அரசு மாதிரி பொதுத்தேர்வு 2019- 2020 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மாதிரி வினாத்தாளில் இந்த கல்வி ஆண்டு 2021 - 2022க் கான குறைக்கப்பட்டப் பாடத்திற்கான வினாக்கள் இடம்பெற்றுள்ள வினாக்கள் மட்டும் இங்கு தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இதனை பயிற்சி மேற்கொள்ளவும். எதிர் வரும் மே 6 -2022 பொதுத் தேர்வு இந்த வினாத்தாள் தொகுப்பு பயிற்சி மேற்கொள்ள உதவும். தற்போது இங்கு கொடுக்கப்பட்டுள்ள குறுவினாக்கள் தொகுப்பு அனைத்து நிலை மாணவர்களும் இந்த பயிற்சி வினாக்களை பயிற்சி செய்யவும். இவை பொதுத்தேர்வில் இடம் பெற்றாலும் இடம் பெறலாம். இது மாதிரி வினாத்தாளிலிருந்து எடுக்கப்பட்ட குறைக்கப்பட்டப் பாடத்திற்கான அனைத்து வினாக்களும் இடம் பெற்றுள்ளன.
நன்றி, வணக்கம்
பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள்
2019- 2020
இரண்டு மதிப்பெண் வினாக்கள்
முன்னுரிமை அளிக்கப்பட்டப் பாடங்கள்
மீத்திற மாணவர்களுக்கும், சராசரி
மாணவர்களுக்கும் கொடுத்து பொதுத் தேர்வுக்கு அவர்களை ஆயத்தப்படுத்த ஏதுவாக இருக்கும். ஆறு மாதிரி வினாத்தாளிலிருந்து குறைக்கப்பட்டப் பாடபகுதிக்கு உரிய வினாக்கள் மட்டும் இங்கு தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.
பிரிவு – 1
( செய்யுள் ,உரைநடை குறு வினாக்கள்
)
1. ‘ காய்மணி யாகு முன்னர் காய்ந்தெனக் காய்ந்தேன் ‘ – உவமை உணர்த்தும் கருத்து யாது?
2. தமிழ்ச்சொல் வளம் குறித்து கால்டுவெல் குறிப்பிடும் கருத்தை எழுதுக.
3. நமக்கு உயிர் காற்று
காற்றுக்கு வரம் மரம் – மரங்களை
வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம் – ‘ இது போன்று உலக காற்று நாள் ‘ விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத் தொடர்களை எழுதுக.
4. மெய்கீர்த்திக் குறித்து தாங்கள் அறிந்த இரண்டு கருத்துகளை எழுதுக.
5. கொடை என்பது ஓர் அறம் என்பதனை ஒளவையார் எவ்வாறு குறிப்பிடுகிறார்?
6. எதற்காக எழுதுகிறேன்? என்று ஜெயகாந்தன் கூறிய காரணம் ஒன்றைக் குறிப்பிடுக.
7. மெய்கீர்த்தி பாடுவதன் நோக்கம் யாது?
8. முல்லை நிலத்திலிருந்தும், மருத நிலத்திலிருந்தும் கிடைக்கும் உணவுப் பொருள்கள் யாவை?
9. மருத்துவத்தில் மருந்துடன் அன்பும்,நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.
10. ‘ கரம்பிடும்பை இல்லார் ‘ – இத்தொடரின் பொருளை வள்ளுவர் வழி நின்று கூறுக.
11. வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி என்பதற்குச் சான்று தருக.
12. பாசவர்,வாசவர்,பல்நிண விலைஞர், உமணர் – சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?
13. குறிப்பு வரைக: “ அவைவயம் “
14. ‘ காலக் கழுதை கட்டெறும்பானதும் ‘ – கவிஞர் செய்தது யாது?
15. உறங்குகின்ற கும்பகன்ன ‘ எழுந்திராய் எழுந்திராய் ‘ கால தூதர் கையிலே ‘ உறங்குவாய் உறங்குவாய் ‘ – கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?
விடைக்கேற்ற வினா அமைக்க.
1.
தப்பாட்டம்
நிகழ்த்தப்படும் சூழலுக்கேற்ப பல்வேறு ஆட்டக் கூறுகளைக் கொண்டுள்ளது.
2.
ஒயிலாட்டத்தில்
தோலால் கட்டப்பட்ட குடம், தவில், சிங்கி, டோலக், தப்பு போன்ற இசைக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன,
3.
நாயக்கர்
,மராட்டியர் ஆட்சிக் காலங்களில் மிகுதியான சத்திரங்கள் வழிச்செல்வோர்காகக் கட்டப்பட்டன.
4.
அமெரிக்காவின்
மினசோட்டா தமிழ்சங்கம் ‘ வாழை இலை விருந்து விழாவை ‘ ஆண்டு தோறும் கொண்டாடி வருகிறது.
5.
ஒரு
நாட்டு வளத்திற்குத் தக்கபடியே, அந்நாட்டு மக்களின் அறிவொழுக்கங்கள் அமைந்திருக்கும்.
6.
சொல்லாராய்ச்சியில்
பாவாணரும் வியந்த பெருமகனார் தமிழ்த்திரு. இரா. இளங்குமரனார்.
7.
செயற்கை
நுண்ணறிவு கருவியான வாட்சன்,சில நிமிடங்களில் நோயாளி ஒருவரின் புற்று நோயைக் கண்டுபிடித்தது
8.
வேர்டுஸ்மித்
என்ற எழுத்தாளி தகவல்களைக் கொண்டு சில நொடிகளில் அழகான கட்டுரையை உருவாக்கி விடும்.
9.
சாலைகளின்
இடப்பக்கம் வண்டிகள் செல்வதே சாலை விதிகளில் முதன்மையான விதி.
10.
ஓட்டுநர்
உரிமம, ஊர்தியின் பதிவுச் சான்றிதழ், ஊர்தியின் வழி மற்றும் காப்பீட்டுச் சான்றிதழ் போன்றவற்றை
ஊர்தி ஓட்டுபவர் ஒவ்வொருவரும் கட்டாயமாகக் கையில் வைத்திருக்க வேண்டும்.
11. மொழிபெயர்ப்பு,மொழியில்
புதுக் கூறுகளை உருவாக்கி மொழி வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது.
12.
தமிழ்
நூல்கள்,ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, இந்தி,கன்னடம்,வட மொழி, ரஷ்ய மொழி,வங்க மொழி,
மராத்தி மொழி, போன்ற பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
கட்டாய வினா ( திருக்குறள் )
1.
‘
செயற்கை ‘ எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.
2.
பாடலோடு
பொருந்தாத இசையால் பயனில்லை என்னும் உவமையைக் கொண்ட திருக்குறளை எழுதுக.
3.
மலைமேல்
பாதுகாப்பாக நின்றுகொண்டு யானைப் போரைக் காணும்
உவமையைக் கொண்ட திருக்குறளை எழுதுக.
4.
“
விடல் “ – என முடியும் திருக்குறளை எழுதுக.
5.
குற்றம்
இல்லாமல் தன் குடிபெருமையை உயரச் செய்து வாழ்பவரை உலகத்தார் உறவாகப் போற்றுவர் என்னும்
பொருளைக் கொண்ட திருக்குறளை எழுதுக
பிரிவு
– 2
(இலக்கணம்
, மொழித்திறன் பயிற்சிகள் )
1. குறள் வெண்பாவின் இலக்கணத்தை எழுதுக.
2. இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து
எழுதுக.
அ) தொடு – தோடு ஆ) மலை – மாலை
3. தணிந்தது – பகுபத உறுப்பிலக்கணம் தருக
4.
புறத்திணைகளில் எதிரெதிர் திணைகளை அட்டவணைப்படுத்துக.
5. குறிப்பைப் பயன்படுத்தி விடைத் தருக.
குறிப்பு : எதிர்மறையான சொற்கள் ஆ) மீளாத்துயர்
6. கலைச்சொல் தருக:- HOMOGARPH VOVEL
7. சொற்களை இணைத்துப் புதிய சொற்களை
உருவாக்குக.
தேன்,மணி,மழை,மேகலை
8. நாள்காட்டியில் ஞாயிற்றுக் கிழமை
இருபதாம் நாள் எனில் அந்த வாரத்தில் புதங்கிழமையும் , சனிக்கிழமையும் எந்த நாள்கலில்
வரும் என்பதனை தமிழெண்களில் எழுதுக.
ஞாயிற்றுக்கிழமை - 20
புதன் கிழமை - -----
சனிக்கிழமை - ------
9. தொடரில் பொருந்தாப் பொருள் தரும்
மயங்கொலி எழுத்துகளிய திருத்தி எழுதுக.
அ) இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை.கரடிகள்
மறத்தின் மீதேறி அவற்றைப் பரித்து ய்ண்ணூம்.பாதிரிப்பூ குடிநீருக்குத் தண் மணத்தை ஏற்றும்.
ஆ) மலர் உண்டு; பெயரும் உண்டு –
இரண்டு தொடர்களையும் ஒரே தொடராக்குக.
10. வேங்கை என்பதைத் தொடர்மொழியாகவும்,
பொது மொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.
11. காட்டில் விளைந்த வரகில் சமைத்த
உணவு மழைக்கால மாலையில் சூடாக உண்ணச் சுவை மிகுந்திருக்கும். இத்தொடரில் அமைந்துள்ள
முதல் பொருள், கருப்பொருள் வகைப்படுத்தி எழுதுக.
12. கலைச்சொல் தருக:- அ)Ultraviolet
rays ஆ) Space technology
13. எதிர்மறையான சொற்கள் தருக. அ) மீளாத் துயர் ஆ) புயலுக்கு பின்
14. பொருத்தமான நிறுத்தக் குறியிடுக.
சேரர்களின் பட்டப் பெயர்களில் கொல்லி
வெற்பன் மலையமான் போன்றவை குறிப்பிடத்தக்கவை கொல்லி மலையை வென்றவன் கொல்லி வெற்பன்
எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் மலையமான் எனவும் பெயர் சூட்டிக் கொண்டனர் இதற்குச்
சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன
15. வருக – பகுபத உறுப்பிலக்கணம் தருக.
16. தொழிற்பெயர்களின் பொருளிற்கேற்பத்
தொடர்களை முழுமை செய்க.
அ) பசுமையான ____________ ஐக்
_________ கண்ணுக்கு நல்லது. ( காணுதல்,காட்சி )
ஆ) காட்டு விலங்குகளைச்
_______________ தடை செய்யப்பட்டுள்ளது. செய்த தவறுகளைச் ____________ திருத்த உதவுகிறது.
( சுட்டல்,சுடுதல் )
17. பொறித்த – பகுபத உறுப்பிலக்கணம்
தருக.
18. தொடரில் விடுபட்டுள்ள வண்ணச்சொற்களை
உங்கள் எண்ணங்களால் பொருத்தமுற நிரப்புக.
அ) வானம்
________________ தொடங்கியது. மழை வரும் போலிருக்கிறது.
ஆ) கண்ணுக்குக்
குளுமையாக இருக்கும் ______________ புல்வெளிகளில் கதிரவனின் ______________ வெயில்
பரவிக் கிடக்கிறது.
இ) அனைவரின்
பாராட்டுகளால், வெட்கத்தில் பாடகர் முகம் _______________
19. இந்த அறை இருட்டாக இருக்கிறது. மின்
விளக்க்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது? இதோ…… இருக்கிறதே! சொடுக்கியைப் போட்டாலும்
வெளிச்சம் வரவில்லையே! மின்சாரம் இருக்கிறதா? இல்லையா?.
மேற்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின்
வகைகளை எடுத்தெழுதுக.
20. “ அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது “ – இக்குறளில்
பயின்று வந்துள்ள அணியின் இலக்கணம் யாது?
21. கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களைப்
பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க.
அ) இயற்கை - செயற்கை ஆ)
தான் – தாம்
22. கலைச்சொல் தருக:- அ) Belief ஆ) Renaissance
23. மரபுத்தொடர்களைப் பொருளறிந்து தொடரில்
அமைக்க.
அ) கண்ணும்
கருத்தும் ஆ) மனக்கோட்டை
24. கலைச்சொல் தருக. அ) Aesthetics ஆ) Myth
25. பொருத்தமானவற்றைச் சொற்பெட்டியில்
கண்டு எழுதுக.
கவிழும் , அவிழும், தயங்கும்,
தங்கும் |
காலை ஒளியினில் மலரிதழ் ________________
சோலைப் பூவினில் வண்டினம்
________________
மலை முகட்டில் மேகம் _________________
அதைப் பார்க்கும் மனங்கள் செல்லத்
__________________
26. தண்ணீர் குடி, தயிர்க்குடம் ஆகிய
தொகைச் சொற்களை விரித்து எழுதி, தொடரில் அமைக்க.
27. கம்பனும் கண்டேத்தும் உமறுப்புலவரை
எந்தக்
கொம்பனும் பணியும் அறம்பாடுஞ் ஜவாது
ஆசுகவியை
காசிம் புலவரை,குணங்குடியாரை சேகனாப்
புலவரை
செய்குதம்பிப் பாவலரைச் சீர் தமிழ்
மறக்காதன்றோ
பாடலில் இடம் பெற்றுள்ள தமிழ் புலவர்களில் எவரேனும் நான்கு புலவர்களின்
பெயர்களைக் கண்டறிந்து எழுதுக.
28. பகை வேந்தர் இருவரும் வலிமையே பெரிது
என்பதை நிலை நாட்ட, போரிடும் திணை குறித்து எழுதுக.
29. உரைத்த – பகுபத உறுப்பிலக்கணம் தருக.
30. கல்,ஆடு,கீரை,மக்கள் – இச்சொற்களின்
கூட்டப் பெயர்களை எழுதுக.
31. மரபுத் தொடருக்கான பொருளறிந்து தொடரில்
அமைத்து எழுதுக.
அ) கண்ணும்
கருத்தும் ஆ ) கயிறு திரித்தல்
32. அறியேன் – பகுபத உறுப்பிலக்கணம்
தருக.
33. “ தம்பி? எங்க நிக்கிறே?,” “ நீங்க
சொன்ன எடத்துலதாண்ணே! எதிர்த்தாப்புல ஒரு டீ ஸ்டால் இருக்குது “ - இவ்வுரையாடலில் உள்ள
பேச்சு வழக்கினை எழுத்து வழக்காக மாற்றுக,
34. கலைச்சொல் தருக. அ) Epic literature ஆ) Folk literature
35. இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து
எழுதுக.
அ) சிலை, சீலை ஆ) விடு, வீடு
36. தீவக அணியின் வகைகள் யாவை?
37. அ) ஓடிக் கொண்டிருந்த மின்விசிறி
சட்டென நின்றவுடன் அறையில் உள்ளவர்கள் பேச்சு தடைபட்டது. இத்தொடரைத் தனிச்சொற்றொடர்களாக
மாற்றுக.
ஆ) அழைப்பு மணி ஒலித்தது. கயல்விழி
கதவைத் திறந்தார் – தனிச் சொற்றொடர்களைக் கலவைத் தொடராக்குக.
38. “ கொடுப்பதூஉம் துப்பதூஉம் இல்லார்க்கு
அடுக்கிய
கோடிஉண் டாயினும் இல் “ – இக்குறளில்
வரும் அளபெடைகளை எடுத்து எழுதுக.
39. சந்தக் கவிதையில் வந்த பிழைகளைத்
திருத்தி எழுதுக.
“ தேனிலே ஊரிய செந்தமிழின் – சுவை
தேரும் சிலப்பதி காறமதை
ஊனிலே உம்முயிற் உல்லலவும் – நிதம்
ஓதி யுனர்த்திண் புருவோமே”
40. தொகைச்சொற்களைப் பிரித்து எழுதி,தமிழ்
எண்ணுரு தருக.
முப்பாலை
முழுமையாகத் தந்த தமிழின் சிறப்பினை ஐந்திணைகளில் அழகுற விளக்குபவை சங்க இலக்கியங்கள்.
41. கலைச்சொல் தருக.:- அ) Tornado ஆ)
Tempest
42. சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை
விடுவிக்க.
( காடு , காற்று , நறுமணம் )
அ) முதல் இரண்டை நீக்கினாலும் வாசனை
தரும்; நீக்காவிட்டாலும் வாசனை தரும்.
ஆ) ஓரெழுத்தில் சோலை – இரண்டெழுத்தில்
வனம்.
43. பத்தியிலுள்ள பிறமொழிச் சொற்களைத்
தமிழ்ச் சொற்களாக மாற்றி எழுதுக.
உங்களிடம்
செவன் கோல்டு பிஸ்கட் உள்ளது. தராசின் இரண்டு தட்டுகளிலும் மூன்று மூன்று கோல்டு பிஸ்கட்டை
வைத்தால் தராசு ஈக்வலாக இருக்கும். பேலன்ஸாக ஒரு கோல்ட் பிஸ்கட் உங்கள் கையில் இருக்கும்.
44. “ உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின்
பிறர்மேல்
வடுக்கண் வற்றாகும் கீழ் “ – இக்குறளில்
அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி,அதன் இலக்கணம் தருக.
45. கிளர்ந்த – பகுபத உறுப்பிலக்கணம்
தருக.
46. தொடர்களில் உள்ள முதல் சொல்லைச்
செழுமை செய்க.
அ) மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.
ஆ) வாழ்க்கைப் பயணமே வேறுபட்ட பாடங்களைக்
கற்றுத் தருகிறது.
47. வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை
மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய்மொழிக்குச் செல்கிறேன்.
-
இத்தொடர்,
கால வழுவமைத்திக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?
மிகச் சிறந்த தமிழ்ப்பணி
ReplyDeleteவாழ்க வளமுடன்
நன்றி