10TH-TAMIL-QUETERLY MODEL QUESTION PAPER - 1 -2023

 

மாதிரி வினாத்தாள் - 1

காலாண்டுத் தேர்வு

பத்தாம் வகுப்பு

மொழிப்பாடம் – தமிழ்

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                    மதிப்பெண் : 100

அறிவுரைகள் : 1) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ளவும். அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக்  கண்காணிப்பாளரிடம்   உடனடியாகத் தெரிவிக்கவும்.

2) நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும்,அடிக்கோடிடுவதற்கும்     பயன்படுத்தவும்.

குறிப்பு : I ) இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது.

            ii) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும் சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.

பகுதி – I ( மதிப்பெண்கள் : 15 )

i)              அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

ii)             கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.                                                                              15×1=15

1. வேர்கடலை,மிளகாய்விதை,மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை________

) குலை வகை           ) மணிவகை              ) கொழுந்து வகை                 ) இலை வகை

2. உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்

   உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?

) உருவகம்,எதுகை   ) மோனை,எதுகை    ) முரண்,இயைபு ஈ) உவமை,எதுகை

3. பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?

அ) துலா                       ஆ) சீலா                       இ) குலா                       ஈ) இலா

4. அறிஞருக்கு நூல்,அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது.

) வேற்றுமை உருபு               ) எழுவாய்               ) உவம உருபு                        ) ரிச்சொல்

5. ‘ எய்துவர் எய்தாப் பழி’ – இக்குறளடிக்கு பொருந்தும் வாய்பாடு எது?

அ) கூவிளம் தேமா மலர்           ஆ) கூவிளம் புளிமா நாள்                    

இ) தேமா புளிமா காசு                ஈ) புளிமா தேமா பிறப்பு

6. . பரிபாடல் அடியில் விசும்பும் இசையும் என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?

அ) வானத்தையும் பாட்டையும்              ஆ) வானத்தையும் புகழையும்

இ) வானத்தையும் பூமியும்                      ஈ) வானத்தையும் பேரொலியையும்

7. .”இங்கு நகரப் பேருந்து நிற்குமா?” என்று வழிப்போக்கர் கேட்டது______________வினா.

 “ அதோ,அங்கே நிற்கும்” என்று மற்றொருவர் கூறியது ___________ விடை.

அ) ஐய வினா,வினா எதிர் வினாதல்                 ஆ) அறிவினா,மறை விடை

இ) அறியா வினா,சுட்டு விடை                          ஈ) கொளல் வினா, இனமொழி விடை

8. நாலும்,இரண்டும் சொல்லுக்குறுதி – இதில் காணும் தமிழெண்ணை காண்க_________

அ) ௪ ௧             ஆ) ௨ ௪                இ) ௫ ௨         ஈ) ௪ ௨ .

9. மலர்கள் தரையில் நழுவும். எப்போது?

அ) அள்ளி முகர்ந்தால்              ஆ) தளரப் பிணைத்தால்  இ) இறுக்கி முடிச்சிட்டால்     ஈ) காம்பு முறிந்தால்

10 பெரிய மீசை சிரித்தார். தடித்தச் சொல்லுக்கான தொகையின் வகை எது?

) பண்புத்தொகை                   ) உவமைத்தொகை ) அன்மொழித்தொகை           ) உம்மைத்தொகை

11. பின் வருவனவற்றுள் முறையான தொடர் –

) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு

) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு         

) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்கு தனித்த இடமுண்டு

) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு

பாடலைப் படித்து வினாக்களுக்கு(12,13,14,15) விடையளிக்க:-

செம்பொ னடிச்சிறு கிங் கிணியோடு சிலம்பு கலந்தாடக்

            திருவரை யரைஞா ணரைமணி யொடுமொளி திகழரை வடமாடப்

பைம்பொ னசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாடப்

            பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக்

கம்பி விதம்பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக் “

12. இப்பாடலின் ஆசிரியர்

அ. கீரந்தையார்             ஆ. குமரகுருபரர்          இ. நம்பூதனார்               ஈ. செய்குதம்பிப் பாவலர்

13. இப்பாடலில் இடம் பெற்றுள்ள பிள்ளைத் தமிழ் பருவம்

அ. அம்மானை              ஆ. சப்பாணி                  இ. சிறுதேர்                   ஈ. செங்கீரை

14. ‘ குண்டமும் குழைகாதும் ‘ – இலக்கணக் குறிப்பு தருக.

அ. எண்ணும்மை          ஆ. உம்மைத்தொகை               இ. பண்புத் தொகை       ஈ. அடுக்குத் தொடர்

15. கிண்கிணி, அரைநாண்,சுட்டி என்பன முறையே

அ. காலில் அணிவது, இடையில் அணிவது, தலையில் அணிவது

ஆ. நெற்றியில் அணிவது,இடையில் அணிவது,தலையில் அணிவது

இ. காலில் அணிவது, இடையில் அணிவது, நெற்றியில் அணிவது

ஈ. இடையில் அணிவது, காதில் அணிவது, தலையில் அணிவது

பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 ) பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.                                       4×2=8

21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.

16 விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக

17. விடைக்கேற்ற வினா அமைக்க.

அ. இமைகளை மூடிய படி எழுதும் ஆற்றலை கற்றும்க் கொண்டவர் இரா.இளங்குமரனார்.

ஆ. கரகாட்டத்தை குடக்கூத்து, கும்பாட்டம் என்றும் கூறுவர்.

18. செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத் தொடர்களாக்குக:-.

19. உறங்குகின்ற கும்பகன்ன’ எழுந்திராய் எழுந்திராய்’

  காலதூதர் கையிலே ‘ உறங்குவாய் உறங்குவாய் ‘ கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?

20. ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.

  ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.

  ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.

மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி,எஞ்சிய பிழையான தொடரிலுள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக.

.21. விடும்என முடியும்  குறளை எழுதுக.

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.                                               5×2=10

22. தொழிற்பெயருக்கும் வினையாலணையும் பெயருக்கும் உள்ள வேறுபாடுகள் இரண்டினை எழுதுக.

23. பகுபத உறுப்பிலக்கணம் தருக:- அமர்ந்தான்

24. தொடர்களை அடைக்குறிப்புக்குள் உள்ளவாறு மாற்றுக:-

அ.அக்கா நேற்று வீட்டுக்கு வந்தது.அக்கா புறப்படும் போது அம்மா வழியனுப்பியது.

( வழுவை வழாநிலையாக மாற்றுக )

ஆ. அவன் உன்னிடமும் என்னிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை. (படர்க்கையை முன்னிலையாக, முன்னிலையைத் தன்மையாக, தன்மையைப் படர்க்கையாக மாற்றுக)
25. சந்தக் கவிதையில் வந்த பிழைகளைத் திருத்துக:- ( 2 மதிப்பெண் )

தேணிலே ஊரிய செந்தமிழின்சுவை

தேரும் சிலப்பதி காறமதை

ஊனிலே எம்முயிர் உல்லலவும்நிதம்

ஓதி யுனர்ந்தின் புருவோமே”.

26. இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக.

( அ ) விடு – வீடு                      ( ஆ ) இயற்கை  – செயற்கை

27. கலைச்சொல் தருக:-        அ. Storm           ஆ) EMBLEM

28 . “நேற்று நான் பார்த்த அருச்சுனன் தபசு என்ற கூத்தில் அழகிய ஒப்பனையையும் சிறந்த நடிப்பையும் இனிய பாடல்களையும் நுகர்ந்து மிக மகிழ்ந்தேன்!” என்று சேகர் என்னிடம் கூறினான். இக்கூற்றை அயற்கூற்றாக எழுதுக

பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )

பிரிவு – I

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:-                                              2×3=6

29. ‘ புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது ‘ இது போல் இளம் பயிர்வகை  ஐந்தின் பெயர்களைத் தொடரில் அமைக்க

30. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக;

            பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல   காலங்கள் கடந்து சென்றன. புவி உருவானபோதுநெருப்புப் பந்துபோல் விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது. பின்னர்ப் புவி குளிரும்படியாகத்  தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக்காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும் மீண்டும் சிறப்பாக ஆற்றல் மிகுந்து செறிந்து திரண்டு இப்படியாக ( வெள்ளத்தில் மூழ்குதல் ) நடந்த இந்தப் பெரிய உலகத்தில், உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியது. உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியாக இப்பெரிய புவியில் ஊழிக்காலம் கடந்தது.

அ. பத்தியில் உள்ள அடுக்குத்தொடர்களை எடுத்து எழுதுக.

ஆ.. புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது?

இ.. பெய்த மழைஇத்தொடரை வினைத்தொகையாக மாற்றுக.

31 உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி வேலைக்குச் செல்ல விரும்புகிறார். அவரிடம் கற்பதன் இன்றியமையாமையை எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள்?

பிரிவு – II

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.                             2×3=6

34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.

32. . மாளாத காதல் நோயாளன் போல் – என்னும் தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.

33. வள்ளுவம்,சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள் வழி விளக்குக.

34. “ அன்னை மொழியே“ எனத் தொடங்கும் பெருஞ்சித்திரனார்பாடலை எழுதுக                    (அல்லது )

      வாளால்எனத் தொடங்கும் பெருமாள் திருமொழி பாடலை எழுதுக.

பிரிவு -III

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:-                                                        2×3=6

35. முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

   இன்மை புகுத்தி விடும்.   - இக்குறட்பாவில் அமைந்துள்ள பொருள்கோளின் வகையைச் சுட்டி விளக்குக.

36. தற்குறிப்பேற்ற அணியை விளக்குக.

37. . ‘ அறிந்தது,அறியாதது, புரிந்தது,புரியாதது, தெரிந்தது, தெரியாதது,பிறந்தது,பிறவாதது ‘ இவை எல்லாம் அனைத்தையும் யாம் அறிவோம். அதுபற்றி உமது அறிவுரை எமக்குத் தேவை இல்லை.எல்லாம் எமக்குத் தெரியும். இக்கூற்றில் வண்ண எழுத்துகளில் உள்ள வினைமுற்றுகளைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.

பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                                      5×5=25

38. அ) முல்லைப் பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை விவரித்து எழுதுக.      ( அல்லது )

ஆ) இறைவன்,புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக

39. அ) நீங்கள் விரும்பி படித்த நூல் ஒன்றின் சிறப்புகளைக் கூறி, உங்கள் நண்பரையும் அந்நூலினைப் படிக்குமாறுப் பரிந்துரைத்துக் கடிதம் எழுதுக.                            ( அல்லது )

 ஆ) உணவுவிடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலைகூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.

40. படம் உணர்த்தும் கருத்தை கவினுற எழுதுக.

 

 

 

 


41. சேலம் மாவட்டம் பாரதிநகர், பெரியகடைத் தெருவிலுள்ள,440 ஆம் இலக்க வீட்டில் குடியிருக்கும் இராசாவின் மகள் புனிதா 10ஆம் வகுப்பு முடித்திருக்கிறாள். அவர் தந்தை நூலகத்தில் உறுப்பினராக சேர்வதற்கு ரூ200 கொடுத்துள்ளார். தேர்வர்  தம்மை புனிதாவாக கருதி நூலக உறுப்பினர் படிவத்தை பூர்த்தி செய்க.

42. அ) பள்ளியிலும், வீட்டிலும் நீ நடந்து கொள்ளும் விதம் குறித்து பட்டியலிடுக.                    ( அல்லது )

ஆ) மொழி பெயர்க்க:-

            The Golden sun gets up early in the morning and starts its bright rays to fade away the dark.The milky clouds start their wandering.The colourful birds start twitting their morning melodies in percussion.The cute butterflies dance around the flowers. The flowers fragrance fills the breeze. The breeze gently blows everywhere and makes everything pleasant.

பகுதி – v ( மதிப்பெண்கள் : 24 )

அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க.                                                          3×8=24

43. அ) தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை விரிவாக எழுதுக.                         ( அல்லது )

ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேனீர்க் கோப்பையை எடுக்கவும் மென்பொருள் அக்கறை கொள்ளுமா? வெறும் வணிகத்துடன் நின்று விடுமா? இக்கருத்துகளை ஒட்டிச் செயற்கை நுண்ணறிவின் எதிர்கால வெளிபாடுகள் பற்றி ஒரு கட்டுரை எழுதுக.

44. அ) அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் ‘ கோபல்லபுரத்து மக்கள் ‘ கதைப்பகுதி கொண்டு விவரிக்க.                     ( அல்லது )

ஆ) ‘ கற்கை நன்றே கற்கை நன்றே

   பிச்சை புகினும் கற்கை நன்றே ‘ என்கிறது வெற்றி வேற்கை. மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க..

45. அ) குமரிக் கடல் முனையையும் வேங்கட மலைமுகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவர் திருநாட்டிற்குப் புகழ் தேடித் தந்த பெருமை, தகைசால் தமிழன்னையைச் சாரும். எழில் சேர் கன்னியாய் என்றும் திகழும் அவ்வன்னைக்கு, பிள்ளைத் தமிழ் பேசி, சதகம் சமைத்து, பரணி பாடி, கலம்பகம் கண்டு, உலா வந்து, அந்தாதி கூறி, கோவை யாத்து, அணியாகப் பூட்டி, அழகூட்டி அகம்மிக மகிழ்ந்தனர் செந்நாப் புலவர்கள்.

இக்கருத்தைக் கருவாகக் கொண்டு “ சான்றோர் வளர்த்த தமிழ்என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.         

( அல்லது )

ஆ) உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.

வினாத்தாள் உருவாக்கம்                                 தமிழ் விதை மற்றும் கல்விவிதைகள்

 CLICK HERE TO GET DOWN THIS QUESTION PAPER

CLICK HERE


                                





    
    
    
    
    
  

   



குழுவில் பங்கேற்க :  whatsapp                                                              telegram :


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post