கரூர் – அரையாண்டு வினாத்தாள்
டிசம்பர் - 2022-2023
வினாத்தாளினைப் பெற
பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
உத்தேச விடைக் குறிப்பு
டிசம்பர் - 2022-2023
பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
உத்தேச விடைக் குறிப்பு
நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி மதிப்பெண் : 100
பகுதி – 1 மதிப்பெண்கள் - 15 | |||||||||||||||||||||||||||||||||||||||
வினா.எண் | விடைக் குறிப்பு | மதிப்பெண் | |||||||||||||||||||||||||||||||||||||
1. | ஈ. சருகும் சண்டும் | 1 | |||||||||||||||||||||||||||||||||||||
2. | ஈ.சிற்றூர் | 1 | |||||||||||||||||||||||||||||||||||||
3. | இ.பால்வழுவமைதி,திணை வழுவமைதி | 1 | |||||||||||||||||||||||||||||||||||||
4. | அ. அருமை + துணை | 1 | |||||||||||||||||||||||||||||||||||||
5. | இ.குறிஞ்சி,மருதம்,நெய்தல் நிலங்கள் | 1 | |||||||||||||||||||||||||||||||||||||
6. | ஈ.சிலப்பதிகாரம் | 1 | |||||||||||||||||||||||||||||||||||||
7. | இ.புறநானூறு | 1 | |||||||||||||||||||||||||||||||||||||
8. | இ.உருவகம் | 1 | |||||||||||||||||||||||||||||||||||||
9. | அ.பட்டு | 1 | |||||||||||||||||||||||||||||||||||||
10. | அ.6 | 1 | |||||||||||||||||||||||||||||||||||||
11. | அ.கூவிளம் தேமா மலர் | 1 | |||||||||||||||||||||||||||||||||||||
12. | ஆ. பரிபாடல் | 1 | |||||||||||||||||||||||||||||||||||||
13. | ஈ.கீரந்தையார் | 1 | |||||||||||||||||||||||||||||||||||||
14. | இ.ஊழி,ஊழ் | 1 | |||||||||||||||||||||||||||||||||||||
15. | இ. விசும்பு | 1 | |||||||||||||||||||||||||||||||||||||
பகுதி – 2 / பிரிவு - 1 | |||||||||||||||||||||||||||||||||||||||
16. | உரைநடையும்,கவிதையும் இணைந்து யாப்பு கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசன கவிதை. | 2 | |||||||||||||||||||||||||||||||||||||
17. | அ. செயற்கை நுண்ணறிவு என்பது யாது? ஆ. அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணைப்புரிந்தவை எவை? | 1 1 | |||||||||||||||||||||||||||||||||||||
18. | அ. வெற்பனர்கள் மலையில் உழுதனர் ஆ. நெய்தல்ப்பூ செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர் | 1 1 | |||||||||||||||||||||||||||||||||||||
19 | கரப்பிடும்பை இல்லார் – தன்னிடம் உள்ள பொருளை மறைத்து வைத்துக் கொண்டு இல்லை எனக் கூறாதவர். | 2 | |||||||||||||||||||||||||||||||||||||
20. | · வருக, வணக்கம் · வாருங்கள். · அமருங்கள், நலமா? · நீர் அருந்துங்கள் | 1 1 | |||||||||||||||||||||||||||||||||||||
21 | கட்டாய வினா: பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல் | 2 | |||||||||||||||||||||||||||||||||||||
பகுதி – 2 / பிரிவு - 2 | |||||||||||||||||||||||||||||||||||||||
22 |
| 1 1 | |||||||||||||||||||||||||||||||||||||
23 | காகத்திற்குக் காது உண்டா? அதற்கு காதுக் கேட்குமா? எல்லாப் பறவைகளுக்கும் காது உண்டு.செவித் துளைகள் இறகுகளால் மூடி இருக்கும் | 2 | |||||||||||||||||||||||||||||||||||||
24 | அ.காட்சி,காணுதல் ஆ.சுடுதல்,சுட்டல் | 1 1 | |||||||||||||||||||||||||||||||||||||
25. | கூத்துக்கலைஞர் பாடத் தொடங்கியதும் கூடியிருந்த மக்கள் அமைதியாயினர். | 2 | |||||||||||||||||||||||||||||||||||||
26. | அ. நெல்லை ஆ. கோவை | 1 1 | |||||||||||||||||||||||||||||||||||||
27. | அ. உயிரெழுத்து ஆ. மனித நேயம் | 1 1 | |||||||||||||||||||||||||||||||||||||
28. | அ.
| 1 1 | |||||||||||||||||||||||||||||||||||||
பகுதி – 3 / பிரிவு - 1 | |||||||||||||||||||||||||||||||||||||||
29 |
| 3 | |||||||||||||||||||||||||||||||||||||
30 | · . ஒரளவு மேம்படுத்துகின்றன. · மனிதனுக்கு தேவையான தேவைகளை மேம்படுத்தி இருக்கிறது. · மனிதனிடம் இரக்கம், அன்பு போன்றவை இல்லை. · மனிதன் இயந்திரதனமான வாழ்வை வாழ்கின்றான் | 3 | |||||||||||||||||||||||||||||||||||||
31. | அ.1906 ஆ.சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார் இ. காந்தியடிகள் | 1 1 1 | |||||||||||||||||||||||||||||||||||||
பகுதி – 3 / பிரிவு - 2 | |||||||||||||||||||||||||||||||||||||||
32 | v மன்னன் இடைக்காடனார் புலவரின் பாடலை இகழ்ந்தார். v இடைக்காடனார், மன்னன் இகழ்ந்ததை இறைவனிடம் முறையிடுகிறார் v இறைவன் கோவிலை விட்டு நீங்கினார் v மன்னன் இறைவனிடம் தன் பிழையைப் பொறுத்து அருள்புரியுமாறு வேண்டினார் v மன்னன் புலவருக்கு மரியாதை செய்து, மன்னிப்பு வேண்டினார் | 3 | |||||||||||||||||||||||||||||||||||||
33. | இடம் : சித்தாளு எனும் நாகூர் ரூமியின் கவிதை பொருள் : சித்தாளு வேலை செய்யும் பெண்ணின் மனச்சுமைகள் மனிதர்கள் மட்டுமன்றி செங்கற்களும் அறியாது | 3 | |||||||||||||||||||||||||||||||||||||
34. |
முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே! கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில் மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே! ( அல்லது ) ஆ) மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும் அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்; பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு கூலம் குவித்த கூல வீதியும்; இளங்கோவடிகள் - | 3 | |||||||||||||||||||||||||||||||||||||
பகுதி – 3 / பிரிவு - 3 | |||||||||||||||||||||||||||||||||||||||
35 |
| 3 | |||||||||||||||||||||||||||||||||||||
36. | இலக்கணம்: இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பினை ஏற்றிக்கூறுதல். எ.கா: தையல் துயர்க்குத் தறியா தம் சிறகால் .................................................................................. ................... கூவினவே கோழிக் குலம். விளக்கம்: அதிகாலை விடிந்து கோழிகளும் இயல்பாக கூவும்.ஆனால் புலவர் தமயந்தியின் துயர் கண்டே கோழிகள் சூரியனை விரைவாக வரக் கதறுவதாகக் கூறுகிறார். | 3 | |||||||||||||||||||||||||||||||||||||
37 |
| 3 | |||||||||||||||||||||||||||||||||||||
பகுதி – 4 | |||||||||||||||||||||||||||||||||||||||
38 | அ.
முன்னுரை : முல்லைப்பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை நாம் கட்டுரை வடிவில் காணலாம். மழை மேகம் : திருமால் மாவலி மன்னனுக்கு நீர் வார்த்து தரும் போது விண்ணுக்கும் மண்ணுக்கும் பேருருவம் எடுத்தது போல் மழை மேகம் உயர்ந்து நின்றது. மழைப் பொழிவு : கடலின் குளிர் நீரைப் பருகி, மலையைச் சூழ்ந்து விரைந்த வேகமாய் பெருமழைப் பொழிகிறது. மாலைப் பொழுது : வண்டுகளின் ஆரவாரம் கொண்ட அரும்புகள். முதுப் பெண்கள் மாலை வேலையில் முல்லைப் பூக்களோடு, நெல்லையும் தெய்வத்தின் முன் தூவினர். நற்சொல் கேட்டல் : முதுப்பெண்கள் தலைவிக்காக நற்சொல் கேட்டு நின்றனர். இது விரிச்சி என அழைக்கப்படும் ஆற்றுப்படுத்துதல் : இடைமகள் பசியால் வாடிய இளங்கன்றை காணல் உன் தாய்மாரை எம் இடையர் இப்போது வந்து விடுவர் எனக் கூறல் முதுப் பெண்கள் இந்த நற்சொல்லை நாங்கள் கேட்டோம். உன் தலைவன் வந்து விரைந்து வந்துவிடுவான் என ஆற்றுப்படுத்தினர் முடிவுரை : Ø இவ்வாறு முல்லைப் பாட்டில் மழைமேகம், மழைப்பொழிவு, மாலைப் பொழுது, நற்சொல் கேட்டல், ஆற்றுப்படுத்துதல் என செய்திகளை கண்டோம் | 5 | |||||||||||||||||||||||||||||||||||||
38 | Ø ஆ. பூமித்தாயே என் அன்னையின் உடலைக் காப்பாயாக. Ø கருணையன் அன்னை உடல் மீது மலரையும்,கண்ணீரையும் பொலிந்தான் Ø கருணையன் மனம் பறிக்கப்பட்ட மலர்ப் போல உள்ளது. Ø அம்பினால் உண்டான வலிப் போல் உள்ளது. Ø கருணையனை தவிக்க விட்டுச் சென்றார். Ø பசிக்கான வழித் தெரியாது. Ø இவனது இரங்கல் கண்டு இயற்கை கண்ணீர் சிந்துகிறது | 5 | |||||||||||||||||||||||||||||||||||||
39 | அ. அனுப்புநர் அ அ அ அ அ, 100,பாரதி தெரு, சக்தி நகர், சேலம் – 636006. பெறுநர் உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள், உணவு பாதுகாப்பு ஆணையம், சேலம் – 636001 ஐயா, பொருள்: தரமற்ற உணவு வழங்கிய உணவு விடுதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுதல் – சார்பு வணக்கம். நான் நேற்று சேலத்தில் அன்பு உணவகத்தில் கோழி பிரியாணி உண்டேன். அது கெட்டுப் போனதாகவும் மேலும் அதன் விலைப்பட்டியலைவிட விலைக் கூடுதலாகவும் இருந்தது. இத்துடன் அந்த உணவிற்கான விலை இரசீது நகல் மற்றும் உணவு பட்டியல் நகலையும் இணைத்துள்ளேன். தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன். நன்றி. இணைப்பு: இப்படிக்கு, 1. விலை இரசீது – நகல் தங்கள் உண்மையுள்ள, 2. விலைப்பட்டியல்–நகல் அ அ அ அ அ. இடம் : சேலம் நாள் : 04-03-2021 உறை மேல் முகவரி: பெறுநர் உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள், உணவு பாதுகாப்பு ஆணையம், சென்னை.
| 5 | |||||||||||||||||||||||||||||||||||||
39 | ஆ. சேலம் 03-03-2021 அன்புள்ள மாமாவுக்கு, நான் நலம். நீங்கள் நலமா? என அறிய ஆவல். சென்ற வாரம் எங்கள் பள்ளித் திடலில் பை ஒன்று கிடந்தது. அதனை திறந்த போது அதில நிறைய பணம் இருந்தது. உடனடியாக நான் தலைமை ஆசிரியரிடம் விபரம் கூறி ஒப்படைத்தேன்.மறுநாள் காலை இறைவணக்கக் கூட்டத்தில் தலைமை ஆசிரியர் மற்றும் காவல் துறை உயர் அதிகாரி இருவரும் பாராட்டி ஒரு நற்சான்றிதழையும் வழங்கினார்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நேர்மைக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரமாக இதை கருதுகிறேன். வீட்டில் அனைவரிடமும் இதை கூறவும். நன்றி,வணக்கம். இப்படிக்கு, தங்கள் உண்மையுள்ள, அ அ அ அ அ அ அ . உறைமேல் முகவரி; பெறுதல் திரு.இரா.இளங்கோ, 100,பாரதி தெரு,நாமக்கல். | 5 | |||||||||||||||||||||||||||||||||||||
40 | மையக்கருத்து,திரண்டக்கருத்துடன் எதுகை நயம், மோனை நயம், இயைபு நயம், முரண் நயம்,சொல் நயம்,அணி நயம் – ஏற்புடைய ஐந்து நயங்கள் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் | 5 | |||||||||||||||||||||||||||||||||||||
41 | படிவத்தில் அனைத்து படிநிலைகளையும் சரியாக நிரப்பி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம். | 5 | |||||||||||||||||||||||||||||||||||||
42 | ( ஏற்புடைய விடை இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் ) ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத என்னை எழுது என்று சொன்னது இந்தக் காட்சி அர்த்தமுள்ள இந்தக் காட்சி சமூகத்திற்கு தேவையான காட்சி சமூக விளைவை ஏற்படுத்துக் காட்சி எல்லோருக்கும் அறிவுறுத்தும் காட்சி | 5 | |||||||||||||||||||||||||||||||||||||
42 | 1.குழு விளையாட்டுகள் விளையாடுதல். 2.உலக நிகழ்வுகளைப் பற்றி கலந்துரையாடுதல். 3.விளையாட்டு களத்திற்குச் சென்று விளையாடுதல். 4நூல்களைப் படித்தல். 5..திறன்பேசியின் தீமைகளை எடுத்துரைத்தல், அதன் பயன்பாட்டை குறைக்கச் செய்தல். | 5 | |||||||||||||||||||||||||||||||||||||
| பகுதி – 5 |
| |||||||||||||||||||||||||||||||||||||
43 | அ) வழக்கத்தில் பல ஆங்கில சொற்களை தமிழோடு இணைத்து பேசவும், எழுதவும் செய்வதை தவிர்க்க புதிய சொல்லாக்கம் தேவை. Ø தொழில் நுட்பம் சார்ந்த பல சொற்களை தமிழில் பயன்படுத்த சொல்லாக்கம் தேவை. Ø தாவரத்தின் அனைத்து நிலைகளுக்கும் தமிழில் சொற்கள் உண்டு. Ø புதிய தமிழ்ச்சொல்லாக்கம் தமிழ் மொழியை அழியாமல் பாதுகாக்கிறது. மொழியின் மூலம் நாட்டாரின் நாகரிகத்தையும்,நாட்டு வளத்தின் மூலம் மொழிவளத்தினை அறியலாம் | 8 | |||||||||||||||||||||||||||||||||||||
43 | ஆ. கரகாட்டம் ஒயிலாட்டம் தேவராட்டம் தப்பாட்டம் புலி ஆட்டம் ஏதேனும் ஐந்து நிகழ்கலை வடிவங்கள் குறித்து எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
| 8 | |||||||||||||||||||||||||||||||||||||
44.அ |
முன்னுரை : பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதை கொடுத்து காக்கின்ற மனித நேயம் விருந்தோம்பல்.இக்கட்டுரையில் கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பலைக் காணலாம். தேசாந்திரி: Ø சுப்பையாவின் வயலில் அருகு எடுக்கும் பணி. Ø அன்னமய்யாவுடன் ஒரு ஆள் உடன் வந்தான் Ø அவன் மிக சோர்வாக இருந்தான் Ø லாட சன்னியாசி போல உடை அணிந்து இருந்தான். Ø குடிக்க தண்ணீர் கேட்ட அவனுக்கு நீச்ச தண்ணீர் கொடுக்கப்பட்டது. Ø வேப்பமர நிழலில் சோர்வாக அமர்ந்தான் கருணை அன்னமய்யா: Ø அவன் பெயர் பரமேஸ்வரன் என்றும்,தற்போது மணி என்றும் கூறினான். Ø அன்னமய்யா ஒரு உருண்டை கம்மஞ் சோற்றையும், துவையலும் வைத்து கொடுத்தார். Ø கடுமையான பசியிலும் அரை உருண்டை சாப்பிட்டுவிட்டு கண்மூடி உறங்கினான். Ø ஆனந்த உறக்கம் கண்டான். முடிவுரை: பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதை கொடுத்து காக்கின்ற கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பல் போற்றுதலுக்கு உரியது.
| 8 | |||||||||||||||||||||||||||||||||||||
44 | ஆ. குறிப்புச்சட்டம்
முன்னுரை : மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம். மேரி : · சாம் – பாட்ஸி இணையருக்கு மகளாகப் பிறந்தவள் மேரி. · பருத்திக்காட்டில் வேலை செய்து தங்கள் குடும்பத்தை நடத்துகிறார்கள். அவமானம் : · மேரி பாட்ஸியுடன் பென்வில்ஸன் வீட்டிற்கு செல்கிறார்கள். · மேரி அந்த வீட்டின் அலமாரியிலிருந்த புத்தகத்தை எடுக்கிறாள். · பென்வில்ஸன் இளையமகள் அவளிடமிருந்து புத்தகத்தை பிடிங்கினாள். · உனக்கு படிக்கத் தெரியாது என கூறினாள். · மேரி மனம் துவண்டாள். புதிய நம்பிக்கை · மேரிக்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உணடானது. · ஒரு நாள் மிஸ் வில்ஸன் என்பவர் “ உன் போன்ற குழந்தைகள் படிக்க வேண்டும். நீ சீக்கிரமாக மேயெஸ் வில்லிக்கு வர வேன்டும். · மேரிக்கு புதிய நம்பிக்கை பிறந்தது. கல்வி · மேரி ஐந்து மைல்கள் நடந்து சென்று கல்வி கற்றாள். · சில வருடங்கள் கழித்து மேரிக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. · அதில் “ இந்த பட்டம் பெறும் மாணவர் எழுதவும் படிக்கவும் கூடியவர் “ என எழுதப்பட்டிருந்தது.
உதவிக்கரம் · மிஸ்வில்சன் மூலம் மேரிக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி · அவளின் மேல்படிப்பு செலவுக்காக மேற்குப் பகுதியில் வாழ்கின்ற வெள்ளைக்கார பெண் மணி பணம் அனுப்பி இருக்கிறார். · அவள் மேல் படிப்புக்காக டவுணுக்கு செல்கிறாள். மேல்படிப்பு · மேரியை மேல்படிப்பு படிப்பதற்காக இரயில் நிலையத்தில் அவளது கிராமமே வழியனுப்ப திரண்டு வந்தது. · மிஸ் வில்ஸனும் இரயில் நிலையத்தில் வந்தார்கள். முடிவுரை எப்படிப்பட்ட நிலையிலும் கல்வி நம்மை உயர்த்தும் என்பதற்கு மேரியின் வாழ்க்கையை நாம் உதாரணமாகக் கொள்ளலாம். மேரியிடமிருந்து பறிக்கப்பட்டப் புத்தகம் அவள் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றியது என்பதனை இக்கட்டுரை வழியாகக் கண்டோம் | 8 | |||||||||||||||||||||||||||||||||||||
45 | அ.
முன்னுரை: மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும் பற்றி இக் கட்டுரையில் காணலாம். நாட்டு விழாக்கள்: சுதந்திர தினம், குடியரசு தினம், காந்திஜெயந்தி, தேசிய ஒருமைப்பாடு தினம், ஆகிய நாட்களில் மாணவர்கள் ஒற்றுமையோடு கொண்டாடி நாட்டிற்கு பெருமை சேர்க்கின்றனர். விடுதலைப் போராட்ட வரலாறு: வெள்ளையனே வெளியேறு,உப்பு சத்தியாகிரகம் போன்ற போராட்டங்கள் மூலம் பெற்ற விடுதலையை எண்ணி போற்ற வேண்டும். நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்பங்கு: மாணவர்கள் கல்வி பயில்வதோடு பள்ளியில் செயல்படும் சாரணர் இயக்கம்,இளஞ்செஞ்சிலுவை சங்கம்,NSS,NCC போன்ற இயக்கங்களில் இணைந்து சுதந்திர இந்தியாவை காப்பாற்றும் பொறுப்பு அறிந்து செயல் பட வேண்டும். முடிவுரை: நாட்டினை உயர்த்துவேன்,தலை நிமிர்ந்து வாழ்வேன் என்ற உறுதியான மனநிறைவோடு வாழ்ந்திடுவோம்.
| 8 | |||||||||||||||||||||||||||||||||||||
45 | ஆ.
முன்னுரை: சான்றோர் வளர்த்த தமிழ் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம். தமிழின் தொன்மை: Ø தமிழின் தொன்மையைக் கருதி கம்பர் “என்றுமுள தென்தமிழ்” என்றார். Ø கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ். சான்றோர்களின் தமிழ்ப்பணி: Ø ஆங்கில மொழியை தாய் மொழியாகக் கொண்ட ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்து உலகறியச் செய்தார். Ø வீரமாமுனிவர் தமிழில் முதல் சதுரகராதி வெளியிட்டார் Ø தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதன் அவர்கள் ஓலைச்சுவடியிலிருந்த பல தமிழ் நூல்களை அச்சிட்டு வெளியிட்டார். தமிழின் சிறப்புகள்: Ø தமிழ் இனிமையான மொழி. பல இலக்கிய, இலக்கணங்களை கொண்ட மொழி. Ø இயல்,இசை,நாடகம் என முத்தமிழ் உடையது. Ø தமிழ் மூன்று சங்கங்களை கண்டு வளர்ந்தது. முடிவுரை: சான்றோர் வளர்த்த தமிழ் பற்றி இக்கட்டுரையில் நாம் கண்டோம் | 8 | |||||||||||||||||||||||||||||||||||||
ஆக்கம் :
வெ.ராமகிருஷ்ணன்,
அரசு உயர்நிலைப் பள்ளி,
கோரணம்பட்டி.