10TH - TAMIL - COMPOSITION - PDF

 

பத்தாம் வகுப்பு – கட்டுரைகள்

இயல்  - 1

கட்டுரை எழுதுக.

1. சான்றோர் வளர்த்த தமிழ்


குறிப்புச்சட்டகம்

முன்னுரை

தமிழின் தொன்மை

சான்றோர்களின் தமிழ்ப்பணி

தமிழின் சிறப்பு

முடிவுரை

முன்னுரை:

          சான்றோர் வளர்த்த தமிழ் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.

தமிழின் தொன்மை:

Ø  தமிழின் தொன்மையைக் கருதி கம்பர் என்றுமுள தென்தமிழ் என்றார்.

Ø  கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ்.

சான்றோர்களின் தமிழ்ப்பணி:

Ø  ஆங்கில மொழியை தாய் மொழியாகக் கொண்ட ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்து உலகறியச் செய்தார்.

Ø  வீரமாமுனிவர் தமிழில் முதல் சதுரகராதி வெளியிட்டார்

Ø  தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதன் அவர்கள் ஓலைச்சுவடியிலிருந்த பல தமிழ் நூல்களை அச்சிட்டு வெளியிட்டார்.

தமிழின் சிறப்புகள்:

Ø  தமிழ் இனிமையான மொழி. பல இலக்கிய, இலக்கணங்களை கொண்ட மொழி.

Ø  இயல்,இசை,நாடகம் என முத்தமிழ் உடையது.

Ø  தமிழ் மூன்று சங்கங்களை கண்டு வளர்ந்தது.

முடிவுரை:

          சான்றோர் வளர்த்த தமிழ் பற்றி இக்கட்டுரையில் நாம் கண்டோம்.

 

இயல் – 2

வாழ்த்து மடல் எழுதுக.

          மாநில அளவில் நடைபெற்ற “ மரம் இயற்கையின் வரம் “ எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்று பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.

சேலம்

03-03-2021

அன்புள்ள நண்பனுக்கு,

            நான் நலம். நீ அங்கு நலமா? என அறிய ஆவல்.” மரம் இயற்கையின் வரம்என்ற தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் நீ முதல் பரிசு பெற்றது மிக மகிழ்ச்சியாக உள்ளது. மனமார வாழ்த்துகிறேன். நீ இன்னும் பல பரிசுகள் பெற வாழ்த்துகிறேன்.

இப்படிக்கு,

உன் அன்பு நண்பன்,

அ அ அ அ அ அ அ .

உறைமேல் முகவரி;

            பெறுதல்

                        திரு.இரா.இளங்கோ,

                        100,பாரதி தெரு,

                        சேலம்.

 

இயல் -3

கடிதம் எழுதுக.

உணவு விடுதி ஒன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும்,விலைக் கூடுதலாகவும் இருந்தது குறித்து உணவுப் பாதுகாப்பு ஆணையருக்கு கடிதம் எழுதுக.

அனுப்புநர்

            அ அ அ அ அ,

            100,பாரதி தெரு,

            சக்தி நகர்,

            சேலம் – 636006.

பெறுநர்

            உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

            உணவு பாதுகாப்பு ஆணையம்,

            சேலம் – 636001

ஐயா,

பொருள்: தரமற்ற உணவு வழங்கிய உணவு விடுதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுதல்சார்பு

            வணக்கம். நான் நேற்று சேலத்தில் அன்பு உணவகத்தில் கோழி பிரியாணி உண்டேன். அது கெட்டுப் போனதாகவும் மேலும் அதன் விலைப்பட்டியலைவிட விலைக் கூடுதலாகவும் இருந்தது. இத்துடன் அந்த உணவிற்கான விலை இரசீது நகல் மற்றும் உணவு பட்டியல் நகலையும் இணைத்துள்ளேன். தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

நன்றி.

இணைப்பு:                                                                     இப்படிக்கு,

1. விலை இரசீதுநகல்                                                                              தங்கள் உண்மையுள்ள,

2. விலைப்பட்டியல்நகல்                                                                                                    அ அ அ அ அ.

இடம் : சேலம்    

நாள் : 04-03-2021

உறை மேல் முகவரி:

பெறுநர்

          உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

உணவு பாதுகாப்பு ஆணையம்,

சென்னை.

இயல் -  4

கட்டுரை எழுதுக:-

          தலைப்பு – ‘ விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்’

குறிப்புச் சட்டம்

முன்னுரை

பிறப்பும்,கல்வியும்

விண்வெளிப் பயணம்

இறப்பு

விருது

முடிவுரை

முன்னுரை :

          விண்வெளிக்கு பயணம் செய்த முதல் இந்திய பெண் வீராங்கனை கல்பனா சாவ்லா குறித்து நாம் இக்கட்டுரையில் காணலாம்.

பிறப்பும், கல்வியும் :

பிறப்பு : இந்தியாவில் ஹரியானா மாநிலத்தில் கர்னலில் ஜூலை 1,1961 இல் பிறந்தார்.

            பெற்றோர் : பனாரஸ்லால் - சன்யோகிதா தேவி

கல்வி : கர்னலில் பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் விமான ஊர்தியியல் துறையில் இளங்கலைப் பட்டம்

·         டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம்.

·         . 1986-ஆம் ஆண்டு கொலராடோ பல்கலைக் கழகத்தில் 2-ஆவது முதுகலைப்பட்டம்.   

·         பிறகு 1988-ஆம் ஆண்டு விண்வெளி பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

விண்வெளிப் பயணம்:

·         1995 இல் நாசா விண்வெளி வீரர் பயிற்சியில் இணைந்து கொலம்பிய விண்வெளி ஊர்தி எஸ்,டி,எஸ்-87 இல் பயணம் செய்தார்,

·         சுமார் 372 மணிநேரம் விண்வெளியில் இருந்து சாதனையுடன் பூமி திரும்பினார்.

வீர மரணம் :

·         2003இல் ஜனவரி 16 ந் தேதி அமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பிய விண்கலம் எஸ்.டி.எஸ் 107 இல மீண்டும் பயணம் செய்தார்.

·         அந்த விண்கலம் ஆய்வை முடித்து திரும்பிய போது பிப்ரவரி -1 இல் டெக்சாஸ் வான்வெளியில் வெடித்துச் சிதறியதில் கல்பனா சாவ்லாவுடன் உடன் பயணித்த 7 வீரர்களும் மரணமடைந்தனர்

விருது:

·         நியூயார்க் நகரின் ஒரு சாலைக்கு அவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

·         பிப்ரவரி 1ந் தேதி கல்பனா சால்வலா நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

·         2011 முதல் வீரதீர சாதனைப் புரிந்த பெண்களுக்கு “ கல்பனா சாவ்லா விருது “ அரசு வழங்கி வருகிறது.

முடிவுரை:

          மாணவர்களாகிய நாமும் இவரைப் போன்றவர்களை உதாரணமாகக் கொண்டு விடாமுயற்சியுடன் படித்தால் அனைத்தையும் சாதிக்கமுடியும்.

இயல் – 5

மதிப்புரை எழுதுக.

பள்ளி ஆண்டுவிழா மலருக்காக நீங்கள் நூலகத்தில் படித்த தை/கட்டுரை/சிறுகதை/கவிதை நூலுக்கான மதிப்புரை எழுதுக.

குறிப்பு : நூலின் தலைப்பு – நூலின் மையப் பொருள் – மொழிநடை- வெளிப்படுத்தும் கருத்து – நூலின் நயம் – நூல் கட்டமைப்பு – சிறப்புக் கூறு – நூல் ஆசிரியர்

குறிப்புச்சட்டகம்

நூலின் தலைப்பு

நூலின் மையப் பொருள்

மொழிநடை

வெளிப்படுத்தும் கருத்து

நூலின் நயம்

நூல் கட்டமைப்பு

சிறப்புக்கூறு

  நூல் ஆசிரியர்

நூலின் தலைப்பு:

                   பரமார்த்தகுரு கதை

நூலின் மையப் பொருள்:

                      சீடர்கள் குருவிடம் கொண்டுள்ள பக்தியும்,விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பது நூலின் மையப் பொருள்.

மொழிநடை:

                   நகைச்சுவையுடன் யாவருக்கும் புரியும் வண்ணம் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது.

வெளிப்படுத்தும் கருத்து:

                   பகுத்தறிவுடன் செயலபட வேண்டும் என ஒவ்வொரு கதையிலும் வெளிப்பட்டு இருக்கிறது.

நூலின் நயம்:

                   விழிப்புணர்வுடனும் நகைச்சுவையுடனும் எழுதப்பட்டுள்ளது.

நூல் கட்டமைப்பு:

                   சிறுவர்கள் ஆர்வமுடன் படிக்கும் வகையில் நூலின் கட்டமைப்பு உள்ளது.

சிறப்புக்கூறு:

                   ஒவ்வொரு கதையும் பகுத்தறியும் திறனை வெளிப்படுத்துவதாக உள்ளது.

நூல் ஆசிரியர்:

                   வீரமாமுனிவர்.

இயல் – 6

கட்டுரை எழுதுக.

உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.

குறிப்புச்சட்டகம்

முன்னுரை

பொருட்காட்சி

நுழைவுச் சீட்டு

பல்துறை அரங்கம்

அங்காடிகள்

பொழுதுபோக்கு

முடிவுரை

முன்னுரை :

எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப்பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வை இக்கட்டுரையில் காண்போம்.

பொருட்காட்சி :

          மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் பொருட்காட்சி நடைபெற்றது.

நுழைவுச் சீட்டு:

          பொருட்காட்சி நடைபெறும் இடத்தின் உள்ளே செல்ல நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டது.பெரியவர்களுக்கு 30 ரூபாயும்,சிறுவர்களுக்கு 15 ரூபாயும் என நுழைவுச்சீட்டு நிர்ணயம் செய்யப்பட்டது.

பல்துறை அரங்கம் :

          அரசின் சாதனைகள் கூறும் பல்வேறு அரசுத்துறை அரங்கங்களும்,தனியார் பொழுது போக்கு நிறுவனங்களும் நிறைய இருந்தன.

அங்காடிகள்:

          வீட்டு உபயோகப் பொருட்கள்,விளையாட்டுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் என பல்வேறு பொருட்களும் ஒரே இடத்தில் கிடைத்தன.

பொழுதுபோக்கு :

          சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் விளையாட பொம்மை அரங்கம் போன்ற பல்வேறு அரங்கங்களும்,இராட்டின்ங்களும் நிறைய இருந்தன.

முடிவுரை:

          எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வினை இக்கட்டுரையில் கண்டோம்.

 

இயல் – 7

கடிதம் எழுதுக:-

நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் “ உழவுத் தொழிகுக்கு வந்தனை செய்வோம் “ என்ர உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி, அந்நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.

அனுப்புநர்

                        அ அ அ அ அ,

                        100,பாரதி தெரு,

                        சக்தி நகர்,

                        சேலம் – 636006.

பெறுநர்

                        ஆசிரியர் அவர்கள்,

                        தமிழ்விதை நாளிதழ்,

                        சேலம் – 636001.

ஐயா,

பொருள்: கட்டுரையை வெளியிட வேண்டுதல்சார்பு

            வணக்கம். நான்  தங்கள் நாளிதழில் பொங்கல் பண்டிக்கை முன்னிட்டு பொங்கல் மலரில் உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்  எனும் தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளேன்.தாங்கள் அந்த கட்டுரையையும் பொங்கல் மலரில் வெளியிட வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

இணைப்பு:                                                                     இப்படிக்கு,

            1. கட்டுரை                                                                                            தங்கள்உண்மையுள்ள,

இடம் : சேலம்                                                                 அ அ அ அ அ.

நாள் : 04-03-2021

 

உறை மேல் முகவரி:

பெறுநர்

            ஆசிரியர் அவர்கள்,

            தமிழ்விதை நாளிதழ்,

,                        சேலம் – 636001.

இயல் – 8

கடிதம் எழுதுக.

உங்கள் தெருவில் மின் விளக்குகள் பழுதடைந்துள்ளன அதனால் இரவில் சாலையில் நடந்து செல்வோருக்கு ஏற்படும் இடையூறுகளை எழுதி ஆவன செய்யும்படி மின்வாரிய அலுவலருக்கு கடிதம் எழுதுக.

அனுப்புநர்

                        அ அ அ அ அ,

            100,பாரதி தெரு,

            சக்தி நகர்,

            சேலம் – 636006.

பெறுநர்

            மின்வாரிய அலுவலர் அவர்கள்,

            மின்வாரிய அலுவலகம்,

,            சேலம் – 636001.

ஐயா,

பொருள்: மின்விளக்கு சரி செய்ய வேண்டுதல்சார்பு

            வணக்கம். எங்கள் தெருவில் 100 குடும்பங்கள் உள்ளன. எங்கள் தெருவில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன. இதனால் இரவில் சாலையில் நடந்து செல்வோருக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. எனவே பழுதடைந்த மின்விளக்குகளை சரி செய்து கொடுக்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

இடம் : சேலம்                                                         இப்படிக்கு,

நாள் : 04-03-2021                                                       தங்கள் உண்மையுள்ள,                                                                           அ அ அ அ அ.

உறை மேல் முகவரி:

பெறுநர்

            மின்வாரிய அலுவலர் அவர்கள்,

            மின்வாரிய அலுவலகம்,

,            சேலம் – 636006

இயல் -9

வாழ்த்துரை எழுதுக.

உங்கள் பள்ளியில் நடைபெறும் நாட்டு நலப்பணித்திட்ட முகாமின் தொடக்க விழாவில் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்க உரை ஒன்றை உருவாக்கித் தருக.

v  அனைவருக்கும் வணக்கம்.

v  நாட்டு நலப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மாணவர்களை வாழ்த்துகிறேன்.

v  சேவை மற்றும் தொண்டு பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட மாணவர்களுக்கு நன்றி.

v  மாணவர்களின் உங்களின் இந்த பொது நலத் தொண்டு நாட்டின் வளத்தினை உயர்த்தும்.

v  சேவை மனப்பான்மையை வளர்க்கும் நாட்டு நலப் பணித்திட்ட செயல்பாட்டாளர்களுக்கும், பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும் வாழ்த்துகள்.

 

நன்றியுரை எழுதுக.

 

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற ‘ மரம் நடு விழாவுக்கு ‘ வந்திருந்த சிறப்பு விருந்தினருக்கும்,பெற்றோருக்கும் பள்ளியின் ‘ பசுமைப் பாதுகாப்புப் படை ‘ – சார்பாக நன்றியுரை எழுதுக.

v  பசுமைப் பாதுகாப்புப் படை அனைத்து பள்ளிகளிலும் சிறப்பாக செயல்படுகிறது.இதன் மூலம் பள்ளிகள் பசுமையாக உள்ளது.

v  மரங்கள் நம் வாழ்வில் முக்கிய அங்கம். அதனை உணர்ந்து அனைவரும் மரங்களை வளர்க்க வேண்டும்.

v  மரம் நடும் விழாவிற்கு வருகைப்புரிந்த சிறப்பு விருந்தினர் மரங்களின் அவசியம்,மாணவர்கள் மற்றும் சமூகத்தின் கடமை ஆகியவற்றை எடுத்துரைத்து நமக்கு சிறப்பாக வழிகாட்டினார்.

v  இவ்விழாவினை ஏற்பாடு செய்த தலைமை ஆசிரியருக்கும் மற்றும் பள்ளியின் பசுமைப் பாதுகாப்புப் படைக்கும், சிறப்பான கருத்துகளை கூறிய சிறப்பு விருந்தினருக்கும்,பெற்றோருக்கும் பள்ளியின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

CLICK HERE TO GET PDF 

 

 

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post