ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். நடைபெற்று முடிந்த ( 05-05-2022 ) ஒன்பதாம் வகுப்பு - தமிழ் முழு ஆண்டுத் தேர்வு வினாத்தாளுக்கான விடைக்குறிப்புகள் நமது தமிழ் விதை வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.
முழுஆண்டுத் தேர்வு வினாத்தாள்
மே - 2021-2022 - ஒன்பதாம் வகுப்பு
மொழிப்பாடம் – தமிழ்
சேலம் - மாவட்டம்
உத்தேச விடைக் குறிப்பு
நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி மதிப்பெண் : 100
பகுதி – 1 பிரிவு - அ மதிப்பெண்கள் - 10 | |||||||||||||||||||||||||||||||||||||||
வினா.எண் | விடைக் குறிப்பு | மதிப்பெண் | |||||||||||||||||||||||||||||||||||||
1. | இ. மோனை,எதுகை,இயைபு | 1 | |||||||||||||||||||||||||||||||||||||
2. | ஈ. தொகைச் சொற்கள் | 1 | |||||||||||||||||||||||||||||||||||||
3. | ஆ. செய்தித் தொடர் | 1 | |||||||||||||||||||||||||||||||||||||
4. | ஆ. தொல்காப்பியம் | 1 | |||||||||||||||||||||||||||||||||||||
5. | ஈ. பேரறிஞர் | 1 | |||||||||||||||||||||||||||||||||||||
6. | ஈ. கெடுதல் | 1 | |||||||||||||||||||||||||||||||||||||
7. | அ. நாணமும் இணக்கமும் | 1 | |||||||||||||||||||||||||||||||||||||
8. | ஈ. மோகன்சிங்,ஜப்பானியர் | 1 | |||||||||||||||||||||||||||||||||||||
9. | ஈ. பிறப்பு | 1 | |||||||||||||||||||||||||||||||||||||
10. | அ. பழமை | 1 | |||||||||||||||||||||||||||||||||||||
பிரிவு - ஆ | |||||||||||||||||||||||||||||||||||||||
11. | இனிய | 1 | |||||||||||||||||||||||||||||||||||||
12. | கொடிய | 1 | |||||||||||||||||||||||||||||||||||||
13. | நல்ல | 1 | |||||||||||||||||||||||||||||||||||||
14. | மெதுவாக | 1 | |||||||||||||||||||||||||||||||||||||
15. | அழகாக | 1 | |||||||||||||||||||||||||||||||||||||
பகுதி – 2 பிரிவு - 1 | |||||||||||||||||||||||||||||||||||||||
16. | அ. விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட முதல் காப்பியம் எது? ஆ. ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு எவ்வாறு வழங்கப்படுகிறது? | 1 1 | |||||||||||||||||||||||||||||||||||||
17. | கண்ணி - இரண்டு இரண்டு பூக்களாக வைத்துத் தொடுக்கப்படும் மாலைக்குக் கண்ணி என்று பெய®. அதுபோல், இரண்டு இரண்டு அடிகளாக எதுகையோடு பாடப்படும் செய்யுள் கண்ணி எனப்படும் | 2 | |||||||||||||||||||||||||||||||||||||
18. | குழந்தைத் திருமணத்தைத் தடுக்க 1929ஆம் ஆண்டு சாரதா சட்டம் இயற்றப்பட்டது. | 2 | |||||||||||||||||||||||||||||||||||||
19 | மஞ்சு விரட்டு, ஜல்லிக்கட்டு, மாடு விடுதல், மாடு பிடித்தல். | 2 | |||||||||||||||||||||||||||||||||||||
20. | · உழவர்கள் · மற்ற தொழில் செய்பவரையும் உழுபவரே தாங்கி நிற்பதால், அவரே உலகத்துக்கு அச்சாணி ஆவர் | 2 | |||||||||||||||||||||||||||||||||||||
21 | எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும் | 2 | |||||||||||||||||||||||||||||||||||||
பகுதி – 2 பிரிவு - 2 | |||||||||||||||||||||||||||||||||||||||
22 | வீணையோடு வந்தாள் - மூன்றாம் வேற்றுமைத் தொடர் கிளியே பேசு - விளித்தொடர் | 1 1 | |||||||||||||||||||||||||||||||||||||
23 | அ. Hero stone – நடுகல் ஆ. Water management – நீர் மேலாண்மை | 1 1 | |||||||||||||||||||||||||||||||||||||
24 | பரப்புமின் – பரப்பு + மின் பரப்பு – பகுதி மின் – முன்னிலை பன்மை வினைமுற்று விகுதி | 2 | |||||||||||||||||||||||||||||||||||||
25. | 15 – க ரு 100 – க00 | 2 | |||||||||||||||||||||||||||||||||||||
26. | அ. நகமும் சதையும் – நானும் எனது நண்பனும் நகமும் சதையும் போல் உயிர் நண்பர்கள். ஆ. கண்ணும் கருத்தும் – தாய் தன் மகளை கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்து வளர்ந்து வந்தார் | 2 | |||||||||||||||||||||||||||||||||||||
27. | அ. மா பெரும் பொதுக் கூட்டம் ஆ. சாலச் சிறந்தது | 1 1 | |||||||||||||||||||||||||||||||||||||
28. | அ. பவளவிழி தான் பரிசுக்கு உரியவள். ஆ. குழலிக்கும் பாடத் தெரியும். | 2 | |||||||||||||||||||||||||||||||||||||
பகுதி – 3 பிரிவு – அ | |||||||||||||||||||||||||||||||||||||||
29 | அ. தமிழ்நாட்டின் இராமேசுவரத்தைச் சேர்ந்தவர். ஆ. ஏவுகணை ஏவு ஊர்தித் தொழில் நுட்ப வளர்ச்சியில் கலாம் காட்டிய ஈடுபாட்டினால் இவர், ‘ இந்திய ஏவுகணை நாயகன் ‘ என்று போற்றப்படுகிறார். இ. பாரத ரத்னா விருது. | 3 | |||||||||||||||||||||||||||||||||||||
30 | மூன்று - தமிழ் · மூணு - மலையாளம் · மூடு - தெலுங்கு · மூரு - கன்னடம் · மூஜி - துளு | 3 | |||||||||||||||||||||||||||||||||||||
31. | ஏறுதழுவுதல் முல்லை நிலத்து மக்களின் அடையாளத்தோடும் மருத நிலத்து வேளாண் குடிகளின் தொழில் உற்பத்தியோடும் பாலை நிலத்து மக்களின் தேவைக்கான போக்குவரத்துத் தொழிலோடும் பிணைந்தது. இதுவே வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாளமாக நீட்சி அடைந்தது. இதன் தொடர்ச்சியாக, வேளாண் குடிகளின் வாழ்வோடும் உழைப்போடும் பிணைந்துகிடந்த மாடுகளுடன் அவர்கள் விளையாடி மகிழும் மரபாக உருக்கொண்டதே ஏறு தழுவுதலாகும். | 3 | |||||||||||||||||||||||||||||||||||||
பகுதி – 3 பிரிவு - ஆ | |||||||||||||||||||||||||||||||||||||||
32 | அ. அழியா – ஒழியா ஆ. ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் இ. எட்டு | 3 | |||||||||||||||||||||||||||||||||||||
33. | முல்லை நில மக்கள் முதிரை, சாமை, குதிரைவாலி, நெல் முதலியவற்றை அறுத்துக் கதிரடித்துக் களத்தில் மலைபோல் குவித்து வைத்துள்ளனர். · பாலைநிலத்திலுள்ள பாலக்காய் எருதின் கொம்புபோல் இருப்பதாக உவமிக்கிறார். | 3 | |||||||||||||||||||||||||||||||||||||
34. | அ) காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்க ரும்பு மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம் கடல்அன்ன நாடெல்லா ம் நீர்நாடு தனைஒவ்வா நலமெல்லாம் | 3 | |||||||||||||||||||||||||||||||||||||
ஆ) ஒன்றறி வதுவே உற்றறி வதுவே இரண்டறி வதுவே அதனொடு நாமவே மூன்றறி வதுவே அவற்றோடு மூக்கே நான்கறி வதுவே அவற்றோடு கண்ணே ஐந்தறி வதுவே அவற்றோடு செவியே ஆறறி வதுவே அவற்றோடு மனனே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே | 3 | ||||||||||||||||||||||||||||||||||||||
பகுதி – 3 பிரிவு - இ | |||||||||||||||||||||||||||||||||||||||
35 | அ. கரை – நீர்நிலைகளின் ஓரங்கள் சென்னை மெரீனா கடற்கரை அழகாக இருக்கும். கறை – அழுக்கு,குற்றம் அரசியலில் காமராஜர் கறைபடியாத கரங்களாக திகழ்ந்தார் ஆ. வாளை – ஒரு வகை மீன் ஆற்றில் வாளை மீன்கள் துள்ளி துள்ளி நீந்தியது. வாழை – மரம் தோட்டத்தில் செவ்வாழை மரக்கன்று நடப்பட்டுள்ளது. இ. மரை – மான் தாவுகின்ற மரைகள் நிறைந்த காடு மறை – வேதம், நூல் திருக்குறள் உலகப்பொது மறை எனப் போற்றப்படுகிறது | 1 1 1 | |||||||||||||||||||||||||||||||||||||
36. | வஞ்சப்புகழ்ச்சியணி என்பது புகழ்வது போலப் பழிப்பதும், பழிப்பது போலப் புகழ்வதுமாகும். (எ.கா .) தேவ ரனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான். கயவர்கள் தேவர்களுக்கு ஒப்பானவர்கள் என்று புகழப்படுவது போலத் தோன்றினாலும், கயவர்கள் இழிந்த செயல்களையே செய்வர் என்னும் பொருளைக் குறிப்பால் உணர்த்துகிறது. எனவே, இது புகழ்வது போலப் பழிப்பது ஆகும். | 3 | |||||||||||||||||||||||||||||||||||||
37 |
| 3 | |||||||||||||||||||||||||||||||||||||
பகுதி – 4 | |||||||||||||||||||||||||||||||||||||||
38 | · அ) அமிழ்தினும் மேலான முத்திக் கனியே ! முத்தமிழே ! உன்னோடு மகிழ்ந்து சொல்லும் விண்ணப்பம் உண்டு கேள். · புலவர்கள் குறம்,பள்ளு பாடி தமிழிடமிருந்து சிறப்பு பெறுகின்றனர். அதனால் உனக்கும் பா வகைக்கும் உறவு உண்டு. · தமிழே ! சிந்தாமணியாய் இருந்த உன்னைச் சிந்து என்று அழைப்பவர் நா இற்று விழும். · தேவர்கள் கூட மூன்று குணங்கள் தான் பெற்றுள்ளனர். ஆனால் தமிழே! நீ மட்டும் பத்து குணங்களைப் பெற்றுள்ளாய். · மனிதர் உண்டாக்கிய வண்ணங்கள் கூட ஐந்து தான்,. ஆனால் தமிழே ! நீ மட்டும் நூறு வண்ணங்களைப் பெற்றுள்ளாய். · உணவின் சுவையோ ஆறு தான். ஆனால், தமிழே ! நீயோ ஒன்பது சுவைகளைப் பெற்றுள்ளாய். · மற்றையோர்க்கு அழகு ஒன்று தான். ஆனால் தமிழே! நீயோ எட்டு வகையான அழகினைப் பெற்றுள்ளாய். | 5 | |||||||||||||||||||||||||||||||||||||
38 | ஆ. சங்க காலத்தில் பெண்கள் கல்வி கற்று தமிழநாடு சிறந்து விளங்கியது. · இடைப்பட்ட காலத்தில் பெண்கல்வி மறுக்கப்பட்து. · சமைப்பது, வீட்டு வேலைகள் செய்வது என கருதினர் · அறிவுடைய மக்கள் உருவாக வேண்டுமெனில் பெண்கள் கல்வி கற்க வேண்டும் என பாரதிதாசன் பாடியுள்ளார். · பெண்கள் உணவு சமைப்பதோடு அல்லாமல் இன்பம் படைக்கிறார். இன்று பெண்களுக்கு சமையலில் உதவ ஆண்களும் துணை செய்கிறார்கள். · இன்று பெண்கள் அனைத்து துறைகளிலும் பட்டம் பெற்று வருகிறார்கள். · கல்வியில் சிறந்து விளங்கிய பெண்கள், முத்து லெட்சுமி அம்மையார் முதல் பெண் மருத்துவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே · இன்றைய பெண்கள் அடுத்த தலைமுறைக்கும் அறிவைக் கொண்டு செல்கின்ற பெரும் பணியைச் செய்கிறார்கள். | 5 | |||||||||||||||||||||||||||||||||||||
39 | 12, தமிழ் வீதி, மதுரை-2 28,செப்டம்பர் 2021. அன்புள்ள நண்பா ! வணக்கம் . நலம். நலமறிய ஆவல் என்னுடைய பிறந்தநாள் பரிசாக நீ அனுப்பிய எழுத்தாளர் எஸ் . இராமகிருஷ்ணன் எழுதிய கால் முளைத்த கதைகள் என்ற கதைப்புத்தகம் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அதில் உள்ள கதைகள் அனைத்தையும் படித்தேன். படிப்பதற்குப் புதுமையாகவும், மிக்க ஆர்வமாகவும் இருந்தன. இந்நூலில் பூனையை நாய் ஏன் துரத்துகிறது? போன்ற தலைப்புகளில் கதைகள் உள்ளன. குழந்தைகள் மிகவும் விரும்பிப் படிப்பதற்கு ஏற்ற வகையில் இனிய எளிய சொற்களால், கதைகள் சிறியனவாக அமைந்துள்ளன. எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அன்பு நண்பன், அ.எழிலன். உறைமேல் முகவரி: வெ.ராமகிருஷ்ணன், 2,நெசவாளர் காலணி, சேலம் - 1 | 5 | |||||||||||||||||||||||||||||||||||||
39 | அனுப்புநர் க. இளவேந்தன் மாணவச்செயலர், 10ஆம் வகுப்பு ’ஆ’ பிரிவு, அரசினர் உயர்நிலைப்பள்ளி, கோரணம்பட்டி, பெறுநர் மேலாளர், தமிழ்விதைப் பதிப்பகம், சென்னை-600 001. பெருந்தகையீர், சுமார் 500 மாணவர்கள் படிக்கும் எங்கள் பள்ளிக்கு தமிழ்மொழியில் உள்ள அருஞ்சொற்களின் பொருளை அறிய உங்கள் பதிப்பகத்தில் வெளியிட்டுள்ள தமிழ்- தமிழ்-ஆங்கிலம் அகராதியின் பத்துபடிகளை எங்கள் பள்ளி நூலகத்திற்கு பதிவஞ்சலில் அனுப்பிவைக்க வேண்டுகிறோம். நாள் : 01-09 -2021 இடம் : கோரணம்பட்டி ள் உண்மையுள்ள, க.இளவேந்தன். (மாணவர் செயலர்) உறைமேல் முகவரி: மேலாளர், தமிழ்விதைப் பதிப்பகம், சென்னை-600 001 | 5 | |||||||||||||||||||||||||||||||||||||
40 | அ. திரண்ட கருத்து: மையக்கருத்து: எதுகை: சான்று: மோனை: சான்று: இயைபு சான்று: அணிநயம்: சுவை நயம்: | 5 | |||||||||||||||||||||||||||||||||||||
40 | ஆ. மானாமதுரை ஓர் அழகான பேரூர்; நீண்ட வயல்களும் சிற்றோடைகளும் நிறைந்த அவ்வூரின் நடுவே வானுயர்ந்த கோபுரத்துடன் கூடிய கோவில் குளத்தில் எங்கும் செந்தாமரை பூக்கள் மலர்ந்துள்ளன; கதிரவனின் பேரொளி வீசிட, சோலைப் பைங்கிளி களின் இன்னோசை கேட்போரைப் பேரின்பம் அடையச் செய்கிறது. | 5 | |||||||||||||||||||||||||||||||||||||
41 | மழை , அன்பின் வழி இரு தலைப்புகளில் ஏதேனும் ஒன்றிற்கு மாணவர்கள் கவிதை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக | 5 | |||||||||||||||||||||||||||||||||||||
42 | காட்சியைக் கண்டு கவிதை எழுதுக. மாணவர்கள் படத்திற்குப் பொருத்தமான கவிதை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக | 5 | |||||||||||||||||||||||||||||||||||||
பகுதி – 5 | |||||||||||||||||||||||||||||||||||||||
43 | · ஸ்பெயின் காளைச் சண்டையைத் தேசிய விளையாட்டாக கொண்டுள்ளது. · காளை கொன்று அடக்குபவனே வீரன் · வென்றாலும் தோற்றாலும் போட்டியின் முடிவில் காளையை சில நாடுகளில் கொல்வதும் உண்டு. · இவை வன்மத்தையும் போர்வெறியையும் வெளிப்படுத்துவதாகவே உள்ளது. · ஆனால், தமிழகத்தில் ஏறு தழுவுதலில் ஆயுதத்தைப் பயன்படுத்தக் கூடாது. · நிகழ்வின் தொடக்கத்திலும் முடிவிலும் காளைக்கு வழிபாடு செய்வர். · எவரும் அடக்க முடியாத காளைகள் கூட, வெற்றி பெற்றதாக அறிவிப்பர். · அன்பையும் வீரத்தையும் ஒன்றாக வளர்த்தெடுக்கும் இவ்விளையாட்டில், காளையை அரவணைத்து அடக்குபவரே வீரராகப் போற்றப்படுவர் | 8 | |||||||||||||||||||||||||||||||||||||
ஆ. ’ஒரு மொழியின் தேவை என்பது , அதன் பயன்பாட்டு முறையைக் கொண்டே அமைகிறது; இந்தியாவிலேயே பழமையான மொழி தமிழ் மொழியாகும். இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கேற்ற நூல்கள் தமிழில் படைக்கப்பட வேண்டும்’ என்று கூறினார். · ’மொழியோ நூலோ இலக்கியமோ எதுவானாலும் மனிதனுக்கு மானம், பகுத்தறிவு, வளர்ச்சி, நற்பண்பு ஆகிய தன்மைகளை உண்டாக்க வேண்டும்’ என்று கருதி மொழி, இலக்கியம் ஆகியவற்றின் வளர்ச்சி குறித்தும் பெரியார் ஆழ்ந்து சிந்தித்தார். · மதம், கடவுள் ஆகியவற்றின் தொடர்பற்ற இலக்கியம், யாவருக்கும் பொது வான இயற்கை அறிவைத் தரும் இலக்கியம், யாவரும் மறுக்க முடியாத அறிவியல் பற்றிய இலக்கியம் ஆகியவற்றின் மூலம்தா ன் ஒரு மொழியும் அதன் இலக்கியங்களும் மேன்மை அடையமுடியும்; அத்துடன் அவற்றைப் பயன்படுத்தும் மக்களும் அறிவுடையவராக உயர்வர் என்று பெரியார் கூறினார். · திருக்குறளில் அறிவியல் கருத்துகளும் தத்துவக்கருத்துகளும், அனைவருக்கும் பொதுவான வகையில் இடம் பெற்றிருப்பதால் அதை மதிப்புமிக்க நூலாகப் பெரியார் கருதினார். இந்நூலில் அரசியல், சமூகம், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்தும் அடங்கியுள்ளன; இதை ஊன்றிப் படிப்பவர்கள் சுயமரியாதை உணர்ச்சி பெறுவார்கள் என்றார். | 8 | ||||||||||||||||||||||||||||||||||||||
44. | அ. குடும்பம்: கர்நாடக மாநிலம் குல்பர்கா நகர்த் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் குடிசை ஒன்று இருந்தது. அந்த குடிசை முன் குடும்பமே சுருண்டு கிடந்தது. அந்த குடிசையில் தோட்டக்காரனும் அவன் மனைவியும்,இரண்டு குழந்தைகளும் வாழ்ந்து வந்தனர். ஜீப்பில் வந்த அதிகாரி: குடிசை முன் ஜீப் ஒன்று வந்து நின்றது. ஜீப்பில் நாற்பத்தி ஐந்து வயதுடைய அதிகாரி இறங்கி வந்தார். அதிகாரியைப் பார்த்தவுடன் படுத்துக் கிடந்தவனுக்கும் பயன் படித்தது. தோட்டக்காரனும்,தட்டுப் பிரியாணியும் : அதிகாரி பாதிப் பிரியாணி தட்டை அவனிடம் நீட்டினார்.அவனும் தயங்கி நின்ற போது தோளில் தட்டிக் கொடுத்து வீட்டை நோக்கித் தள்ளினார். மனைவியைப் பார்த்து பயத்தோடு நடந்தான். பிள்ளையும், தாயும்: வறுமையிலும் மானம் பெரிது என்பதனை அவள் கண்களால் உணர்த்தினாள். குழந்தைகளுக்கும் பசி,அவளுக்கும் பசி, நாய்களுக்கும் பசி. அதேசமயம் கொண்டு வந்த சப்பாத்தி மற்றும் பிரியாணியுடன் வைத்தாள் .காணாதைக் கண்ட மகிழ்ச்சியில் அமைவரும் சுவைத்தார்கள். அதிகாரியின் அன்பு : “உன்னை மாதிரியே கஷ்டப்பட்ட தாய்க்குதான் நான் பிறந்தேன். உன்னை தாயாக நினைத்து கொடுக்கிறேன் “என்றார் அதிகாரி. அவளுக்கு தமிழ் தெரியவில்லை. இருப்பினும் ஆன்மா தெரிந்தது, மனிதம் புரிந்தது. உண்மைத் தாயுள்ளம் : நாய்க் குட்டிகள் இரண்டும் பசியால் ஓல ஒலியிட்டு அதிகாரியின் கால்களை சுற்றி,சுற்றி வந்தது. அவள் தட்டை கீழே வைத்து நாய்க் குட்டிகளை வாரி எடுத்து, முதுகில் தடவிக் கொடுத்தாள்,பின் தனக்கு கிடைத்த உணவை சிறு சிறு கவளமாக நாய்க்குட்டிகளுக்கு ஊட்டி விட்டாள். தட்டில் உணவு குறைய குறைய அவளின் தாய்மைக் கூடிக் கொண்டே வந்தது. | 8 | |||||||||||||||||||||||||||||||||||||
44. | ஆ. இந்திய விண்வெளித்துறைமுன்னுரை:- இந்திய விண்வெளித் துறையில் அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாத்துரை, வளர்மதி, சிவன் ஆகியோரன் பங்கு அளப்பரியதாகும். இந்தியர்கள் வானியியல் வல்லமையை வலுப்படுத்தும் பல்வேறு செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளித்துறை படைத்துள்ளது. இஸ்ரோ:- · இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) பெங்களூரில் உள்ளது. திரு.கே.சிவன் என்பவர் 14.1.2018 முதல் இதன் தலைவராக உள்ளார், · குறைந்த செலவில் தரமான் சேவையை கொடுப்பதனை நோக்கமாக இஸ்ரோ கொண்டுள்ளது. · இதுவரை 45 செயற்கைக்கோள் வின்னில் செலுத்தப்பட்டுள்ளன. · இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் உலகின் மிகப் பெரிய விண்வெளி ஆய்வு மையத்தில் ஆறாவது இடத்தை பெற்றுள்ளது. சாதனைகள்:- · 1975-ல் இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் ஆரியப்பட்டா சோவியத் ரஷ்யா உதவியால் விண்ணில் செலுத்தப்பட்டது. விக்ரம் சாராபாய் இதற்கு மூல காரணம் ஆவார் · 1980-ல் முதல் செயற்கைக் கோள் ரோகிணி விண்ணில் ஏவப்பட்டது. · சந்திராயன்-1 நிலவை நோக்கி 2008-ல் விண்ணில் ஏவப்பட்டது. · நேவிக் என்ற செயலியைக் கடல் பயணத்திற்கு உருவாயிக்கியிருக்கிறது. இஸ்ரோ:- நம் நாட்டிற்கு தேவையான செயற்கைக் கோளை விண்ணில் அனுப்பி நம் தேவைகளை நிறைவு செய்வதே இஸ்ரோவின் செயல்பாடு | 8 | |||||||||||||||||||||||||||||||||||||
45 | உலகப்பொதுமறை – திருக்குறள் அ) இனம்,மதம்,மொழி,நாடு என அனைத்தையும் கடந்து உலகமக்கள் அனைவருக்கும் பொதுவான மறை நூலாகக் கருதப்படுவது வான்புகழ் வள்ளுவன் எழுதிய திருக்குறளாகும். முப்பாலையும் கற்றுணர்ந்தால் வீடுபேறு தானே கிடைக்கும் என்பதால்தான் என்று எனக்குத்தோன்றுகிறது.நூல் வைப்பு முறை,பாக்கள் அமைப்பு,இலக்கணப் பிறழ்ச்சியின்மை என அனைத்துமே திருக்குறளில் மிகச்செம்மையாக உள்ளது. ”அணுவைத் துளைத்து அதில் ஏழ்கடலைப் புகட்டி குறுகத்தரித்த குறள்” என்று ஔவையார் திருக்குறளைப் புகழ்ந்துரைத்தது எவ்வளவு பொருத்தமானது எனத் திருக்குறளைப் படிக்கும்போது புரிந்து கொள்ள முடிகிறது | 8 | |||||||||||||||||||||||||||||||||||||
45 | ஆ. ”எனது பயணம்”எனும் தலைப்பில் உங்களது பயணஅனுபவங்களை வருணித்து எழுதுக. ஏழைகளின் ஊட்டி - ஏற்காடு கடந்த 2018 சனவரி மாதம் இயற்கை எழில் கொஞ்சும் ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காடுக்கு நான் சுற்றுலா சென்றிருந்தேன்.அந்த அழகான பயண அனுபவங்களை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்தில் சென்றோம். மலைகளின் இருபுறமும் எழில் கொஞ்சும் இயற்கை காட்சிகளைக் காண இரு கண்கள் போதாது. அங்கு சென்ற பின் ஏற்காடு படகு இல்லம், சீமாட்டி இருக்கை, பகோடா உச்சி, பூங்கா, காவேரி சிகரம், சேர்வராயன் மலை உச்சி என அனைத்து இடங்களும் மனதை கொள்ளைக் கொள்கிறது. எத்தனை அழகு. என்றும் நினைவை விட்டு அகலாது ஏற்காடு. | 8 | |||||||||||||||||||||||||||||||||||||