10TH - TAMIL - TEXT BOOK - 2 QUESTION CHANGE IN 2023

 

அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் அன்பான வணக்கம். பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் இயல் - 3  மற்றும் இயல் 9 ல் மதிப்பீடு வினாக்களில் மாற்றம் உள்ளது. நீங்கள் எந்த கையேடு வாங்கி மாணவர்களுக்கு கொடுத்திருந்தாலும் இந்த வினாக்களை மாற்றிக் கொள்ளவும். மேலும் வேறு ஏதேனும் மாற்றம் வந்துள்ளதா என்பதனையும் நீங்கள் அறிந்தால் அதை என்னுடைய புலன எண்ணிற்கு அனுப்பவும்.  என்னுடைய புலன எண் : 8695617154 .

இயல் - 3 
சிறுவினா :2 
பழைய வினா :
முல்லை நிலத்திலிருந்தும், மருத நிலத்திலிருந்தும் கிடைக்கும் உணவுப் பொருட்கள் யாவை?

முல்லை - வரகு, சாமை
மருதம் - செந்நெல், வெண்ணெல்

புதிய வினா

“ பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ “ – வினவுவது ஏன்?

          வாயில் கதவு மூடுவதற்கு முன் உணவு உண்ண யாரேனும் உள்ளார்களா? என்பதற்காக வினவப்பட்டது.
இயல் - 9 
ஒரு மதிப்பெண் வினா
பழைய வினா:

1. " இவள் தலையில் எழுதியதோ
கற்காலம் தான் எப்போதும் - இவ்வடிகளில் கற்காலம் என்பது
அ) தலை விதி        ஆ) பழைய காலம்        இ) ஏழ்மை            ஈ) தலையில் கல் சுமப்பது 


புதிய வினா:

“ பிரிந்தன புள்ளின் கானில்

    பெரிதழுது இரங்கித் தேம்ப     - பாடலடிகளில் அடிக்கோடிட்ட சொற்களின் பொருளைத் தெரிவு செய்க

அ) கிளை, துளை   ஆ) நிலம்,வாட     இ) காடு,வாட  ஈ) காடு,  நிலம்


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post