SALEM DT - UNIT TEST 1 - 10TH TAMIL - ANSWER KEY - PDF

 

சேலம் - மாவட்டம்

பத்தாம் வகுப்பு

தமிழ்

அலகுத் தேர்வு -1  

விடைக்குறிப்பு

 சேலம் -அலகுத் தேர்வு - 1 – வினாத்தாள்

நவம்பர் - 2022-2023

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  1.30 மணி                                                                              மதிப்பெண் : 50

பகுதி – 1

மதிப்பெண்கள் - 8

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

 

1.

அ. வணிகக்கப்பல்களும், ஐம்பெருங்காப்பியங்களும்

1

 

2.

ஆ. மணிவகை

1

 

3.

இ. அன்மொழித்தொகை

1

 

4.

ஈ. சிற்றூர்

1

 

5.

ஆ. பண்புத்தொகை

1

 

6.

ஆ. நப்பூதனார்

1

 

7.

இ. முல்லைப்பாட்டு

1

 

8.

ஈ. அகன்ற உலகம்

1

 

பகுதி – 2

பிரிவு - 1

 

9

v  சீவக சிந்தாமணி       

v  குண்டலகேசி

v  வளையாபதி

2

 

10

·         வருக, வணக்கம்

·         வாருங்கள்.

·         அமருங்கள், நலமா?

                                   நீர் அருந்துங்கள்.

2

 

11.

உவகைக் காரணமாக சிரித்து சிரித்துப் பேசினார்

2

 

12.

உரைநடையும்,கவிதையும் இணைந்து யாப்பு கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசன கவிதை.

1

 

13.

VOWEL – உயிரெழுத்து, CLASSICAL LITERATURE : செவ்விலக்கியம்

1

1

 

14.

மலை மீது மாலையில் ஏறினேன்

2

 

15.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு

2

 

பகுதி – 2

பிரிவு - 2

16.

Ø  காட்டில் பனைவடலி நடப்பட்டது

Ø  தோட்டத்தில் மாங்கன்று நடப்பட்டது.

Ø  சோளப் பைங்கூழ் வளர்ந்து வருகிறது

Ø  புளியங்கன்று சாலை ஓரத்தில் வளர்ந்து வருகிறது.

Ø  தோட்டத்தில் தென்னம்பிள்ளை வளர்த்தேன்

3

 

17.

அறிதல் – அறியாமை

புரிதல் – புரியாமை

தெரிதல் – தெரியாமை

பிறத்தல் – பிறவாமை

3

 

18.

அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!                      

முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!     

கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்          

மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!

தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!

இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே!

மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே!

முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!

3

 

19

முல்லை – வரகு, சாமை

மருதம் – செந்நெல், வெண்ணெல்

3

 

20.

i. நான்கு –

ii. ஐந்து - ரு

iii. நான்கு , இரண்டு – , உ

3

 

பகுதி – 3

பிரிவு - 1

21.

v  வழக்கத்தில் பல ஆங்கில சொற்களை தமிழோடு இணைத்து பேசவும், எழுதவும் செய்வதை தவிர்க்க புதிய சொல்லாக்கம் தேவை.

v  தொழில் நுட்பம் சார்ந்த பல சொற்களை தமிழில் பயன்படுத்த சொல்லாக்கம் தேவை.

v  தாவரத்தின் அனைத்து நிலைகளுக்கும் தமிழில் சொற்கள் உண்டு.

v  புதிய தமிழ்ச்சொல்லாக்கம் தமிழ் மொழியை அழியாமல் பாதுகாக்கிறது.

v  மொழியின் மூலம் நாட்டாரின் நாகரிகத்தையும்,நாட்டு வளத்தின் மூலம் மொழிவளத்தினை அறியலாம்

5

 

21

குறிப்புச் சட்டம்

முன்னுரை

மழை மேகம்

மழைப் பொழிவு

மாலைப் பொழுது

நற்சொல் கேட்டல்

ஆற்றுப்படுத்துதல்

முன்னுரை :

          முல்லைப்பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை நாம் கட்டுரை வடிவில் காணலாம்.

மழை மேகம் :

திருமால் மாவலி மன்னனுக்கு நீர் வார்த்து தரும் போது விண்ணுக்கும் மண்ணுக்கும் பேருருவம் எடுத்தது போல் மழை மேகம் உயர்ந்து நின்றது.

மழைப் பொழிவு :

கடலின் குளிர் நீரைப் பருகி, மலையைச் சூழ்ந்து விரைந்த வேகமாய் பெருமழைப் பொழிகிறது.

மாலைப் பொழுது :

வண்டுகளின் ஆரவாரம் கொண்ட அரும்புகள்.

முதுப் பெண்கள் மாலை வேலையில் முல்லைப் பூக்களோடு, நெல்லையும் தெய்வத்தின் முன் தூவினர்.

நற்சொல் கேட்டல் :

முதுப்பெண்கள் தலைவிக்காக நற்சொல் கேட்டு நின்றனர்.

இது விரிச்சி என அழைக்கப்படும்

ஆற்றுப்படுத்துதல் :

இடைமகள் பசியால் வாடிய இளங்கன்றை காணல்

உன் தாய்மாரை எம் இடையர் இப்போது வந்து விடுவர் எனக் கூறல்

முதுப் பெண்கள் இந்த நற்சொல்லை நாங்கள் கேட்டோம். உன் தலைவன் வந்து விரைந்து வந்துவிடுவான் என ஆற்றுப்படுத்தினர்

 

5

 

22

சேலம்

03-03-2021

அன்புள்ள நண்பனுக்கு,

          நான் நலம். நீ அங்கு நலமா? என அறிய ஆவல்.” மரம் இயற்கையின் வரம்என்ற தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் நீ முதல் பரிசு பெற்றது மிக மகிழ்ச்சியாக உள்ளது. மனமார வாழ்த்துகிறேன். நீ இன்னும் பல பரிசுகள் பெற வாழ்த்துகிறேன்.

இப்படிக்கு,

உன் அன்பு நண்பன்,

அ அ அ அ அ அ அ .

உறைமேல் முகவரி;

          பெறுதல்

                   திரு.இரா.இளங்கோ,

                   100,பாரதி தெரு,

                   சேலம்.

5

 

22.

அனுப்புநர்

          அ அ அ அ அ,

          100,பாரதி தெரு,

          சக்தி நகர்,

          சேலம் – 636006.

பெறுநர்

          உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

          உணவு பாதுகாப்பு ஆணையம்,

          சேலம் – 636001

ஐயா,

பொருள்: தரமற்ற உணவு வழங்கிய உணவு விடுதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுதல்சார்பு

          வணக்கம். நான் நேற்று சேலத்தில் அன்பு உணவகத்தில் கோழி பிரியாணி உண்டேன். அது கெட்டுப் போனதாகவும் மேலும் அதன் விலைப்பட்டியலைவிட விலைக் கூடுதலாகவும் இருந்தது. இத்துடன் அந்த உணவிற்கான விலை இரசீது நகல் மற்றும் உணவு பட்டியல் நகலையும் இணைத்துள்ளேன். தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

நன்றி.

இணைப்பு:                                                     இப்படிக்கு,

1. விலை இரசீதுநகல்                                                               தங்கள் உண்மையுள்ள,

2. விலைப்பட்டியல்நகல்                                                                            அ அ அ அ அ.

இடம் : சேலம் 

நாள் : 04-03-2021

உறை மேல் முகவரி:

பெறுநர்

        உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

உணவு பாதுகாப்பு ஆணையம்,

           சென்னை.

5

 

பிரிவு – 2

நயம் பாராட்டுக

 

23.

திரண்ட கருத்து :

தமிழ் தேனைவிட இனிமையானது. தென்னாடு பெஉமை கொள்கிறது.உடலில் ஒளிவிடும் உயர் மொழி. உணர்வுக்கு உணர்வாய் விளங்குவது.வானத்தை விட உயர்ந்த வண்டமிழ் மொழியே. கண்களாக விளங்கும் மொழி.தானாகவே சிறப்புற்று வியளங்குவது. இனியும் தழைத்தோங்குவது.

மையக்கருத்து :

தமிழ்மொழியின் சிறப்புகளை மிகவும்  உயர்வாக கூறியுள்ளார். இரு கண்களாக விளங்குகிறது என உயர்வுப்படக் கூறியுள்ளார்.

மோனை நயம் :

தேனினும் – தென்னாடு        னினும் – ணர்வினும் ( சீர் மோனை )

எதுகை நயம் :

தேனினும் – ஊனினும்         வானினும் – தானி ( அடி எதுகை )

இயைபு நயம் :

மொழியே - மொழியே

அணி நயம் :

தமிழை மிக உயர்வாக கூறியுள்ளதால் உயர்வு நவிற்சி அணி வந்துள்ளது.

5

 

பகுதி – 4

24

Ø  தேவையான உணவுப்பொருட்களை பாதுகாப்பான இடத்தில் வைத்துக்கொள்வேன்.

Ø  குடிநீரைச் சேமித்துக் வைத்துக்கொள்வேன்.

Ø  உணவைச் சிக்கனமாக பயன்படுத்துவேன்.

Ø  நீரைச் சிக்கனமாக பயன்படுத்துவேன்.

Ø  வானொலியில் தரும் தகவல்களைக் கேட்டு, அதன்படி நடப்பேன்.

4

 

24

ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத       

என்னை எழுது என்று சொன்னது

இந்தக் காட்சி  

காற்று என் தேவையை பற்றி எழுது என்றது

மனிதன் என் தவிப்பைப்

பற்றி எழுது என்றான்

நான் எழுதுகிறேன் காற்றே நம் சுவாசம் என்று

4

 

25.

பொன்னிற கதிரவன் தன் ஒளிக் கதிரால் இந்தப் பூமியைப் பொலிவு பெற எழுகின்றான்.அழகிய காலை வேளையில் பால் போன்ற வெண்மை மேகங்கள் சூழ அந்த காட்சி பரவசத்தை உண்டாக்குது. வண்ணப் பறவைகள் காலை மெல்லிசையை ஒலித்துக் கொண்டே வலம் வர பட்டாம்பூச்சிகளும் பூக்களைச் சுற்றிவர, பூக்கள் தன் மணத்தை எல்லா இடங்களிலும் பரவச் செய்து,சுகந்தம் வீசின். காலை சில்லென உணர்வும், மணமும் பரவி எங்கும் இனிமையாக இருக்கிறது.   

4

 

25

அ. முன்பின் அறியாத புதியவர்களே விருந்தினர்.

ஆ. விருந்தே புதுமை

இ. தம் வீட்டுக்கு வரும் விருந்தினரை முகமலர்ச்சியோடு வரவேற்று உண்ண உணவும் இருக்க இடமும் கொடுத்து அன்பு பாராட்டுவதே விருந்தோம்பல்.

ஈ. விருந்தினர்

 

 

 

 CLICK HERE TO GET PDF

விடைக்குறிப்பு தயாரிப்பு :

வெ.ராமகிருஷ்ணன்,

தமிழாசிரியர்,

அரசு உயர்நிலைப்பள்ளி, கோரணம்பட்டி

 

www.tamilvithai.com

www.kalvivithaigal.com

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post