6TH-TAMIL-THIRD SUMMATIVE - EXAM -2023 - ANSWER KEY

 

சேலம் – மூன்றாம் பருவத் தொகுத்தறி வினாத்தாள்

ஏப்ரல் - 2022-2023

ஆறாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  2.30 மணி                                                                             மதிப்பெண் : 60

பகுதி – 1

மதிப்பெண்கள் - 10

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

அ. காவிரிக்கரை

1

2.

ஆ. தான் + என்று

1

3.

ஈ. உழைக்க

1

4.

இ. காரணப்பெயர்

1

5.

ஈ. குற்றம்

1

6.

குழந்தைகளைப் பாதுகாப்போம்

1

7.

ஆசியஜோதி

1

8.

ஆதிரை

1

9.

சென்னை

1

10.

அருவி

1

II) எவையேனும் 5 வினாக்களுக்கு விடையளிக்க

11.

மேற்கு மலைகள் நதிகளை அனுப்பிக் கிழக்குக் கரையின் நலம் கேட்கும்.

2

12.

தென்னாப்பிரிக்காவில் தமிழ்மொழியைக் கற்கத் தொடங்கினார்.

ஜி,யு,போப் எழுதிய “ தமிழ்கையேடு “ தமிழ்மொழியை கற்கும் ஆர்வத்தைத் தூண்டியது

2

13.

தொண்டு செய்பவராக தம்மை ஆக்கிக்கொண்டால் இன்ப நிலை தானே வந்து சேரும்.

2

14.

புல்லாங்குழல் ஆகிறோம்.

2

15.

கோ – பசு,  முகி – முகம்

          பசுவின் முகம் போன்று இருப்பதால் இப்பொய்கை கோமுகி என்னும் பெயரைப் பெற்றது.

2

16.

தம்மிடம் இருப்பவற்றைப் பிற உயிர்களுக்குப் பகிர்ந்து கொடுத்துக் காப்பாற்ற வேண்டும்.

2

17.

இறந்த உடலுக்கு உயிர் கொடுத்து எழுப்புவது மன்னனாலும் முடியாத செயல்.

2

III) எவையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்

18.

தீய செயல்களைச் செய்யாதீர்கள். பிற உயிர்களைக் கொல்லும் செயலைச் செய்யாதீர்கள். இந்தப் பூமியை மகிழ்ச்சியற்றதாக மாற்றிடும் எண்ணத்தை உங்களைவிட்டு நீக்குங்கள். இங்கு மக்களோடு சேர்ந்து மற்ற உயிர்களும் மகிழ்வோடு வாழ வழி செய்யுங்கள்.

4

19

காவியா புத்தகம் படித்தாள் - பொருட்பெயர்

காவியா பள்ளிக்குச் சென்றாள் - இடப்பெயர்

காவியா மாலையில் விளையாடினாள் - காலப்பெயர்

காவியா தலை அசைத்தாள் - சினைப்பெயர்

காவியா இனிமையாகப் பேசுவாள் - பண்புப்பெயர்

காவியாவுக்கு நடனம் ஆடுதல் பிடிக்கும் – தொழிற்பெயர்

4

20.

·      சிறையில் உள்ளவர்களுக்கு எவை நன்மை, எவை தீமை என்பதனை அறிஞர்களைக் கொண்டு எடுத்துக் கூற வேண்டும்,

·       பெற்றோரை மதித்தல், முதியோரைப் பேணல், உறவினர்களை அரவணைத்தல் போன்றவற்றை வலியுறுத்தும் அறநெறிக் கல்வி அளிக்க வேண்டும்.

4

21

Ø  1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு வந்தார்.

Ø  மதுரைக்கு செல்லும் போது மக்கள் இடுப்பில் ஒரு துணி மட்டுமே அணிந்து இருப்பதைக் கண்டார்.

Ø  அன்று முதல் வேட்டியும் துண்டும் மட்டுமே அணியத் தொடங்கினார்.

4  

22

·         மற்றவர்களை மதிக்க வேண்டும்.

·         மற்றவர்களுக்கு உதவ வேண்டும்

·         பொறுமை காக்க வேண்டும்

·         நேர்மையாக செயல்பட வேண்டும்

4

IV) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

23

அ. படித்தாள்

2

24

சித்திரையன்

2

25.

நகை – சிரிப்பு, அணிகலன்

1

1

26.

அன்பு, இரக்கம், உயிர், எளிமை, ஒழுக்கம்

2

27.

அ. சாரண சாரணியர்           2. கருணை  

1

1

V) அடிபிறழாமல் எழுதுக

28.

புல்வெளி யெல்லாம் பூக்கா டாகிப்

புன்னகை செய்த பொற்காலம்!

கல்லைக் கூட காவிய மாக்கிக்

கட்டி நிறுத்திய கலைக்கூடம்! (புதுமைகள்)

அன்னை நாட்டின் அமுத சுரபியில்

4

29

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்     

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

2

VI) துணைப்பாடக் கதையினை சுருக்கி வரைக

30

·         சிவகங்கையை இழந்து எட்டு ஆண்டுகள் ஆகிறது.

·         மைசூரிலிருந்து ஐதர் அலியின் ஐயாயிரம் குதிரை படை வந்து விட்டது.

·         வேலு நாச்சியார் ஐதர் அலியிடம் உருது மொழியில் பேசினார்.

·         முதலில் காளையார் கோவில் கைபற்றுதல்.

·         ஆண்கள் படைப்பிரிவுக்கு மருது சகோதரர்களும், பெண்கள் படைப்பிரிவுக்கு குயிலியும் தலைமை ஏற்றனர்.

·         விசயதசமி நாளில் படைகள் உள்ளே நுழையலாம் என வேலுநாச்சியார் கூறினார்.

·         உடையாளுக்கு நடுகல் நடப்பட்டது.

·         வேலுநாச்சியார் படைகள் உள்ளே சென்று ஆங்கிலேயர் படையைத் தோற்கடித்தது.

·         சிவகங்கை மீட்கப்பட்டது

6

30.

முன்னுரை :

மாரி என்பவர் காலணி தைக்கும் ஒரு தொழிலாளி. அவர் பசியால் வாடிக்கொண்டிருந்தார். திடீரென ஒரு விசித்திரக் காலணியின் மூலம் செல்வந்தர் ஆனார். அதன் கதையைக் காண்போம்.

மாரி :

திரையரங்கு வாசலில் அவர் காலணி தைத்துக் கொண்டிருப்பவர். அன்றைக்கு பலத்த மழை. டீ குடிப்பதற்கு கூட காசு இல்லை.அன்று தான் அந்த அதிசயம் நடந்தது. 

சிறுமியின் காலணி :

தியேட்டரின் வலப்புறச் சந்தில் இருந்து சிறுமியொருத்தி அவர் அருகில் வந்து ஒரு காலணியைக் கொடுத்துத் தைத்து வைக்கும்படிக் கூறிவிட்டுச் சென்றாள்.. காலணி கொடுத்துவிட்டு சென்ற சிறுமி சாயங்காலம் வரை வரவில்லை.

மாரியின் ஏமாற்றம் :

அடுத்த நாள் மாரி அந்தக் காலணியைத் துடைத்துதனது நீலநிற விரிப்பில் வைத்துவிட்டு வேலையைத் தொடங்கினார். அன்றும் அந்தச் சிறுமி வரவில்லை. மறந்துவிட்டாளாஇல்லை யாரிடம் கொடுத்தோம் எனத் தெரியாமல் அலைகிறாளாஎன்று எண்ணியபடி அன்றும் அக்காலணியை வீட்டிற்கு எடுத்துச் சென்றார். இப்படியே. பல நாட்கள் கழிந்தன.

மாரியின் மனைவி :

மாரியின் மனைவி ஓர் இரவில் அந்தக் காலணியைக் கண்டாள் அதன் வசீகரம் அவளை ஈர்த்தது. அதனைப் போட்டுப் பார்த்தாள். அளவில் சிறியதாக இருந்தாலும் அவளுக்குச் சரியாக இருந்தது. மனைவியைத் திட்டி விட்டு காலணியை எடுத்துப் பார்த்தார் கிழியவில்லை. சிறுமியின் காலணி மனைவிக்குப் பொருந்தியதை எண்ணி வியந்தார்

காலணியின் விசித்திரம் :

மறுநாள் மாரி அவருடன் தொழில் செய்பவரிடம் இந்தக் காலணியின் விசித்திரம் பற்றிக் கூறினார் அவரும் போட்டுப் பார்த்தார் பொருத்தமாக இருந்தது. இச்செய்தி நகர் முழுவதும் பரவியது சிறியவர் முதல் முதியவர் வரை அந்தக் காலணி அனைவருக்கும் பொருந்தியது.

மீண்டும் வந்த சிறுமி :

ஒரு மழை இரவில் பார்வையாளர்கள் வந்து சென்றதும் மத்திய வயதில் ஒரு பெண் நனைந்தபடி நின்றிருந்தாள். அவள் தணிவான குரலில் சொன்னாள். “வெகு தாமதமாகிவிட்டது எனது காலணியைத் தைத்துவிட்டீர்களா இல்லையா?” என்றாள். அவளை அடையாளம் கண்டு கொண்டார் மாரி “வலது காலணியை தைக்கக் கொடுத்தது நினைவிருக்கிறதா?” என்றாள். மாரி தன்னிடம் இருந்த காலணியைக் காட்டினார். “இந்தக் காலணி உலகின் எல்லாப் பாதங்களுக்கும் பொருந்துகிறது” என்று கூறினார்.

சிறுமியின் செயல் :

அவள் இரு காலணிகளையும் தரையிலிட்டுக் காலில் அணிய முயன்றாள். அவள் கொண்டு வந்த இடது காலணி பொருந்தியது தைத்து வாங்கின வலது காலணி பொருந்தவில்லை சிறியதாக இருந்தது.

6

VII) கட்டுரை வடிவில் எழுதுக

31

அனுப்புதல்

              அருளன்,

              ஆறாம் வகுப்பு,

              அரசு உயர்நிலைப் பள்ளி,

              கோரணம்பட்டி.

பெறுதல்

             வகுப்பாசிரியர் அவர்கள்,

             ஆறாம் வகுப்பு,

            அரசு உயர்நிலைப் பள்ளி,

            கோரணம்பட்டி.

ஐயா,

பொருள் : - விடுப்பு வேண்டி விண்ணபித்தல் – சார்பு

            வணக்கம். எனது அக்காவின் திருமணம் 20-03-2023 அன்று திருச்சியில் நடைபெற உள்ளது. அது சமயம் நாங்கள் அனைவரும் செல்ல வேண்டியுள்ளதால் எனக்கு அன்றைய ஒரு நாள் மட்டும் விடுப்பு வழங்கும்படி பணிவுடன் வேண்டுகிறேன்.

                               நன்றி.

இப்படிக்கு,

தங்கள் உண்மையுள்ள,

அருளன்,

நாள் : 19-03-2023

இடம் : கோரணம்பட்டி

6

31

முன்னுரை

வேற்றுமையில் ஒற்றுமை

இந்தியர்களின் ஒற்றுமை

ஒருமைப்பாடு வளர்ப்போம்

முடிவுரை

முன்னுரை :

        ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பது பொன்மொழி. நம் முன்னோர்கள் இந்தியாவை ஒற்றுமைப்படுத்தியதால் தான் இந்தியா சுதந்திரம் அடைந்தது.

வேற்றுமையில் ஒற்றுமை :

        அனைவரும் இந்தியர் என்ற உணர்வால் ஒன்றுபட்டிருக்கிறோம். தேசிய ஒருமைப்பாட்டை நாம் ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டுமானால் நாம் அடுத்தவர்களை நம்முடைய உடன் பிறந்தவர்களாக நினைக்க வேண்டும்.

இந்தியர்களின் ஒற்றுமை :

        இந்தியா மொழிகள், இனங்கள், சமயங்கள் இருந்தாலும்  நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வினால் எப்போதும் ஒற்றுமை அடைகிறார்கள். இந்திய தேசிய கீதம் ஒலிக்கும் போது ஒவ்வொரு இந்தியர்களும் ஒரு தாயின் பிள்ளைகள் போல் ஒற்றுமையை உணர்கின்றனர்.

ஒருமைப்பாடு வளர்ப்போம்

        நாடு முன்னேற ஒவ்வொரு மனிதர்களுக்கும் தேசப் பற்று மிகவும் முக்கியம். வேற்றுமை இல்லாமல் ஒற்றுமையினை வளர்த்து கொள்வதால் தான் இந்தியா பலமான நாடாக வளர்ச்சி அடைய முடியும்.

முடிவுரை :

        உலக அளவில் இந்தியா தனது பங்களிப்பை அளிக்கும் போது நாம் பெருமை அடைகிறோம். இந்தியர்களாகிய நாம் ஒவ்வொருவரும் ஒற்றுமையுடன் இருந்து இந்திய நாட்டிற்கு பெருமைச் சேர்ப்போம்.

6

 


ஆக்கம் :

வெ.ராமகிருஷ்ணன்,

அரசு உயர்நிலைப் பள்ளி,

கோரணம்பட்டி.

CLICK HERE TO GET PDF THIS ANSWER KEY

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post