மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான
மெல்லக்
கற்கும் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி புத்தகம்
பத்தாம்
வகுப்பு - தமிழ்
பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள்
2019- 2020/ ஒரு மதிப்பெண் வினாக்கள்
பிரிவு – 1
1.
‘ காலம் கரந்த பெயரெச்சம்’ என்பது ____________
அ)
வினைத்தொகை ஆ) உம்மைத்தொகை
இ)
பண்புத்தொகை ஈ) அன்மொழித்தொகை
2.
.எள்ளிலிருந்து எண்ணெய் எடுத்தலின் மிஞ்சுவதைக் குறிக்கும் சரியான சொல்_____
அ)
எள்கசடு ஆ) பிண்ணாக்கு இ) ஆமணக்கு ஈ) எள்கட்டி
3.
தொழிலைச் செய்யும் கருத்தாவைக் குறிப்பது _________________
அ)
தொழிற்பெயர் ஆ) முதனிலைத்
திரிந்த தொழிற்பெயர்
இ)
முதனிலைத் தொழிற்பெயர் ஈ) வினையாலணையும் பெயர்
4.’
மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்’- மாலவன் குன்றமும்,
வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே
அ)
திருத்தணியும்,திருப்பதியும் ஆ) திருப்பரங்குன்றமும்
பழனியும்
இ)
திருப்பதியும் திருத்தணியும் ஈ) திருப்பதியும்
திருச்செந்தூரும்
5.கொடுக்கப்பட்ட
அனைத்துச் சொற்களும் அமைந்த பொருத்தமான தொடரைத் தேர்க.
மலை,மழை,மேகம்,ஆறு,ஏரி,குளம்
அ)
மலைமீது மழை பெய்து ஆற்றுவெள்ளம் ஊரின் வழியே பெருக்கெடுத்து ஓடியது.
ஆ)
கருத்த மேகம் மலை மீது மழையைப் பொழிய ஆறு,ஏரி,குளம்,அனைத்தும் நீரால் நிரம்பின.
இ)
திரண்ட மேகங்கள் மலையில் மாரியாகி ஆறு,ஏரி,குளங்களில் நிறைந்தன.
ஈ)
மலைமீது மழைபொழிய ஏரி குளங்கள் நிறைந்து பின் கடலில் சென்று கலந்தது.
6.
கருணையன் என்பவர் _____________
அ)
வீரமாமுனிவர் ஆ) யோசேப்பு இ) அருளப்பன் ஈ) சாந்தா சாகிப்
7.‘
எய்துவர் எய்தாப் பழி’ – இக்குறளடிக்கு பொருந்தும் வாய்பாடு எது?
அ)
கூவிளம் தேமா மலர் ஆ) கூவிளம் புளிமா நாள்
இ)
தேமா புளிமா காசு ஈ)
புளிமா தேமா பிறப்பு
8.
சோலையில் பூத்த
மணமலர்களில் சுரும்புகள் மொய்த்துப் பண்பாடி மதுவுண்டன.இத்தொடரில் அடிக்கோடிட்ட
சொற்களுக்குப் பொருத்தமான வேறு சொற்களை எழுதுக.
அ)
பூஞ்சோலைகள் – அரும்புகள் ஆ) மலை
– எறும்புகள் – தேன்
இ)
பூஞ்சோலையில் – வண்டுகள் – தேன் ஈ)
கானகம் – வண்டுகள் - நீர்
9.
எழுகதிர்,முத்துப்பல் – இச்சொற்களில் மறைந்துள்ள தொகைகள் முறையே _______
அ)
வினைத்தொகை,பண்புத்தொகை ஆ)
உவமைத்தொகை,வினைத்தொகை
இ)
உவமைத்தொகை, வினைத்தொகை ஈ) வினைத்தொகை, உவமைத்தொகை
10.
சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்
அ)
அகவற்பா ஆ) வெண்பா இ) வஞ்சிப்பா ஈ) கலிப்பா
11.
இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக் கொண்டவர்________
அ)
தமிழழகனார் ஆ) அப்பாத்துரையார்
இ)
தேவ நேய பாவாணர் ஈ) இரா.இளங்குமரனார்
12. கூத்துக்கலைஞர் பாடத்தொடங்கினார்.
கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்___________
அ) கூத்துக்கலைஞர் பாடவில்லை என்றால்
கூடியிருந்த மக்கள் அமைதியாயிரார்.
ஆ) கூத்துக்கலைஞர் பாடத்தொடங்கியதும்
கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்.
இ) கூத்துக்கலைஞர் பாடத்தொடங்கினார்
என்பதால் கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்
ஈ) கூத்துக்கலைஞர் பாடத்தொடங்கி
கூட்டத்திலிருட்ந்தவர்களை அமைதிப்படுத்தி வைத்தார்.
13.
இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடி போரிடுவதன் காரணம் __________
அ)
நாட்டைக் கைப்பற்றல் ஆ)
ஆநிரை கவர்தல்
இ)
வலிமையை நிலைநாட்டல் ஈ) கோட்டையை
முற்றுகையிடல்
14.கலையின்
கணவனாகவும்,சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன்- ஜெயகாந்தனின் இக்க்கூற்றிலிருந்து
நாம் புரிந்துக் கொள்வது_____________
அ)
தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்
ஆ)
சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்
இ)
அறத்தைக் கூறுவதற்காக எழுதினார்
ஈ)
அழகியலுடன் இலக்கியம் படைத்தார்.
15.
‘ சிவப்புச் சட்டை ‘ பேசினார் – அடிக்கோடிட்ட சொல்லுக்கான தொகையின் வகை எது?
அ)
பண்புத்தொகை ஆ) உவமைத்தொகை இ) அன்மொழித்தொகை ஈ) உம்மைத்தொகை
16.
ஆலும் வேலும் பல்லுக்குறுதி
நாலும்
இரண்டும் சொல்லுக்குறுதி – இத்தொடர்கள் உணர்த்தும் மரங்களின் பெயர்களையும்,தமிழெண்களையும்
குறிப்பிடுக.
அ)
ஆலமரம்,வேப்பமரம் – ௫ ௧ ஆ)
ஆலமரம்,வேலமரம் - ௪ ௨
இ)
அரசமரம்,வேங்கைமரம் - ௧ ௨ ஈ) வேப்பமரம்,
ஆலமரம் – ௪ ௬
17.
திருவள்ளுவர் அறிவுடையார் எல்லாம் உடையார் என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.இத்தொடருக்குப்
பொருத்தமான நிறுத்தற்குறியிட்டத் தொடரைத் தேர்க.
அ)
திருவள்ளுவர்,’ அறிவுடையார் எல்லாம் உடையார்’என்று’அறுதியிட்டுக்’ கூறுகிறார்.
ஆ)
திருவள்ளுவர்,’அறிவுடையார் எல்லாம் உடையார்’ என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.
இ)
திருவள்ளுவர்,” அறிவுடையார்,எல்லாம் உடையார்” என்று,அறுதியிட்டுக் கூறுகிறார்.
ஈ)
‘திருவள்ளுவர்’,’அறிவுடையார் எல்லாம் உடையார்’ என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.
18.
புதிருக்கான விடையை வரிசைப்படி தேர்ந்தெடுக்க.
தவழும்போது ஒரு பெயர்
விழும்போது ஒரு பெயர்
உருளும்போது ஒரு பெயர்
திரண்டோடும் போது ஒரு பெயர் – அவை என்ன?
அ)
நீர்,மழை,ஆறு,ஓடை ஆ) மேகம்,மழை,நீர்,வெள்ளம்.
இ)
மாரி,கார்,நீர், புனல் ஈ) மழை,புனல்,மேகம்,நீர்
19.
குளிர்காலத்தை பொழுதாக கொண்ட நிலங்கள்_________
அ)
முல்லை,குறிஞ்சி,மருத நிலங்கள் ஆ)
குறிஞ்சி,பாலை,நெய்தல் நிலங்கள்
இ) குறிஞ்சி, மருதம்,நெய்தல் நிலங்கள் ஈ) மருதம்,நெய்தல்,பாலை நிலங்கள்
20.
பூக்கையைக் குவித்துப் பூவே புரிவோடு காக்க என்று _________,______ வேண்டினார்.
அ)
கருணையன்,எலிசபெத்துக்காக ஆ)
எலிசபெத்,தமக்காக
இ)
கருணையன், பூக்களுக்காக ஈ) எலிசபெத,
பூமிக்காக
21.
தமிழனத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக மா.பொ.சி. கருதியது ___________
அ)
திருக்குறள் ஆ) புறநானூறு இ) கம்பராமாயணம் ஈ) சிலப்பதிகாரம்
22.
வெட்டிய மரங்களுக்கு ஈடாக ____________ நட்டனர்.
அ)
கொடிகளை ஆ) நாற்றுகளை இ) மரங்களை ஈ)
மரக்கன்றுகளை
23.
“ அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை “ – என்று இவ்வடிகளில்
குறிப்பிடப்படுவது எது?
அ)
தமிழ் ஆ) அறிவியல் இ) கல்வி ஈ) இலக்கியம்
24. ‘ கானடை’ என்னும் சொல்லைப் பிரித்தால்
பொருந்தாத பொருளைக் குறிப்பிடுக.
அ) கான் அடை – காட்டைச் சேர் ஆ) கால் உடை – காலால் உடைத்தல்
இ) கான் நடை – காட்டுக்கு நடத்தல் ஈ) கால் நடை – காலால் நடத்தல்
25.
‘ கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது ‘ – தொடரில் இடம் பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே
___________
அ)
பாடிய ; கேட்டவர் ஆ) பாடல்
; பாடிய இ) கேட்டவர் ; பாடிய ஈ) பாடல் ; கேட்டவர்
26.
தலைப்புக்கும் குறிப்புகளுக்கும் பொருத்தமான விடையைத் தேர்வு செய்க.
தலைப்பு : செயற்கை நுண்ணறிவு
குறிப்புகள் : 1. கண்காணிப்பு கருவி,அசைவு நிகழும்
பக்கம் தன் பார்வையைத் திருப்புகிறது.
2. திறன்பேசியில் உள்ள வரைபடம் போக்குவரத்திற்குச்
சுருக்கமான வழியைக் காண்பிப்பது.
அ)
குறிப்புகளுக்குப் பொருத்தமில்லாத தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
ஆ)
தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
இ)
தலைப்புக்குத் தொடர்பில்லாத குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.
ஈ)
குறிப்புகளுக்குப் பொருத்தமில்லாத தலைப்பு வழங்கப்பட்டுள்ளது.
27.
விடுபட்ட உணவு வகைகளை வரிசைப்படுத்துக.
பச்சரிசியைக் கொண்டு _________ செய்து பாசிப்பருப்பினை
வறுத்து ________ பிடித்து கேரட்டைத் துருவி நெய்யிட்டு _______ செய்து முடித்த அம்மா,
இறுதியாக உருளைக் கிழங்கைச் சீவி _________ செய்து அனைவரையும் உணவு உண்ண அழைத்தார்.
அ)
பொங்கள்,உருண்டை,சீவல்,அல்வா ஆ)
சீவல்,உருண்டை,அல்வா,சீவல்
இ)
பொங்கல், உருண்டை,அல்வா,சீவல் ஈ)
உருண்டை,சீவல்,அல்வா, பொங்கல்
28.
சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க….
அ)
உழவு,மண்,ஏர்,மாடு ஆ) மண்,மாடு,ஏர்,உழவு இ) ஏர்,உழவு,மாடு,மண் ஈ) உழவு,ஏர்,மண்,மாடு
29.பாரதியார் காற்றை’ மயலுறுத்து
‘ அழைப்பதைக் குறிக்கும் சொற்றொடர்____________
அ) மணம் வீசும் காற்றாய் நீ வா ஆ) மனதை மயங்கச் செய்யும் மணத்தோடு நீ வா
இ) மயிலாடும் காற்றாய் நீ வா ஈ) மகரந்தம் சுமந்து கொண்டு நீ வா
30.
மேன்மை தரும் அறம் என்பது ___________
அ)
கைம்மாறு கருதாமல் அறம் செய்வது
ஆ)
மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது
இ)
புகழ் கருதி அறம் செய்வது
ஈ)
பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது
31.
இலையுதிர் காலம் ___________ சருகாயின!
மழைக்காலம் __________ தழைத்தன!
சருகுகளோ செழுமையான உரங்களாயின!
-
புதுக்கவிதைக்குப்
பொருத்தமான எதுகை,மோனைச் சொற்களை இட்டு நிரப்புக.
அ)
மரங்கெல்லாம்,கிளைபரப்பின ஆ) காடெல்லாம்,வளர்ந்தன
இ)
இலைகளெல்லாம், மரங்கெல்லாம் ஈ)
மலையெல்லாம், முளைத்தன
32.
கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?
அ)
நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால் ஆ) ஊரில்
விளைச்சல் இல்லாததால்
இ)
அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால் ஈ)
அங்கு வறுமை இல்லாததால்
33.
பின்வருவனவற்றில் முறையான தொடர் எது?
அ)
தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு.
ஆ)
தமிழர் வாழை இலைக்கு பண்பாட்டில் தனித்த இடமுண்டு
இ)
தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு
ஈ)
தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு
அ) வைகறை,நடைபயிற்சி,பத்திரிக்கை,தேநீர்
ஆ) அதிகாலை, நடந்து, தேநீர், பத்திரிக்கை
இ) காலை, நடை, தேநீர், செய்தி
ஈ) வைகறை, நடைபயிற்சி,தேநீர்,செய்தித்தாள்
35.
குலசேகர ஆழ்வார் “ வித்துவகோட்டம்மா” என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார்.
பூனையார் பால் சோற்றைக் கண்டதும் விரைந்து வருகிறார்.
– ஆகிய தொடர்களில் இடம் பெற்றுள்ள வழுவமைதிகள் முறையே-
அ)
மரபு வழுவமைதி, திணை வழுவமைதி ஆ)
இட வழுவமைதி, மரபு வழுவமைதி
இ)
பால் வழுவமைதி, திணை வழுவமைதி ஈ)
கால வழுவமைதி, இட வழுவமதி
36.
வேர்க்கடலை,மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றில் குறிப்பிடும் பயிர்வகை-------
அ)
குலை வகை ஆ) மணிவகை இ) கொழுந்து வகை ஈ) இலைவகை
37.
வாய்மையே மழை நீராகி – இத்தொடரில் வெளிப்படும் அணி
அ)
உவமை ஆ) தற்குறிப்பேற்றம் இ) தீவகம் ஈ) உருவகம்
38.
‘ சங்க இலக்கியங்கள்,ஐந்திணைகளுக்குமான ஒழுக்கங்களை இரு திணைகளும் பெற எடுத்தியம்புகின்றன”
– இத்தொடரில் அமைந்துள்ள தொகைச் சொற்களின் பொருத்தமான விரியைக் கண்டறிக.
அ)
குறிஞ்சி,முல்லை,செய்தல்,பாலை – நல் வினை, தீ வினை
ஆ)
குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை – உயர்திணை,அஃறிணை
இ)
குறிஞ்சி,முல்லை,நெய்தல்,பாலை,மருதம் – அறம்,பொருள்,இன்பம்
ஈ)
குறிஞ்சி,மருதம்,மலை,காடு,வயல் – பனை, திணை
39.
கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக் கூத்து என்றும் கூறுவர். இத்தொடருக்கான வினா
எது?
அ)
கரகாட்டம் என்றால் என்ன? ஆ)
கரகாட்டம் எக்காலங்களில் நடைபெறும் ?
இ)
கரகாட்டத்தின் வெவ்வேறு வடிவங்கள் யாவை? ஈ)
கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?
40.
பழமொழியைப் பொருத்துக.
அ) ஆறில்லா ஊருக்கு - 1.
சோற்றுக்கு ஒரு சோறு பதம்
ஆ) உப்பில்லாப் பண்டம் - 2. நூறு வயது
இ) நொறுங்கத் தின்றால் - 3.
குப்பையிலே
ஈ) ஒரு பானை - 4. அழகு பாழ்
அ)
அ-4.ஆ-3,இ-2,ஈ-1 ஆ) அ-3,ஆ-2,இ-4,ஈ-1
இ)
அ-2,ஆ-4,இ-1,ஈ-3 ஈ) அ-1,ஆ-2இ-3,ஈ-4
41.
திணை வழுவமைதி –
அ)
‘ இந்த பாப்பா தூங்கமாட்டாள் ‘ என்று தன்னையே குழந்தை குறிப்பிடுவது.
ஆ)
இரவெல்லாம் நாய் கத்திக் கொண்டே இருந்தது.
இ)
‘ வாடா செல்லம் ‘ என்று தாய் மகளை அழைப்பது.
ஈ)
‘ என் தங்கை வந்தாள் ‘ – என்று பசுவைக் குறிப்பிடுவது.
42.
சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது ___________
அ)
அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல் ஆ)
பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்தல்
இ)
அறிவியல் முன்னேற்றம் ஈ)
வெளிநாட்டு முதலீடுகள்
43
தமிழ்த்தொண்டு என்னும் தொடர் ________
அ)
இருபெயரொட்டுப் பண்புத்தொகை ஆ)
உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை
இ) அன்மொழித்தொகை ஈ)
வேற்றுமைத்தொகை
44.‘
உனதருளே பார்ப்பன் அடியேனே ‘ யாரிடம் யார் கூறியது?
அ)
குலசேகராழ்வாரிடம் இறைவன் ஆ)
இறைவனிடம் குலசேகராழ்வார்
இ)
மருத்துவரிடம் நோயாளி ஈ)
நோயாளியிடம் மருத்துவர்
45.
மரபுத் தொடருக்கான பொருளைத் தேர்க. :- ஆறபோடுதல்
அ)
தாமதப்படுத்துதல் ஆ) ஆற்றில் போடுதல் இ) ஆற வைத்தல் ஈ) ஆற்றில் இறங்குதல்
46.
முல்லை நில மக்களின் உணவுப் பொருள்கள்_____
அ)
வெண்நெல்,வரகு ஆ) மலைநெல்,திணை இ) வரகு,சாமை ஈ) மீன்,செந்நெல்
47.
ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர். – இத்தொடரின் செயப்பாட்டு வினைத்தொடர்
எது?
அ)
ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுவர்.
ஆ)
ஒயிலாட்டத்தில் ஒரு வரிசையில் நின்று ஆடப்படுகிறது.
இ)
ஒயிலாட்டம் ஒரு வரிசையில் நின்று ஆடப்படுகிறது.
ஈ)
ஒயிலாட்டம் இரு வரிசையில் நின்று ஆடப்படுகிறது
48.
அன்பால் கட்டினார்,அறிஞருக்குப் பொன்னாடை ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக்
காரணமாக அமைவது ____________
அ)
வேற்றுமை உருபு ஆ) எழுவாய் இ) உவம உருபு ஈ) உரிச்சொல்
49.
குமரி மாவட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர் ___________
அ)
திரு.பிரகாசம் ஆ) மார்ஷல்.ஏ.நேசமணி இ) தனிநாயகம் அடிகள் ஈ) ந. முத்துசாமி
50.
காலக்கணிதம் கவிதையில் இடம் பெற்ற தொடர் _______
அ)
இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது ஆ) என்மனம் இகழ்ந்தால் இறந்து விடாது
இ)
இகழ்ந்தால் இறந்து விடாது என்மனம் ஈ) என்மனம் இறந்துவிடாது இகழ்ந்தால்
51.
வெளிநாட்டில் வேலை செய்துகொண்டிருக்கும் தாயைப் பிரிந்திருக்கும் மகள் ___________
அ)
தாமரை இலை நீர் போல் ஆ)
வாழையடி வாழை
இ)
கண்ணினைக் காக்கும் இமை போல ஈ) மழை
முகம் காணாப் பயிர்போல
52.
வெஃஃகுவார்க்கில்லை,உரனசைஇ - இச்சொற்களில் உள்ள அளபெடைகள்
அ)
ஒற்றளபெடை,சொல்லிசை அளபெடை ஆ) இன்னிசை அளபெடை,சொல்லிசை
அளபெடை
இ)
சொல்லிசை அளபெடை, ஒற்றளபெடை ஈ) ஒற்றளபெடை,
இன்னிசை அளபெடை
53
“ காற்றுள்ள போதே தூற்றிக் கொள் “ – இப்பழமொழி உணர்த்தும் சரியான பொருள்
அ)
காலம் வருமென்று காத்திருந்தால் செயல் கெட்டு விடும்
ஆ)
உரிய காலத்தில் ஒரு செயலை முழுமையாகச் செய்து விட வேண்டும்.
இ)
உரிய காலத்தில் காற்றைப் போல செயல்பட வேண்டும்.
ஈ)
உரிய காலத்தில் உணர்ந்து உரிய செயலைத் தேட வேண்டும்.
54.
உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும், பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன்
என்றும் பாராட்டப்படுவோர் –
அ)
உதியன் ; சேரலாதன் ஆ) அதியன் ; பெருஞ்சாத்தன் இ) பேகன்; கிள்ளிவளவன்
ஈ)
நெடுஞ்செழியன் ; திருமுடிக்காரி
55
“ மருந்தே ஆயினும் விருந்தோடு உண் “ என்னும் அடிகள் இடம் பெற்றுள்ள நூல்
அ.
குறுந்தொகை ஆ. கொன்றை வேந்தன் இ.
திருக்குறள் ஈ. நற்றிணை
56.
‘ மலர்கள் தரையில் நழுவும் ‘ எப்போது?
அ.
அள்ளி முகர்ந்தால் ஆ. தளரப் பிணைத்தால் இ.
இறுக்கி முடிச்சிட்டால் ஈ. காம்பு முறிந்தால்
57.
ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?
அ.
குலா ஆ. இலா இ. சீலா ஈ.
துலா
58.
“ இவள் தலையில் எழுதியதோ
கற்காலம் எப்போதும் …..” இவ்வடிகளில் கற்காலம்
என்பது
அ.
தலைவிதி ஆ. பழைய காலம் இ, ஏழமை ஈ. தலையில் கல் சுமப்பது
59.
‘ மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதராபுரிச் சங்கம் வைத்தும்’ -என்னும் சின்னமனூர் செப்பேட்டுக்
குறிப்பு உணர்த்தும் செய்தி.
அ.
காப்பியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது. ஆ.
சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
இ.
சங்கம் மருவி காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது ஈ.
பக்தி இலக்கியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
60.
பரிபாடல் அடியில் ‘ விசும்பும் இசையும்’ என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?
அ.
வானத்தையும் பாட்டையும் ஆ.
வானத்தையும் புகழையும்
இ.
வானத்தையும் பூமியையும் ஈ. வானத்தையும்
பேரொலியையும்
61.
பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடுக்க.
அ.
கொண்டல் – 1. மேற்கு ஆ.
கோடை – 2. தெற்கு
இ.
வாடை – 3. கிழக்கு ஈ.
தென்றல் – 4. வடக்கு
அ.
1,2,3,4 ஆ. 3.1.4,2 இ. 4,3,2,1 ஈ. 3,4,1,2
62.
செய்தி -1 : ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15 ஆம் நாளை உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.
செய்தி -2: காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில்
தமிழகம் இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே என்கிறது காற்று.
செய்தி-3 : காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல்கடந்து
வணிகம் செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள் !
அ.
செய்தி 1 மட்டும் சரி ஆ. செய்தி
1,2 ஆகியன சரி இ. செய்தி 3 மட்டும்
சரி ஈ. செய்தி 1,3 ஆகியன சரி
63.
‘ வீட்டைத் துடைத்துச் சாயம் அடித்தல் ‘ இவ்வடி குறிப்பது
அ.
காலம் மாறுவதை ஆ. வீட்டைத்
துடைப்பதை இ. இடையறாது அறப்பணி செய்தலை
ஈ.
வண்ணம் பூசுவதை
64.
‘ சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்
‘ – பாரதியின் இக்கூற்று உணர்த்தும் கருத்து
அ.
பல துறை நூல்கள் தமிழில் உருவாக்கப்பட வேண்டும். ஆ. பலகலைகள் தமிழில் புதிததாக தோன்ற வேண்டும்.
இ.
உலகெங்கும் காணப்படும் செல்வங்கள் தமிழகத்தில் வந்து சேர்தல் வேண்டும்
ஈ.
கலைச் செல்வங்களை உலகம் முழுவதும் பயணம் செய்து கண்டுகளிக்க வேண்டும்.
65.‘
பாடு இமிழ் பனிக்கடல் பருகி ‘ என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி
அ.
கடல் நீர் ஆவியாகி மேகமாதல் ஆ.
கடல் நீர் குளிர்ச்சி அடைதல்
இ.
கடல் நீர் ஒலித்தல் ஈ.
கடல் நீர் கொந்தளித்தல்
66.“
காலின் ஏழடிப் பின் சென்று “ – என்னும் பொருநராற்றுப் படை உணர்த்தும் செய்தி
அ.
விருந்தினரின் காலைத் தொட்டு வணங்கினர்
ஆ.
விருந்தினரை ஏழு அடி வரை நடந்து சென்று வழியனுப்பினர்
இ.
எழுவர் விருந்தினரின் பின் சென்று வழியனுப்பினர்
ஈ.
ஏழுநாள்கள் விருந்தளித்துப் பின் விருந்தினரை வழியனுப்பினர்
பாடல் அடி வினாக்கள்
பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
“ அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை
அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்
பொருத்துவதும் கல்வியென்றே போற்று “
67.பாடல்
இடம் பெற்ற நூல் _____
அ)
நீதிவெண்பா ஆ) புறநானூறு இ)
வெற்றிவேற்கை ஈ) கொன்றை வேந்தன்
68.
பாடலின் சீர் மோனைச் சொற்கள்
அ)
அருளை அருத்துவதும் ஆ) அருளை,அறிவை இ) அகற்றி,அருந்துணையாய் ஈ) அறிவை,அகற்றி
69.
அருந்துணையாய் – இச்சொல்லைப் பிரித்தால்
அ)
அருந்துணை+யாய் ஆ) அருந்து +
துணையாய் இ) அருமை + துணையாய்
ஈ)
அரு + துணையாய்
70.
உயிருக்கு அரிய துணையாய் இன்பம் சேர்ப்பது _______
அ)
அன்பு ஆ) கல்வி இ) மயக்கம் ஈ) செல்வம்
பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
“ விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்
கரு வளர் வானத்து இசையில் தோன்றி
உரு அறிவாரா ஒன்றன்
ஊழியும்;
உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும் “
71.
ஊழ் ஊழ் – இலக்கணக் குறிப்பு
அ.
இரட்டைக் கிளவி ஆ. பண்புத்
தொகை இ. அடுக்குத் தொடர் ஈ. வினைத் தொகை
72.
பாடலின் ஆசிரியர்
அ.
கீரந்தையார் ஆ. பூதஞ்சேந்தனார் இ. நப்பூதனார் ஈ. குலசேகராழ்வார்
73.
பாடலில் உணர்த்தப்படும் கருத்து
அ.
தத்துவக் கருத்து ஆ. அறிவியல் செய்தி இ. நிலையாமை ஈ. அரசியல் அறம்
74.
விசும்பு , இசை , ஊழி – பாடலில் இச்சொற்கள் உணர்த்தும் பொருள்கள் முறையே
அ.
காற்று, ஓசை, கடல் ஆ. மேகம், இடி, ஆழம் இ. வானம், பேரொலி,யுகம் ஈ. வானம்,காற்று,காலம்
பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
‘ முத்தமிழ்
துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்
மெத்த வணிகலமும் மேவலால் – நித்தம்
அணைகிடந்தே
சங்கத் தவர்காக்க ஆழிக்கு
இணைகிடந்த
தேதமிழ் ஈண்டு “
75. இப்பாடல் இடம் பெற்ற நூல்
அ. நற்றிணை ஆ. முல்லைப்பாட்டு இ. குறுந்தொகை ஈ.தனிப்பாடல் திரட்டு
76. பாடலில் இடம் பெற்றுள்ள பொருத்தமான
அணி
அ. இரட்டுற மொழிதல் அணி ஆ, தீவக அணி இ. வஞ்சப்புகழ்ச்சி அணி ஈ. நிரல் நிறை அணி
77. தமிழுக்கு இணையாய்ப் பாடலில்
பொருத்தப்படுவது
அ. சங்கப் பலகை ஆ. கடல் இ. அணிகலன் ஈ.
புலவர்கள்
78. தொழிற்பெயர் அல்லாத சொல்
அ.
துய்ப்பதால் ஆ. அணிகலன் இ. மேவலால் ஈ. கண்டதால்
பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
“ அன்று அவண் அசைஇ, அல்சேர்ந்து
அல்கி,
கன்று எரி ஒள்இணர் கடும்பொடு மலைந்து
சேந்த செயலைச் செப்பம் போகி,
அலங்கு கழை நரலும் ஆரிப்படுகர்ச்
சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி
நோனாச் செருவின் வலம்ப்டு நோன்தாள்
மான விறல்வேள் வயிரியம் எனினே,”
79.
‘ அசைஇ’ இச்சொல்லின் இலக்கணக் குறிப்பு
அ.
வினைத்தொகை ஆ. பண்புத்தொகை இ. சொல்லிசை அளபெடை ஈ. செய்யுளிசை அளபெடை
80.
‘ சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி ‘ – இவ்வடியில் ‘ பாக்கம் ‘ என்னும் சொல்லின்
பொருள்
அ.
சிற்றூர் ஆ. பேரூர் இ. கடற்கரை ஈ. மூதூர்
81.
பாடல் இடம் பெற்ற நூல்
அ.
சிலப்பதிகாரம் ஆ. முல்லைப்பாட்டு இ. மலைபடுகடாம் ஈ. காசிக்காண்டம்
82.
பாடலில் இடம்பெற்றுள்ள அடி எதுகைச் சொற்கள்
அ.
அன்று,கன்று,அலங்கு,சிலம்பு ஆ.
அன்று,அவண்,அசைஇ,அல்கி
இ.
சேந்த,செயலை,செப்பம்,சிலம்பு ஈ.
அல்கி,எய்தி,போகி,எனினே
பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
“ செம்பொ
னடிச்சிறு கிங் கிணியோடு சிலம்பு கலந்தாடக்
திருவரை யரைஞா ணரைமணி யொடுமொளி திகழரை
வடமாடப்
பைம்பொ
னசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாடப்
பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி
பதிந்தாடக்
கம்பி
விதம்பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக் “
83. இப்பாடலின் ஆசிரியர்
அ. கீரந்தையார் ஆ. குமரகுருபரர் இ. நம்பூதனார் ஈ.
செய்குதம்பிப் பாவலர்
84. இப்பாடலில் இடம் பெற்றுள்ள பிள்ளைத்
தமிழ் பருவம்
அ. அம்மானை ஆ. சப்பாணி இ. சிறுதேர் ஈ.
செங்கீரை
85. ‘ குண்டமும் குழைகாதும் ‘ –
இலக்கணக் குறிப்பு தருக.
அ. எண்ணும்மை ஆ. உம்மைத்தொகை இ. பண்புத் தொகை ஈ.
அடுக்குத் தொடர்
86. கிண்கிணி, அரைநாண்,சுட்டி என்பன
முறையே
அ. காலில் அணிவது, இடையில் அணிவது,
தலையில் அணிவது
ஆ. நெற்றியில் அணிவது,இடையில் அணிவது,தலையில்
அணிவது
இ. காலில் அணிவது, இடையில் அணிவது,
நெற்றியில் அணிவது
ஈ. இடையில் அணிவது, காதில் அணிவது,
தலையில் அணிவது
பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
“ நனந்தலை உலகம் வளைஇ நேமியோடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர்செல, நிமிர்ந்த மாஅல் போல,
பாடுஇமிழ் பனிக்கடல் பருகி, வலன்
ஏர்பு,
கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு
எழிலி
பெரும்பயல் பொழிந்த சிறுபுன் மாலை”
87.
இப்பாடல் இடம் பெற்ற நூல்
அ.
முல்லைப்பாட்டு ஆ. மலைபடுகடாம் இ. நற்றிணை ஈ. குறுந்தொகை
88.
நனந்தலை உலகம் – இத்தொடரின் பொருள்
அ.
சிறிய உலகம் ஆ. தலையாய உலகம் இ. நனைந்த உலகம் ஈ. அகன்ற உலகம்
89.
பாடலில் இடம்பெற்றுள்ள அடி எதுகைச் சொற்கள்
அ.
பெரும்பெயல், பொழிந்த ஆ. பாடுஇமிழ்,பனிக்கடல் இ.பாடுஇமிழ்,கோடுகொண்டு ஈ. நீர்செல,நிமிர்ந்த
90.
பாடலில் இடம் பெற்றுள்ள அளபெடை
அ.
தடக்கை ஆ. வளைஇ இ. பெரும்பெயல் ஈ. கொடுஞ்செலவு