அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், அன்பு மாணவச் செல்வங்களுக்கும் அன்பான வணக்கம். மே 6 முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று மே 30 அன்று நிறைவுற்றது. எல்லா வகுப்பு மாணவர்களுக்குமே பொதுத் தேர்வு முடிந்து விட்டது. இந்நிலையில் ஜூன் 1 முதல் பனிரெண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியும், ஜூன்- 2 முதல் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியும் நடைபெற உள்ளது. இதன் பொருட்டு அரசு தேர்வுகள் இயக்கம் வழங்கும் விடைக்க்குறிப்பின் அடிப்படையில் விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. பத்தாம் வகுப்புக்குத் தேவையான அரசுத் தேர்வுகள் இயக்ககம் வழங்கிய விடைக்குறிப்பு நமது தமிழ் விதை வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்ததந்த பாட ஆசிரியர்களும், மாணவச்செல்வங்களும் நமது வலைதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழ் பாடத்தில் மனப்பாடப்பகுதிக்கு ஏதேனும் ஒரு பாடல் நான்கு வரிகள் எழுதி இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம் எனக் குறிப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் தாங்கள் எழுதிய ஒரு பாடலுக்கு முழுமதிப்பெண் கிடைக்கும். இரு பாடல்கள் எழுதி இருப்பின் அதில் எந்த பாடல் வேண்டுமானாலும் திருத்தி மதிப்பெண் வழங்கலாம் என குறிப்பு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தமிழ் பாடத்தேர்வில் மனப்பாடப்பகுதிக்கான மதிப்பெண் வழங்குவது பற்றிய குழப்பம் இதன் வழியாக தீர்வு கிடைத்துள்ளது.
பத்தாம் வகுப்பு - விடைக்குறிப்புகள்
தமிழ்
1215611
ReplyDelete