மூன்றாம் பருவம் - தொகுத்தறி
மதிப்பீடு -மாதிரி வினாத்தாள்
-2024
ஏழாம்
வகுப்பு
மொழிப்பாடம்
– தமிழ்
பாடம்- தமிழ்
மதிப்பெண்கள்: 60
அ) பலவுள் தெரிக:
5X1=5
1.திருநெல்வேலி
________ மன்னர்களோடு தொடர்புடையது
அ) சேர ஆ) சோழ இ)
பாண்டிய ஈ) பல்லவA
2.மாரி + ஒன்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
அ) மாரியொன்று ஆ)
மாரி ஒன்று இ) மாரியின்று ஈ)
மாரியன்று
3.
இடர் என்ற சொல்லின் பொருள்
அ)
மகிழ்ச்சி ஆ) துன்பம் இ) இன்பம் ஈ) நிகழ்ச்சி
4.வறுமையைப்
பிணி என்றும் செல்வத்தை _______ என்றும் கூறுவர்
அ)
மருந்து ஆ) மருத்துவர் இ) மருத்துவமனை
ஈ) மாத்திரை
5
.காயிதே மில்லத் என்ற அரபுச் சொல்லின் பொருள்
அ)
சுற்றுலா வழிகாட்டி ஆ) சமுதாய வழிகாட்டி இ) சிந்தனையாளர்
ஈ) வல்லுநர்.
ஆ)
கோடிட்ட இடம் நிரப்புக :-
5X1=5
6.
ஒருவர் எல்லாருக்காகவும் எல்லாரும் ஒருவருக்காகவும் என்பது _____
நெறி
7.
செல்வத்தின் பயன் ________ வாழ்வு
8.
இளங்கோவடிகள் ______ மலைக்கு முதன்மை கொடுத்துப் பாடினார்.
9.
உழவர் சேற்று வயலில் ____________ நடுவர்
10.
மக்கள் அனைவரும் __________ ஒத்த இயல்புடையவர்கள்
இ)பொருத்துக:
4X1=4
11. அன்பு - நெய்
12.
ஆர்வம் - தகளி
13.
சிந்தை - விளக்கு
14.
ஞானம் - இடுதிரி
ஈ)
எவையேனும் ஆறு வினாக்களுக்கு மட்டும் விடை தருக: 6X2=12
15.பாரி மகளிரின் பெயர்களை எழுதுக.
16. தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறுகள் யாவை?
17. உவமை அணிக்கும் எடுத்துக்காட்டு உவமை
அணிக்கும் உள்ள வேறுபாடு யாது?
18. நீக்க வேண்டிய களை என்று அறநெறிச்சாரம்
எதனைக் குறிப்பிடுகிறது?
19. இரட்டைக் கிளவி என்பது யாது? சான்று
தருக.
20. ஒரு நாட்டிற்கு எவையெல்லாம் அரண்களாக அமையும்?
21. விடுதலைப் போராட்டத்தில்
காயிதே மில்லத் அவர்களின் பங்கு பற்றி எழுதுக.
22.
குயில் குஞ்சு தன்னை எப்போது ‘ குயில் ‘ என உணர்ந்தது?
23
பொருளீட்டுவதன் நோக்கமாகக் குன்றக்குடி அடிகளார் கூறுவது யாது?
உ) எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை தருக: 2X3 = 6
24.இரட்டைக்கிளவி அடுக்குத்தொடர் -ஒப்பிடுக
25.ஆட்சி மொழி குறித்து காயிதே மில்லத்தின் கருத்தை விளக்குக.
26.
சாந்தம் பற்றி இயேசு காவியம் கூறுவன யாவை?
ஊ.அடிமாறாமல் எழுதுக:
2+4=6
27.வினையால் எனத் தொடங்கும் குறளை அடி மாறாமல் எழுதுக.
28.
மாரியொன்று எனத் தொடங்கும் பாடலை அடி மாறாமல் எழுதுக
எ) கடிதம் எழுதுக
1X5=5
29.
உங்கள் ஊரில் நடைபெறும் திருவிழாவைக் காண வருமாறு நண்பனுக்கு கடிதம் எழுதுக.
ஏ)
விரிவான விடையளி
1X7=7
30
.அ.என்னை கவர்ந்த நூல் என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக (அல்லது)
ஆ. பயணம் கதையைச் சுருக்கி எழுதுக
எ .அனைத்து வினாக்களுக்கும் விடையளி
5X2=10
31.கலைச்சொல் தருக : FOLKLORE; AGIRICULTURE
32.தொடருக்குப் பொருத்தமான உவமையை எடுத்து எழுதுக.
அ)
என் தாயார் என்னை __________________ காத்து
வளர்த்தார்
.
(கண்ணை இமை காப்பது போல / தாயைக்கண்ட சேயைப் போல)
ஆ) தேர்வுக்கு கபிலன் __________ படித்தான்
( கண்ணும் கருத்தும் போல / மழை முகம் காணாப்
பயிர் போல )
33
.ஊரின் பெயரில் இருந்து புதிய சொற்களை உருவாக்குக ;
அ)
நாகப்பட்டினம், ஆ) திருநெல்வேலி
34. தமிழெண் எழுதுக :- 24, 75, 100, 38
35.சரியான வினாச்சொல்லை இட்டு நிரப்புக .
அ.நெல்லையப்பர் கோவில்—-------- உள்ளது?
ஆ. அறநெறிச்சாரம் என்பதன் பொருள்—------?
CLICK HERE TO PDF