பெரம்பலூர் – அரையாண்டு வினாத்தாள்
டிசம்பர் - 2022-2023
பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
உத்தேச விடைக் குறிப்பு
பெரம்பலூர்– அரையாண்டு வினாத்தாள்
டிசம்பர் - 2022-2023
பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
உத்தேச விடைக் குறிப்பு
நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி மதிப்பெண் : 100
பகுதி – 1 மதிப்பெண்கள் - 15 | |||||||||||||||||||||||||||||||||||||||
வினா.எண் | விடைக் குறிப்பு | மதிப்பெண் | |||||||||||||||||||||||||||||||||||||
1. | ஈ. சருகும்,சண்டும் | 1 | |||||||||||||||||||||||||||||||||||||
2. | அ.கடல் நீர் ஆவியாகி மேகமாதல் | 1 | |||||||||||||||||||||||||||||||||||||
3. | ஆ.சிற்றூர் | 1 | |||||||||||||||||||||||||||||||||||||
4. | ஈ. இலா | 1 | |||||||||||||||||||||||||||||||||||||
5. | ஆ. மன்னன் | 1 | |||||||||||||||||||||||||||||||||||||
6. | ஆ. தளரபிணைத்தால் | 1 | |||||||||||||||||||||||||||||||||||||
7. | இ. இடையறாது அறப்பணி செய்தலை | 1 | |||||||||||||||||||||||||||||||||||||
8. | ஆ. சிலப்பதிகாரம் | 1 | |||||||||||||||||||||||||||||||||||||
9. | அ.அகவற்பா | 1 | |||||||||||||||||||||||||||||||||||||
10. | அ.கோடைவயல் | 1 | |||||||||||||||||||||||||||||||||||||
11. | ஆ.8 | 1 | |||||||||||||||||||||||||||||||||||||
12. | அ. பெருமாள் திருமொழி | 1 | |||||||||||||||||||||||||||||||||||||
13. | இ.குலசேகராழ்வார் | 1 | |||||||||||||||||||||||||||||||||||||
14. | அ. வாளால் – மாளாத | 1 | |||||||||||||||||||||||||||||||||||||
15. | ஆ. தீராத | 1 | |||||||||||||||||||||||||||||||||||||
பகுதி – 2 பிரிவு - 1 | |||||||||||||||||||||||||||||||||||||||
16. | உரைநடையும்,கவிதையும் இணைந்து யாப்பு கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசன கவிதை. | 2 | |||||||||||||||||||||||||||||||||||||
17. | அ. பரிபாடல் எவ்வகை நூல்களில் ஒன்று? ஆ. தேவராட்டத்திற்கு உரிய இசைக்கருவி எது? | 1 1 | |||||||||||||||||||||||||||||||||||||
18. | காலை நேரம் தொடர்வண்டியில் வந்து இறங்கினார் தமிழறிஞர் கி.வா.ஜகநாதன் . அவரை மாலையிட்டு வரவேற்றனர் .அப்போது கி.வா.ஜ "அடடே! காலையிலேயே மாலையும் வந்துவிட்டதே!"என்றார் .எல்லோரும் அந்தச் சொல்லின் சிலேடை நயத்தை மிகவும் சுவைத்தனர் . | 2 | |||||||||||||||||||||||||||||||||||||
19 | அரசர்கள் தங்கள் வரலாறும் பெருமையும் காலம் கடந்தும் நிலைத்து நிற்க கல்லிலும் செப்பேட்டிலும் மெய்கீர்த்தி எழுதினார்கள். | 2 | |||||||||||||||||||||||||||||||||||||
20. | 1.முதல் நிலை தீவகம் 2. இடைநிலை தீவகம் 3. கடைநிலை தீவகம் | 1 1 | |||||||||||||||||||||||||||||||||||||
21 | கட்டாய வினா: பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல் | 2 | |||||||||||||||||||||||||||||||||||||
பகுதி – 2 / பிரிவு - 2 | |||||||||||||||||||||||||||||||||||||||
22 | அ.அடவி – காடு ஆ. அவல் – பள்ளம் | 1 1 | |||||||||||||||||||||||||||||||||||||
23 | அ. சிலையை சீலையால் மூடினான் ஆ. கொடுப்பதற்கு கோடு இடக்கூடாது | 2 | |||||||||||||||||||||||||||||||||||||
24 | மயங்கிய – மயங்கு + இ(ன்)+ய்+அ மயங்கு – பகுதி இ(ன்) – இறந்தகால இடைநிலை; ‘ன்’ புணர்ந்து கெட்டது. ய் – உடம்படுமெய் அ – பெயரெச்ச விகுதி | 2 | |||||||||||||||||||||||||||||||||||||
25. | அ. சின்னம் ஆ. ஆய்வேடு | 1 1 | |||||||||||||||||||||||||||||||||||||
26. | அ. இளவழகியின் முத்துப்பல் சிரிப்பு அழகாக உள்ளது. ஆ. ராமுவும்,சோமுவும் கீரிபாம்பு போல சண்டைப் போட்டுக் கொண்டே இருப்பார்கள் | 2 | |||||||||||||||||||||||||||||||||||||
26 | செவி மாற்றுத் திறனாளர்களுக்கான வினா: அ. பழக்குவியல் ஆ. புற்கட்டு |
| |||||||||||||||||||||||||||||||||||||
27. | அ. உள்ளளவும் நினை ஆ. மீறினால் அமிர்தமும் நஞ்சு | 1 1 | |||||||||||||||||||||||||||||||||||||
28. | அ.
| 1 1 | |||||||||||||||||||||||||||||||||||||
பகுதி – 3 / பிரிவு - 1 | |||||||||||||||||||||||||||||||||||||||
29 |
| 3 | |||||||||||||||||||||||||||||||||||||
30 | .அ. தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது ஆ. பெய்மழை இ. மீண்டும் மீண்டும் | 3 | |||||||||||||||||||||||||||||||||||||
31. | இடம்: மாநகர தந்தை செங்கல்வராயன் தலைமை – மாநகராட்சி சிறப்புக் கூட்டம் பொருள் : மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது ஆந்திராவின் தலைநகர் சென்னை இருக்க வேண்டும் என்ற நீதிபதி வாஞ்சு தலைமையிலான ஒருநபர் ஆணையத்தை எதிர்த்து முழங்கிய முழக்கம் இது. விளக்கம் : இதன் பொருட்டு மா.பொ.சி. சென்னையை மீட்க தலைக்கொடுத்தேனும் தலைநகர் காப்போம் என முழங்கினார் | 1 1 1 | |||||||||||||||||||||||||||||||||||||
பகுதி – 3 / பிரிவு - 2 | |||||||||||||||||||||||||||||||||||||||
32 | v நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம் பெற்று வாழ்வாயாக என கூத்தனை கூத்தன் ஆற்றுப்படுத்துதல் ஆற்றுப்படை v நன்னன் எனும் மன்னனிடம் பரிசில் பெற்ற கூத்தர், மற்றொரு கூத்தரிடம் பரிசில் பெறுவதற்கான வழியினை கூறுகிறது. v உணவினைப் பெறுவதற்கான வழியினை கூறல். | 3 | |||||||||||||||||||||||||||||||||||||
33. | v மன்னன் இடைக்காடனார் புலவரின் பாடலை இகழ்ந்தார். v இடைக்காடனார், மன்னன் இகழ்ந்ததை இறைவனிடம் முறையிடுகிறார் v இறைவன் கோவிலை விட்டு நீங்கினார் v மன்னன் இறைவனிடம் தன் பிழையைப் பொறுத்து அருள்புரியுமாறு வேண்டினார் v மன்னன் புலவருக்கு மரியாதை செய்து, மன்னிப்பு வேண்டினார் | 3 | |||||||||||||||||||||||||||||||||||||
34. |
உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள் நடுங்கு சுவல் அசைத்த கையள், “ கைய கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர இன்னே வருகுவர்,தாயார்” என்போள் நன்னர் நன்மொழி கேட்டனம் - நப்பூதனார் ( அல்லது ) ஆ) மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும் அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்; பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு கூலம் குவித்த கூல வீதியும்; இளங்கோவடிகள்
| 3 | |||||||||||||||||||||||||||||||||||||
பகுதி – 3 / பிரிவு - 3 | |||||||||||||||||||||||||||||||||||||||
35 | Ø ஆற்றுநீர் பொருள்கோள் Ø விளக்கம் : பாடலின் தொடக்கம் முதல் இறுதி வரை நேராக பொருள் கொள்ளுமாறு அமைவது. Ø பொருத்தம் : முயற்சி ஒருவனுக்கு செல்வத்தைப் பெருக்கும். முயற்சி இல்லாதிருந்தால் வறுமை சேரும். இக்குறள் தொடக்கம் முதல் இறுதி வரை நேராக பொருள் கொள்ளுமாறு அமைந்துள்ளது. | 3 | |||||||||||||||||||||||||||||||||||||
36. |
| 3 | |||||||||||||||||||||||||||||||||||||
37 |
| 3 | |||||||||||||||||||||||||||||||||||||
பகுதி – 4 | |||||||||||||||||||||||||||||||||||||||
38 | Ø அ) பூமித்தாயே என் அன்னையின் உடலைக் காப்பாயாக. Ø கருணையன் அன்னை உடல் மீது மலரையும்,கண்ணீரையும் பொலிந்தான் Ø கருணையன் மனம் பறிக்கப்பட்ட மலர்ப் போல உள்ளது. Ø அம்பினால் உண்டான வலிப் போல் உள்ளது. Ø கருணையனை தவிக்க விட்டுச் சென்றார். Ø பசிக்கான வழித் தெரியாது. Ø இவனது இரங்கல் கண்டு இயற்கை கண்ணீர் சிந்துகிறது. | 5 | |||||||||||||||||||||||||||||||||||||
38 | ஆ. சோலைக் காற்று : மின் விசிறிக் காற்றே ! நலமா? மின் விசிறிக் காற்று : நான். நலம். உனது இருப்பிடம் எங்கே? சோலைக்காற்று : அருவி,பூஞ்சோலை,மரங்கள். உனது இருப்பிடம் எங்கே? மின் காற்று : அறைகளின் சுவர்களின் இடையில். எனது இருப்பிடம் சோலைக்காற்று : என்னில் வரும் தென்றல் காற்றை அனைவரும் விரும்புவர். மின் காற்று : விரும்பியவர்கள் மின் தூண்டுதல் மூலம் என்னைப் பெறுவர். எண்ணிக்கையின் அடிப்படையில் வேகம் கொள்வேன் சோலைக் காற்று : இலக்கியங்களில் நான் உலா வருவேன். அனைவரும் விரும்பும் விதமாக இருப்பேன். மின் காற்று : நான் இல்லாமல் அலுவலகம் இல்லை. மின்சாரம் இல்லையெனில் நான் இல்லை. என்னை விரும்பும் நேரங்களில் இயக்கிக் கொள்ளலாம். | 5 | |||||||||||||||||||||||||||||||||||||
39 | அ. அனுப்புநர் அ அ அ அ அ, 100,பாரதி தெரு, சக்தி நகர், சேலம் – 636006. பெறுநர் உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள், உணவு பாதுகாப்பு ஆணையம், சேலம் – 636001 ஐயா, பொருள்: தரமற்ற உணவு வழங்கிய உணவு விடுதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுதல் – சார்பு வணக்கம். நான் நேற்று சேலத்தில் அன்பு உணவகத்தில் கோழி பிரியாணி உண்டேன். அது கெட்டுப் போனதாகவும் மேலும் அதன் விலைப்பட்டியலைவிட விலைக் கூடுதலாகவும் இருந்தது. இத்துடன் அந்த உணவிற்கான விலை இரசீது நகல் மற்றும் உணவு பட்டியல் நகலையும் இணைத்துள்ளேன். தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன். நன்றி. இணைப்பு: இப்படிக்கு, 1. விலை இரசீது – நகல் தங்கள் உண்மையுள்ள, 2. விலைப்பட்டியல்–நகல் அ அ அ அ அ. இடம் : சேலம் நாள் : 04-03-2021 உறை மேல் முகவரி: பெறுநர் உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள், உணவு பாதுகாப்பு ஆணையம், சென்னை.
| 5 | |||||||||||||||||||||||||||||||||||||
39 | ஆ. சேலம் 03-03-2021 அன்புள்ள நண்பனுக்கு, நான் நலம். நீ அங்கு நலமா? என அறிய ஆவல்.” மரம் இயற்கையின் வரம் “ என்ற தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் நீ முதல் பரிசு பெற்றது மிக மகிழ்ச்சியாக உள்ளது. மனமார வாழ்த்துகிறேன். நீ இன்னும் பல பரிசுகள் பெற வாழ்த்துகிறேன். இப்படிக்கு, உன் அன்பு நண்பன், அ அ அ அ அ அ அ . உறைமேல் முகவரி; பெறுதல் திரு.இரா.இளங்கோ, 100,பாரதி தெரு, சேலம். | 5 | |||||||||||||||||||||||||||||||||||||
40 | ( ஏற்புடைய விடை இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் ) ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத என்னை எழுது என்று சொன்னது இந்தக் காட்சி அர்த்தமுள்ள இந்தக் காட்சி சமூகத்திற்கு தேவையான காட்சி சமூக விளைவை ஏற்படுத்துக் காட்சி எல்லோருக்கும் அறிவுறுத்தும் காட்சி | 5 | |||||||||||||||||||||||||||||||||||||
41 | படிவத்தில் அனைத்து படிநிலைகளையும் சரியாக நிரப்பி இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம். | 5 | |||||||||||||||||||||||||||||||||||||
42 | 1. பிறந்தநாள் விழாவில் மயிலாட்டம் நிகழ்த்துதல் 2. எங்கள் குடும்ப விழாக்களில் பொம்மலாட்டம் நிகழ்த்துதல் 3. கோவில் திருவிழாக்களில் கரகாட்டம், காவடியாட்டம் நிகழ்த்துதல் 4. விடுமுறை காலத்தில் தெருக்கூத்து நிகழ்த்துதல். 5. விளையாட்டு விழாக்களில் புலியாட்டம் நிகழ்த்துதல். | 5 | |||||||||||||||||||||||||||||||||||||
42 | மொழிபெயர்க்க பொன்னிற கதிரவன் தன் ஒளிக் கதிரால் இந்தப் பூமியைப் பொலிவு பெற எழுகின்றான்.அழகிய காலை வேளையில் பால் போன்ற வெண்மை மேகங்கள் சூழ அந்த காட்சி பரவசத்தை உண்டாக்குது. வண்ணப் பறவைகள் காலை மெல்லிசையை ஒலித்துக் கொண்டே வலம் வர பட்டாம்பூச்சிகளும் பூக்களைச் சுற்றிவர, பூக்கள் தன் மணத்தை எல்லா இடங்களிலும் பரவச் செய்து,சுகந்தம் வீசின். காலை சில்லென உணர்வும், மணமும் பரவி எங்கும் இனிமையாக இருக்கிறது. | 5 | |||||||||||||||||||||||||||||||||||||
| பகுதி – 5 |
| |||||||||||||||||||||||||||||||||||||
43 | அ)
| 8 | |||||||||||||||||||||||||||||||||||||
| ஆ. வழக்கத்தில் பல ஆங்கில சொற்களை தமிழோடு இணைத்து பேசவும், எழுதவும் செய்வதை தவிர்க்க புதிய சொல்லாக்கம் தேவை. · தொழில் நுட்பம் சார்ந்த பல சொற்களை தமிழில் பயன்படுத்த சொல்லாக்கம் தேவை. · தாவரத்தின் அனைத்து நிலைகளுக்கும் தமிழில் சொற்கள் உண்டு. · புதிய தமிழ்ச்சொல்லாக்கம் தமிழ் மொழியை அழியாமல் பாதுகாக்கிறது. · மொழியின் மூலம் நாட்டாரின் நாகரிகத்தையும்,நாட்டு வளத்தின் மூலம் மொழிவளத்தினை அறியலாம்.. | 8 | |||||||||||||||||||||||||||||||||||||
44. | அ.
முன்னுரை : பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதை கொடுத்து காக்கின்ற மனித நேயம் விருந்தோம்பல்.இக்கட்டுரையில் கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பலைக் காணலாம். தேசாந்திரி: Ø சுப்பையாவின் வயலில் அருகு எடுக்கும் பணி. Ø அன்னமய்யாவுடன் ஒரு ஆள் உடன் வந்தான் Ø அவன் மிக சோர்வாக இருந்தான் Ø லாட சன்னியாசி போல உடை அணிந்து இருந்தான். Ø குடிக்க தண்ணீர் கேட்ட அவனுக்கு நீச்ச தண்ணீர் கொடுக்கப்பட்டது. Ø வேப்பமர நிழலில் சோர்வாக அமர்ந்தான் கருணை அன்னமய்யா: Ø அவன் பெயர் பரமேஸ்வரன் என்றும்,தற்போது மணி என்றும் கூறினான். Ø அன்னமய்யா ஒரு உருண்டை கம்மஞ் சோற்றையும், துவையலும் வைத்து கொடுத்தார். Ø கடுமையான பசியிலும் அரை உருண்டை சாப்பிட்டுவிட்டு கண்மூடி உறங்கினான். Ø ஆனந்த உறக்கம் கண்டான். முடிவுரை: பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதை கொடுத்து காக்கின்ற கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பல் போற்றுதலுக்கு உரியது. | 8 | |||||||||||||||||||||||||||||||||||||
44 | ஆ) குறிப்புச்சட்டம்
முன்னுரை : அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்க் என்பவருடன் விண்வெளி பயணம் மூலம் கிடைத்த கருத்தையும், அனுபவத்தையும் இக்கட்டுரை வாயிலாக காணலாம். பேரண்டம் : இப்பேரண்டம் பெருவெடிப்பினால் உருவானது என்பதற்கான சான்றுகளை கணிதவியல் அடிப்படையில் எங்களுக்கு விளக்கினார். கருந்துளைகள்: ஞாயிறு ஒரு விண்மீன். ஒரு விண்மீன் ஆயுள் கால முடிவில் உள்நோக்கிய ஈர்ப்பு விசை கூடுகிறது. அதனால் விண்மீன் சுருங்கத் தொடங்குகிறது. இதனால் அதன் ஈர்ப்பாற்றல் உயர்ந்துக் கொண்டே செல்கிறது என விளக்கினார். கருந்துளைகள்: விண்மீனின் ஈர்ப்பெல்லைக்களுள் செல்கிற எதுவும், ஒளிக் கூட தப்ப முடியாது. இவ்வாறு உள்ளே சென்ற யாவையும் வெளிவர முடியாததால் இதனை கருந்துளை என்பதனை ஹாக்கின் விளக்கினார். தலைவிதி : தலைவிதி ஒன்று இல்லை. தலைவிதி தான் நம்மை தீர்மானிக்கிறது என்றால் சாலையைக் கடக்கும் போது ஏன் இருப்புறமும் பார்த்துக் கடக்கிறீர்கள்? எனக் கேட்டு எங்களை சிந்திக்க வைத்தார். திரும்புதல் : ஹாக்கின் அவர்களுடன் விண்வெளிப் பயணம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பல்வேறு விதமான நிகழ்வுகளைக் கண்டும் அவற்றை அறிந்தும் பூமியை வந்தடைந்தோம்.. | 8 | |||||||||||||||||||||||||||||||||||||
45 | அ.
முன்னுரை: சான்றோர் வளர்த்த தமிழ் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம். தமிழின் தொன்மை: Ø தமிழின் தொன்மையைக் கருதி கம்பர் “என்றுமுள தென்தமிழ்” என்றார். Ø கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ். சான்றோர்களின் தமிழ்ப்பணி: Ø ஆங்கில மொழியை தாய் மொழியாகக் கொண்ட ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்து உலகறியச் செய்தார். Ø வீரமாமுனிவர் தமிழில் முதல் சதுரகராதி வெளியிட்டார் Ø தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதன் அவர்கள் ஓலைச்சுவடியிலிருந்த பல தமிழ் நூல்களை அச்சிட்டு வெளியிட்டார். தமிழின் சிறப்புகள்: Ø தமிழ் இனிமையான மொழி. பல இலக்கிய, இலக்கணங்களை கொண்ட மொழி. Ø இயல்,இசை,நாடகம் என முத்தமிழ் உடையது. Ø தமிழ் மூன்று சங்கங்களை கண்டு வளர்ந்தது. முடிவுரை: சான்றோர் வளர்த்த தமிழ் பற்றி இக்கட்டுரையில் நாம் கண்டோம்
| 8 | |||||||||||||||||||||||||||||||||||||
45 | ஆ.
முன்னுரை : எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப்பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வை இக்கட்டுரையில் காண்போம். பொருட்காட்சி : மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் பொருட்காட்சி நடைபெற்றது. நுழைவுச் சீட்டு: பொருட்காட்சி நடைபெறும் இடத்தின் உள்ளே செல்ல நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டது.பெரியவர்களுக்கு 30 ரூபாயும்,சிறுவர்களுக்கு 15 ரூபாயும் என நுழைவுச்சீட்டு நிர்ணயம் செய்யப்பட்டது. பல்துறை அரங்கம் : அரசின் சாதனைகள் கூறும் பல்வேறு அரசுத்துறை அரங்கங்களும்,தனியார் பொழுது போக்கு நிறுவனங்களும் நிறைய இருந்தன. அங்காடிகள்: வீட்டு உபயோகப் பொருட்கள்,விளையாட்டுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் என பல்வேறு பொருட்களும் ஒரே இடத்தில் கிடைத்தன. பொழுதுபோக்கு : சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் விளையாட பொம்மை அரங்கம் போன்ற பல்வேறு அரங்கங்களும்,இராட்டின்ங்களும் நிறைய இருந்தன. முடிவுரை: எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வினை இக்கட்டுரையில் கண்டோம். | 8 | |||||||||||||||||||||||||||||||||||||
ஆக்கம் :
வெ.ராமகிருஷ்ணன்,
அரசு உயர்நிலைப் பள்ளி,
கோரணம்பட்டி.