அன்பார்ந்த மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வணக்கம். பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு மே - 6 முதல் நடைபெற்று வருகிறது. இது வரை தமிழ் மற்றும் ஆங்கிலம் தேர்வுகள் நடைபெற்று முடிவுந்துள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடத்திற்கு நமது தமிழ்விதை வலைதளம் மூலம் கற்றல் வளங்கள் கொடுக்கப்பட்டது. அதனைப் பயன்படுத்தி மாணவர்கள் தேர்வினை எதிர்க் கொண்டனர். நமது வலைதளத்தில் அனைத்து பாடங்களுக்கும் திறமையான ஆசிரியர்களைக் கொண்டு உருவாக்கப் பட்ட கற்றல் வளங்களை அனைத்து மாணவர்களும் பயன்படுத்தும் படி இலவசமாக வழங்கி வருகிறோம். நமது நோக்கம் அனைத்து மாணவர்களும் அனைத்ஹ்டு பாடங்களிலும் தேர்ச்சி பெற வேண்டும் என்பது மட்டுமே. அதற்காக உருவாக்கப்பட்டது தான் இந்த தளம். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த வலைதளத்தின் இணைய இணைப்பை தங்களுக்குத் தெரிந்த நண்பர்கள்,உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கம் உள்ளோர் மற்றும் உங்களின் சமூக வலைதளங்களில் பகிர்ந்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி அடைய நீங்களும் உதவிடும் படி அன்போடு வேண்டுகிறேன். தற்போது மே - 24 பத்தாம் வகுப்பு கணித பாடம் பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் இங்கு உங்களுக்கு பாடங்கள் வாரியாக காணொளி பதிவுகளை உங்களுக்கு வழங்க உள்ளோம். இந்த கணித பாடங்களின் காணொளியை உருவாக்கி அதனை அனைத்து மாணவர்களுக்கும் சென்றடைய பெரும் உதவியை நல்கிய ஆசிரியர் திரு.S.சுரேஷ் அவர்களுக்கு மாணவர்களின் சார்பில் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாணவர்கள் அனைவரும் ஆசிரியரின் YOU WIN SURE என்ற வலையொளியை SUBSCRIBE செய்துக் கொள்ளவும். அப்போது தான் அவர் கொடுக்கும் புதிய காணொளிகள் உங்களுக்கு விரைவில் வந்தடையும். நீங்கள் அனைவரும் தேர்ச்சி பெற தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளத்தின் மனமார்ந்த வாழ்த்துகள்.
மாணவர்கள் பயிற்சி பெற ஏதுவாக ஆசிரியர் திரு. சுரேஷ் அவர்கள் மூலம் உருவாக்கப்பட்ட பயிற்சித் தேர்வு வினாத்தாள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வினாத்தாள் 70 மதிப்பெண் கொண்ட வினாத்தாளாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த இரண்டு பயிற்சி வினாத்தாளினை நன்முறையில் வீட்டில் பயிற்சி செய்து பார்க்கவும்.இந்த பயிற்சி வினாத்தாள் உங்களின் பயிற்சிக்கு மேலும் வலு சேர்க்கும். இந்த பயிற்சி வினாத்தாளினைப் பெற கீழ் உள்ள DOWNLOAD என்பதனை CLICK செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
CLICK HERE TO DOWN LOAD PDF