அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், அன்பு மாணவச் செல்வங்களுக்கும் அன்பான வணக்கம். மாணவர்களின் கற்றலை மட்டும் நோக்கமாக கொண்டிராது மாணவர்களின் பிற திறன்களையும் வெளிக் கொணரும் விதமாக தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டது கலைத்திருவிழா. இதில் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களின் கலைத்திறமையை வெளிப்படுத்தி அயல்நாடுகளுக்கு சுற்றுலாச் செல்ல அழைத்து செல்லப்படுகிறார்கள். மேலும் மாநில வெற்றிப் பெறும் மாணவர்களுக்கு கலையரசி, கலையரசன் பட்டமும் வழங்கி இன்பச் சுற்றுலா பள்ளிக்கல்வித்துறை மூலம் அழைத்துச் செல்லப்படகிறார்கள். இந்த ஆண்டு மாணவர்கள் தங்கள் பள்ளி அளவில் 23-11-22 முதல் தங்களின் திறமைக்களை வெளிக்கொணர்ந்து பள்ளி அளவில் முதலிடம் பெற்று, பின்னர் வட்டார அளவில், மாவட்ட அளவில், மாநில அளவில் என அனைத்து நிலைகளிலும் பங்கு பெற்று வெற்றி பெற கலைத்திரு விழா சிறப்பாக நடைபெற உள்ளது. இதில் 6 முதல் 8 வகுப்பு வரை ஒரு பிரிவும், 9 மற்றும் 10 வகுப்புகளுக்கு ஒரு பிரிவும், 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு ஒரு பிரிவாகவும் போட்டிகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில் போட்டிக்கான பரிந்துரைக்கப்படும் தலைப்புகள் பள்ளிக் கல்வித்துறையால் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதனை பதிவிறக்கம் செய்து இந்த தலைப்புகளுக்கு ஏற்றவாறு தயார்ப்படுத்தி வெற்றி பெறுமாறு தமிழ்விதை மனதார வாழ்த்துகிறது. வாழ்க வளமுடன்.
கலைத்திருவிழா போட்டிகள்
தலைப்புகள்
பதிவிறக்கம் செய்ய