10TH - TAMIL - PTA QUESTION COLLECTION - MOZHI THIRAN

 அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், அன்பு மாணவச்செல்வங்களுக்கும் வணக்கம். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தமிழ்ப்பாடத்திற்குத் தேவையான அனைத்து தொகுப்புகளும் நமது தமிழ் விதை வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 2019- 2020 ஆம் கல்வி ஆண்டில் பெற்றோர் ஆசிரியர் கழகம் வெளியிட்ட மாதிரி வினாத்தாளில் இடம் பெற்றுள்ள வினாக்கள் மற்றும் அதன் விடைகள் உங்களுக்கு நமது தமிழ்விதை வலைதளம் மூலம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவும். இதனை தயாரித்து வழங்கிய தமிழக தமிழாசிரியர் கழகம் - சேலம் மாவட்டம் அவர்களுக்கு தமிழ்விதையின் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

மொழித் திறன் பயிற்சி வினாக்கள் மற்றும் விடைகள் தொகுப்பு

மொழிபெயர்ப்பு (PTA -2)

 If you talk to a man in a language he understands, that goes to his head. If you talk to him in his own language that goes to his heart. - Nelson Mandela.

ஒரு மனிதனிடம் ஏதாவது ஒரு மொழியில் பேசினால், அது அவனது தலையில் சென்று பதிந்துவிடும் னால் அவனது தாய்மொழியில் பேசினால் நாம் பேசுவது அவனது இதயத்தில் பதிந்து விடும்.- நெல்சன் மண்டேலா

Language is the road map of a culture. It tells you where its people come from and where they are going - Rita Mae Brown.

மொழி நாகரிகத்தைக் காட்டுகின்ற வழி: அது மக்களை எங்கிருந்து வந்தார்கள்: எங்குச் செல்கிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்தும்.- ரிடா மே பிரௌன்

4.மொழி பெயர்க்க: (PTA-6)

Malar : Devi, switch off the lights when you leave the room.

 Devi :Yeah. We have to save electricity.

Malar : Our nation spends a lot of electricity for lighting up our streets in the night.

Devi : Who knows? In future our country may launch artificial moons to light our night

time sky!

Malar : I have read some other countries are going to launch these types of illumination

satellites near future!

Devi : Superb news! If we launch artifical moons, they can assist in disaster relief by

beaming light on areas that lost power!

தமிழில் மொழிபெயர்க்க :

மலர் : தேவி, அறையை விட்டு வெளியேறும் போது மின்விளக்குகளை அணைத்து விடு.

தேவி : ஆமாம், நாம் மின்சாரத்தைச் சேமிக்க வேண்டும்.

மலர் : நம்முடைய நாடு இரவில் நம்முடைய வீதிகளை வெளிச்சமாக்குவதற்கு நிறைய மின்சாரத்தைச் செலவிடுகிறது.

தேவி : யாருக்குத் தெரியும்? எதிர்காலத்தில் நம் நாட்டில் இரவுநேர வானத்தை வெளிச்சமாக்கச் செயற்கை நிலவுகளைச் செலுத்தலாம்.

மலர் : வேறு சில நாடுகளும் எதிர்காலத்தில் இந்த வகையிலான ஒளியமைப்புச் செயற்கைக் கோள்களைச் செலுத்தப் போகிறார்கள் என்று நானும் படித்திருக்கிறேன். தேவி : அருமையான செய்தி! நாம் செயற்கை நிலாவை அறிமுகப்படுத்தினால் நிலப்பகுதியில் ஒளியைப் பரப்புவதன் மூலம் இயற்கைப் பேரழிவின் போது மின்சாரம் இல்லாத இடங்களில் ஒளியைப் பாய்ச்சலாம், நிவாரணத்தின் போது உதவலாம்.

 

5. கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க

அ) இயற்கை - செயற்கை (PTA - 3 )

ஆ) கொடு - கோடு

இ) கொள் - கோள் -

ஈ) சிறு – சீறு

உ) தான் - தாம் (PTA – 3)

ஊ) விதி - வீதி

அ) இயற்கை - செயற்கை

விடை: பாதை தெரியாத இயற்கைக் காடுகளில் பயணிக்கச் செயற்கைக் கருவிகள் பயன்படுகின்றன.

 

ஆ) கொடு - கோடு

விடை: ராஜா எழுதுகோல் கொடுத்ததால் நான் புத்தகத்தில் கோடு போட்டேன்.

 

இ) கொள் - கோள்

விடை: தெரிந்து கொள் பூமியும் ஒரு கோள் தான்.

 

ஈ) சிறு - சீறு

விடை: திருவிழாக்களில் சிறுசிறு வியாபாரிகளிடம் ஊரார் சீறி விழுந்தனர்.

 

உ) தான் - தாம்

விடை: தான் என்ற எண்ணத்தை ஒழித்துத் தாம் என்ற எண்ணத்தை உருவாக்குவதே ஒற்றுமை.

 

ஊ) விதி - வீதி

விடை: சிலம்பில், கண்ணகி தன் விதிப்படி மதுரை வீதியில் நின்றாள்.

 

4. மொழிபெயர்ப்பு

ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச்சொற்களைக் கவிதையில் கண்டு எழுதுக PTA


          யாழிசை

அறைக்குள் யாழிசை

ஏதென்று சென்று

    பேத்தி,

நெட்டுருப் பண்ணினாள்

நீதிநூல் திரட்டையே

எட்டிப் பார்த்தேன்

           - பாரதிதாசன்

 

It's like new luté music

Wondering at the lute music

  Coming from the chamber

Entered I to look up to in still

    My grand-daughter

Learning by rote the verses

  Of a didactic compilation.

                          - Translated by Kavignar Desini

lute music - யாழிசை

chamber  - அறை

grand     - daughter - பேத்தி

rote        - நெட்டுரு (குருட்டுப் பாடம்)

to look up - எட்டிப்பார்த்த

didactic compilation - நீதி நூல் திரட்டு

 

2.தொடர்களை அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டுள்ளவாறு மாற்றுக

எ.கா.அழைப்பு மணி ஒலித்தது. கயல்விழி கதவைத் திறந்தார். (PTA -5) (தனிச்சொற்றொடர்களைக் கலவைச் சொற்றொடராக மாற்றுக)

அழைப்பு மணி ஒலித்ததால், கயல்விழி கதவைத் திறந்தார்.

1.இன்னாசியார் புத்தகங்களை வரிசைப்படுத்தினார். அவற்றைப் புத்தக அடுக்ககங்களில் அடுக்கவைத்தார். புத்தகங்களைக் கேட்டவர்களுக்கு எடுத்துக் கொடுத்தார்.

(தொடர் சொற்றொடராக மாற்றுக)

இன்னாசியார் புத்தகங்களை வரிசைப்படுத்தினார்; புத்தக அடுக்ககங்களில் அடுக்கி, புத்தகங்களை கேட்டவர்களுக்கு எடுத்துக் கொடுத்தார்.

2. ஒயிலாட்டத்தில் குழுவினர் ஒரே நிறத்துணியை முண்டாசு போலக் கட்டிக்கொண்டு, காலில் சலங்கை அணிந்துகொண்டு, கையில் ஒரு சிறுதுணியை இசைக்கேற்ப வீசியும் ஆடுவர்.

(தனிச் சொற்றொடர்களாக மாற்றுக)

ஒயிலாட்டத்தில் குழுவினர் ஒரே நிறத்துணியை முண்டாசு போலக் கட்டிக்கொள்வர். காலில் சலங்கை அணிந்து கொள்வர்.

கையில் ஒரு சிறு துணியை இசைக்கேற்ப வீசியும் ஆடுவர்.

3. கூத்துக் கலைஞர் பாடத் தொடங்கினார். கூடியிருந்த மக்கள் அமைதியாயினர் (PTA – 2)

(கலவைச் சொற்றொடர்களாக மாற்றுக)

கூத்துக் கலைஞர் பாடத் தொடங்கியதால் கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்.

4. ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி சட்டென நின்றவுடன், அறையில் உள்ளவர்கள் பேச்சு தடைபட்டது (தனிச் சொற்றொடர்களாக மாற்றுக) (PTA – 5)

 ஓடிக் கொண்டிருந்த மின்விசிறி சட்டென நின்றது. அறையில் உள்ளவர்கள் பேச்சு தடைப்பட்டது.

 

3. பிறமொழிச் சொற்களைத் தமிழ்ச்சொற்களாக மாற்றி எழுதுக (PTA - 6 செப்-20)

 புதிர்

உங்களிடம் ஏழு கோல்டு பிஸ்கட் உள்ளது. அதில் ஒன்று மட்டும் எடை குறைவானது. உங்களிடம் உள்ள ஒரு தராசை இரு முறைகள் மட்டுமே யூஸ் பண்ணி வெயிட் குறைந்த கோல்டு பிஸ்கட்டைக் கண்டுபிடிக்கவும்.

விடை

தராசின் இரண்டு தட்டுகளிலும் மூன்று மூன்று கோல்டு பிஸ்கட்டுகளை வையுங்கள். இரண்டு தட்டுகளும் ஈக்வலாக இருந்தால், கையில் மிச்சம் உள்ள பிஸ்கட்டே வெயிட் குறைவானது. பட், ஒரு பக்க தராசுத் தட்டு உயர்ந்தால் அதில் உள்ள மூன்று பிஸ்கட்களில் ஒன்று வெயிட் குறைவானது.

அந்த மூன்று பிஸ்கட்டுகளை மட்டும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு தட்டுகளிலும் ஒரு ஒரு பிஸ்கட்டைப் போட்டு இதே எக்ஸ்பெரிமெண்ட்டை ரிப்பீட் செய்து ஆன்சரைக் கண்டுபிடியுங்கள்! ஆல் தி பெஸ்ட்!

 

 

 

பிறமொழிச் சொல்                  தமிழ்ச் சொல்

கோல்டு பிஸ்கட்                              தங்கக் கட்டி

யூஸ் பண்ணி                      பயன்படுத்தி

வெயிட்                               எடை

ஈக்வலாக                                      சமமாக

பிஸ்கட்                               கட்டி(ஈரட்டி)

பட்                                               ஆனால்

மூன்று பிஸ்கட்                               மூன்று கட்டிகள்

எக்ஸ்பெரிமெண்ட்                  பரிசோதனை

ரிப்பீட் செய்து                        மறுபடியும் செய்து

ஆன்சர்                                         விடை

ஆல் தி பெஸ்ட்                      வாழ்த்துகள் நன்றாகச் செய்

 

 

1.மொழிபெயர்க்க. (PTA-4 செப்-20)

    Among the five geographical divisions of the Tamil country Marutam region was the fit for cultivation, as it had the most fertile lands. The property of a farmer depended on getting the necessary sunlight, seasonal

on getting the necessary sunlight, seasonal rains and the fertility of the soil. Among these elements of nature, sunlight was considered indispensa Tamils.

மொழிப்பெயர்ப்பு

மருதம்

தமிழகத்தின் ஐவகை நிலப்பகுதிகளில், சங்க இலக்கியம் தெரிவிப்பது, மருதநிலம் தான் வளமானதும் விவசாயத்திற்கு உகந்ததுமாய்க் காணப்படுகிறது. விவசாயிகள் சூரிய ஒளி, கால மழை, மண் வளம் இவற்றை நம்பித்தான் இருக்கிறார்கள்; இயற்கை வளங்களில் பண்டைய தமிழர் வாழ்வில் சூரிய ஒளிக்கு முதன்மையான இடம் தரப்பட்டுள்ளது.

 

V. கவிதையை உரையாடலாக மாற்றுக. (PTA – 6)

மகள்    : அம்மா என் காதிற்கு ஒரு தோடு (கம்மல்) வாங்கித் தந்து, போடுங்கள்

அம்மா : காதுக்குக் கம்மல் அழகல்ல; நான் கூறுவதைக் (கழறுவது) கவனி; நீதர் மொழியைக் கேட்டு

வந்து அதைக் காதில் அணிவாய் மகள் : என் கைக்கு இரண்டு வளையல் வீதம், கடன்பட்டாவது வாங்கிப் போடு; பாடசாலைக்குப் போகும் போது, என்னை எல்லாரும் பக்கி' என்றல்லவா சொல்ல நேரும். (தாய் சமாதானமாய்ப் பேசும் பேச்சு)

: மகளே, ஒரு நாளும் வராத விருந்தினர் களைப்புடன் வந்தால், அவர் மகிழ உபசரிக்கல் அதுவே உனக்கு வளையல். ஆராவமுதே உன் அறிவைத் (மதி) துலங்கச் செய்; இல்லையேல் உன் கைகளுக்கு வளையல், விலங்கு போட்டது போலாகும்.

மீண்டும் மகள் : அம்மா, நகைகள் இல்லையேல், என்னைத் தெருவில் போகும் போது, யார்

           மதிப்பார்?

அதற்குத் தாய் : மகளே! கல்வி கற்பது பெண்களுக்கு அணிகலன்! கெம்புக்கல் வைத்த நகையோ

             உணக்கக் தீராத ரணமாகும்.

              கற்ற பெண்களை இந்த நாடு - தன் கண்ணில் ஒற்றிக் கொள்ளும் அன்போடு.

                                                                        - பாரதிதாசன் (வறுமையில் செம்மை - ஈரோடு தமிழன்பன்)

1. ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக

புதுக்கோட்டை     - புதுகை

திருச்சிராப்பள்ளி - திருச்சி

உதகமண்டலம்   - உதகை

கோயம்புத்தூர்     - கோவை

நாகப்பட்டினம்     -   நாகை

திருநெல்வேலி   -  நெல்லை

மன்னார்குடி             - மன்னை

மயிலாப்பூர்              - மயிலை

கும்பகோணம்    -  குடந்தை

சைதாப்பேட்டை - சைதை

தஞ்சாவூர்                - தஞ்சை

புதுச்சேரி                 - புதுவை

 

II. படம் தரும் செய்தியைப் பத்தியாகத் தருக

  மண் சொத்தாக மாறிய காலத்தில் மண்ணைக் கவர்தல் போராயிற்று. மண்ணாசை காரணமாகப் பகைவர் நாட்டைக் கைப்பற்றக் கருதி வஞ்சிப்பூவைச் சூடிப்போருக்குச் செல்லும் வீரர்கள். இது வஞ்சித்திணை ஆகும்.

     வாடா வஞ்சி தலை மலைந்து

     கூடா மண்கொளல் குறித்தன்று

 

III. அகராதியில் காண்க.

மிரியல்   - மிளகு

அதசி           - வருத்தனை - (இலக்கண வகையில் ஒன்று) (மாத்திரை வருத்தனை) கூட்டுதல்,   

                     பெருக்குதல்

துரிஞ்சில் –வௌவால்

 

IV. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக



ஏர் சுமக்கும் தோளிலே

     ஏது சுமை தேடுங்கள்!

உழவன் உழும் கழனியிலே

     உணவுக்குப் பஞ்சமோ பாருங்கள்!

உணவின்றி உலகமது சுழலாதே!

    உழவரின்றி உயிர்களேதும் வாழாதே!

தொழுதுண்டு வாழ்வது வாழ்க்கையாகுமோ!

    உழுதுண்டு வாழ்வதே வாழ்க்கையல்லவோ


 

படம் உணர்த்தும் கருத்தை ஐந்து தொடர்களில் விளக்கி எழுது :

1. உழவு செய்ய புறப்படுவான் உழவன் அதிகாலையில்.

2. ஏரைச் சேற்றினில் அழுத்தினால் தான் நாம் சோற்றினை அள்ளி உண்ண முடியும்.

3. சேற்றில் உழவன் கால்பட்டால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும்.

4. ஏர் உழும் வாழ்க்கையில் ஏற்றம் உண்டு.

5. ஏர் தூக்கும் உழவனால் சீர்தூக்கும் நாடு.

 

 கலைச்சொல் அறிவோம்

Consulate - துணைத் தூதரகம் Patent - காப்புரிமை

Document – ஆவணம்                  Guild - வணிகக் குழு    Irrigation – பாசனம்                      Territory - நிலப்பகுதி

 

நிறுத்தற்குறியிட்டு எழுதுக.

1. வாய்மை பேசும் நாவே உண்மையான நா என்ற கருத்தைப் பொய்யாச் செந்நா பொய்படுபறியா

வயங்கு செந்நா என்று இலக்கியங்கள் கூறுகின்றன.

  வாய்மை பேசும் நாவே உண்மையான நா என்ற கருத்தைப் பொய்யாச் செந்நா” “பொய்படுபறியா வயங்கு செந்நாஎன்று இலக்கியங்கள் கூறுகின்றன.

2. கவிதை வாழ்க்கையின் திறனாய்வு என்று திறனாய்வாளர் ஆர்னால்டு கூறுகிறார்

   கவிதை வாழ்க்கையின் திறனாய்வுஎன்று திறனாய்வாளர் ஆர்னால்டு கூறுகிறார்.

3. உண்மையான செல்வம் என்பது பிறர்துன்பம் தீர்ப்பதுதான் என்கிறார் நல்வேட்டனார்

    உண்மையான செல்வம் என்பது பிறர்துன்பம் தீர்ப்பதுதான்' என்கிறார் நல்வேட்டனார்.

1.மொழி பெயர்ப்பு

1. Once upon a time there were two beggars in Rome. The first beggar used to cry in the streets of the city,

"He is helped whom God helps". The Second beggar used to cry,"He is helped who the king helps". This was repeated by them everyday. The Emperor of Rome heard it so often that he decided to help the beggar who popularized him in the streets of Rome. He ordered a loaf of bread to be baked and filled with pieces of gold. When the beggar felt the heavy weight of the bread, he sold it to his friend as soon as he met him. The latter carried it home. When he cut the loaf of bread he found sparkling pieces of gold. Thanking God, he stopped begging from that day. But the other continued to beg through the city. Puzzled by the beggar's behaviour, the Emperor summoned him to his presence and asked him, "What have you done with the loaf of bread that I had sent you lately?" The man replied, "Isold it to my friend, because it was heavy and did not seem well baked" Then the Emperor said, "Truly he whom God helps is helped indeed," and turned the beggar out of his palace.

   முன்பொரு காலத்தில் உரோம் நகரில் இரண்டு பிச்சைக்காரர்கள் இருந்தனர்.முதல் பிச்சைக்காரன் "நான் கடவுளால் உதவி செய்யப்படுகிறேன் " என்ற உரோம் நகரிலுள்ள தெருக்களில் கத்திக்கொண்டு இருந்தான். இரண்டாம் பிச்சைக்காரன் நான் அரசனால் உதவி செய்யப்படுகிறேன்" என்று அழுது கொண்டு இருந்தான். இதை அவர்கள் தொடர்ந்து செய்து வந்து கொண்டிருந்தனர்.

      இதனை அறிந்த உரோம் நகர் அரசன்தன்னைப்பற்றிப்புகழ்ந்து தெருக்களில் அலைந்த பிச்சைக்காரனுக்கு உதவ முன் வந்தார்.

      அந்த அரசன் பெரிய முழு உரொட்டி ஒன்றினைத் தயார் செய்து, உள்ளே தங்கத் துகள்களால் நிரப்பிக் கொடுக்க ஆணையிட்டான். அந்தப் பிச்சைக்காரன், உரொட்டியின் எடை பெரிதாக இருப்பதாகக் கருதி, அவனுடைய நண்பனைச் சந்தித்து அதனை விற்றான். அதனை வாங்கிய முதல் பிச்சைக்காரன் வீட்டிற்கு எடுத்துச் சென்றான்.

      அதனை அவன் அறுத்தெடுத்தபோது, உள்ளே தங்கத் துகள்கள் இருப்பதைக் கண்டான். அவன் கடவுளுக்கு நன்றி கூறியபின், அன்றிலிருந்து அவன் பிச்சை எடுப்பதை நிறுத்தினான். ஆனால் மற்றப் பிச்சைக்காரன் நகரில் மீண்டும் பிச்சை எடுக்கத் தொடங்கினான்.

       அந்தப் பிச்சைக்காரனின் நடவடிக்கையைக் கண்டு குழப்பமடைந்த அந்நாட்டு அரசன், அவனை

துக் கான் அனுப்பி வைத்த உரொட்டியை என்ன செய்ததாகக் கேட்டறிந்தான். அப்போது அந்தப் பிச்சைக்காரன் அதனைத் தூக்க முடியாமல் அதனை விற்றுவிட்டதாகக் கூறினான்.

    பின்னர் அரசர் அவனிடம், “உண்மையில் உன் நண்பனுக்குக் கடவுள்தான் உதவியுள்ளார்எனக் கூறி அந்தப் பிச்சைக்காரனை அரண்மனையை விட்டு வெளியேற்றினார்.

 

கீழ்க்காணும் சொற்களின் கூட்டப்பெயர்களைக் கண்டுபிடித்து எழுதுக.

(குவியல், குலை, மந்தை, கட்டு)

சொல்                         கூட்டப்பெயர்

கல்                              குவியல் (கற்குவியல்) | PTA - 4 |

பழம்                             குலை (பழக்குலை)

புல்                                கட்டு (புற்கட்டு)

ஆடு                              மந்தை (ஆட்டுமந்தை)

கீரை                             கட்டு (கீரைக்கட்டு)

மக்கள்                         கூட்டம் (மக்கள்கூட்டம்)

 

வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றித் தொடர்களை இணைத்து எழுதுக

1.கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறார். அவரை அழைத்து வாருங்கள். கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறவரை அழைத்து வாருங்கள்.

2.ஊட்டமிகு உணவு உண்டார். அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.

ஊட்டமிகு உணவு உண்டவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.

3. நேற்று என்னைச் சந்தித்தார். அவர் என் நண்பர்.

நேற்று என்னைச் சந்தித்தவர் என் நண்பர்.

4. பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தார். போட்டித் தேர்வில் வென்றார்.

பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தவர் போட்டித் தேர்வில் வென்றார்.

 

அகராதியில் காண்க.

அடவி   -  காடு, திரள், சோலை

அவல்   -  பள்ளம், விளைநிலம், குளம்

சுவல்    -  தோள், முதுகு, மேடு, குதிரை, கழுத்துமயிர் (பிடரிமயிர்)

செறு     -  செய், கோபி, வயல், பாத்தி, குளம்

பழனம்   -  குளம், வயல், மருதநிலம்

புறவு         -    காடு, புறா, முல்லைக்கொடி

 

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக. PTA – 1



காதைப் பொத்தி நல்லதைக் கேட்போம்

கண்ணை மூடி அழகை இரசிப்போம்

வாயை மூடி நல்லவற்றைப் பேசுவோம்

மூன்றும் அடக்கி மூதறிஞர் ஆவோம்.

கல்வியறிவே கண்ணுக்கு ஒளியாகும்.

கற்றவரே ஐம்புலனையும் அடக்குவர்.

படம் உணர்த்தும் கருத்தை ஐந்து தொடர்களில் விளக்கி எழுது.

      1.அறிவுக்கண் திறக்கப்பட வேண்டும்.

2, கல்வியே நம் அறியாமையைத் திறக்கும் திறவுகோல்.

3, கல்வியறிவே ஞானம் பெறச் செய்யும்.

4, சிந்திக்காமல் உயிரற்றவனைப் போல் ஆகாமல் தடுப்பது ஏட்டறிவே.

5.எதிர்காலத்தைப் பொற்காலம் ஆக்குவது கல்வியே ஆகும்,

 

கலைச்சொல் அறிவோம்

Vowel           - உயிரெழுத்து (PTA-1)

Consonant    -  மெய்யெழுத்து

Homograph  ஒப்பெழுத்து

Conversation - உரையாடல்

Monolingual -  ஒரு மொழி

Discussion   -   கலந்துரையாடல்

 

8. தொடரைப் படித்து விடையைக் கண்டறிக.

1.நூலின் பயன் படித்தல் எனில், கல்வியின் பயன்…………..

2.விதைக்குத் தேவை எரு எனில், கதைக்குத் தேவை…………

3. கல் சிலை ஆகுமெனில், நெல்……..ஆகும்.

4. குரலில் இருந்து பேச்சு எனில், விரலில் இருந்து………..

5. மீன் இருப்பது நீரில்: தேன் இருப்பது…………

(சோறு, கற்றல், கரு, பூவில், எழுத்து)

 

விடை: 1.கற்றல் 2.கரு 3.சோறு 4.எழுத்து 5.பூவில்

 

10. குறிப்பைப் பயன்படுத்தி விடை தருக. PTA -1

குறிப்பு : எதிர்மறையான சொற்கள்

மீளாத் துயர் - மீண்ட இன்பம் PTA - 1 & 2

அருகில் அமர்க - தொலைவில் எழுக PTA-1

கொடுத்துச் சிவந்த - கொடாது கருத்த

பெரியவரின் அமைதி சிறியவரின் ஆரவாரம்

மறைத்துக் காட்டு - திறந்து காட்டாதே

புயலுக்குப் பின் அமைதிக்கு முன் PTA – 2

 

11. அகராதியில் காண்க.

1. அவிர்தல் - ஒளிர்தல், பிரகாசித்தல், விளங்குதல்

2. அழல் - நெருப்பு, வெப்பம்,விடம்

3. உவா - முழு நிலா (அ) முழு அமாவாசை, கடல், பருவகாலம், இளமை, யானை

4. கங்குல் - இரவு, இடையாமம், பரணிநாள், இருள்

5. கனலி - சூரியன், நெருப்பு, பன்றி

 

12. ()காட்சியைக் கண்டு கவினுற எழுதுக. PTA – 3



இயந்திர மனிதனே எங்கே போகிறாய்!

இயந்திரமாக மாறிவிட்டாயோ!

இங்கும் அங்கும் இயக்குவது யாரோ!

இன்னலுக்கு ஆளாகாமல் எங்கே செல்வாய்!

இன்பமான பாதை உனக்குக் கிடைக்குமா!

சாட்டையடி படுமுன்பே போய்விடு

சரித்திரம் படைக்க என்றும் வா

சாயாமல் குலையாமல் வெற்றியைத் தா!

 

() படம் உணர்த்தும் கருத்தை ஐந்து தொடர்களில் விளக்கி எழுது :

1. மனிதனை இயந்திரம் இயக்கும் நிலை வந்து விட்டது.

2. தொழில்நுட்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் இயங்குவது இயந்திரம் மட்டுமன்று மனிதனும் தான்.

3. மனிதன் தன் அறிவைப் பயன்படுத்தி கைபேசியின் கட்டுக்குள்ளிருந்து மீள வேண்டும்.

4. அதிநவீன அறிவு ஆபத்தாகி விடக் கூடாது.

5.மனிதனின் தேவைக்கும் ஆக்கத்திற்குமே தொழிற்நுட்பம் பயன்பட வேண்டும்,

 

 

காட்சியைக் கண்டு கவிறை எழுதுக. PTA-5

 


உள்ளிழுக்கும் மூச்சே உயிர் மூச்சு

 மூச்சு மட்டும் இல்லையென்றால் ஏதுபேச்சு

மரத்தை நட்டுக் காப்போம் காற்றை

ஆழ்ந்து இழுத்து விடுவோம் மூச்சை

அல்லல் படாமல் வாழ்ந்திடுவோம் வாழ்க்கை என்றும்

அவதிப்படாமல் காத்திடுவோம் வளிமண்டலத்தை

 

படம் உணர்த்தும் கருத்தை ஐந்து தொடர்களில் விளக்கி எழுது.

1.      உயிர்வளியே உயிரூட்டுவது.

2.வளிமண்டலத்தைத் தூய்மையாக வைத்திருக்க உதவ வேண்டும்.

3. விலையில்லா வளியின் அருமை மறக்கக்கூடாது.

4. இயற்கையைப் பேணுவதே நாம் வாழ உகந்த வழியாகும்.

5.ஆயிரமாண்டு அதிசயமான மரத்தை அழிக்கக்கூடாது.

 

 

13. படம் உணர்த்தும் கருத்தை நயமுற ஐந்து தொடர்களில் எழுதுக. செப்-20



Ø  மனிதனைப் போல் ரோபோவும் செயல்படத் தொடங்கிவிட்டது

Ø  சதுரங்கம் விளையாடுவதில் ரோபோ தனித்திறன் பெற்று திகழ்கிறது.

Ø  மனிதனுக்கு உற்ற நண்பனாக ரோபோ விளங்குகிறது.

Ø  ரோபோ ஆசிரியனாக இருந்து மனிதனுக்கு கற்று கொடுக்கிறது.

Ø  நாளைய உலகம் ரோபாக்களின் உலகம் தான்.

 

15.தொலைக்காட்சி நிகழ்வுகளையே பார்த்துக் கொண்டிருக்கும் தம்பி, திறன் பேசியிலேயே விளையாடிக் கொண்டிருக்கும் தங்கை, காணொலி விளையாட்டுகளில் முழ்கியிருக்கும் தோழன், எப்போதும் சமூக ஊடகங்களில் இயங்கியபடி இருக்கும் தோழி இவர்கள் எந்நேரமும் நடப்புலகில் இருக்காமல் கற்பனை உலகில் மிதப்பவர்களாக இருக்கிறார்கள். இவர்களை நெறிப்படுத்தி நடைமுறை உலகில் செயல்படவைக்க நீங்கள் செய்யும் முயற்சிகளைப் பட்டியல் இடுக. PTA - 4

 

 1. 'உடம்பை வளர்த்தேன் உயிரை வளர்த்தேனே' என்ற திருமூலரின் கூற்றை உணர வைத்தல்.

2.மாலையில் குழந்தைகளை விளையாடச் செய்தல்

3. தொலைதூர உறவுகளோடு தொடர்பில் இருந்து கொண்டு நம் சுற்றங்களைத் தொலைத்து விடக் கூடாது

4.கதிர்வீச்சுகளால் உடல் பாதிப்படையும் என்பதை விளக்குதல்.

5. குடும்பத்து உறுப்பினர்கள் அமர்ந்து உறவாடி மகிழ்தல்

 

16. கலைச்சொல் அறிவோம்

1.Nanotechnology  - மீநுண்தொழில் நுட்பம்

2.Biotechnology  - உயிரித் தொழில் நுட்பம்

3.Ultraviolet rays  - புற ஊதாக் கதிர்கள் (PTA-2)

4.Space Technology  - விண்வெளித் தொழில் நுட்பம் (PTA-2)

 5.Cosmic rays  - விண்வெளிக் கதிர்கள்

6.Infrared rays - அகச்சிவப்புக் கதிர்கள்.

 

6.காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

 


வளமான குறிஞ்சி முல்லை மருதமும்

   வளம்குன்றி பாலையாக்கப்பட்டது!

மண்ணுயிர் காத்து உயிர்வளி தரும்

   மரங்களெலாம் விறகாக்கப்பட்டது!

சுகமான வாழ்வுதனைச் சுயநலமாய் வாழ

  சோலையழித்து தரிசாக்கப்பட்டது!

கண்முன்னே மரங்களின் அஸ்தமனம்

   கண்கெட்ட பின்னே சூரியநமஸ்காரம்!

 

1.      மொழிபெயர்க்க

Koothu

Therukoothu is, as its name indicates, a popular form of theatre peformed in the streets. It is performed by rural artists. The stories are derived from epics like Ramayana, Mahabharatha and other ancient puranas. There are more songs in the play with dialogues improvised by the artists on the spot. Fifteen to twenty actors with a small orchestra forms a koothu troupe. Though the orchestra has a singer, the artists sing in their own voices. Artists dress themselves with heavy costumes and bright makeup. Koothu is very popular among rural areas.

தெருக்கூத்து :

         தெருக்கூத்து என்ற பெயருக்கேற்பக் கலைநயத்துடன் தெருக்களில் ஆடக்கூடியது; கிராமியக் கலைஞர்களால் இது நிகழ்த்தப்படுகிறது. தெருக்கூத்துக் கதைகள் இராமாயணம், மகாபாரதம் மற்றும் இதரப் பழங்காலப் புராணங்களிலிருந்து எடுத்து நிகழ்த்துகிறார்கள். கலைகள் நிகழ்த்தப்படும் இடங்களிலேயே பாடல்களும் உரையாடல்களும் தெரிந்தெடுத்துச் செயல்படுத்துகிறார்கள். ஒரு கூத்துக் குழுமம் பதினைந்திலிருந்து இருபது வரையுள்ள கலைஞர்களால் நடத்தப்படுகிறது. இசைக் குழுமத்தில் பாடகர்கள் இருந்த போதிலும் அவர்கள் தங்கள் சொந்தக் குரலிலே தான் பாடுவார்கள். கலைஞர்கள் மிகுந்த ஒப்பனையும் - ஆடை அணிகலன்களும் பிரமாண்ட மாகக் காட்சிதருமளவுக்குச் செய்திருப்பர். கிராமப் புறங்களில் இவ்வகைக் கூத்துகள் மிகவும் பிரசித்தி பெற்றவை.

 

 5.காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.



ஒழுங்குவரிசை முறையாகவே

ஒயிலாக ஆடுவது அழகே!

சதிசொல்லும் தாளமுறையாகவே

சதங்கை கொஞ்சுவது அழகே!

 கைவீசும் வண்ணத்துணி காற்றிலாட

கைகோர்க்கும் ஓவியமும் அழகே!

தேகமெங்கும் இன்பம் பூரிக்கும்

தேவராட்டம் தனி அழகே!

 

6.படம் உணர்த்தும் கருத்தை ஐந்து தொடர்களில் விளக்கி எழுது :

1. மங்காத இசையுடன் மகிழ்வுடன் ஆடுவது ஒயிலாட்டம்.

2, முண்டாசு தலையில் கட்டி முனைப்புடன் ஆடுவர்.

3, சலங்கை ஒலி காலிலும் துணி அசைவு கையிலும் குழுவாக இயங்கும்,

4, வரிசைமுறை மாறாவண்ணம் ஆடுவது அழகு தரும்,

5, மேளத்தின் இசைக்கு ஒயிலாக ஒயிலாட்டம் ஆடுவர்,

 

 7.கலைச்சொல் அறிவோம்.

Aesthetics - அழகியல், முருகியல் PTA-4

Artifacts - கலைப்படைப்புகள் செப்-20

Terminology - கலைச் சொல்

Myth - தொன்மம் PTA-4 செப்-20

 

III. நிறுத்தற்குறியிட்டு எழுதுக.

1.      சி வகுப்புச் சோறு தான் என்றாலும் அடிக்கடி பட்டினியைச் சந்தித்தவனுக்கு அதுவே அமுதந்தானே

'சி' வகுப்புச் சோறு தான் என்றாலும், அடிக்கடி பட்டினியைச் சந்தித்தவனுக்கு அதுவே அமுதந்தானே!

2.     30.09.1932 இல் தமிழா துள்ளி எழு என்னும் தலைப்புடைய துண்டறிக்கை ஒன்றைக் கடற்கரையில் குழுமியிருந்த மக்களிடையே வழங்கியதற்காக நான் சிறையிலிடப்பட்டேன் 30.09.1932 இல் 'தமிழா! துள்ளி எழு' என்னும் தலைப்புடைய துண்டறிக்கை ஒன்றைக் கடற்கரையில் குழுமியிருந்த மக்களிடையே வழங்கியதற்காக, நான் சிறையிலிடப்பட்டேன்.

 

II. பின்வரும் தொடர்களைக் கொண்டு பொருத்தமான தொடர் அமைக்க:

(வரப்போகிறேன், இல்லாமல் இருக்கிறது, கொஞ்சம் அதிகம், முன்னுக்குப்பின். மறக்க நினைக்கிறேன்) வரப்போகிறேன்: இன்னும் சிறிது நேரத்தில் வரப்போகிறேன்.

இல்லாமல் இருக்கிறது : கஞ்சியில் உப்பு இல்லாமல் இருக்கிறது

கொஞ்சம் அதிகம்          : நெல்லையில் வெயிலின் தாக்கம் கொஞ்சம் அதிகம்

முன்னுக்குப்பின் : காவலர் திருடனைப் பிடித்து விசாரித்ததும் அவன் முன்னுக்குப்பின் முரணான

                               பதில்களையே சொன்னான்.

மறக்க நினைக்கிறேன் : கடந்த கால வாழ்வின் சோகமான நிகழ்வுகளை மறக்க நினைக்கிறேன்.

 

III. தொகைச் சொற்களைப் பிரித்து எழுதி, தமிழ் எண்ணுரு தருக

வேந்தர்களால் நாற்றிசையும் போற்றி வளர்க்கப்பட்ட முத்தமிழே, உலக மொழிகளில் உயர்ந்ததென்ற சம்மாந்த கூற்றிற்கு, தமிழ் இலக்கியங்களில் அமைந்துள்ள இருதிணை அமைப்பே காரணமாகும். ப்பாலை முழுமையாகத் தந்த தமிழின் சிறப்பினை ஐந்திணைகளில் அழகுற விளக்குபவை சங்க லெக்கியங்கள். நானிலத்தில் பசித்தவர்க்கு அறுசுவை உணவுபோல் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் மப்பவர்க்கு மனதிற்கினிமை ஈந்து தமிழ்ப்பெருமை சாற்றுகிறது. (PTA – 6) தொகைச் சொற்கள்

1. மூவேந்தர்கள்   - மூன்று + வேந்தர்கள் - சேரர், சோழர், பாண்டியர் –

2. நாற்றிசை                   - நான்கு + திசை - கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு –

3. முத்தமிழ்                     - மூன்று + தமிழ் - இயல்தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் –

4. இரு திணை   - இரண்டு + திணை - உயர்திணை, அஃறிணை - உ

5. முப்பால்                      - மூன்று + பால் - அறத்துப்பால் - பொருட்பால், இன்பத்துப்பால் - ங

6. ஐந்திணை                 - ஐந்து + திணை - குறிஞ்சி, முல்லை , மருதம், நெய்தல், பாலை - ரு

7. நானிலம்                     - நான்கு + நிலம் - குறிஞ்சி, முல்லை , மருதம், நெய்தல் –

8. அறுசுவை                   - ஆறு + சுவை - இனிப்பு, கசப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு - கரிப்பு - 2

9. பத்துப்பாட்டு     - பத்து + பாட்டு - திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை,

                                           பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, நெடுநல்வாடை,   

                                            மலைபடுகடாம், பொருநராற்றுப்படை,பட்டினப்பாலை, மதுரைக்காஞ்சி - கo

10. எட்டுத்தொகை            - எட்டு + தொகை - நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து,

 

பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு.- அ

11. ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி இத்தொடர்கள் உணர்த்தும்  

                                        மரங்களின் பெயர்களையும், தமிழெண்களையும் குறிப்பிடுக.

                                       ஆலமரம் 4 - ச வேப்பமரம் 2 -

 

மரபுக் தொடருக்கான பொருளறிந்து தொடரில் அமைத்து எழுதுக.

                    மரபுத் தொடர்

மனக்கோட்டை : PTA-3

     சில அரசியல்வாதிகள் தேர்தல் முடியுமுன்னே , தாமே வெற்றிபெற்று அரசு நாற்காலியில் அமர்ந்து,ஆட்சிப்பீடம் ஏறுவதாக மனக்கோட்டை கட்டுவர்.

கண்ணும் கருத்தும் : PTA - 3 & 4

  கல்வி கற்கும் மாணவ - மாணவியர் கற்கும் கற்றால், தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெறலாம்.

அள்ளி இறைத்தல் :

    வாலிப நாட்களில், அல்லது மாணவப்பருவத்தில் இளைஞர் பெற்றோர் உழைத்த பணத்தை

நண்பர்களுக்குத் தாறுமாறாகச் செலவு செய்து அள்ளி இறைத்தல் கூடாது; சிக்கனமாகச் செலவு செய்ய வேண்டும்.

ஆறப் போடுதல் PTA - 5

   நீதிபதிகள் சில அரிதான வழக்குகளைக் கையில் எடுத்து வாதாடும்போது, சிலகாலம் ஆறப்போட்டுத்தான் இறுதியில் தீர்ப்பினை வழங்குவர்.

கயிறு திரித்தல் PTA-4

   ஆசிரியர் மாணவனிடம் கேட்ட கேள்விக்கு மாணவன் கயிறு திரித்தாற் (பொய் கூறுதல்) பதிலளித்தனான்.

 

பின்வரும் உரையாடலில் உள்ள பேச்சு வழக்கினை எழுத்து வழக்காக மாற்றுக.

"தம்பீ? எங்க நிக்கிறே?" (PTA-5 செப்-20)

 நீங்க சொன்ன எடத்துலதாண்ணே ! எதிர்த்தாப்புல ஒரு டீ ஸ்டால் இருக்குது.

'' அங்ஙனக்குள்ளயே டீ சாப்டுட்டு, பேப்பரப் படிச்சிக்கிட்டு இரு... நா வெரசா வந்துருவேன்"

"அண்ணே ! சம்முவத்தையும் கூட்டிக்கிட்டு வாங்கண்ணே! அவனெப் பாத்தே ரொம்ப நாளாச்சு!''

"அவம் பாட்டியோட வெளியூர் போயிருக்கான். உங்கூருக்கே அவனெக் கூட்டிக்கிட்டு வர்றேன்.” "ரொம்பச் சின்ன வயசுல பார்த்ததுண்ணே ! அப்பம் அவனுக்கு மூணு வயசு இருக்கும்! "இப்ப ஒசரமா வளந்துட்டான்! ஒனக்கு அடையாளமே தெரியாது! ஊருக்கு எங்கூட வருவாம் பாரேன் போனை வையி. நாங் கௌம்பிட்டேன்...'' 'சரிங்கண்ணே '

  "தம்பி எங்கே நிற்கிறாய்?"

"நீங்கள் சொன்ன இடத்தில்தான் அண்ணே ! எதிரில் ஒரு "தேநீர் அகம்" இருக்கிறது".

 "அந்த இடத்தில்தான் தேநீர் குடித்துவிட்டு, நாளிதழ் படித்துக்கொண்டு இரு;

நான் விரைவில் வந்து விடுவேன்"

"அண்ணே! சண்முகத்தையும் கூட்டிக் கொண்டு வாருங்கள் அண்ணே! அவனைப் பார்த்தே நிறைய நாட்கள் ஆயிற்று!

"அவன் பாட்டியுடன் வெளியூர் போயிருக்கிறான்;

உங்கள் ஊருக்கு அவனைக் கூட்டிக்கொண்டு வருகிறேன்"

"மிகச்சிறிய வயதில் பார்த்தது அண்ணே ! அப்போது அவனுக்கு மூன்று வயது இருக்கும்"

 "இப்போது உயரமாக வளர்ந்து விட்டான்! உனக்கு அடையாளமே தெரியாது!

ஊருக்கு என்னுடன் வருவான், பார்! சரி, தொலைபேசியை வை.

நான் கிளம்பி விட்டேன்.

 சரி அண்ணே "!

 

II. சொற்களைப் பிரித்துப் பார்த்துப் பொருள் தருக.

1.கானடை 2. வருந்தாமரை 3. பிண்ணாக்கு 4. பலகையொலி

(எ.கா) 1) கானடைச் சேர் PTA-3

கான் அடை         -   காட்டைச் சேர்

கான் நடை          -   காட்டுக்கு நடத்தல்

கால் நடை          -   காலால் நடத்தல்

இவ்வாறு மூன்று வகையாகப் பிரித்துப் பொருள் கூறலாம்.

2.வருந்தாமரை

வரும் தாமரை             -  வரும் தாமரை மலர்

வரும் + தா + மரை - வருகின்றது தாவுகின்ற மான்

வருந்தா மரை      - கவலைப்படாத மான்

வருந்த அமரை           - (அமர் - போர்) கவலைப்பட போரை

3. பிண்ணாக்கு

புள் நாக்கு      -  பறவையின் நாக்கு

பிண்ணாக்கு  -  ஆடுமாடு தின்னும் புண்ணாக்கு

புண் ஆக்கு    - காயப்படுத்து

4.பலகையொலி

பல + கையொலி   - பல கைகளின் ஒலி

பலகை + ஒலி        -  மரப்பலகையின் ஒலி

 

III. அகராதியில் காண்க.

(ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி)

1) ஆசுகவி : ஆசுகவி எனப்படுவோர், கொடுத்த பொருளில் அடுத்த பொழுதில் கவிதையாகப் பாடக்கூடிய திறமை படைத்த புலவர். நால்வகைக் கவிகளில் ஒன்று ஆசுகவி.

2) மதுரகவி : மதுரகவி என்பது, கவிதை புனையும் புலமையை வெளிப்படுத்தும் பாங்கு - பொருள்வளமும் - சொல்வளமும் உடையதாய், பல்வேறு வகையான தொடைநயங்கள் அமையப்பெற்று உருவகம் முதலிய அணிநயங்கள் பொலிந்து வர, ஓசைநயம் போல அமைந்திருப்பது மதுரகவி. சொல்லப்பட்ட பல்வகையான இன்பங்கள் தந்து மயங்க வைப்பது மதுரகவி.

3) சித்திரகவி: தமிழில் காணப்படும் இலக்கியப்பாங்குகளில் ஒன்று தொல்காப்பியத்தில் கூறப்பட்ட வண்ணங்கள் சிக்கிரகவியில் உள்ளன. பாடுவோரின் மொழிப்புலமை, மற்றும் மொழியின் செழுமையாகப் புலப்படுத்தும் கவி இது. தமிழில் தவிர, வேறு எந்த மொழியிலும் இந்தவகை அமைப்பு இல்லை பொருளும் முழுமையாகப் பாடப்படும்.

4) வித்தாரகவி : கவிதையால் நூல் செய்யும் புலமை வித்தாரம் என்பது வக்க

நிலைச் செய்யுள் இசை, நாடகத்தோடு விரித்துப் பாடுவது. பொருள் வக்கணையாகப்பாடும் தொடர்நிலைச் செய்யுள் இசை, நாடகத்தோடு பாடுவது.

                                                   கலைச் சொல் அறிவோம்

Belief             - நம்பிக்கை

Renaissance - மறுமலர்ச்சி

Philosopher   - மெய்யியலாளர்

Revivalism     - மீட்டுருவாக்கம்

                                         காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.



கைம்மாறு கருதா மனம் படைத்தவன்

         கரம் நீட்டினான் முன்னே !

கயமை கருதும் மனம் படைத்தவன்

       கரம் தடுத்தான் உடனே!

கரும வினையது தான் தீருமோ?

        கர்ண குணமது தான் கெடுமோ?

 கருணை உள்ளம் கொண்டவரே!

       காயம் மெய்யாகக் கொண்டவரே!

படம் உணர்த்தும் கருத்தை ஐந்து தொடர்களில் விளக்கி எழுது :

1. தருமி பெறும் பொற்கிழியைத் தடுக்கும் நக்கீரர் போல நாடகம் நடக்கின்றது.

2, கையேந்தும் உள்ளத்தின் தவிப்பினைத் தீர்க்க வேண்டும்.

3.ஈகையைத் தடுத்தல் உவகை ஆகாதே!.

4.ஈந்து உவப்பதே உண்மையான மகிழ்வாகும்.

5. இலவசத்தைத் தடுத்தால் தான் உழைக்கும் எண்ணம் தோன்றும்,

 

 

கலைச்சொல் அறிவோம்.

Storm - புயல்

Land Breeze - நிலக்காற்று

Tornado - சூறாவளி (PTA-6)

Sea Breeze - கடற்காற்று

Tempest - பெருங்காற்று (PTA-6)

Whirlwind- சுழல்காற்று

 

 CLICK HERE DOWNLOAD BUTTON TO GET FREE PDF


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post