மாதிரி வினாத்தாள் - 2
பத்தாம் வகுப்பு
மொழிப்பாடம் – தமிழ்
நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி மதிப்பெண் : 100
அறிவுரைகள்
: 1) அனைத்து வினாக்களும் சரியாகப்
பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ளவும்.
அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக் கண்காணிப்பாளரிடம் உடனடியாகத்
தெரிவிக்கவும்.
2) நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும்,அடிக்கோடிடுவதற்கும் பயன்படுத்தவும்.
குறிப்பு
: I ) இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக்
கொண்டது.
ii)
விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும்
சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.
பகுதி – I ( மதிப்பெண்கள் : 15 )
i)
அனைத்து
வினாக்களுக்கும் விடையளிக்கவும்
ii)
கொடுக்கப்பட்ட
நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக்
குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும். 15×1=15
1. தொழிலைச்
செய்யும் கருத்தாவைக் குறிப்பது _________________
அ)
தொழிற்பெயர் ஆ) முதனிலைத்
திரிந்த தொழிற்பெயர்
இ)
முதனிலைத் தொழிற்பெயர் ஈ) வினையாலணையும் பெயர்
2.
குலசேகர ஆழ்வார் “ வித்துவகோட்டம்மா” என்று ஆண் தெய்வத்தை
அழைத்துப் பாடுகிறார்.
பூனையார் பால் சோற்றைக் கண்டதும்
விரைந்து வருகிறார். – ஆகிய தொடர்களில் இடம் பெற்றுள்ள வழுவமைதிகள் முறையே-
அ) மரபு வழுவமைதி, திணை வழுவமைதி ஆ) இட வழுவமைதி, மரபு வழுவமைதி
இ) பால் வழுவமைதி, திணை வழுவமைதி ஈ) கால வழுவமைதி, இட வழுவமதி
3.பாரதியார்
காற்றை’ மயலுறுத்து ‘ அழைப்பதைக் குறிக்கும் சொற்றொடர்____________
அ)
மணம் வீசும் காற்றாய் நீ வா ஆ) மனதை மயங்கச்
செய்யும் மணத்தோடு நீ வா
இ)
மயிலாடும் காற்றாய் நீ வா ஈ)
மகரந்தம் சுமந்து கொண்டு நீ வா
4.
அறிஞருக்கு நூல்,அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது.
அ) வேற்றுமை உருபு ஆ)
எழுவாய் இ) உவம உருபு ஈ)
உரிச்சொல்
5.
‘ எய்துவர் எய்தாப் பழி’ – இக்குறளடிக்கு பொருந்தும்
வாய்பாடு எது?
அ) கூவிளம் தேமா மலர் ஆ) கூவிளம் புளிமா
நாள்
இ) தேமா புளிமா காசு ஈ)
புளிமா தேமா பிறப்பு
6.
. கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும்
குடக் கூத்து என்றும் கூறுவர். இத்தொடருக்கான வினா எது?
அ) கரகாட்டம் என்றால் என்ன? ஆ) கரகாட்டம்
எக்காலங்களில் நடைபெறும் ?
இ) கரகாட்டத்தின் வெவ்வேறு வடிவங்கள்
யாவை? ஈ) கரகாட்டத்தின் வேறு பெயர்கள்
யாவை?
7.
” இலையுதிர்
காலம் ___________ சருகாயின!
மழைக்காலம் __________ தழைத்தன!
சருகுகளோ செழுமையான உரங்களாயின!
- புதுக்கவிதைக்குப் பொருத்தமான எதுகை,மோனைச் சொற்களை இட்டு நிரப்புக.
அ) மரங்கெல்லாம்,கிளைபரப்பின ஆ)
காடெல்லாம்,வளர்ந்தன
இ) இலைகளெல்லாம், மரங்கெல்லாம் ஈ) மலையெல்லாம், முளைத்தன
8.
‘ உனதருளே பார்ப்பன் அடியேனே ‘ யாரிடம் யார் கூறியது?
அ) குலசேகராழ்வாரிடம் இறைவன் ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்
இ) மருத்துவரிடம் நோயாளி ஈ) நோயாளியிடம்
மருத்துவர்
9.
ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள்
எது?
அ. குலா ஆ. இலா இ. சீலா ஈ. துலா
10 “ மருந்தே ஆயினும் விருந்தோடு உண்
“ என்னும் அடிகள் இடம் பெற்றுள்ள நூல்
அ. குறுந்தொகை ஆ. கொன்றை வேந்தன் இ. திருக்குறள் ஈ.
நற்றிணை
11.
‘ சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு
சேர்ப்பீர் ‘ – பாரதியின் இக்கூற்று உணர்த்தும் கருத்து
அ. பல துறை நூல்கள் தமிழில் உருவாக்கப்பட
வேண்டும்.
ஆ. பலகலைகள் தமிழில் புதிததாக தோன்ற
வேண்டும்.
இ. உலகெங்கும் காணப்படும் செல்வங்கள்
தமிழகத்தில் வந்து சேர்தல் வேண்டும்
ஈ. கலைச் செல்வங்களை உலகம் முழுவதும்
பயணம் செய்து கண்டுகளிக்க வேண்டும்.
பாடலைப் படித்து வினாக்களுக்கு(12,13,14,15)
விடையளிக்க:-
“ அன்று அவண் அசைஇ, அல்சேர்ந்து
அல்கி,
கன்று எரி ஒள்இணர் கடும்பொடு மலைந்து
சேந்த செயலைச் செப்பம் போகி,
அலங்கு கழை நரலும் ஆரிப்படுகர்ச்
சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி
நோனாச் செருவின் வலம்ப்டு நோன்தாள்
மான விறல்வேள் வயிரியம் எனினே,”
12.‘
அசைஇ’ இச்சொல்லின் இலக்கணக் குறிப்பு
அ.
வினைத்தொகை ஆ. பண்புத்தொகை இ. சொல்லிசை அளபெடை ஈ. செய்யுளிசை அளபெடை
13.
‘ சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி ‘ – இவ்வடியில் ‘ பாக்கம் ‘ என்னும் சொல்லின்
பொருள்
அ.
சிற்றூர் ஆ. பேரூர் இ. கடற்கரை ஈ. மூதூர்
14.
பாடல் இடம் பெற்ற நூல்
அ.
சிலப்பதிகாரம் ஆ. முல்லைப்பாட்டு இ. மலைபடுகடாம் ஈ. காசிக்காண்டம்
15.
பாடலில் இடம்பெற்றுள்ள அடி எதுகைச் சொற்கள்
அ.
அன்று,கன்று,அலங்கு,சிலம்பு ஆ.
அன்று,அவண்,அசைஇ,அல்கி
இ.
சேந்த,செயலை,செப்பம்,சிலம்பு ஈ. அல்கி,எய்தி,போகி,எனினே
பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 ) பிரிவு – 1
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய
விடையளிக்க. 4×2=8
21
ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.
16
ஜப்பானில்
சாப்ட்வங்கி உருவாக்கிய இயந்திர மனிதன் பெப்பர் குறித்து எழுதுக.
17.
விடைக்கேற்ற
வினா அமைக்க.
அ. வேர்டுஸ்மித்
என்ற எழுத்தாளி தகவல்களைக் கொண்டு சில நொடிகளில் அழகான கட்டுரையை உருவாக்கி விடும்.
ஆ. கரகாட்டத்தை குடக்கூத்து, கும்பாட்டம் என்றும் கூறுவர்.
18.
மொழிபெயர்ப்பு,மொழியில்
புதுக் கூறுகளை உருவாக்கி மொழி வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது
காற்றுக்கு வரம் மரம் – மரங்களை
வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம் – ‘ இது
போன்று உலக காற்று நாள் ‘ விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத் தொடர்களை எழுதுக.
21.
பொருள் – என முடியும் குறளை எழுதுக.
பிரிவு – 2
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். 5×2=10
22.
வேங்கை
என்பதைத் தொடர்மொழியாகவும், பொது மொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.
23.
பகுபத உறுப்பிலக்கணம் தருக:- பொறித்த
24.
அ)
ஓடிக் கொண்டிருந்த மின்விசிறி சட்டென நின்றவுடன் அறையில் உள்ளவர்கள் பேச்சு தடைபட்டது.
இத்தொடரைத் தனிச்சொற்றொடர்களாக மாற்றுக.
ஆ) அழைப்பு மணி ஒலித்தது. கயல்விழி
கதவைத் திறந்தார் – தனிச் சொற்றொடர்களைக் கலவைத் தொடராக்குக.
25இந்த
அறை இருட்டாக இருக்கிறது. மின் விளக்க்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது? இதோ……
இருக்கிறதே! சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே! மின்சாரம் இருக்கிறதா?
இல்லையா?.
மேற்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின்
வகைகளை எடுத்தெழுதுக
26.
இரு சொற்களையும் ஒரே தொடரில்
அமைத்து எழுதுக.
(
அ ) சிறு – சீறு (
ஆ ) கொடு – கோடு
27.
கலைச்சொல் தருக:- அ) Tornado ஆ)
Tempest
28 “
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்கண் வற்றாகும் கீழ் “ – இக்குறளில்
அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி,அதன் இலக்கணம் தருக.
பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )
பிரிவு – I
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:- 2×3=6
29.
சோலைக் ( பூங்கா )
காற்றும் மின் விசிறிக் காற்றும் பேசிக்கொள்வது போல் ஒரு சிறு உரையாடல் அமைக்க.
30.
உரைப்பத்தியைப்
படித்து வினாக்களுக்கு விடை தருக;
சிற்றூர் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளில் பிரித்துப்
பார்க்க இயலாதக் கூறுகளாகத் திகழ்பவை நிகழ்கலைகள். இவை மக்களுக்கு மகிழ்ச்சியெனும்
கனி கொடுத்துக் கவலையைப் போக்குகின்றன; சமுதாய நிகழ்வுகளின் ஆவணங்களாகவும் செய்திகளைத்
தரும் ஊடகங்களாகவும் திகழ்கின்றன. பழந்தமிழ் மக்களின் கலை, அழகியல், புதுமை ஆகியவற்றின்
எச்சங்களை அறிவதற்குத் தற்காலத்தில் நிகழ்த்தப்படும் கலைகள் துணை செய்கின்றன,
அ)
பழந்தமிழ் மக்களின் எந்தெந்த எச்சங்களை அறிவதற்கு நிகழ்கலைகள் துணை செய்கின்றன?
ஆ)
நிகழ்கலைகளின் பயன்கள் இரண்டினை எழுதுக.
இ)
நிகழ்கலைகள் எப்பகுதி மக்களின் வாழ்வியல் கூறுகளில் ஒன்றாக திகழ்கின்றன?
31 இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா
என்பது குறித்த சிந்தனைகளை முன்வைத்து எழுதுக.
பிரிவு – II
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக
விடையளிக்கவும். 2×3=6
34
ஆவது வினாவிற்கு கட்டாயம்
விடையளிக்க வேண்டும்.
32.
. வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன்
செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக.
33.
தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுறமொழியும் பாங்கினை
விளக்குக.
34.
“ சிறுதாம்பு“ எனத் தொடங்கும் முல்லைப்பாட்டு பாடலை எழுதுக (அல்லது )
“ வெய்யோன் “ எனத் தொடங்கும் கம்பராமாயணம் பாடலை எழுதுக.
பிரிவு -III
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:- 2×3=6
35.
தோட்டத்தில் மல்லிகைப்பூ பறித்த பூங்கொடி,வரும் வழியில் ஆடுமாடுகளுக்குத் தண்ணீர்த் தொட்டியில் குடிநீர்
நிரப்பினாள்.வீட்டினுள் வந்தவள் சுவர்க்கடிகாரத்தில் மணி பார்த்தாள்.
இப்பத்தியில் உள்ள தொகைச் சொற்களின் வகைகளைக் குறிப்பிட்டு,விரித்து எழுதுக
36.
வேலோடு நின்றான் இடுஎன்றது போலும்
கோலோடு நின்றான்
இரவு - இக்குறளில்
பயின்று வரும் அணியை விளக்குக.
.37.
வினா வகையை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. 5×5=25
38.
அ) மனோன்மணீயம்
சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்தரனாரின் தமிழ்
வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப் பேச்சு ஒன்றை உருவாக்குக.. ( அல்லது )
ஆ) தமிழர் மருத்துவ முறைக்கும், நவீன
மருத்துவ முறைக்கும் உள்ள வேறுபாட்டினை விளக்குக.
39.
அ) நீங்கள்
விரும்பி படித்த நூல் ஒன்றின் சிறப்புகளைக் கூறி, உங்கள் நண்பரையும் அந்நூலினைப் படிக்குமாறுப்
பரிந்துரைத்துக் கடிதம் எழுதுக. ( அல்லது )
ஆ) “
பள்ளியைத் தூய்மையாக வைத்திருத்தல் “ - குறித்த
செயல் திட்ட வரைவு ஒன்றை உருவாக்கி,அதனைச் செயல்படுத்தத் தலைமை ஆசிரியரின் ஒப்புதல்
வேண்டி, தலைமையாசிரியருக்குக் கடிதம் எழுதுக.
40.
படம் உணர்த்தும் கருத்தை கவினுற
எழுதுக.
41. விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில்
கதவு எண்.32/1, காந்தி வீதியில் வசிக்கும் சீனிவாசன் என்பாரின் மகன் ஜெய்சங்கள்
(15 வயது ) என்பார் மாவட்ட மைய நூலகத்தில் சேர்வதற்காக நூறு ரூபாயைத் தன் தந்தையிடம்
கேட்டுப் பெற்றுச் செல்கிறார்.கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைக் கொண்டு படிவத்தை நிரப்புக.
42. அ)
தொலைக்காட்சி நிகழ்வுகளையே பார்த்துக்
கொண்டிருக்கும் தம்பி; திறன் பேசியிலேயே விளையாடிக் கொண்டிருக்கும் தங்கை; காணொளி
விளையாட்டுகளில் மூழ்கியிருக்கும் தோழன். எப்போதும் சமூக ஊடகங்களில்
இயங்கியபடி இருக்கும் தோழி.
இவர்கள் எந்நேரமும் நடப்புலகில்
இருக்காமல் கற்பனை உலகில் மிதப்பவர்களாக இருக்கிறார்கள்! இவர்களை
நெறிப்படுத்தி நடைமுறை உலகில் செயல்பட நீங்கள் செய்யும் முயற்சிகளை பட்டியலிடுக ( அல்லது )
ஆ)
மொழி பெயர்க்க:-
Respected ladies and gentleman. I am Ilangaovan
studying tenth standard. I have come here to say a few words about our Tamil
culture. Sangam literature shows that Tamils were best in culture and
civilization about two thousand years ago. Tamils who have defined grammer for
language have also defined grammer for life. Tamil culture is rooted in the
life styles of Tamils throughout India, Srilanka, Malaysia, Singapore, Engaland
and Worldwide. Though our culture is very old,it has been updates consistently.
We should feel proud about our culture. Thank you one and all.
பகுதி – v ( மதிப்பெண்கள் : 24 )
அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க. 3×8=24
43.
அ) வீட்டில் திண்ணை அமைத்த காரணம்,விருந்தினர் பேணுதல்,
தமிழர் பண்பாட்டில் ஈகை – பசித்தவருக்கு உணவிடல் – இவை போன்ற செயல்கள் அன்றும் இன்றும்
தொடர்ந்து கொண்டிருப்பதை அழகுற விவரித்து எழுதுக ( அல்லது )
ஆ
நிகழ்கலை வடிவங்கள்
– அவை நிகழும் இடங்கள் – அவற்றின் ஒப்பனைகள் – சிறப்பும் பழமையும் – இத்தகைய மக்கள்
கலைகள் அருகிவருவதற்கான காரணங்கள் – அவற்றை வளர்த்தெடுக்க நாம் செய்ய வேண்டுவன – இவை
குறித்த உங்கள் கருத்துகளை நாளிதழ் ஒன்றிற்கான ‘ தலையங்கமாக ‘ எழுதுக.
44.
அ) சூழலுக்கேற்ற உரையாடல் ஒன்றினை எழுதுக.
சூழல்
: வெளிநாட்டிலிருந்து உங்கள் இல்லத்திற்கு வந்திருக்கும் உறவினரின் மகளுக்குத் தமிழ்மொழியைப்
பேச மட்டுமே தெரியும்,ஆங்கில இலக்கியம் படித்த அவரிடம் தமிழ் உரைநடையின் சிறப்புப்
பற்றி உரையாடுதல்
( அல்லது )
ஆ) ‘ கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே ‘ என்கிறது வெற்றி வேற்கை. மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின்
வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய
கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க..
45.
அ) விசும்பின் துளியும் பசும்புல் தலையும் – காற்று மாசு
– பசுமையைக் காப்போம் – மரம் நமக்கு வரம் – மழை நீர் உயிர் நீர் - இக்குறிப்புகளைப்
பயன்படுத்தி ‘ இயற்கையைக் காப்போம் ‘ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.
( அல்லது )
ஆ) உங்கள்
பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்கு சென்று வந்த நிகழ்வைக் குறிப்புகளைப் பயன்படுத்திக்
கட்டுரையாக்குக.
குறிப்புகள்
: முன்னுரை – பொருள்காட்சி நடைபெறும் இடம் – பல்வேறு விளையாட்டு அமைப்புகள் – பலவிதமான
வணிகம் – அரசின் நலத்திட்ட அரங்குகள் – மகிழ்வூட்டும் மக்கள் கூட்டம் – பாரம்பரிய நிகழ்கலைகள்
– முடிவுரை.
வினாத்தாள்
உருவாக்கம் தமிழ்
விதை மற்றும் கல்விவிதைகள்
%20new.png)
குழுவில் பங்கேற்க : whatsapp telegram :