9TH - TAMIL - UNIT 2 - SLOW LEARNERS - GUIDE - PDF

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் பாடத்திற்கான வழிகாட்டி

 சிறப்பு வழிகாட்டி

WWW.TAMILVITHAI.COM

இயல் – 2                                                                  உயிருக்கு வேர்

ஒன்பதாம் வகுப்புதமிழ்

) சரியான விடையைத் தேர்ந்தெடு:-

1. “ மிசை “ என்பதன் எதிர்சொல் என்ன?

அ) கீழே             ஆ) மேலே             இ) இசை   ஈ) வசை                   

2 நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது?

) அகழி            ) ஆறு             ) இலஞ்சி        ஈ) புலரி

3. பொருத்தமான விடையைத் தேர்க.

) நீரின்று அமையாது உலகு       -          திருவள்ளுவர்

) நீரின்று அமையாது யாக்கை   -          ஓளவையார்

 இ) மாமழை போற்றுதும்              -          இளங்கோவடிகள்

க) அ,இ                ௨) ஆ,இ            ௩) அ,ஆ             ௪) அ,ஆ,இ

4. பொருத்தமான வினையை எடுத்து எழுதுக.

கதிர் அலுவலகத்திலிருந்து விரைவாக ______

அவன் பையன் பள்ளியிலிருந்து இன்னும் _______

) வந்தான், வருகிறான்               ) வந்துவிட்டான், வரவில்லை

இ) வந்தான், வருவான்                   ஈ) வருவான், வரமாட்டான்

5.. மல்லல் மூதூர் வயவேந்தே – கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?

) மறுமை         ஆ) பூவரசு மரம்             ) வளம்  ) பெரிய

) குறுவினா

1. “ கூவல் “ என்று அழைக்கப்படுவது எது?

            உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை

2. உங்கள் பள்ளியைச் சுற்றியுள்ள நீர்நிலைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.

          குளம், குட்டை

3. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே – குறிப்புத் தருக.

          உணவைத் தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவார்.

4. நிலையான வானத்தில் தோன்றி மறையும் காட்சிக்குப் பெரிய புராணம் எதனை ஒப்பிடுகிறது?

          வாளை மீன்கள் துள்ளி எழுந்து பாக்கு மரத்தில் பாய்வதற்கு ஒப்பிடுகிறது.

5. மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்

   காடும் உடையது அரண் – இக்குறள் கூறும் நாட்டின் அரண்கள் யாவை?

          நீர், நிலம்,மலை, காடு

சிறுவினா

1. அடுத்த தலைமுறைக்கும் தண்ணீர் தேவை – அதற்கு நாம் செய்ய வேண்டியவற்றை எழுதுக.

Ø  நீர் நிலைகளைப் பாதுகாத்தல்

Ø  மழை நீரை முறையாக சேமித்தல்

Ø  நீரினைச் சிக்கனமாகப் பயன்படுத்துதல்

Ø  நீரினை பாதுகாக்கும் வழிகளை அறிந்து பாதுகாத்தல்

2. நிலைத்த புகழைப் பெறுவதற்குக் குடபுலவியனார் கூறும் வழிகள் யாவை?

Ø  நிலம் குழிந்த இடங்கள் தோறும் நீர்நிலைகளைப் பெருகச் செய்தல் வேண்டும்.

Ø  நிலத்துடன் நீரைக் கூட்டியோர் மூவகை இன்பத்தையும், நிலைத்த புகழையும் பெறுவர்

3. சோழர்காலக் குமிழித்தாம்பு  எதற்காகப் பயன்படுத்தப்பட்டது?

Ø  மழைக்காலங்களில் ஏரிகள் நிரம்பும் போது நீரினைத் தூர் வார  நீந்துபவர் கழிமுகத்தை அடைந்து, குமிழித்தாம்பினைத் தூக்குவர்

Ø  நீரோடி துளையிலுருந்து நீரும், சேறோடி துளையிருந்து சேற்று நீரும் வெளியேறும்.

Ø  நீரைத் தூர் வார வேண்டி பயன்படுத்தப்பட்டது.

4 பட்ட மரத்தின் வருத்தங்கள் யாவை?

Ø  மொட்டைக் கிளையோடு, வெட்ட ஒரு நாள் வரும் என வருத்தமடைந்தது.

Ø  இலைகளும், கிளைகளும் வெந்து கருகியதால் இந்த நிலை வந்ததோ என வருத்தமுற்றது.

Ø  பட்டுக் கருதியதன் காரணமாக கட்டை என பெயர் வந்ததோ என வருத்தமுற்றது.

Ø  மரப்பட்டைகளி எல்லாம் விழுந்ததனால் வருத்தமுற்றது

நெடுவினா

1. நீரின்றி அமையாது உலகு – என்னும் வள்ளுவரின் அடி உணர்த்தும் பொருள் ஆழத்தை எடுத்துக்காட்டுடன் விவரி

குறிப்புச் சட்டம்

முன்னுரை

மழைநீர்

உணவெனப்படுவது நீர்

பல்லுயிர் பாதுகாப்பு

முடிவுரை

முன்னுரை :

நம்முன்னோர்கள் பல்வேறு நீர்நிலை வடிவங்களை அமைத்து நீரைப் பாதுகாத்தனர். நாமும் இனிவரும் தலைமுறையினர்க்கு நீரைப் பாதுகாத்து வைக்க வேண்டும்.

மழை நீர் :
மழை உழவுத் தொழிலுக்கு உதவுகிறது. விதைத்து வாழ வேண்டும் என்னும் நோக்கில் வளர்கின்றன.

உணவெனப் படுவது நிலத்தொடு நீரே:
உணவெனப்படுவது நிலத்தோடு நீரே என்னும் சங்கப்பாடல், நீரின் இன்றியமையாத் தேவையை எடுத்துரைக்கிறது.

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண்’

என்னும் குறளில் நாட்டின் சிறந்த அரண்களுள் நீருக்கே முதலிடம் தருகிறார்.

பல்லுயிர்ப் பாதுகாப்பு :
உலகின் பல்லுயிர்ப் பாதுகாப்பிற்கு அடிப்படை தண்ணீர் நமது முன்னோர்கள் கண்டுணர்ந்த வாழ்வியல் அணுகுமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குளம், ஏரி, கால்வாய், கிணறு போன்ற நீர்நிலைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் உருவாக்க வேண்டும்.

முடிவுரை :

உணவு உற்பத்திக்கு அடிப்படை நீரே. அந்த நீரே உணவாகவும் இருக்கிறது.எனவே நீரின் அவசியம் உணர்ந்து பாதுகாக்க வேண்டும்

 

2. பெரியபுராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்பினைத் தொகுத்து எழுதுக.

ü  காவிரி ஆறு புதிய பூக்களை அடித்து வர அதனை வண்டுகள் மொய்த்து ஆராவாரம் செய்கின்றன.

ü  நட்டபின் வயலில் வளர்ந்த நாற்றின் முதல் இலை சுருள் விரிந்து. இதனைக் கண்ட உழவர் இது தான் களை பறிக்கும் பருவம் என்று அறிந்தனர்.

ü  காடுகளில் எல்லாம் கரும்புகள் உள்ளன.

ü  வயல்களில் சங்குகள் நெருங்கி உள்ளன.

ü  சோலைகள் எல்லாம் செடிகளின் புதிய கிளைகளில் அரும்புகள் உள்ளன.

ü  பக்கங்களில் எல்லாம் குவளை மலர்கள் உள்ளன.

ü  வயல்களில் சங்குகள் நெருங்கி உள்ளன.

ü  கரை எங்கும் இளைய அன்னங்கள் உலவுகின்றன.

ü  குளங்கள் எல்லாம் கடல் போல் பெரிதாக உள்ளன.

ü  அன்னங்கள் விளையாடும் நீர் நிலைகளில் எருமைகள் வீழ்ந்து மூழ்கும். அதனால் அதில் உள்ள வாளை மீன்கள் அருகில் உள்ள பாக்கு  மரங்கள் மீது பாயும் இக்காட்சியை நிலையான வானத்தில் தோன்றி மறையும் வானவில் போன்றுள்ளது.

ü  செந்நெல்லின் சூடுகள், பலவகைப்பட்ட மீன்கள் ,முத்துக்கள், மலர்த் தொகுதிகள் ஆகியவற்றைத் திருநாட்டில் குவித்து வைத்திருந்தனர்.

ü  தென்னை, செருந்தி, அரசமரம், கடம்பமரம்,பச்சிலை மரம், குராமரம், பனை,சந்தனம், நாகம், வஞ்சி,காஞ்சி மலர்கள் நிறைந்த கோங்கு முதலியன எங்கும் திருநாட்டில் செழித்து வளர்ந்துள்ளன.

3. 'தண்ணீர்’ கதையைக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கித் தருக

முன்னுரை :

           கந்தர்வன் எழுதிய தண்ணீர் என்ற இக்கதையில் நீரின் அவசியமும், நீருக்காக கிராம மக்கள் படும் பாட்டையும் அழகாக எழுதியுள்ளார். அதை இக்கட்டுரையில் காணலாம்.

கிராமத்தின் நிலை :

          கதையின் கிராமத்தில் குடிப்பதற்கு நீர் பக்கத்து ஊருக்கு செல்ல வேண்டும்.

அந்த கிராமம் குடிநீருக்காக பிலாப்பட்டிக்கு செல்ல வேண்டும். நிலத்தடி நீர் வற்றி ஆண்டுகள் பல ஆயிற்று.

இரயில் நீர் :

            அந்த ஊருக்கு வரும் இரயிலின் ஊதல் ஒலிக் கேட்டு அந்த கிராம மக்கள் தண்ணீருக்காக பெண்கள் ஒருவருக்கு ஒருவர் முண்டியடித்துக் கொண்டு ஓடுவர்.

ஸ்டேசன் மாஸ்டர் மிரட்டியும் பயன் இல்லை. இரயிலை விட்டால் பிலாப்பட்டிக்கு போக வேண்டும்.

இந்திரா :

          இளம் பெண் இந்திரா தன்னை திருமணம் செய்து கொடுத்தால் நீர் இருக்கும் ஊருக்கு தான் கல்யாணம் பண்ணிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டே இரயில் பெட்டியில் நுழைந்தாள்.

மக்கள் தேடல் :

          வீட்டில் நீர் இல்லை என்பதை நினைத்துக் கொண்டே நீர் பிடித்திருந்த இந்திரா இரயில் நகர்ந்ததை கவனிக்கவில்லை.

            இந்திராவின் தாய் புலம்புகிறாள். இந்திராவைத் தேடி இராமநாதபுரம் பேருந்து நிலையம் சென்று தேடிப் பார்த்தனர். எங்கும் காணவில்லை.

திரும்பிய இந்திரா:

          தண்டாவளத்தில் சிறுது தூரத்தில் பெண் ஒருத்தி தென்பட்டாள். அவள் இந்திரா. ஒரு குடம் நீர் பிடிக்க இரயிலிலேயே உள்ள நீர் பிடித்து அதனை சிந்தாமல் கொண்டு வந்து சேர்த்தாள்.

முடிவுரை :

தண்ணீர் வாழ்வில் மிக முக்கியம். அதனை அறிந்து நீரினை சேமிப்போம். சிக்கனமாகப் பயன்படுத்துவோம். நீர் மேலாண்மையைக் கட்டமைப்போம்.

மொழியை ஆள்வோம்

) அறிஞர்களின் பொன்மொழிகளைத் தமிழில் மொழிபெயர்த்து எழுதுக.

1. Every flower is a soul blossoming in nature – Gerard De Nerval

எல்லா பூக்களும் இயற்கையில் உயிருடன் இருக்கிறது

2. Sunset is still my favourite colour, and rainbow is second - Mattie Stepanek

சூரிய அஸ்தமனேம் முதலில் எனக்கு பிடித்த வண்ணம், வானவில்லின் வண்ணம் அடுத்த நிலை தான்.

3. An early morning walk is a blessing for the whole day – Henry David Thoreau

அதிகாலையில் நடைப்பயிற்சி அந்நாளுக்கே ஒரு வரமாகும்.

4. Just living is not enough… One must have sunshine, freedom, and a little flower – Hans Christian Anderson

வெறுமையான வாழ்வு மட்டும் போதாது, ஒவ்வொருவருக்குள்ளும் ஒளி, ஆற்றல், விடுதலை மலர் என இருத்தல் வேண்டும்.      

) பிழை நீக்கி எழுதுக.

 1. சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்திகொண்டுதான் தௌலீஸ்வரம் அணையைக் கட்டியது.

சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்திகொண்டுதான் தௌலீஸ்வரம் அணையைக் கட்டினார்.

2. மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர வைத்தாள்.

          மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர வைத்தான்.  

3. மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றன.

          மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றது.

4. நீலனும் மாலனும் அவசரகாலத் தொடர்புக்கான தொலைப்பேசி எண்களின் பட்டியலை வைத்திருக்கிறோம்.

            நீலனும் மாலனும் அவசரகாலத் தொடர்புக்கான தொலைப்பேசி எண்களின் பட்டியலை வைத்திருக்கிறார்கள்

5. சூறாவளியின் போது மேல்மாடியில் தங்காமல் தரைத்தளத்திலேயே தங்கியதால் தப்பிப்பான்

            சூறாவளியின் போது மேல்மாடியில் தங்காமல் தரைத்தளத்திலேயே தங்கியதால் தப்பித்தான்

இ) பழமொழிகளைப் பயன்படுத்திச் சொற்றொடர் அமைக்க.

 1. நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல.

          நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல படிக்கும் நல்லார்

சொன்ன அறிவுரை தீயவருக்கும் போய் சேர்ந்தது.

2. தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும்.

          தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும் போலப் பிறர் கூறும் அறிவுரை கடினமானாலும் அது நம்மை நல்வழிப்படுத்தும்.

3. மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும்.

          மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும் போல கடினமான செயலையும் விடாமுயற்சியுடன் செய்தால் வெற்றி பெற முடியும்

4. கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது.

          கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாதது போல பிறருக்கு நாம் சொல்லிக் கொடுப்பதால் நம்முடைய அறிவானது குறைபடாது.

) வடிவம் மாற்றுக.

          நீர்ச் சுழற்சி குறித்த கருத்து விளக்கப்ப டத்தின் உட்பொருளைப் புரிந்துணர்ந்து பத்தியாக மாற்றி அமைக்க..

 

வாயு மண்டலத்தில் உள்ள நீர், பனி மற்றும் உறை பனியில் உள்ள நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாகி, பின் குளிர்ந்த காற்றால் மேகமாகி மழைபொழிந்து நிலத்தை அடைந்து. கடல், ஆறு, நிலத்தடி நீர் இவற்றைப் பெருக்குகிறது. பின்னர் மீண்டும் கடல், ஆறு, தரையில் உள்ள நீர் நிலைகள், நிலத்தடி நீர் ஆகியவை சூரிய ஒளியால் ஆவியாக்கப் படுகிறது. ஆவியான நீர்த்திவலைகள் மேகமாகி, குளிர்ந்து மீண்டும் மழையாகி நிலத்தைக் குளிரச் செய்து வளமுடைய தாக்குகிறது.

 

ஈ ) வரவேற்பு மடல் எழுதுக.

சுற்றுச் சூழலைப் பேணிக்காக்கும் பள்ளிகளின் வரிசையில் மாவட்டத்திலேயே சிறந்ததாக உங்கள் பள்ளி தேர்ந்தெ டுக்கப்பட்டுள்ளது. அதனைக் கொண்டாடும் விழாவில் கலந்துகொள்ளும் மாவட்டக் கல்வி அலுவலருக்கு வரவேற்பு மடல் ஒன்றை எழுதுக.

அரசினர் உயர்நிலைப் பள்ளி,

சேலம் மாவட்டம்.

28.9.2021 அன்று பள்ளியில் நடைபெற்ற சிறந்த பள்ளிகளுக்கான பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்ட மாவட்டக் கல்வி அலுவலர்

திருமிகு. கு.சிவானந்தன் அவர்களுக்கு வழங்கிய வரவேற்பு மடல்

 

தமிழகம் பெற்ற தவப்புதல்வரே!

    வருக! வருக! வணக்கம்.

     மாவட்ட அளவில் நடைபெற்ற சுற்றுசூழல் பாதுகப்புப் பற்றிய ஆய்வில் எம் பள்ளி முதலிடம் பெற்றதாகத் தாங்கள் அறிவித்து கண்டு, பெருமகிழ்ச்சி அடைகின்றோம். தங்களை வரவேற்கும் பேறு பெற்றமைக்குப் பெரிதும்  உவகை கொள்கிறோம்!

பள்ளியின் சுற்றுபுறத்தைப் பேணிகாப்பதில் மிகுந்த கவனம் செலுத்தினோம்!

   எங்கள் வகுப்பறையைப் போலவே ஆய்வுக்கூடம், விளையாட்டிடம், கழிப்பறை ஆகிய அனைத்தையும் நீங்கள் கூறிய வழிமுறைகளை  நாளும் கடைப்பிடித்து வருகிறோம்.

நீங்கள் பள்ளிக்கு முதற்பரிசு கொடுத்துப் பாராட்டியதற்கு, நன்றியை நவில்கின்றோம்.

                                                        நன்றி, வணக்கம்

கோரணம்பட்டி

28.9.2021.                                                                    தங்கள் அன்புள்ள,

                                                                                    விழாக்குழுவினர்.

 

உ) நயம் பாராட்டுக.

கல்லும் மலையும் குதித்துவந்தேன் – பெருங்

காடும் செடியும் கடந்துவந்தேன்;

எல்லை விரிந்த சமவெளி – எங்கும்நான்

இறங்கித் தவழ்ந்து தவழ்ந்துவந்தேன்.

ஏறாத மேடுகள் ஏறிவந்தேன்-பல

ஏரி குளங்கள் நிரப்பிவந்தேன்; ஊறாத

ஊற்றிலும் உட்புகுந்தேன்-மணல்

ஓடைகள் பொங்கிட ஓடிவந்தேன். கவிமணி

திரண்ட கருத்து : 

           மழையானது மலை, காடு, மரம், செடிகொடிகள், மணற்பாங்கான சமவெளிகள் ஆகிய இடங்களில் தவழ்ந்து ஓடிவந்தது. ஏரி, குளம், குட்டைகள், வாய்க்கால், ஓடைகள் ஆகிய இடங்களில் எல்லாம் மழைநீர் ஓடிவந்தது என, மழையின் சிறப்பைப் பாடி உள்ளார்.

மையக்கருத்து : 

      காடு, மரம், செடி கொடிகள், ஏரி, குளம், ஓடைகள் எல்லாம் கடந்து மழைநீர் வந்தது.

மோனைத்தொடை : சீர், அடிகளில் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனைத்தொடையாகும்.

ல்லும் - டந்து, ல்லை - ங்கும், றாத - ரி, ராத - ற்றிலும்.

எதுகைத்தொடை : அடி, சீர்களில் இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகைத் தொடையாகும்.

 கல்லும் - எல்லை, றாத - ஊறா

இயைபுத் தொடை : இறுதி எழுத்தோ, சொல்லோ ஓசை ஒன்றிவரத் தொடுப்பது, இயைபுத் தொடையாகும்.

கடந்து வந்தேன், தவழ்ந்து வந்தேன்

அணிநயம் : மழைநீரின் ஓட்டத்தை வெகுவாகச் சிறப்பித்துக் கூறுவதால், உயர்வு நவிற்சி அணி பயின்று வந்துள்ளது.. வந்தேன், வந்தேன் என்னும் வினைச்சொல், பலமுறை வந்து ஒரே பொருளைத் தருவதால், இது சொற்பொருள் பின்வரு நிலையணியுமாகும்.

சொல்நயம் : குதித்து, கடந்து, தவழ்ந்து, மேடுகள் ஏறி, நிரப்பி, உட்புகுந்து என, மழைநீர்ச் சிறப்பை உணர்த்தப் பொருள் பொதிந்த சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மொழியோடு விளையாடு

அ) சொல்லுக்குள் சொல் தேடுக.

எ.கா. ஆற்றங்கரையோரம் – ஆறு, கரை, ஓரம்

கடையெழுவள்ளல்கள் – கடை, ஏழு,வள்ளல்,கடைகள்

எடுப்பார்கைப்பிள்ளை – எடுப்பார், கை, பிள்ளை

 தமிழ்விடுதூது – தமிழ், விடு, தூது, தமிழ்தூது

பாய்மரக்கப்பல் பாய், மரம், கப்பல்

எட்டுக்கால் பூச்சி எட்டு, கால், பூச்சி, எட்டு பூச்சி

ஆ) அகராதியில் காண்க.

கந்தி - கந்தகம் , வாசம் , கமுகு , பாக்கு

நெடில் - நீளம் , நெட்டெழுத்து , மூங்கில்

பாலி - ஒருமொழிஆலமரம்கல்

மகி - பூமி

கம்புள் - வானம்பாடி, சங்குசமபங்கோலி

கைச்சாத்து - கையெழுத்து துண்டு

இ ) சொற்களை இணைத்துத் தொடர்களை விரிவுபடுத்துக.

(எ.கா.) அரிசி போடுகிறேன்.

விடை: புறாவுக்கு அரிசி போடுகிறேன்.

காலையில் புறாவுக்கு அரிசி போடுகிறேன்.

நாள்தோறும் காலையில் புறாவுக்கு அரிசி போடுகிறேன். நான் நாள்தோறும் காலையில் புறாவுக்கு அரிசி போடுகிறேன்.

நான் நாள்தோறும் காலையில் மறக்காமல் புறாவுக்கு அரிசி போடுகிறேன்.

 நான் நாள்தோறும் காலையில் ஒருபோதும் மறக்காமல் புறாவுக்கு அரிசி போடுகிறேன்.

1. மழை பெய்தது.

          நேற்று மழை பெய்தது.

            நேற்று மாலை மழை பெய்தது

            நேற்று இடியுடன் மாலை மழை பெய்தது

 

2. வானவில்லைப் பார்த்தேன்.

          நான் வானவில்லைப் பார்த்தேன்

            நான் நேற்று வானவில்லைப் பார்த்தேன்.

            நான் நேற்று மாலை வானவில்லைப் பார்த்தேன்.

           

3. குழந்தை சிரித்தது.

            குழந்தை அழகாக சிரித்தது.

            குழந்தை கலகலவென அழகாக சிரித்தது.

            குழந்தை காலை கலகலவென அழகாக சிரித்தது

 

4. எறும்புகள் போகின்றன.

            எறும்புகள் வரிசையாக போகின்றன.

            எறும்புகள் நீண்ட வரிசையாக போகின்றன.

            எறும்புகள் நீண்ட தூரம் நீண்ட வரிசையாக போகின்றன

 

5. படம் வரைந்தான்.

          சூர்யா படம் வரைந்தான்.

            சூர்யா வீடு படம் வரைந்தான்

            சூர்யா அழகான வீடு படம் வரைந்தான்.

ஈ ) வேறு பட்ட வினையெச்சங்களைப் பயன்படுத்தி,

முதல் வினைகளைத் துணைவினைகளாக மாற்றுக.

முதல்வினைகள்

 பார்த்தேன், கொடுத்தார், நடந்தான், சேர்ந்தார், அமைத்தோம்.

(எ.கா.) பார்த்தேன்

எழுதிப் பார்த்தேன்

தடுக்கப் பார்த்தேன்

ஓடப் பார்த்தேன்

கொடுக்கப் பார்த்தேன்.

கொடுத்தார்

பார்த்துக்கொடுத்தார்

எழுதிக் கொடுத்தார்

செய்துக் கொடுத்தார்

தேடிக் கொடுத்தார்

நடந்தான்

பார்த்து நடந்தான்

கேட்டு நடந்தான்

பேசி நடந்தான்

விரைந்து நடந்தான்

சேர்ந்தார்

வந்து சேர்ந்தார்

விரைந்து சேர்ந்தார்

போய்ச் சேர்ந்தார்

ஓய்ந்துச் சேர்ந்தார்

அமைத்தோம்

கட்டி அமைத்தோம்

சேர்ந்து அமைத்தோம்

வந்து அமைத்தோம்

விரைந்து அமைத்தோம்

 

உ) வினையடிகளை முதல்வினையாகவும் துணைவினையாகவும் அமைத்துத் தொடர்களை உருவாக்குக.

வினையடி – வா, போ , செய், மாற்று, இரு, கொடு, கொள், எழுது, விடு, போடு.

வினையடி

முதல் வினை

துணைவினை

வா

என்னுடன் வா

நண்பர்கள் விளையாடி வந்தனர்

போ

நான் விளையாட போனேன்

நான் வியந்து போனேன்

செய்

வேலை செய்தான்

வேலையை விரைந்து செய்தான்

மாற்று

கையெழுத்தினை மாற்றினான்

தூரிகையைக் கொண்டு மாற்றினான்

இரு

பள்ளியில் இருந்தான்

மிதிவண்டியில் சென்று இருந்தான்

கொடு

எண்ணிக் கொடுத்தான்

ஏடு வாங்கி கொடுத்தான்

கொள்

இருக்கையில் இடம் கொள்கிறது

புத்தகம் வாங்கி கொள்கிறான்

எழுது

பாடல் எழுதினான்

பாடத்தைப் பார்த்து எழுதினான்

விடு

பட்டம் விடுகிறான்

அப்பா வந்து விடுவார்

போடு

கோடு போடுகிறேன்

அளவுகோல் எடுத்துப் போட்டேன்

 

ஊ ) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக

 

ஏடெடுத்தேன் கவி ஒன்று எழுத

என்னை எழுது என்று

சொன்னது இந்த காட்சி

இது அர்த்தமுள்ள காட்சி

முயற்சிக்கான ஊக்கக் காட்சி

 

Uploading: 28561 of 28561 bytes uploaded.


 

எ) நிற்க அதற்குத் தக

என் பொறுப்புகள்…

அ) தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவேன்.

ஆ) வகுப்பறையில் நண்பர்கள் வைத்திருக்கும் புதிய அழகிய பொருள்களைப் பார்த்தால் ஆசை வரும். அவர்களைப் போல நானும் முயன்று உழைத்து அவற்றை என்னுடைய பணத்தில் வாங்குவேன்.

இ) அறையை விட்டு வெளியே செல்லும்போது மின்விசிறி, மின்விளக்குகளை நிறுத்திவிட்டுச் செல்வேன்

ஈ) அத்தியாவசியமான பொருட்களை மட்டும் வாங்குவேன்

உ) மதிய உணவினை தேவையான அளவு மட்டும் எடுத்துச் செல்வேன்

ஊ) பணத்தை உண்டியலில் சேமிப்பேன்.

 

 

சிறப்பு வழிகாட்டி ஆக்கம் :

வெ.ராமகிருஷ்ணன், தமிழாசிரியர்,

அரசு உயர்நிலைப் பள்ளி, கோரணம்பட்டி,

சேலம்.

8667426866,8695617154

வலைப்பக்கம் :

WWW.TAMILVITHAI.COM


 

  


WWW.KALVIVITHAIGAL.COM

 


 

 


YOUTUBE :

https://youtube.com/user/000ramakrishnan

                                                                        
                                                                

CLICK HERE TO DOWNLOAD PDF 

           

 

 

 



Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post