I. அ) சரியான விடையைத் தேர்ந்தெடு:- 5×1=5
1.
மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல்__________
அ)
வைப்பு ஆ) கடல் இ) பரவை ஈ) ஆழி
2.
இயற்கையைப் போற்றுதல் தமிழர் _________
அ)
மரபு ஆ) பொழுது இ) வரவு ஈ)
தகவு
3.
சரியான
மரபுச் சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.:- கோழி
அ)
கூவும் ஆ.கொக்கரிக்கும் இ. கரையும் ஈ) கத்தும்
4.
வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து ______ என அழைக்கப்படுகிறது.
அ)
கோட்டெழுத்து ஆ) வட்டெழுத்து இ) சித்திர எழுத்து ஈ) ஓவிய எழுத்து
5.
வல்லின எழுத்து பிறக்கும் இடம் __________
அ)
தலை ஆ) மார்பு இ) மூக்கு ஈ) கழுத்து
II) கோடிட்ட இடம் நிரப்புக:-
5×1=5
6. ‘ ஐம்பால் ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது________
7. உலகம்
ஐம்பூதங்களால் ஆனது எனக் கூறியவர் _______________
8. கடைச் சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துகள்
________ என அழைக்கப்பட்டன
9. இதழ்களை குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள் ________
10.
“வாழ்க நிரந்தம், வாழ்க தமிழ் மொழி” – இவ்வடிகளில் உள்ள மோனைச் சொற்கள் __________
III)
. பொருத்துக:- 5×1=5
11. வண்மொழி - அ. ஓரெழுத்து ஒரு மொழி
12. தொல்காப்பியம் - ஆ.
வீரமாமுனிவர்
13. எழுத்து சீர்திருத்தம் - இ.
பழமையான இலக்கண நூல்
14. வாய்திறத்தல் - ஈ.
தமிழ்
15. பூ - உ. அ,ஆ
IV) எவையேனும் ஐந்து வினாக்களுக்கும்
விடையளி:- 5×2=10
16. விடைக்கேற்ற வினா அமைக்க:-
அ. பாரதியார் தமிழை வண்மொழி என அழைக்கிறார்.
ஆ. கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில்
எழுதப்பட்ட எழுத்துகள் கண்ணெழுத்துகள் என அழைக்கப்பட்டன.
17. தமிழ் எவற்றை
அறிந்து வளர்கிறது?
18. செய்யுளில்
மரபுகளை ஏன் மாற்றக்கூடாது?
19. ஒலி எழுத்து
நிலை என்றால் என்ன?
20. எழுத்துகளின்
பிறப்பு என்றால் என்ன?
21. பொருத்தமான
பன்மை விகுதியைச் சேர்த்தெழுதுக. :
கல், பூ
22
. மரபுப் பிழையை நீக்கி எழுதுக.
சேவல் கொக்கரிக்கும்
சத்தம் கேட்டுக் கயல் கண் விழித்தாள். பூப்பறிக்க நேரமாகி விட்டதை அறிந்து
தோட்டத்திற்குச் சென்றாள்.
V) எவையேனும் மூன்று வினாக்களுக்கு
விடையளி:- 3×4=12
18. எழுத்துச்
சீர்திருத்தத்தின் தேவை குறித்து எழுதுக
19. நம் முன்னோர்கள்
மரபுகளைப் பின்பற்றியதன் காரணம் என்னவாக இருக்கும் என நீங்கள் கருதுகிறீர்கள்?
20. . ழகர, லகர, ளகர மெய்களின் முயற்சிப் பிறப்பு பற்றி எழுதுக.
21. பாரதியார் தமிழை
வண்மொழி என்று அழைக்கக் காரணம் என்ன?
VI) அடிமாறாமல் எழுதுக 1×5=5
22. “ வாழ்க நிரந்தரம் “ தமிழ்மொழி
வாழ்த்து பாடலை எழுதுக.
VII) விரிவான விடையளி:- 1×8=8
23. அ) எழுத்துகளின் தோற்றம்
குறித்து எழுதுக. (
அல்லது )
ஆ) நான் விரும்பும் கவிஞர் – என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக
JOIN OUR GROUPS:
WHATSAPP : https://chat.whatsapp.com/FQTE7owwv618swxkBlTONp
TELE GRAM : https://t.me/thamizhvithai
ஆக்கம் : தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள்
வலைதளம்
இந்த வினாத்தாளினை பதிவிறக்கம் செய்ய 10 நொடிகள் காத்திருக்கவும். பின்பு திரையில் தோன்றும் CLICK HERE என்பதனை அழுத்தி வினாத்தாளினை PDF ஆக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நன்றி.