அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், அன்பு மாணவச் செல்வங்களுக்கும் அன்பான வணக்கம். 2022- 2023 ஆம் கல்வி ஆண்டின் இறுதியில் நாம் அனைவரும் பயணப்பட்டுக் கொண்டு இருக்கும். அனைவரும் தேர்வினை நோக்கி சென்றுக் கொண்டு இருக்கிறோம். அந்த வகையில் சில வாரங்களுக்கு முன் HI TECH LAB வழியாக ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு EXAM.TNSCHOOLS.GOV.IN என்ற இணைய முகவரியில் ஆசிரியர்கள் தங்கள் வகுப்புக்குத் தேவையான வினாக்களை வடிவமைத்து அதனை குறிப்பிட்ட நாளில் மாணவர்களுக்கு தேர்வு வைக்கப்பட்டது. அவை பெரும்பாலும் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் விதமாக தான் கொடுக்கப்பட்டது. தற்போது அதே இணைய தளத்தில் 6 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுக்குத் தேவையான வினாத்தாள் கொடுக்கப்பட்டுள்ளது. இது தேர்வு நாளில் இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக மேற்குறிப்பிட்ட அந்த இணைய முகவரியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் அல்லது ஆசிரியர்கள் தங்களின் EMIS எண்ணைப் பயன்படுத்தி உள்ளே சென்று அந்தந்த வகுப்புக்குத் தேவையான வினாத்தாளினை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
அந்த வகையில் 06/04/2023 அன்று சேலம் மாவட்டத்தில் 6 முதல் 9 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மாதிரி ஆண்டு தேர்வு வினாத்தாள் அந்த இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு தேர்வு வைக்கப்பட்டது. இந்த தேர்வு ஆறாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு 60 மதிப்பெண் கொண்ட தேர்வாகவும், எட்டாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு 100 மதிப்பெண்கள் கொண்ட முழு ஆண்டுத் தேர்வாகவும் வினாத்தாள் வடிவமைக்கப்பட்டது. அந்த வினாத்தாள் உங்களின் பார்வைக்கு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இதனை பயன்படுத்தி ஆண்டு இறுதித் தேர்வுக்கு தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Good job
ReplyDelete