10TH-TAMIL-TRIPPUR - 3RD REV-ANSWER KEY - PDF

 

மூன்றாம் திருப்புதல் தேர்வு-2024 மார்ச் , திருப்பூர் மாவட்டம்

10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்

                                                                பகுதி-1                                                     15X1=15

வினா எண்

விடைக்குறிப்புகள்

மதிப்பெண்

1.      

அ. தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு

1

2.     

இ. உவகை

1

3.     

ஆ. மூன்று

1

4.     

இ. ௯ ௬

1

5.     

ஆ. மணிவகை

1

6.     

ஆ.3,1,4,2

1

7.     

ஈ. இனமொழி விடை

1

8.     

ஈ. அங்கு வறுமை இல்லாததால்

1

9.     

ஈ.நெறியோடு நின்று காவல் காப்பவர்

1

10.   

இ.இடையறாது அறப்பணி செய்தலை

1

11.    

அ. கருணையன் எலிசபெத்க்காக

1

12.  

ஆ. கம்பராமாயணம்

1

13.  

ஈ. அறியாமை

1

14.  

அ. கோசலநாடு

1

15.  

ஆ,இ – இரண்டும் சரியான விடை.

1

 

 

பகுதி-2

                                                             பிரிவு-1                                                4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

16

.ஆ வினாக்களுக்குப் பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

2

17

கிரேக்க மாலுமி ஹிப்பாலஸ்  பருவக்காற்றின் உதவியினால் நடுக்கடல் வழியாக முசிறித் துறைமுகத்திற்கு நேரே விரைவில் பயணம் செய்யும் புதிய வழியைக் கண்டுபிடித்தார். அந்த பருவகாற்றிற்கு ஹிப்பாலஸ் பருவக்காற்று என யவனர்கள் பெயர் சூட்டினர்.

2

18

மாமிசத்தையும், தினைச் சோற்றையும்  உணவாகப் பெறுவீர்கள்.

2

19

Ø  அறிவைத் திருத்தி சீராக்குவோம்

Ø  கல்வி பெற்று மயக்கம் அகற்றுவோம்

2

20

கரப்பிடும்பை இல்லார்தன்னிடம் உள்ள பொருளை மறைத்து வைத்துக் கொண்டு இல்லை எனக் கூறாதவர்

2

21

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்

  தியற்கை அறிந்து செயல்

2

                                                               பிரிவு-2                                                    5X2=10

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

22

அ. கலைச்சொல்                           ஆ.வணிகக்குழு

2

 

செவி மாற்றுத்திறனாளர்களுக்கான வினா

அ. புதுமை                            ஆ. காற்று

2

23

தணிந்தது – தணி+த்(ந்)+த்+அ+து

தணி – பகுதி

த் – சந்தி , ‘ந்’ ஆனது விகாரம்

அ – சாரியை

து – படர்க்கை வினைமுற்று விகுதி

2

24

சேரனின் பட்டப்பெயர்களில்’ கொல்லி வெற்பன்’,;மலையமான்’போன்றவை குறிப்பிடத்தக்கவை.’கொல்லிமலை’யை வென்றவன்’ கொல்லி வெற்பன்’ எனவும்,பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள்’ மலையமான்’ எனவும் பெயர் சூட்டிக் கொண்டனர். இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன.

2

25

வெற்பர்கள் மலையில் உழுதனர்.

தாழைப் பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.

2

26

அ. லாட்டரி வாங்கிய உடனே கோடீஸ்வரன் ஆகிவிடலாம் என மனக்கோட்டைகட்டினான்.

ஆ. கபிலன் தேர்வுக்கு கண்ணும் கருத்துமாகப் படித்தான்

2

27

கோல்டு பிஸ்கட் – தங்கக் கட்டி

டூ டைம்ஸ் – இரண்டுமுறை

யூஸ் – பயன்படுத்தி

வெயிட் - எடை

2

28

v  .தண்ணீரைக் குடிஅவன் தண்ணீரைக் குடித்தான்

v  தயிரை உடைய குடம்கமலா தயிர்க்குடத்திலிருந்து தயிரை ஊற்றினாள்.

2

 

பகுதி-3  (மதிப்பெண்கள்:18)

                                                                பிரிவு-1                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

29

சோலைக் காற்று :           மின் விசிறிக் காற்றே ! நலமா?

மின் விசிறிக் காற்று :      நான். நலம். உனது  இருப்பிடம் எங்கே?

சோலைக்காற்று :           அருவி,பூஞ்சோலை,மரங்கள். உனது இருப்பிடம் எங்கே?

மின் காற்று :                   அறைகளின் சுவர்களின் இடையில். எனது இருப்பிடம்

சோலைக்காற்று :           என்னில் வரும் தென்றல் காற்றை அனைவரும் விரும்புவர்.

மின்  காற்று :                  விரும்பியவர்கள் மின் தூண்டுதல் மூலம் என்னைப்

                                       பெறுவர். எண்ணிக்கையின் அடிப்படையில் வேகம்

                                      கொள்வேன்

சோலைக் காற்று :           இலக்கியங்களில் நான் உலா வருவேன். அனைவரும்

                                      விரும்பும் விதமாக இருப்பேன்.

மின் காற்று :                நான் இல்லாமல் அலுவலகம் இல்லை. மின்சாரம் இல்லையெனில் நான் இல்லை.  என்னை விரும்பும் நேரங்களில் இயக்கிக் கொள்ளலாம்.

3

30

அ. திருப்பாதிரிப் புலியூர் ஞானியார்

ஆ. அம்மானைப்பாடல்கள், சித்தர் பாடல்கள், சொற்பொழிவுகள்

இ. கேள்வி ஞானம் மூலம் ஈடு செய்தார்

3

31

இரவில் வாயில் கதவு மூடுவதற்கு முன் உணவு உண்ண யாரேனும் உள்ளார்களா என்பதற்காக வினவப்பட்டது.

3

 

                                                   

 

 

 

                                         பிரிவு-2                                                               2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

32

ü  தொழில் செய்வதற்குத் தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், செயலின் தன்மை, செய்யும் முறை ஆகியவற்றை அறிந்து செயல்பட வேண்டும் என கூறியிருப்பது நமக்கும் பொருத்தமாக அமைகிறது.

ü  மனவலிமை, குடிகளைக் காத்தல், ஆட்சி முறைகளைக் கற்றல், நூல்களைக் கற்றல்,விடாமுயற்சி போன்றவை நமக்கும் சிறப்பாக அமைய வேண்டும்.

ü  இயற்கையான நுண்ணறிவும் ,நூலறிவும் உடையவர்களிடம் எந்த சூழ்ச்சியும் நடைபெறாது

ü  ஒரு செயலைச் செய்வதற்குரிய முறைகளை நூல் வழியாக அறிந்திருப்பினும் உலகியல் நடைமுறைகளை அறிந்து தான் நாம் செயல்பட வேண்டும்.

3

33

Ø  உயிர் பிழைக்கும் வழி

Ø  உடலின் தன்மை

Ø  உணவைத் தேடும் வழி

Ø  காட்டில் செல்லும் வழி

3

34

.

செம்பொ னடிச்சிறு கிங் கிணியோடு சிலம்பு கலந்தாடக்

          திருவரை யரைஞா  ணரைமணி யொடு மொளி திகழரை வடமாடப்

பைம்பொ னசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாடப்

          பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக்

கம்பி விதம்பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக்

          கட்டிய சூழியு முச்சியு முச்சிக் கதிர்முத் தொடுமாட

வம்பவ ளத்திரு மேனியு மாடிட ஆடுக செங்கீரை

          ஆதி வயித்திய நாத புரிக்குக னாடுக செங்கீரை      - குமரகுருபரர்

                                             வீரமாமுனிவர்

.

 

சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்

உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்

நடுங்கு சுவல் அசைத்த கையள், “ கைய

கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர

இன்னே வருகுவர்,தாயார்” என்போள்

நன்னர் நன்மொழி கேட்டனம்                                 - நப்பூதனார்

3

                                                           

                                                  பிரிவு-3                                                          2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க.

35

அ. ஒன்பது வகைப்படும்

எழுவாய்த் தொடர், விளித்தொடர், வினைமுற்றுத் தொடர், பெயரெச்சத்தொடர், வினையெச்சத் தொடர், வேற்றுமைத் தொடர், இடைச்சொல் தொடர்,உரிச்சொல் தொடர், அடுக்குத் தொடர்

3

36

தீவகம் – விளக்கு

விளக்கம் : விளக்கு அனைத்து இடங்களிலும் வெளிச்சம் தருவது போல செய்யுளின் ஓரிடத்தில் நின்ற சொல் செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருந்திப் பொருளை தருவது.

எ.கா: சேந்தன வேந்தன் திருநெடுங்கண் தெவ்வேந்தர்

ஏந்து தடந்தோள், இழிகுருதி – பாய்ந்து

___________

இதில் சேந்தன என்ற சொல் சிவந்தன என்ற பொருளில் செய்யுளின் பல இடங்களில் உள்ள சொற்களோடு பொருந்தி பொருள் கொள்ளமுடிகிறது.

வகைகள்:

முதல்நிலை தீவகம், இடைநிலைத் தீவகம், கடைநிலைத் தீவகம்

3

37

சீர்

அசை

வாய்பாடு

வன்-கண்

நேர்+ நேர்

தேமா

குடி-காத்-தல்

நிரை+ நேர்+நேர்

புளிமாங்காய்

கற்-றறி-தல்

நேர்+ நிரை+நேர்

கூவிளங்காய்

ஆள்–வினை-யோ

நேர்+ நிரை+நேர்

கூவிளங்காய்

டைந்-துடன்

நேர்+ நிரை

கூவிளம்

மாண்-ட

நேர்+ நேர்

தேமா

தமைச்சு

நிரைபு

பிறப்பு

3

                                  பகுதி-4                                                             5X5=25

அனைத்து வினாக்களுக்கும் விடையளி

38

)

தமிழ்

கடல்

1. முத்தமிழாக வளர்ந்தது

1. முத்தினைத் தருகிறது

2. முச்சங்களால் வளர்க்கப்பட்டது

2. மூன்று சங்குகளைத் தருகிறது

3. ஐம்பெருங்காப்பியங்கள்

3. பெரும் வணிகக் கப்பல்

4. சங்கப் புலவர்களால் காக்கப்பட்டது.

4. சங்கினைத் தடுத்து காக்கிறது

(அல்லது)

)

மருவூர்ப்பாக்க வணிக வீதி

இக்கால வணிக வளாகங்கள்

தானியக் கடைத் தெருக்கள்

தனித்தனி அங்காடிகள்

நேரடி வணிகம்

இடைத் தரகர்கள் அதிகம்

இலாப நோக்கமற்றது

இலாபம் மட்டுமே முக்கியம்

கலப்படம் இல்லாதது

கலப்படம் கலந்துள்ளது

தரம் உண்டு.விலை குறைவு

தரம் குறைவு,விலை அதிகம்

5

39

)

v  அனைவருக்கும் வணக்கம்.

v  நாட்டு நலப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மாணவர்களை வாழ்த்துகிறேன்.

v  சேவை மற்றும் தொண்டு பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட மாணவர்களுக்கு நன்றி.

v  மாணவர்களின் உங்களின் இந்த பொது நலத் தொண்டு நாட்டின் வளத்தினை உயர்த்தும்.

v  சேவை மனப்பான்மையை வளர்க்கும் நாட்டு நலப் பணித்திட்ட செயல்பாட்டாளர்களுக்கும், பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும் வாழ்த்துகள்.

)

புகார் விண்ணப்பம்

அனுப்புநர்

                   அ அ அ அ அ,

                   100,பாரதி தெரு,

                   சக்தி நகர்,

                   சேலம் – 636006.

பெறுநர்

          மாநகராட்சி  ஆணையர் அவர்கள்,

          மாநகராட்சி அலுவலகம்,

          சேலம் – 636001

ஐயா,

பொருள்: புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிப்படுத்தி தர வேண்டுதல் – சார்பு

      வணக்கம். நான் நேற்று ஏற்பட்ட கடும் புயலில் சாய்ந்து விட்ட மரங்களை அகற்றவும், பழுதடைந்த மின் கம்பங்களை சரி செய்தும் கொடுக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்

நன்றி.

                                                                               தங்கள் உண்மையுள்ள,

                                                                                                                                                            அ அ அ

இடம் : சேலம்        

பெறுநர்

          மாநகராட்சி ஆணையர் அவர்கள்,

மாநகராட்சி அலுவலகம்,

சேலம் – 636001

 

 
நாள் : 04-03-2021

உறை மேல் முகவரி:

 

 

 

 

 

 

5

40

காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

5

41

      அனைத்து தகவல்களையும் நிரப்பி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

5

42

)

1. குறளை பேசாதிருத்தல்

1. தேவையற்றச் சண்டைகள் நீங்கும்

2. பழிவாங்கும் எண்ணத்தை கைவிடல்

2. மன அமைதி பெறலாம்.

3. உண்மை பேசுதல்

3. நம் வாழ்வை உயர்த்தும், அச்சமின்றி வாழலாம்

4. உதவி செய்தல்

4. மன மகிழ்ச்சி கிடைக்கும்

5. அன்பாய் இருத்தல்

5. அனைவரும் நண்பராகிவிடுவர்

 

)

        கலைஞர்களால் தெருவில் இசை நாடகம் போல் நடத்தப்படுவதே தெருக்கூத்து. இதில் இராமாயணம்,மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலும் இன்னபிற பழங்கால புராணங்களிலிருந்தும் கதைகளை,நிறைய பாடல்களுடன் நாடகமாக்கம் செய்து, சூழ்நிலைக்கேற்ப வசன்ங்களை சேர்த்து கலைஞர்கள் மெருகேற்றி நடிப்பார்கள். பதினைந்திலிருந்து இருபது கலைஞர்கள் ஒரு குழுவாககூத்து குழுஒன்றை அமைத்து இதை நடத்துவர்..                                 

5

 

பகுதி-5                                                             3X8=24

எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க:

43

 )  

குறிப்புச் சட்டகம்

Ø  முன்னுரை

Ø  நாட்டு விழாக்கள்

Ø  விடுதலைப் போராட்ட வரலாறு

Ø  நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்பங்கு

Ø  முடிவுரை

முன்னுரை:

        மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும் பற்றி இக் கட்டுரையில் காணலாம்.

நாட்டு விழாக்கள்:

        சுதந்திர தினம், குடியரசு தினம், காந்திஜெயந்தி, தேசிய ஒருமைப்பாடு தினம், ஆகிய நாட்களில் மாணவர்கள் ஒற்றுமையோடு கொண்டாடி நாட்டிற்கு பெருமை சேர்க்கின்றனர்.

விடுதலைப் போராட்ட வரலாறு:

        வெள்ளையனே வெளியேறு,உப்புச் சத்தியாகிரகம் போன்ற போராட்டங்கள் மூலம் பெற்ற விடுதலையை எண்ணி போற்ற வேண்டும்.

நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்பங்கு:

        மாணவர்கள் கல்வி பயில்வதோடு பள்ளியில் செயல்படும் சாரணர் இயக்கம், இளஞ்செஞ்சிலுவை சங்கம், NSS, NCC போன்ற இயக்கங்களில் இணைந்து சுதந்திர இந்தியாவைக் காப்பாற்றும் பொறுப்பு அறிந்து செயல் பட வேண்டும்.

முடிவுரை:

        நாட்டினை உயர்த்துவேன்,தலை நிமிர்ந்து வாழ்வேன் என்ற உறுதியான மனநிறைவோடு வாழ்ந்திடுவோம்.

(அல்லது)

)

 

நிகழ்கலை வடிவங்கள்

நிகழும் இடங்கள்

ஒப்பனைகள்

சிறப்பும்,பழமையும்

அருகி வருவதற்கானக் காரணம்

நாம் செய்ய வேண்டுவன

நிகழ்கலை வடிவங்கள் :

        சமூக பண்பாட்டுத் தளத்தின் கருத்து கருவூலம் நிகழ்கலைகள். பழந்தமிழ் மக்களின் கலை, அழகியல்,புதுமை ஆகியவற்றை அறிவதற்கு தற்காலத்தில் நிகழ்த்தப்படும் நிகழ்கலை வடிவங்கள் துணை செய்கின்றன.

நிகழும் இடங்கள் :

        நிகழ்கலைகள் பொதுவாக மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் நிகழ்த்தப்படும். கோயில் திருவிழாக்களில் இவ்வகைக் கலைகளை நாம் காணலாம்.

ஒப்பனைகள் :

          பல்வேறு விதமான நிகழ்கலைகளுக்கு கலைஞர்கள் பல்வேறு விதமான ஒப்பனைகள் செய்து ஆடுகின்றனர். தெருக் கூத்து கலைகளில் தெய்வங்கள், மன்னர்கள் போன்ற பல்வேறு விதமான ஒப்பனைகளைக் காணலாம்.

சிறப்பும் பழமையும்

        வாழ்வியலில் ஒரு அங்கமாக இருந்தது நிகழ்த்துகலைகள். இவை அறக்கருத்துகளைக் கூறும் சிறப்பாகவும் அமைந்தது, பொம்மலாட்டம், கையுறைக் கூத்து, தெருக் கூத்து போன்றவை  முன்னோர்களின் பழமை வாய்ந்த கலைகள் ஆகும்.

அருகி வரக் காரணம்:

·         நாகரிக வளர்ச்சி

·         கலைஞர்களுக்கு போதிய வருமானம் இல்லை

·         திரைத்துறை வளர்ச்சி

·         அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி

நாம் செய்ய வேண்டுவன:

·         நமது இல்லங்களில் நடைபெறும் சுபநிகழ்ச்சிகளில் இந்நிகழ்கலைகளை நிகழ்த்துவது.

·         நமது ஊர் கோவில் திருவிழாக்களில் இக்கலைகளை ஊக்கப்படுத்துவது.

·         ஊடகங்களில் இக்கலைகளைப் பற்றி விளம்பரப்படுத்துவது.

8

44

.

முன்னுரை:

                                        ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்

                                         தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்”

              ஒரு கலைஞன் மற்ற கலைஞர்களிடம் இருந்து வேறுபட்டு, தனக்கெனத் தனித்தன்மைகளைக் காட்டுவான். கலை ஈடுபாட்டில் அவனுக்கு  வயதோ, உடற்சோர்வோ பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.தன் கலையைப் பின்பற்ற தகுந்த வாரிசு  உருவாகின்ற போது அவன் கொள்கின்ற மகிழ்ச்சி அளப்பரியது. அவ்வாறு நிகழ்ந்த ஒரு கதையை இங்கு காண்போம்.

அனுமார்:

                                  போர்க்களம் நீ புகும்போது

                                   முள் தைப்பது கால் அறியாது”

              நாகசுரமும், மேளமும் ஒன்றாக இணைந்து ஒலித்தன. சத்தம் கேட்ட அழகு குனிந்து பார்த்தான். இரண்டு கால்களும்  மின்னல் வெட்டி மறைவது போலத் துள்ளிப் பாய்ந்து சென்றன. அந்தக் கால்கள் மனிதனிடம் இருந்து மாறுபட்டு, பச்சையா? நீலமா? என்று தீர்மானிக்க முடியாத நிறத்தில் இருப்பதைக் கண்டான். ஆளுயர குரங்கு ஒன்று மரத்தின் மேலிருந்து  இறங்குவதைக் கண்டான்.

அனுமாரின் நெருப்பாட்டம்:

                                    தீப்பிடித்தது அனுமாரின் வாலில் மட்டுமன்று

                                     அழகுவின் அளவுகடந்த ஆர்வத்திலும்தான்”

        திடீரென்று மேளமும்,நாகசுரமும்  வேகமாக ஒலிக்கத் தொடங்கின.எதற்கென்றே தெரியாமல்  ஒரு கூட்டம் திகைத்து பந்தலையே நோக்கிக் கொண்டிருந்தது. பெருங்குரல் எழுப்பியபடி அனுமார் பந்தல் கால் வழியாகக் கீழே குதித்தார்.அனுமார் வாலில் பெரிய தீப்பந்தம்  புகை விட்டு எரிந்து கொண்டிருந்தது.

அழகுவின் உதவி:

      சிறிது நேரம் கழித்து தீ எரிவது மெல்ல மெல்லத் தணிந்தது.. கீழே புரண்ட வாழை  இவனைப் போன்ற இரண்டு பேர் தூக்கி வந்தார்கள். அழகு அவர்கள் அருகில் சென்றான். அவர்கள் அந்த வாழை அழகு இடத்தில் ஒப்படைத்து விட்டுச் சென்றனர். அனுமார் சென்ற இடத்திற்கெல்லாம் அழகு வாலைத் தூக்கிக் கொண்டு சென்றான்.சற்று நேரம் கழித்து ஆட்டம் முடிந்தது

அழகுவின் ஆட்டம்:

                                                         பெயரில் மட்டும் அழகில்லை

                                                          அவன் விரும்பிய கலையிலும்தான் அழகு”

      அனுமார் கழற்றி வைத்திருந்த துணி, சலங்கை,முகத்திற்குப் போடப்படுபவை ஆகியவற்றைத் தான் அணிந்து கொண்டு அனுமார்  போல ஆடினான் அழகு. களைப்பில் இருந்த அனுமார் பார்த்தார்.அழகு உடனே ஆட்டத்தை நிறுத்திக் கொண்டான். ஆனால் அனுமார்  தூணில்  சாய்ந்து கொண்டுபரவாயில்லை கட்டிக்கிட்டு என்றார்”. அவனும் நன்றாக  ஆடினான்.

அனுமார் அடைந்த மகிழ்ச்சி:

          அனுமார் அழகுக்கு ஆட்டத்தை சொல்லிக்கொடுத்தார். அவனும் அதே போல ஆடினான். அனுமார் தன்னை மீறிய மகிழ்ச்சியோடு,” பேஷ் பேஷ் உடனே பிடிச்சுகிட்டியே”  என்றார்.அனுமார் அம்பு போல அவன் முன் பாய்ந்தார். அழகு அனுமாரின் கை இடுக்கில் புகுந்து வெளியே சென்றான். பாய்ந்த வேகத்தில் கீழே விழப் போன அனுமார் தரையில் கையூன்றி சமாளித்து நின்று, வெறுமை நிறைந்த மனதோடு இவனைத் திரும்பிப் பார்த்தார்.

முடிவுரை:

  “என்னலே, எனக்கே பாச்சா காட்டுற?பிடியில் சிக்காமல் நழுவுறஎன்று கூறிக் கொண்டு இருக்கும்போது அனுமாரின் கால்கள் பின்னிக்  கொண்டன. அழகு அனுமார் விழுந்ததைக் கவனிக்காமல்  தன் ஆட்டத்தில் மூழ்கிய வனாக, உற்சாகம் பொங்க வேகமாக ஆட்டிக்கொண்டிருந்தான்.

 

(அல்லது)

.

     மகளிர் நாள் விழா

அறிக்கை

          எம்பள்ளிக் கலையரங்கத்தில் 08-03-2019 அன்று மகளிர் நாள் விழா நடைபெற்றது.

மாணவர் ,ஆசிரியர் கூடுதல்:

          கலையரங்கத்தில் மாலை 3.00 மணியளவில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் கூடினர்.தமிழ்த்தாய் வாழ்த்து பாடி விழா தொடங்கப்பட்டது.

தலைமையாசிரியர் வரவேற்பு:

        தலைமை ஆசிரியர் வந்திருந்த அனைவரையும் தேன் தமிழ் சொற்களால் வரவேற்றார். தலைமை ஆசிரியர் கூறிய இதழாளர் கலையரசி பற்றிய வரவேற்பும்,அறிமுகமும் மிகவும் சிறப்பாக இருந்தது.

இதழாளர் கலையரசியின் சிறப்புரை:

        இதழாளர் கலையரசியின் பேச்சு மகளிருக்கு மட்டுமல்ல. அனைவருக்கும் உந்து சக்தியாக அமைந்தது.

Ø  மகளிரின் சிறப்புகள்

Ø  மகளிருக்கு அரசின் நலத் திட்டங்கள்

Ø  சுய உதவிக்குழுக்களின் பங்கு

Ø  மகளிர் கல்வி

போன்ற கருத்துகள் தெளிவாகவும்,அருமையாகவும் இருந்தன.

 

ஆசிரியர்களின் வாழ்த்துரை:

        ஆசிரியர் கலையரசியின் உரைக்கு வாழ்த்து தெரிவித்ததோடு நம் பள்ளி மாணவிகளையும் பல்வேறு சாதனைகள் புரிய வேண்டும் என வாழ்த்துரை வழங்கினார்.

 மாணவத் தலைவரின் நன்றியுரை:

        மாணவத் தலைவர் சிறப்பு விருந்தினருக்கும்,தலைமை ஆசிரியருக்கும்,ஆசிரியர்களுக்கும்,மாணவர்கள் மற்றும் அவர் தம் பெற்றோருக்கும் நன்றி கூறினார். மகளிர் நாளில் உறுதி மொழி எடுக்கப்பட்டு நாட்டுப்பண் பாடி விழா இனிதே நிறைவுற்றது.                                   

8

45

குறிப்புகளைக் கொண்டு விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

அ. தலைப்பு : உழவெனும் உன்னதம்

முன்னுரை:

ஏர் முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்லே

        என்ற திரைப்பாடல் உயர்த்திக்கூறுவது உழவுத்தொழிலைத்தான். தன் வயிற்றுப் பசி போக்க தொழில்களை மேற்கொள்ளும் மனிதர்களிடையே, பிறர் பசி போக்க தொழில் புரிவோர் உழவர். இவர்தம் உயரிய பணி குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

உழவுத் தொழிலும் உழவர்களும்:

நித்தமும் உழவே அவன் நினைப்பு

              நெற்றி வியர்வை சிந்திட அவன் உழைப்பு

      உழவுத்தொழில் உழுதல், சமன் செய்தல், விதைத்தல், நடுதல், நீர் பாய்ச்சுதல்,களை யெடுத்தல், பாதுகாத்தல்,அறுவடை செய்தல் எனும் பல கூறுகளை உள்ளடக்கியது. களமர், உழவர், உழத்தியர், கடையர், கடைசியர் போன்றோரின் உழைப்பால் உழவுத் தொழில் சிறப்புற்று இருக்கிறது.

தமிழர் வாழ்வில் உழவு

தமிழனின் உதிரத்தில் கலந்தது உழவு

        உழவன் இன்றி உலகோர்க்கு ஏது உணவு?”

       பழந்தமிழகத்தில் மக்களின் தலையாய தொழிலாக உழவுத்தொழில் விளங்கியது உழவும் உழவு சார்ந்த தொழில்களும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை நிர்ணயித்தன. உழவர்கள் சமுதாயத்தில் மதிப்புள்ளவர்களாக வாழ்ந்தனர். மனிதன் விலங்குகளை வேட்டையாடியும் ஆடுமாடுகளை மேய்த்தும் குறிஞ்சி, முல்லை நிலங்களில் வாழ்ந்த காலத்தில் அந்நிலங்களில் வரகு சாமை, தினை முதலியவற்றையும், உளுந்து, பயறு, அவரை முதலியவற்றையும் விளைவித்தான். மருதநிலத்தில் வயல்களில் விளைந்த நெற்பயிரை பாதுகாத்தலில் உழவர்களில் ஆடவரும் மகளிரும் ஈடுபட்டனர்.

இலக்கியங்களில் உழவுத் தொழில்:

                 உழவர்கள் உழுத உழவினை நல்லேர் நடந்த நகைசால் விளை வயல்'

     என்கிறது சங்க இலக்கியம். 'நெல்மலிந்த மனை பொன் மலிந்த மறுகு' என்கிறது புறநானூறு.'ஏரின் உழாஅர் உழவர்' என்கிறது திருக்குறள். அதோடன்றி சங்க இலக்கியங்கள் பலவற்றிலும் உழவுத்தொழில் பற்றிய குறிப்புகள் மிகுதியாகக் காணப்படுகின்றன

உழவின் சிறப்பு:

       உழவு அனைத்துத் தொழில்களுக்கும் மையமாக விளங்குகிறது.தன்னையும் தன்னைச் சார்ந்தோரையும் காப்பாற்ற உழவுத் தொழிலை அறத்துடன் செய்தனர் உழவர். சேமிப்பின் அவசியத்தை தானியக் குதிர்கள் மூலம் அறியலாம். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும்பங்காற்றி வரும் இத்தொழிலே, உலகில் நடைபெறும் அனைத்து தொழில்களுக்கும் தலைமைத் தொழிலாகும்.' உழுவார் உலகத்தார்க்கு அச்சாணி' எனும் வள்ளுவர் வழி இதனை அறியலாம்.

உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்:

        உழவர் சேற்றில் கால் வைத்தால்தான் உலகமக்கள் சோற்றில் கை வைக்க முடியும். 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்' எனும் சிறப்புப் பெற்று, மழை வெயில் பாராமல் உழைக்கின்ற உழவரையும் உழவுத் தொழிலையும் நாம் வணங்கிப் போற்றினால் இவ்வுலகம் நிலைபெறும்.

முடிவுரை:

      'சுழன்றும் ஏர்பின்னது உலகம்' என்கிறார் வள்ளுவர். 'கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி' என்கிறார் மருதகாசி. உழவையும், உழவரையும் அழிவிலிருந்து காப்பது நம் அனைவருடைய கடமையாகும். இயற்கையை வணங்குவோம்; உழவினைப் போற்றுவோம்.

ஆ)

தலைப்பு : சாலை பாதுகாப்பு

முன்னுரை:                                    

      சாலை விபத்துக்கள் நமது சமுதாயத்திற்கும், காவல்துறைக்கும், சட்டத்துக்கும் ஒரு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.தினந்தோறும் செய்தித்தாள்கள் மூலமாகவும், தொலைக்காட்சிகள் மூலமாகவும் சாலைவிபத்துகளைப் பற்றிய செய்திகளை நாம் மிகுதியாக அறிகிறோம். இக்காலகட்டத்தில் மிகுதியான சாலை விபத்துக்கள் நடைபெறுகின்றன. சாலை விதிகளை நாம் மதிக்காமல் நடப்பது இதற்கெல்லாம் காரணம் ஆகும். சாலை பாதுகாப்பின் அவசியம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு:

       சாலையில் விபத்துகள் நிகழாத வண்ணம் தடுப்பதற்காக, போக்குவரத்து காவல்துறையினர் பணி செய்கின்றனர்.அதற்காக மக்கள் பின்பற்ற வேண்டிய சில சாலை விதிகளை அரசு வரையறுத்துள்ளது. அறிவிப்புப் பலகைகள் மூலமாகவும், விளம்பரங்கள் மூலமாகவும், ஓட்டுனர்பயிற்சி பெறும்போதும் சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு வழங்கப்படுகிறது.சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.

சாலை விதிகள்:

      சாலையில் பயணம் செய்வோர் அனைவரும் அடிப்படையான சாலை விதிகள் அனைத்தையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.நடைமேடையைப் பயன்படுத்துதல், நகரப்பகுதிகளில் சாலையைக் கடக்க சுரங்க நடைபாதைகள் பயன்படுத்துதல், வெள்ளைக் கோடுகள் போடப்பட்ட இடத்தில் சாலையைக் கடத்தல், வாகன ஓட்டிகள் முறையான இடங்களில் வாகனங்களை நிறுத்துதல் உள்ளிட்ட அடிப்படை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்.

ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள்:

v  சிவப்பு வண்ண விளக்கு" நில்" என்ற கட்டளையையும், மஞ்சள் வண்ண விளக்கு, தயாராக இரு என்ற கட்டளையையும், பச்சை வண்ண விளக்கு"புறப்படு" என்ற கட்டளையையும் நமக்குத் தருகிறது. அதைச் சரியாகப் பின்பற்ற வேண்டும்.

v  போக்குவரத்துக் காவல் துறையினரின் கட்டளையை மீறி நான் செல்லக்கூடாது. வாகனங்களில் அதிவேகம் இருக்கக்கூடாது.

v  சாலையில் அந்தந்த வாகனங்களுக்கு உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டக் கூடாது. நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தை முந்த முயற்சி செய்யக்கூடாது. இருசக்கர வாகனங்களில் இருவருக்குமேல் பயணிக்கக் கூடாது.

v  வாகனஓட்டிகள் உடல்நிலை மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கும் போது கண்டிப்பாக வாகனம் ஓட்டக்கூடாது.மது அருந்திவிட்டு வண்டி ஓட்டுதல் சட்டப்படி குற்றமாகும்.பள்ளிகள், மருத்துவமனை, முதியோர் இல்லங்கள் போன்ற இடங்களுக்கு அருகில் அதிகமான ஒலி அளவில் ஒலிப்பானை ஒலிக்கக் கூடாது.

முடிவுரை:

     "சாலைவிதிகளை மதிப்போம்

      விலைமதிப்பில்லாத உயிர்களைக் காப்போம்"

     என்பதை அனைவரும் மனதிற்கொண்டு சாலை விதிகளை கடைபிடித்து, சாலை பாதுகாப்பை உறுதி செய்வோம். சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை உணர்வோம்.

8

 

 

 CLICK HERE TO GET PDF

CLICK HERE

 

 

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post