் எழுதுக :- 59,1057, 68,7
35. சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக.
( எனவே, ஏனெனில், அதனால், ஆகையால்,
அதுபோல, இல்லையென்றால், மேலும் )
அ. நாம் இனிய சொற்களைப் பேச வேண்டும்.
___________ துன்பப்பட நேரிடும்.
ஆ. குயிலுக்குக் கூடு கட்டத்தெரியாது. ___________ காக்கையின் கூட்டில் முட்டையிடும்.
CLICK HERE TO PDF