7TH - TAMIL - TERM 1- UNIT -2 - FA(B) - QUESTION - PDF

 

ஏழாம் வகுப்பு– தமிழ்

இயல் - 2

வளரறி செயல்பாடு FA (B)

காடு

மாணவர் பெயர் :                                      மதிப்பெண் : 10

நாள் : 13 -07-22

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                          

1. வாழை, கன்றை ________.

அ) ஈன்றது      ஆ) வழங்கியது          இ) கொடுத்தது ஈ) தந்தது

2. ‘காடெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______

அ) காடு + டெல்லாம் ஆ) காடு + எல்லாம் இ) கா + டெல்லா ம் ஈ) கான் + எல்லாம்

3. ‘கிழங்கு + எடுக்கும்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ___

அ) கிழங்குஎடுக்கும் ஆ) கிழங்கெடுக்கும் இ) கிழங்குடுக்கும்

 ஈ) கிழங்கொடுக்கும்

4. காடு என்னும் இப்பாடலை எழுதியவர் _____

அ) ராமலிங்கனார்      ஆ) கண்ணதாசன்     

இ) உடுமலை நாராயண கவி  ஈ) சுரதா

ஆ) நயம் அறிக

பாடலிலுள்ள மோனை, எதுகை, இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக..

மோனை :

எதுகை :

இயைபு : 


ஏழாம் வகுப்பு– தமிழ்

வளரறி செயல்பாடு FA (B)

அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

மாணவர் பெயர் :                                      மதிப்பெண் : 10

நாள் : 15 -07-22

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                            

1. நாவற்பழத்திற்கு உவமையாகக் கூறப்படுவது _____.

அ) பச்சை இலை  ஆ) கோலிக்குண்டு இ) பச்சைக்காய்         ஈ) செங்காய்

2. ‘சுட்ட பழங்கள்’ என்று குறிப்பிடப்படுபவை _____.

அ) ஒட்டிய பழங்கள்     ஆ) சூடா ன பழங்கள் இ) வேகவைத்த பழங்கள்

ஈ) சுடப்பட்ட பழங்கள்

 3. ‘பெயரறியா’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

அ) பெயர + றியா ஆ) பெயர் + ரறியா இ) பெயர் + அறியா ஈ) பெயர + அறியா

 4. ‘மனமில்லை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

அ) மன + மில்லை ஆ) மனமி + இல்லை இ) மனம் + மில்லை

ஈ) மனம் + இல்லை

5. நேற்று + இரவு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

அ) நேற்றுஇரவு          ஆ) நேற்றிரவு  இ) நேற்றுரவு ஈ) நேற்இரவு

பாடலிலுள்ள மோனை, எதுகை, இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக..

மோனை :

 

எதுகை :

ஏழாம் வகுப்பு– தமிழ்

வளரறி செயல்பாடு FA (B)

விலங்குகள் உலகம்

மாணவர் பெயர் :                                      மதிப்பெண் : 10

நாள் : 20 -07-22

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.     

1. ஆசிய யானைகளில் ஆண் - பெண் யானைகளை வேறுபடுத்துவது ___

அ) காது          ஆ) தந்தம்       இ) கண்          ஈ) கால்நகம்

2. தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம் _______.

அ) வேடந்தாங்கல் ஆ) கோடியக்கரை இ) முண்டந்துறை ஈ) கூந்தன்குளம்

3. ‘காட்டாறு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.

அ) காடு + ஆறு ஆ) காட்டு + ஆறு இ) காட் + ஆறு ஈ) காட் + டாறு

4. ‘அனைத்துண்ணி’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___

அ) அனைத்து + துண்ணி ஆ) அனை + உண்ணி இ) அனைத் + துண்ணி

ஈ) அனைத்து + உண்ணி

 5. ‘நேரம் + ஆகி’ என்பதனை ச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.

அ) நேரமாகி ஆ) நேராகி இ) நேரம்ஆகி ஈ) நேர்ஆகி

6. ‘வேட்டை + ஆடிய’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ____

அ) வேட்டைஆடிய ஆ) வேட்டையாடிய இ) வேட்டா டிய ஈ) வேடாடிய

7. யானை ஒரு நாளுக்கு குடிக்கும் தண்ணீர் அளவு _______

அ) 65லிட்டர்    ஆ) 45 லிட்டர்            இ) 35 லிட்டர்  ஈ) 25 லிட்டர்

கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. ‘காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு’ - என்று அழைக்கப்படும் விலங்கு

 

2. யானைக் கூட்டத்திற்கு ஒரு _____ யானைதான் தலைமை தாங்கும்.

 

3. கரடிகளைத் தேனீக்களிடமிருந்து காப்பது அதன் _______

ஏழாம் வகுப்பு– தமிழ்

வளரறி செயல்பாடு FA (B)

நால்வகை குறுக்கங்கள்

மாணவர் பெயர் :                                      மதிப்பெண் : 10

நாள் : 27 -07-22

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுக்க

1. 'வேட்கை' என்னும் சொல்லில் ஐகாரக் குறுக்க ம் பெறும் மாத்திரை அளவு

அ) அரை        ஆ) ஒன்று       இ) ஒன்றரை   ஈ) இரண்டு

 2. மகரக் குறுக்கம் இடம்பெறாத சொல் ________.

அ) போன்ம்     ஆ) மருண்ம்    இ) பழம் விழுந்தது  ஈ) பணம் கிடைத்தது

 3. சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது _______.

 அ) ஐகாரக் குறுக்கம் ஆ) ஔகாரக் குறுக்கம்  இ) மகரக் குறுக்கம்

ஈ) ஆய்தக் குறுக்கம்

4. மங்கை என்னும் சொல்லில் ஐகாரம் பெறும் மாத்திரை அளவு

அ) 2             ஆ) 1              இ) 3             ஈ) 1.5

5. ______ சொல்லின் இடையிலும், இறுதியிலும் வராது

அ) ஐகாரம்      ஆ) ஒளகாரம்   இ) ஆய்தம்      ஈ) மகரம்

6. _______சொல்லின் இடையிலும் இறுதியிலும் வரும்போது ஒரு மாத்திரை அளவில் ஒலிக்கும்

அ) ஐகாரம்      ஆ) ஒளகாரம்   இ) ஆய்தம்      ஈ) மகரம்

7. மகரமெய்யானது தனக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து _____மாத்திரை அளவில் ஒலிக்கிறது.

அ) அரை        ஆ) கால்                  இ) ஒரு          ஈ) இரண்டு

8. முள் +தீது என்பது இவ்வாறு சேரும்______

அ) முள்தீது      ஆ) முட்தீது      இ) முஃடீது     ஈ) முஃறீது

9. , வௌ என ஔகார எழுத்து, தனித்து வரும் இடங்களில் தனக்குரிய ­­­­­_______ மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது.

அ) 2             ஆ) 1              இ) 3             ஈ) 1.5

10. குறைந்து ஒலிக்கும் எழுத்துகளைக் _______ என்கிறோம்.

அ) எழுத்துகள்  ஆ) சார்பெழுத்துகள்     இ) குறுக்கங்கள்    ஈ) அளபெடை

இந்த நான்கு  வினாத்தாளினையும் PDF வடிவில் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்க கீழ் உள்ள DOWNLOAN  என்பதனையும் அழுத்தவும். இந்த நான்கு வினாத்தாளும் இரு தாளில்

 கிடைக்கப் பெறும். பொருட்செலவும், காகிதப் பயன்பாடும் குறையும்.

காடு , 

அப்படியே நிற்கட்டும் அந்த மரம், 

விலங்குகள் உலகம், 

நால்வகைக் குறுக்கங்கள்


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post