10TH - SCIENCE - IMPORTANT QUESTIONS - 1 MARKS

  

பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019-  2020

அறிவியல்

ஒரு மதிப்பெண் வினாக்கள்

முன்னுரிமை அளிக்கப்பட்டப் பாடங்கள்

மீத்திற மாணவர்களுக்கும், சராசரி மாணவர்களுக்கும் கொடுத்து பொதுத் தேர்வுக்கு அவர்களை ஆயத்தப்படுத்த ஏதுவாக இருக்கும்.ஆறு மாதிரி வினாத்தாளிலிருந்து குறைக்கப்பட்ட பாடத்திற்குரிய வினாக்கள் மட்டும்.


பத்தாம் வகுப்பு

அறிவியல்

பள்ளிக்கல்வித்துறை வழங்கிய ஆறு மாதிரி வினாத்தாளிலிருந்து தொகுக்கப்பட்ட குறைக்கப்பட்ட பாடத்திற்கான வினாக்கள் தொகுப்பு

ஒரு மதிப்பெண் வினாக்கள்

1.     ஒரு பொருளை வெப்பப்படுத்தினாலோ அல்லது குளிர்வித்தாலோ அப்பொருளின் நிறை

அ. அதிகரிக்கும்           ஆ. குறையும்              இ. மாற்றமில்லை        ஈ. அதிகரிக்கும் ( அ) குறையும்

2.   கீழ்கண்டவற்றுள் எது மூவணு மூலக் கூறு?

அ. குளுக்கோஸ்          ஆ. ஹீலியம்              இ. கார்பன் – டை – ஆக்ஸைடு      ஈ. ஹைட்ரஜன்

3.   தனிமங்களின் நவீன ஆவர்த்தன அட்டவணையில் ஹேலஜன் குடும்பத் தனிமங்கள் ________ தொகுதியைச் சேர்ந்தவை.

அ. 17 வது                 ஆ. 15 வது                 இ. 18வது                  ஈ. 16 வது

4.   மாணவர் ஒருவர் அறிவியல் செய்முறை சோதனையின் போது  திட சோடியம் ஹைட்ராக்ஸைடு இருந்த பாட்டிலை பயன்படுத்திய  பின் பாட்டிலை திறந்தே  வைத்துவிட்டுச் சென்றுவிட்டார். சில நாட்கள் கழித்து அவர் அந்தப் பாட்டிலை  உற்று நோக்கிய போது திடவடிவில் இருந்த சோடியம்  ஹைட்ராக்ஸைடு  சேர்மம் திரவ வடிவில் இருப்பதைப் பார்த்தார். இதற்கான காரணம் சோடியம் ஹைட்ராக்சைடின் _____ பண்பு ஆகும்.

அ. ஈரம் உறிஞ்சிக் கரைதல்               ஆ. ஈரம் உறிஞ்சுதல்     இ. நீர் நீக்கம் அடைதல்                  

ஈ. பிரிகையைடைதல்

5.   தொல்உயிர்ப் படிவங்களின் காலத்தை அறிய உதவும் சிறப்பான தற்போதைய முறை________

அ. ரேடியோ கார்பன் முறை               ஆ. யுரேனியம் – காரீய முறை           

இ. பொட்டாசியம் – ஆர்கான் முறை      ஈ. அ மற்றும் இ

6.   உலக புகையிலை எதிர்ப்பு தினம்

அ. மே 31        ஆ. ஜூன் 6                இ. ஏப்ரல் 22              ஈ. அக்டோபர் 2

7.    விழி ஏற்பமைவுத் திறன் குறைபாட்டைச் சரி செய்ய உதவுவது

அ. குவிலென்சு ஆ. குழி லென்சு          இ. குவி ஆடி              ஈ. இரு குவிய லென்சு

8.   பீட்டா சிதைவின் போது ______

அ. நியூட்ரான்களின் எண்ணிக்கையில் ஒன்று குறையும்

ஆ. அணு எண்ணில் ஒன்று குறையும்

இ. புரோட்டான்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரிக்கும்

ஈ. நியூட்ரான்களின் எண்ணிகையில் ஒன்று அதிகரிக்கும்

9.   கீழ்க்கண்டவற்றுள் ‘ தலைமைச் சுரப்பி ‘ எனக் கருதப்படுவது எது?

அ. பினியல் சுரப்பி       ஆ. பிட்யூட்டரி சுரப்பி     இ. தைராய்டு சுரப்பி     ஈ. அட்ரினல் சுரப்பி

10.  உட்கருவிலுள்ள உட்கருமணி இதனால் உருவாக்கப்படுகிறது?

அ. இரண்டாம் நிலைச் சுருக்கம்          ஆ. முதல் நிலைச் சுருக்கம்     

இ. டீலோமியர்                                ஈ. லோகஸ்

11.    DNAவை வெட்ட பயன்படுவது __________

அ. கத்தரிக்கோல்         ஆ. ரெஸ்ட்ரிக்ஸன் எண்டோ நியூக்ளியேஸ்     

இ. கத்தி                   ஈ. RNA நொதிகள்

12.  மிக மலிவான வழக்கமான வர்த்தக ரீதியிலான மற்றும் தீர்ந்து போகாத ஆற்றல் மூலம்________

அ. நீர் ஆற்றல்            ஆ. சூரிய ஆற்றல்        இ. காற்றாற்றல்           ஈ. வெப்ப ஆற்றல்

13.  மின்விளக்கு ஒன்று குவிலென்சு ஒன்றின் முதன்மைக் குவியத்தில் வைக்கப்பட்டுள்ளது. மின்விளக்கு ஒளியூட்டப்படும் போது, குவி லென்சானது  _______

அ. குவிக்கும் கற்றைகளை உருவாக்கும்                   ஆ. விரிக்கும் கற்றைகளை உருவாக்கும்

இ. இணைக் கற்றைகளை உருவாக்கும்                   ஈ. நிறக் கற்றைகளை உருவாக்கும்

14.  காமாக் கதிரியக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாக்க ____________

அ. காரீய ஆக்ஸைடு              ஆ.இரும்பு       இ. காரீயம்       ஈ. அலுமினியம்

15.  பின்வருவனவற்றுள் எது ‘ தனிமம் + தனிமம் ---------à சேர்மம்’ வினை வகை அல்ல.

அ. C(S) + O2(g)àCO2(g)      ஆ.2K(S) + Br2(I) à 2KBr(S)                   இ.2CO(g) + O2(g)à2CO2(g)

ஈ. 4Fe(S) + 3O2(g-> 2Fe2O3

16.  கிரப் சுழற்சி நடைபெறும் இடம் ___________

அ. பசுங்கணிகம்         ஆ. மைட்டோகாண்ட்ரியாவின் உட்பகுதி ( ஸ்ட்ரோமா )

இ. புறத்தோல் துளை   ஈ. மைட்டோகாண்ட்ரியாவின் உட்புறச் சவ்வு

17.  கீழ்க்கண்டவற்றுள் எந்நிகழ்வு நடைபெற ஆற்றல் தேவை

அ. செயல் மிகு கடத்தல்           ஆ. பரவல்       இ. சவ்வூடு பரவல்       ஈ. அனைத்தும்

18.  கணையம் ______ சுரப்பியாகச் செயல்படுகிறது.

அ. நாளமுள்ள             ஆ. நாளமில்லா           இ. அ மற்றும் ஆ          ஈ. பறக்கும்

19.  கீழ்க்கண்டவற்றுள் இரு பண்புக் கலப்பின விகிதத்தைக் கண்டறிக.

அ. 9:3:3:1        ஆ. 9:1:3:1         இ. 9:1:3:3        ஈ. 1:2:1

20. கீழ்க்கண்டவற்றுள் டயாபடிஸ் மெல்லிடஸ் தொடர்பான வேறுபட்ட ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்……

அ. நோயின் தாக்கம் 10% - 20%         ஆ. இளம்பருவத்தில் தொடங்குகிறது

இ. உடல் எடை குறைதல்                 ஈ. உடல் பருமன்

21.  அணு எண் _________ தனிமங்கள் தன்னிச்சையான கதிரியக்கத்தை வெளியிடும்.

அ. 83 ஐ விட அதிகமான         ஆ. 83 ஐ விடக் குறைவான     இ. 73ஐ விடக் குறைவான

ஈ. 83ஐக் கொண்ட

22. 25 விழுக்காடு (25%) எத்தனால் கரைசல் என்பது ___

அ. 25 மிலி எத்தனால் 100 மிலி நீரில் உள்ளது           ஆ. 25மிலி எத்தனால் 25 மிலி நீரில் உள்ளது

இ. 25மிலி எத்தனால் 75மிலி நீரில் உள்ளது.             ஈ. 75மிலி எத்தனால் 25மிலி நீரில் உள்ளது

23. ஒரு மீள்வினையில் உருவாகும் விளைபொருளை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நீக்கும் பொழுது விளைபொருள் உருவாகும் அளவு __________

அ. அதிகரிக்கிறது         ஆ. குறைகிறது           இ. முதலில் குறைந்து பின் அதிகரிக்கிறது

ஈ. முதலில் அதிகரித்து பின் குறைகிறது

24. ஒளிச்சேர்க்கையின் போது கீழ்க்கண்ட எந்நிலையில் ஆக்ஸிஜன் உற்பத்தியாகிறது?

அ. ATP யானது ADP யாக மாறும் போது         ஆ. CO2 நிலைநிறுத்தப்படும் போது

இ. H2O மூலக் கூறுகள் பிளக்கப்படும் போது     ஈ. இவை அனைத்தும்

25. வேர்த்தூவியானது ஒரு ________

அ. புறணி செல்லாகும்             ஆ, புறத்தோலின் நீட்சியாகும்    இ. ஓரு செல் அமைப்பாகும்

ஈ. ஆ மற்றும் இ

26. புதைவடிவப் பறவை என்று கருதப்படும் உயிரினம் ________

அ. ஜிங்கோ பைலோபா           ஆ. ஆர்க்கியாப்டெரிக்ஸ்           இ. பேலியோஸோயிக் பெருந்தாவரங்கள்   ஈ. இந்திய கோண்ட்வானா

27. மனிதரில் ஓர் ஆண் கேமீட்டும் ஒரு பெண் கேமீட்டும் இணைந்து  கருமுட்டை உருவாகிறது. கருமுட்டையின் நிலை __________

அ. ஒரு மயம்    ஆ. இரு மயம்   இ. மும்மயம்     ஈ. நான்மயம்

28. இரத்தப் புற்று நோய்க்கு ______ என்று பெயர்

அ. லுயூக்கேமியா         ஆ. சார்க்கோமா           இ. கார்சினோமா         ஈ. லிம்போமா

29. இரு பொருள்கள் கூறிப்பிட்ட இடைவெளியில் உள்ள போது அவற்றிற்கிடையேயுள்ள விசை F என்க. அவற்றின் தொலைவு இரு மடங்கானால் அவற்றின் ஈர்ப்பு விசை ___________ ஆக இருக்கும்.

அ. 2F             ஆ. F/2           இ. F/4           ஈ. 4F

30. வெப்ப நிலை உயர்வால் பொருளின் பரிமாணத்தில் ஏற்படும் மாற்றம் _____ என அழைக்கப்படுகிறது.

அ. வெப்பவிரிவு           ஆ. வெப்பமாற்றம்        இ. வெப்பச் சலனம்                ஈ. ஆவியாதல்

31.   ஈரம் உறிஞ்சிக்கரையும் பண்பிற்கான காரணம்___

அ. நீரின் மீது அதிக நாட்டம்      ஆ. நீரின் மீது குறைவான நாட்டம்       இ. நீரின் மீதான நாட்டமின்மை   ஈ. நீரின் மீதான மந்தத் தன்மை

32. ஒரு வேதிச்சமநிலையில் வினைபடு,வினைவிளை பொருட்களின் செறிவுகள் ________

அ. வேறுபட்டு இருக்கின்றன              ஆ. ஒரே மாதிரியாக இருக்கின்றன

இ. கணிக்க முடியாதவை                  ஈ. சம்மாக இராது

33. DNA விரல்ரேகை தொழில்நுட்பம் _______ DNA வரிசையை அடையாளம் காணும் கொள்கையினை அடிப்படையாகக் கொண்டது.

அ. ஓரிழை       ஆ. திடீர் மாற்ற முறை            இ. பல்லுருத் தோற்ற              ஈ. மீண்டும் மீண்டும் வரும் தொடர்.

34. பின்வருவனவற்றுள் எது/எவை புதைபடிவ எரிபொருள்/கள்

I தார்    ii நிலக்கரி        iii பெட்ரோலியம்

அ. I மட்டும்       ஆ. I மற்றும் II   இ. II மற்றும் iii             ஈ. I,ii மற்றும் iii

35. ஒன்றோடொன்று இடைவினை புரியாமல் இருக்கும் அணுக்கள் அல்லது மூலக்கூறுகளை உள்ளடக்கிய வாயு __________ என அழைக்கப்படுகிறது.

அ. இயல்பு வாயு          ஆ. நல்லியல்பு வாயு               இ உயரிய வாயு         ஈ. அரிதான வாயு

36. மனிதனால் உணரக்கூடிய செவியுணர் ஒலியின் அதிர்வெண் ______

அ. 50 kHz       ஆ. 20 kHz                இ. 15000 kHz            ஈ. 10000 kHz

37. ஒரு மூலக்கூறு ஒரே வகை அணுக்களால் ஆக்கப்பட்டிருப்பின் அது ________ என அழைக்கப்படுகிறது.

அ. ஓரணு மூலக்கூறு             ஆ. வேற்று அணுமூலக் கூறு              இ. ஒத்த அணு மூலக்கூறு

ஈ. பல அணு மூலக் கூறு

38. பின் வருவனவற்றைப் பொருத்தி அட்டவணையின் கீழுள்ள விடைகளுள் சரியான ஒன்றைத் தேர்ந்தெடு

A.     நாகமுலாம் பூசுதல்                    - I. வெள்ளி – வெள்ளீயம் ரசக்கலவை

B.    காற்றில்லா வறுத்தல்                   - ii. துத்தநாகத்தைப் பூசுதல்

C.    ஆக்சிஜனேற்ற ஒடுக்க வினை       - iii. காற்றில்லாச் சூழலில் வெப்பப்படுத்துதல்

D.    பற்குழி அடைத்தல்                      - iv.  அலுமினோ வெப்ப ஒடுக்க முறை

அ. A-I,B-ii,C-iii,D-iv               ஆ. A-I,B-iv,C-iii,D-ii     இ.A-ii,B-iii,C-iv,D-i

ஈ. A-ii,B- iv,C-I,D-iii

39. வேரின் __________ அமைப்பானது நீரை உறிஞ்ச உதவுகிறது

அ. வேர்த்தூவி            ஆ. கியுட்டிக்கிள்           இ. புளோயம்              ஈ. வேர்த்தொப்பி

40. லாங்கர்ஹான் திட்டுகளில் உள்ள பீட்டா செல்கள் ________ ஐச் சுரக்கின்றன.

அ. குளுக்கோகான்      ஆ. இன்சுலின்            இ. தைமோசின்          ஈ. ஆக்சிடோசின்

41.   பரிணாமத்தின் இயற்கைத் தேர்வு கோட்பாட்டை முன்மொழிந்தவர் ____________

அ. ஹார்ஸ்பெர்கர்        ஆ. லிப்பி                   இ. லாமார்க்               ஈ. சார்லஸ் டார்வின்

42. எபிதீலியல் செல்லில் உருவாகும் புற்றுநோய்க்கு ____________ என்று பெயர்

அ. லுயூக்கேமியா         ஆ. சார்க்கோமா           இ. கார்சினோமா          ஈ.லிம்போமா

மாணவர்கள் மேற்கண்ட வினாக்களை நன்றாக படித்துவிட்டு பின் இணைய வழித் தேர்வு எழுதவும். மேலும் இந்த இணைய வழித் தேர்வினை மாணவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம். தங்களின் மதிப்பெண்ணை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். 

TO ATTEND THE ONLINE QUIZ

FOR THIS QUESTIONS 

CLICK HERE 

👇👇👇👇👇

 

CLICK HERE TO GET PDF  

 

 

5 Comments

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post