9TH - TAMIL - FIRST MID TERM - SALEM - ANSWER KEY-PDF

 

முதல் இடைப்பருவத் தேர்வு - 2022 -23

ஒன்பதாம் வகுப்பு - தமிழ்

விடைக்குறிப்புகள்

 சேலம் – மாவட்டம்

 

மொத்த மதிப்பெண் : 50

வினா எண்

விடைக்குறிப்பு

மதிப்பெண்

I

அனைத்து வினாக்களுக்கும் விடையளி

10×1=10

1

ஆ) சிற்றிலக்கியம்

1

2.

ஆ) மோனை, எதுகை,இயைபு

1

3.

ஆ) ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1

4

அ) கீழே

1

5.

இ) வளம்

1

6.

ஆ) சேக்கிழார்

1

7.

இ) பிப்ரவரி -21

1

8

அ) வாயில் இலக்கியம்

1

9

அ) செய்வினை

1

10.

ஆ) எட்டுத்தொகை

1

II) பொருத்தமான பெயரடைகளை சார்ந்த வினையடைகளை தேர்ந்தெடுத்து  எழுதுக

5×1=5

11

இனிய

1

12

கொடிய

1

13

நல்ல

1

14

மெதுவாக

1

15

அழகாக

1

III) எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளி

5×2=10

16

திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது.

2

17.

இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை.

2

18

வீணையோடு வந்தாள் – வேற்றுமைத் தொடர்

கிளியே பேசு – விளித்தொடர்

2

19

உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை

2

20

உணவைத் தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவார்.

2

21

குளம், குட்டை

2

22

12 – க உ , 43 – ௪ ௩

2

IV) எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளி

3×4=12

23

            மூன்று – தமிழ்

            மூணு – மலையாளம்

            மூடு – தெலுங்கு

            மூரு – கன்னடம்

            மூஜி - துளு

4

24

Ø  தமிழ் மொழி காலத்திற்கேற்றவாறு புதுப்பித்துக் கொள்கிறது

Ø  சங்க காலங்களில் தமிழ் மொழியை ஓலைச் சுவடிகளில் எழுதினர்

Ø  அதன் பின் காகிதங்களில் எழுதுகோல் கொண்டு எழுதப்பட்டது.

Ø  அச்சங்களில் அச்சுகோப்பாக மாறி அச்சாகி வெளிவந்தது

Ø  இன்று கணினியில் வலம் வந்து உலக நாடுகள் எல்லாம் அறிந்த மொழியாக மாறி வருகிறது.

Ø  மேலும் பல்வேறு விதமான கலைச் சொல் உருவாக்கப்பட்டும் காலந்தோறும் தம்மைப் புதுப்பித்துக் கொள்கிறது தமிழ்மொழி

4

25

தன்வினை

பிறவினை

எழுவாய் ஒரு வினையை செய்தல்

எழுவாய் ஒரு வினையை செய்ய வைத்தல்

எ.கா : பந்து உருண்டது

எ,கா: பந்தை உருட்ட வைத்தான்

          அவன் திருந்தினான்

        அவனைத் திருந்தச் செய்தான்

4

26

Ø  மொட்டைக் கிளையோடு, வெட்ட ஒரு நாள் வரும் என வருத்தமடைந்தது.

Ø  இலைகளும், கிளைகளும் வெந்து கருகியதால் இந்த நிலை வந்ததோ என வருத்தமுற்றது.

Ø  பட்டுக் கருதியதன் காரணமாக கட்டை என பெயர் வந்ததோ என வருத்தமுற்றது.

Ø  மரப்பட்டைகளில் எல்லாம் விழுந்ததனால் வருத்தமுற்றது

4

27

Ø  நீர் நிலைகளைப் பாதுகாத்தல்

Ø  மழை நீரை முறையாக சேமித்தல்

Ø  நீரினைச் சிக்கனமாகப் பயன்படுத்துதல்

Ø  நீரினை பாதுகாக்கும் வழிகளை அறிந்து பாதுகாத்தல்

4

V) அடிபிறழாமல் எழுதுக

1×5=5

28

தித்திக்கும் தெள்அமுதாய்த் தெள்அமுதின் மேலான

முத்திக் கனியேஎன் முத்தமிழே – புத்திக்குள்

உண்ணப் படும்தேனே உன்னோடு உவந்துஉரைக்கும்

விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள் – மண்ணில்

குறம்என்றும் பள்ளுஎன்றும் கொள்வார் கொடுப்பாய்க்கு

உறவுஎன்று மூன்றுஇனத்தும் உண்டோ – திறம்எல்லாம்

வந்துஎன்றும் சிந்தா மணியாய் இருந்தஉனைச்

சிந்துஎன்று சொல்லிய நாச்சிந்துமே

 

( அல்லது )

காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு

மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை

கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம் கடல் அன்ன

நாடெல்லாம் நீர்நாடு தனைஒவ்வா நலமெல்லாம்

 

5

VI) விரிவான விடையளி

1×8=8

29

12, தமிழ் வீதி,

மதுரை-2

                                                                                                                                  28,செப்டம்பர் 2021.

அன்புள்ள நண்பா !                                        

        வணக்கம் . நலம். நலமறிய ஆவல்  என்னுடைய பிறந்தநாள்  பரிசாக நீ அனுப்பிய  எழுத்தாளர் எஸ் . இராமகிருஷ்ணன் எழுதிய  கால் முளைத்த கதைகள் என்ற கதைப்புத்தகம்  கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அதில் உள்ள கதைகள் அனைத்தையும் படித்தேன். படிப்பதற்குப் புதுமையாகவும், மிக்க ஆர்வமாகவும் இருந்தன.

      இந்நூலில் பூனையை நாய் ஏன் துரத்துகிறது? போன்ற தலைப்புகளில் கதைகள் உள்ளன. குழந்தைகள் மிகவும் விரும்பிப் படிப்பதற்கு ஏற்ற வகையில் இனிய எளிய சொற்களால், கதைகள் சிறியனவாக அமைந்துள்ளன. எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

                                                                                                                                            அன்பு நண்பன்,                                                                                                                                                அ.எழிலன்.

உறைமேல் முகவரி:

வெ.ராமகிருஷ்ணன்,

2,நெசவாளர் காலணி,

சேலம் - 1

Ø   

8

30

முன்னுரை :

           கந்தர்வன் எழுதிய தண்ணீர் என்ற இக்கதையில் நீரின் அவசியமும், நீருக்காக கிராம மக்கள் படும் பாட்டையும் அழகாக எழுதியுள்ளார். அதை இக்கட்டுரையில் காணலாம்.

கிராமத்தின் நிலை :

          கதையின் கிராமத்தில் குடிப்பதற்கு நீர் பக்கத்து ஊருக்கு செல்ல வேண்டும்.

அந்த கிராமம் குடிநீருக்காக பிலாப்பட்டிக்கு செல்ல வேண்டும். நிலத்தடி நீர் வற்றி ஆண்டுகள் பல ஆயிற்று.

இரயில் நீர் :

            அந்த ஊருக்கு வரும் இரயிலின் ஊதல் ஒலிக் கேட்டு அந்த கிராம மக்கள் தண்ணீருக்காக பெண்கள் ஒருவருக்கு ஒருவர் முண்டியடித்துக் கொண்டு ஓடுவர்.

ஸ்டேசன் மாஸ்டர் மிரட்டியும் பயன் இல்லை. இரயிலை விட்டால் பிலாப்பட்டிக்கு போக வேண்டும்.

இந்திரா :

          இளம் பெண் இந்திரா தன்னை திருமணம் செய்து கொடுத்தால் நீர் இருக்கும் ஊருக்கு தான் கல்யாணம் பண்ணிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டே இரயில் பெட்டியில் நுழைந்தாள்.

மக்கள் தேடல் :

          வீட்டில் நீர் இல்லை என்பதை நினைத்துக் கொண்டே நீர் பிடித்திருந்த இந்திரா இரயில் நகர்ந்ததை கவனிக்கவில்லை.

            இந்திராவின் தாய் புலம்புகிறாள். இந்திராவைத் தேடி இராமநாதபுரம் பேருந்து நிலையம் சென்று தேடிப் பார்த்தனர். எங்கும் காணவில்லை.

திரும்பிய இந்திரா:

          தண்டாவளத்தில் சிறுது தூரத்தில் பெண் ஒருத்தி தென்பட்டாள். அவள் இந்திரா. ஒரு குடம் நீர் பிடிக்க இரயிலிலேயே உள்ள நீர் பிடித்து அதனை சிந்தாமல் கொண்டு வந்து சேர்த்தாள்.

முடிவுரை :

தண்ணீர் வாழ்வில் மிக முக்கியம். அதனை அறிந்து நீரினை சேமிப்போம். சிக்கனமாகப் பயன்படுத்துவோம். நீர் மேலாண்மையைக் கட்டமைப்போம்.

 

 

 

நன்றி,ஆக்கம்

திரு.வெ.ராமகிருஷ்ணன்,

தமிழாசிரியர்,

அரசு உயர்நிலைப் பள்ளி,

கோரணம்பட்டி

CLICK HERE TO GET ANSWER KEY IN PDF


1 Comments

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post