அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், அன்பு மாணவச்செல்வங்களுக்கும் வணக்கம். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தமிழ்ப்பாடத்திற்குத் தேவையான அனைத்து தொகுப்புகளும் நமது தமிழ் விதை வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 2019- 2020 ஆம் கல்வி ஆண்டில் பெற்றோர் ஆசிரியர் கழகம் வெளியிட்ட மாதிரி வினாத்தாளில் இடம் பெற்றுள்ள வினாக்கள் மற்றும் அதன் விடைகள் உங்களுக்கு நமது தமிழ்விதை வலைதளம் மூலம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவும். இதனை தயாரித்து வழங்கிய தமிழக தமிழாசிரியர் கழகம் - சேலம் மாவட்டம் அவர்களுக்கு தமிழ்விதையின் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
விடைக்கேற்ற வினா மற்றும் உரைப்பத்தி வினாக்கள்
தமிழக தமிழாசிரியர் கழகம்-சேலம் மாவட்டம்
விடைக்கேற்ற வினா (குறைக்கப்பட்ட பாடத்திட்டம்)
மெல்ல கற்கும் மாணவர்கள்
பத்தாம் வகுப்பு – தமிழ் - இயல்கள் 1-9 பயிற்சித்தாள்
II. விடைக்கேற்ற வினா அமைக்க.
1.காந்தியடிகள் சத்தியாக்கிரகம் என்ற அறப்போர் முறையைத்
தென்னாப்பிரிக்காவில் தொடங்கி வைத்தார்.
2.ம.பொ.சி யின் கேள்வி ஞானத்தைப் பெருக்கிய பெருமையிலே
திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகளுக்கே மிகுந்த பங்குண்டு.
3. 1942 ஆகஸ்ட் 13
ஆம் நாள் ம.பொ.சி. வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
4.மா.பொ.சி. அம்மானைப் பாடல்களை அடிக்கடி பாடிப்பாடி பிள்ளைப்
பருவத்திலேயே இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்டார். (செப்-20)
5. சங்க காலத்திற்குப் பிந்தைய அற இலக்கியங்களின் காலத்தை அறநெறிக்காலம்
என்பர்
6. உண்மையான செல்வம் என்பது பிறர்துன்பம் தீர்ப்பதுதான் என்கிறார்
நல்வேட்டனார்.
7. நாக்கு ஓர் அதியத் திறவுகோல்.
8. வாய்மையைச் சிறந்த அறமாகச் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன.
9. ஒரு நாட்டு வளத்திற்குத் தக்கபடியே அந்நாட்டு மக்களின் அறிவொழுக்கங்கள் அமைந்திருக்கும்.
10. சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார் தமிழ்த்திரு
இரா.இளங்குமரனார்.
11.சாலைகளின் இடப்பக்கம் வண்டிகள் செல்வதே சாலை விதிகளில் முதன்மை விதி
சாலை விதிகளில் முதன்மையான விதி எது?
12.ஓட்டுநர் உரிமம், ஊர்தியின்
பதிவுச் சான்றிதழ், ஊர்தியின்
வழி மற்றும் காப்பீட்டுக்
போன்றவற்றை ஊர்தி ஓட்டுபவர் ஒவ்வொருகவருக்கும் கட்டாயமாகக் கையில் வைத்திருக்க
வேண்டும்.
உரைப்பத்தி
1. பத்தியைப் படித்துப் பதில் தருக:
பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல
ஊழிக்காலங்கள் கடந்து சென்றன. புவி உருவான போது நெருப்பும் பந்து போல் விளங்கிய
ஊழிக்காலம் தோன்றியது. பின்னர் புவி குளிரும்படியாகத் தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக்
காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது.
இப்படி மீண்டும் மீண்டும் சிறப்பாகிய ஆற்றல் மிகுந்து செறிந்து திரண்டு இப்படியாக
(வெள்ளத்தில் மூழ்குதல்) நடந்த இந்தப் பெரிய உலகத்தில், உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியது. உயிர்கள் தோன்றி
நிலைபெறும்படியாக இப்பெரிய புவியில் ஊழிக்காலம் கடந்தது. (PTA – 4)
1.பத்தியில் உள்ள அடுக்குத்தொடர்களை எடுத்து எழுதுக.
2. புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது?
3. பெய்த மழை - இத்தொடரை வினைத்தொகையாக மாற்றுக
4. இப்பத்தி உணர்த்தும் அறிவியல் கொள்கை யாது?
5. உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாக நீவிர் கருதுவன யாவை?
2.பின்வரும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி.
உலகமே வறுமையுற்றாலும்
கொடுப்பவன் அதியன் என்கிறார் ஔவையார். இரவலர் வராவிட்டாலும் அவர்களைத் தேடி
வரவழைத்தார். ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் இயல்பு என்கிறார் நச்செள்ளையார். பேகன் மறுமை
நோக்கிக் கொடுக்காதவன் என்கிறார் பரணர். தன்னை நாடி வந்த பரிசிலன் பொருள் பெறாமல்
திரும்புவது, தான் நாட்டை இழந்த துன்பத்தைவிடப் பெருந்துன்பம் எனக்குமணன் வருந்தியதாகப்
பெருந்தலைச் சாத்தனார் குறிப்பிட்டுள்ளார். எல்லாவற்றையும் கொடுப்பவன் என்று
மலையமான் திருமுடிக்காரியைக் கபிலர் பாராட்டுகிறார்.
வினா - விடை :
1. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் யார்?
2. ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் இயல்பு யாது?
3. குமணன் வருந்தக் காரணம் யாது?
4.மலையமான் திருமுடிக்காரியைக் கபிலர் எவ்வாறு பாராட்டுகிறார்?
5. பேகன் எப்படிப்பட்டவன்?
6. இப்பத்திக்கேற்ற தலைப்புத் தருக.
3.தமிழர், போரிலும் அறநெறிகளைப் பின்பற்றினர். போர் அறம் என்பது வீரமற்றோர், புறம்
பார் அறம் என்பது
வீரமற்றோர், புறமுதுகிட்டோர், மாரை எதிர்த்துப் போர்
செய்யாமையைக் குறிக்கிறது. போரின் கொடுமையிலிருந்து பசு,பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியயோருக்குத் திங்குவராமல்போர் புரிய வேண்டும் என்று
ஒருபாடல் கூறுகிறது. தம்மைவிடவலிமைகுறைந்தால் போர் செய்வது கூடாது என்பதை ஆவூர்
மூலங்கிழார் குறிப்பிட்டிருக்கிறார். (PTA - 3&6 செப்-20)
அ) போர் அறம் என்பது
எவற்றைக் குறிக்கிறது?
ஆ) ஆவூர் மூலங்கிழார்
போர் அறம் குறித்துக் குறிப்பிடுவது யாது? (அல்லது) யாரோடு போர்செய்வது கூடாது என்று ஆவூர் மூலங்கிழார்
குறிப்பிடுகிறார்?
இ) போரில்
யாருக்கெல்லாம் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும் என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன?
4. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
வாய்மையைச் சிறந்த
அறமாகச் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. வாய்மை பேசும் நாவே உண்மையான நா என்ற
கருத்தை, “பொய்யாச் செந்நா", "பொய்படுபறியா வயங்கு
செந்நா" என்று இலக்கியங்கள் கூறுகின்றன. நாக்கு ஓர் அதிசயத் திறவுகோல் என்பார்கள்.
இன்பத்தின் கதவைத் திறப்பதுவும் அதுதான். துன்பத்தின் கதவுகளைத் திறப்பதும்
அதுதான். மெய் பேசும் நா மனிதனை உயர்த்துகிறது. பொய்பேசும் நா மனிதனைத்
தாழ்த்துகிறது. 'பிழையா நன்மொழி' என்று வாய்மையை நற்றிணை குறிப்பிடுகின்றது. இதற்கு மாறாகப் 'பொய்மொழிக் கொடுஞ்சொல்' என்று பொய்யைக்
குறிப்பிடுகிறது. நிலம் புடைபெயர்ந்தாலும் பொய் சொல்லக்கூடாது என்பது பல
இலக்கியங்களில் வற்புறுத்தப்பட்டுள்ளது.
1) வாய்மையை நற்றிணை எவ்வாறு குறிப்பிடுகின்றது?
2) வாய்மை பேசும் நாவே
உண்மையான நா என்ற கருத்தை இலக்கியங்கள் எவ்விதம்
கூறுகின்றன?
3) மனிதனைத் தாழ்த்துவது எது?
4) நிலம் புடைபெயர்ந்தாலும் செய்யக்கூடாதது எது?
5) நாக்கு எதனால் அதிசயத் திறவுகோலாகிறது?
5. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக. PTA -4
பிறருக்கு உதவுதல்
என்பதைச் சிறந்த அறமாகச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. உதவி செயதலை ஈழத்துப்
பூதன் தேவனார் 'உதவியாண்மை' என்று
குறிப்பிடுகிறார். தன்னைத் தாண்டிப் பிறரைப் பற்றிச் சிந்திக்கும்போது, இருக்கும் நிலையை ஒதுக்கி, தான் இருக்க வேண்டிய
நிலை எது என்பதை மனிதன் உணர்கிறான் எனலாம். அன்பு என்ற சுடருக்குத் தியாகம் தானே
எண்ணெயாக இருக்க முடியும்? பிறர் துன்பத்தைத் தம்
துன்பமாகக் கருதி, உதவுதல்
சான்றோர்க்குக் கடன் என்கிறார் நல்லந்துவனார். அவ்வாறே, உண்மையான செல்வம் என்பது பிறர் துன்பம் தீர்ப்பதுதான் என்கிறார்
நல்வேட்டனார்.
i) அன்பு என்னும் சுடருக்கு எண்ணெய்யாக இருப்பது எது?
ii) சிறந்த அறமாகச் சங்க இலக்கியங்கள் எதைக் காட்டுகின்றன?
iii) உண்மையான செல்வம் என்று நல்வேட்டனார் குறிப்பிடுவது எதனை?.
iv) உதவி செய்தலை 'உதவியாண்மை ' என்று குறிப்பிடுபவர் யார்?
v) சான்றோர்க் கடனாக நல்லந்துவனார் குறிப்பிடுவது யாது?
6.உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
ஒரு மொழி
பொதுமக்களாலும் அதன் இலக்கியம், புல மக்களாலும்
அமையப்பெறும். தமிழ்ப் பொதுமக்கள் உயர்ந்த பகுத்தறிவுடையர். எத்துணையோ ஆராய்ச்சி
நடந்துவரும் இக்காலத்திலும் எத்துணையோ மொழிகளினின்றுகடன்கொண்ட ஆங்கில மொழியிலும்
நூலிலும் இலையைக் குறிக்கலீஃப் (Leaf) என்னும் வரே சொல்
உள்ளது. ஆங்கில நூல்களிலும் வேறு பல வகைகளில் இலைகளைப் பாகுபாடு செய்தனரேயன்றி.
தமிழ்ப்பொதுமக்களைப் போல வன்மை மென்மை பற்றித் தாள், இலை, தோகை ஓலை எனப் பாதபாடு செய்தாரில்லை. இத்தகைய பாகுபாடு ஏனைய
உறுப்புகளுக்குள்ளும் செய்யப்பட்டது. தமிழ்நாடு எத்துணைப் பொருள்வளமுடையதென்பது, அதன் விளைபொருள் வகைகளை நோக்கினாலே விளங்கும்.
i) ஒரு மொழியும், அதன் இலக்கியமும்
எவ்வாறு அமையும்?
ii) தமிழ்மக்கள் இலைகளை எவ்வாறு பாகுபாடு செய்தனர்?
iii) தமிழ்நாட்டின் பொருள்வளத்தினை எவ்விதம் விளங்கிக்கொள்ளலாம்?
iv) மொழி ஆராய்ச்சிக்கு ஓர் எடுத்துக்காட்டு தருக.
V) இப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பு ஒன்று தருக.
7. பின்வரும்
பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி.
அ) 1942 ஆகஸ்டு
8ஆம் நாள், இந்திய
வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கத்தக்க புனித நாளாகும்.அன்று தான் 'இந்தியாவை விட்டு வெளியேறு' என்ற தீர்மானத்தைப் பம்பாயில் கூடிய அகில இந்திய பேராயக்கட்சி ஒரு
மனதுடன் நிறைவேற்றியது. தேசம் முழுவதுமே அன்று புத்துயிர் பெற்றது. நாடெங்கும்
தலைவர்கள் கைதான நிலையில் நானும் ஆகஸ்டு 13
ஆம் நாள் வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டேன். காமராசர், தீரர் சத்தியமூர்த்தி, பிரகாசம்
உட்பட, தென்னகத்தின் முன்னணித் தலைவர்கள் பலரை அங்கு நான் கண்டேன். சில
நாள்களுக்குப் பின் அங்கிருந்து அமராவதிச் சிறைக்கு மாற்றினர். சிறைச் சாலையில்
எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தின் மேற்கூரை துத்தநாகத் வேயப்பட்டிருந்தது.
கோடைக்காலத்தில் 120 பாகை
அளவில் வெயில் காயக்கூடிய பகுதியில் மின்சார விசிறிகூட இல்லாமல் எங்களுடைய நிலை மிகவும் இரங்கத்தக்கதாக
இருந்தது. - ம.பொ.சிவஞானம்
வினா - விடை:
1. 1942 ஆகஸ்டு
8 ஆம் நாள் நடைபெற்றது என்ன?
2. ம.பொ.
சிவஞானம் எப்போது எங்குச் சிறையில் அடைக்கப்பட்டார்?
3. ம.பொ.சிவஞானம்
யார் யாரைச் சிறையில் சந்தித்தார்?
4.சிறைச்சாலையின்
கூரை எதனால் ஆனவை?
5. இவ்வுரைப்பகுதிக்குப்
பொருத்தமான தலைப்பு ஒன்று தருக.
8.அம்மானை
பாடல்கள், சித்தர் பாடல்கள், சொற்பொழிவுகள்
போன்றவற்றின் மூலமாக நான் இலக்கிய அறிவு பெற்றேன்.
அப்போது அவர்கள் வெளியிடும் சிறந்த கருத்துகளை ஏடுகளில் குறித்து
வைத்துக்கொள்வேன். யான் முறையாக ஏட்டுக்கல்வி பெற இயலாமல் போனதால் ஏற்பட்ட இழப்பை ஈடு
செய்யக் கேள்வி ஞானத்தைப் பெறுவதிலேயே மிகுந்த ஆர்வம் காட்டினேன். எனது கேள்வி
ஞானத்தைப் பெருக்கிய பெருமை திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகளுக்கே அதிகம் உண்டு
என்றெல்லாம் தமது செவிச் செல்வம் பற்றி ம.பொ. சிவஞானம் குறிப்பிட்டுள்ளார். (PTA – 2)
அ) மாபொ.சி அவர்கள் கேள்வி
ஞானத்தை அதிகமாக யாரிடம் பெற்றதாகக் குறிப்பிடுகிறார்?
ஆ) ம.பொ.சி அவர்கள் இலக்கிய அறிவினை எவ்வாறு பெற்றார்?
இ) ஏட்டுக்கல்வி பெற இயலாத ம.பொ.சி அதனை எவ்வாறு ஈடு செய்தார்?
CLICK TO DOWNLOAD BUTTON TO GET PDF
தமிழக தமிழாசிரியர் கழகம்-சேலம்
மாவட்டம்
விடைக்கேற்ற
வினா (குறைக்கப்பட்ட பாடத்திட்டம்)
மெல்ல
கற்கும் மாணவர்கள்
பத்தாம்
வகுப்பு – தமிழ்
- இயல்கள்
1-9
II. விடைக்கேற்ற வினா அமைக்க.
1.காந்தியடிகள் சத்தியாக்கிரகம்
என்ற அறப்போர் முறையைத் தென்னாப்பிரிக்காவில் தொடங்கி வைத்தார்.
காந்தியடிகள் சத்தியாக்கிரகம்
என்ற அறப்போர் முறையைத் தென்னாப்பிரிக்காவில் தொடங்கி வைத்தாரா?
2.ம.பொ.சி யின் கேள்வி ஞானத்தைப் பெருக்கிய
பெருமையிலே திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகளுக்கே மிகுந்த பங்குண்டு.
ம.பொ.சியின் கேள்வி ஞானத்தைப்
பெருக்கிய பெருமையிலே யாருக்கு மிகுந்த பங்குண்டு?
3. 1942 ஆகஸ்ட் 13 ஆம் நாள் ம.பொ.சி. வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
ம.பொ.சி வேலூர் சிறையில் எப்போது
அடைக்கப்பட்டார்?
4.மா.பொ.சி. அம்மானைப் பாடல்களை
அடிக்கடி பாடிப்பாடி பிள்ளைப் பருவத்திலேயே இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்டார். (செப்-20)
ம.பொ.சி இலக்கிய அறிவை எவ்வாறு
வளர்த்துக் கொண்டார்?
5. சங்க காலத்திற்குப் பிந்தைய அற இலக்கியங்களின்
காலத்தை அறநெறிக்காலம் என்பர்
அறநெறிக்காலம் எது?
6. உண்மையான செல்வம் என்பது பிறர்துன்பம்
தீர்ப்பதுதான் என்கிறார் நல்வேட்டனார்.
உண்மையான செல்வம் என்பது பிறர்துன்பம்
தீர்ப்பதுதான் என்றவர் யார்?
7. நாக்கு ஓர் அதியத் திறவுகோல்.
எது ஓர் அதியத் திறவுகோல்?
8. வாய்மையைச் சிறந்த அறமாகச் சங்க
இலக்கியங்கள் பேசுகின்றன.
எதனைச் சிறந்த அறமாகச் சங்க இலக்கியங்கள்
பேசுகின்றன?
5. ஒரு நாட்டு வளத்திற்குத் தக்கபடியே
அந்நாட்டு மக்களின் அறிவொழுக்கங்கள் அமைந்திருக்கும்.
ஒரு நாட்டு வளத்திற்குத் தக்கப்படி
அமைந்திருப்பது எது?
9. சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த
பெருமகனார் தமிழ்த்திரு இரா.இளங்குமரனார்.
சொல்லாராய்ச்சியில் பாவாணரை வியந்த பெருமகனார் யார்?
10.சாலைகளின் இடப்பக்கம் வண்டிகள்
செல்வதே சாலை விதிகளில் முதன்மை விதி
சாலை
விதிகளில் முதன்மையான விதி எது?
11.ஓட்டுநர் உரிமம்,
ஊர்தியின்
பதிவுச் சான்றிதழ், ஊர்தியின் வழி மற்றும்
காப்பீட்டுக்
போன்றவற்றை
ஊர்தி ஓட்டுபவர் ஒவ்வொருகவருக்கும் கட்டாயமாகக் கையில் வைத்திருக்க வேண்டும்.
ஊர்தி ஓட்டுபவர் ஒவ்வொருவரும் கட்டாயமாகக் கையில் வைத்திருக்க வேண்டுபவை யாவை?
1. பத்தியைப் படித்துப் பதில் தருக:
பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல
ஊழிக்காலங்கள் கடந்து சென்றன. புவி உருவான போது நெருப்பும் பந்து போல் விளங்கிய
ஊழிக்காலம் தோன்றியது. பின்னர் புவி குளிரும்படியாகத் தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக்
காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது.
இப்படி மீண்டும் மீண்டும் சிறப்பாகிய ஆற்றல் மிகுந்து செறிந்து திரண்டு இப்படியாக
(வெள்ளத்தில் மூழ்குதல்) நடந்த இந்தப் பெரிய உலகத்தில், உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய
உள்ளீடு தோன்றியது. உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியாக இப்பெரிய புவியில் ஊழிக்காலம்
கடந்தது. (PTA – 4)
1.பத்தியில்
உள்ள அடுக்குத்தொடர்களை எடுத்து எழுதுக.
விடை: மீண்டும் மீண்டும்
2. புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது?
விடை: தொடர்ந்து பெய்த மழையால் புவி
வெள்ளத்தில் மூழ்கியது.
3. பெய்த மழை - இத்தொடரை வினைத்தொகையாக
மாற்றுக
விடை: பெய் மழை - வினைத்தொகை
4. இப்பத்தி உணர்த்தும் அறிவியல் கொள்கை
யாது?
விடை: நீருக்கும் ஆற்றல் உண்டு
5. உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாக நீவிர்
கருதுவன யாவை?
விடை: நன்றாக மழை பெய்து நாடு வளமையாகத் திகழ
வேண்டும். தூய காற்றும், தூய நன்னீரும் நாம் உயிர் வாழ்வதற்கு
ஏற்ற சூழலாகும்.
2.பின்வரும்
பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி.
உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன்
என்கிறார் ஔவையார். இரவலர் வராவிட்டாலும் அவர்களைத் தேடி வரவழைத்தார்.
ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் இயல்பு என்கிறார் நச்செள்ளையார். பேகன் மறுமை நோக்கிக்
கொடுக்காதவன் என்கிறார் பரணர். தன்னை நாடி வந்த பரிசிலன் பொருள் பெறாமல்
திரும்புவது, தான் நாட்டை
இழந்த துன்பத்தைவிடப் பெருந்துன்பம் எனக்குமணன் வருந்தியதாகப் பெருந்தலைச்
சாத்தனார் குறிப்பிட்டுள்ளார். எல்லாவற்றையும் கொடுப்பவன் என்று மலையமான்
திருமுடிக்காரியைக் கபிலர் பாராட்டுகிறார்.
வினா - விடை :
1. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் யார்?
உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன்
அதியன்.
2. ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் இயல்பு யாது?
இரவலர் வராவிட்டாலும் அவர்களைத் தேடி
வரவழைத்தல் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் இயல்பு ஆகும்.
3. குமணன் வருந்தக் காரணம் யாது?
தன்னை நாடி வந்த பரிசிலன் பொருள் பெறாமல்
திரும்புவது தான் நாட்டை இழந்த துன்பத்தை விட பெருந்துன்பம் எனக் குமணன்
வருந்தினான்.
4.மலையமான்
திருமுடிக்காரியைக் கபிலர் எவ்வாறு பாராட்டுகிறார்?
எல்லாவற்றையும் கொடுப்பவன் திருமுடிக்காரி எனக் கபிலர் பாராட்டுகிறார்.
5. பேகன் எப்படிப்பட்டவன்?
பேகன் மறுமை நோக்கிக் கொடுக்காதவன்.
6. இப்பத்திக்கேற்ற தலைப்புத் தருக.
கொடைச் சிறப்பு
3.தமிழர், போரிலும் அறநெறிகளைப் பின்பற்றினர். போர்
அறம் என்பது வீரமற்றோர், புறம்
பார் அறம் என்பது வீரமற்றோர், புறமுதுகிட்டோர், மாரை எதிர்த்துப் போர் செய்யாமையைக்
குறிக்கிறது. போரின் கொடுமையிலிருந்து
பசு,பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியயோருக்குத்
திங்குவராமல்போர் புரிய வேண்டும் என்று ஒருபாடல் கூறுகிறது.
தம்மைவிடவலிமைகுறைந்தால் போர் செய்வது கூடாது என்பதை ஆவூர் மூலங்கிழார்
குறிப்பிட்டிருக்கிறார். (PTA - 3&6 செப்-20)
அ) போர் அறம் என்பது எவற்றைக்
குறிக்கிறது?
போர் அறம் என்பது வீரமற்றோர், புறமுதுகிட்டோர், சிறார். முதியோர் ஆகியோரை எதிர்த்துப்
போர் செய்யாமையைக் குறிக்கிறது.
ஆ) ஆவூர் மூலங்கிழார் போர் அறம்
குறித்துக் குறிப்பிடுவது யாது? (அல்லது) யாரோடு போர்
செய்வது கூடாது என்று ஆவூர் மூலங்கிழார் குறிப்பிடுகிறார்?
தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர்
செய்வது கூடாது என்று ஆவூர் மூலங்கிழார் கூறுகிறார்.
இ) போரில் யாருக்கெல்லாம் தீங்கு வராமல்
போர் புரிய வேண்டும் என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன?
போரின் கொடுமையிலிருந்து பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும்.
4.
உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
வாய்மையைச் சிறந்த அறமாகச் சங்க
இலக்கியங்கள் பேசுகின்றன. வாய்மை பேசும் நாவே உண்மையான நா என்ற கருத்தை, “பொய்யாச் செந்நா", "பொய்படுபறியா வயங்கு செந்நா" என்று இலக்கியங்கள் கூறுகின்றன. நாக்கு
ஓர் அதிசயத் திறவுகோல் என்பார்கள். இன்பத்தின் கதவைத் திறப்பதுவும் அதுதான்.
துன்பத்தின் கதவுகளைத் திறப்பதும் அதுதான். மெய் பேசும் நா மனிதனை உயர்த்துகிறது.
பொய்பேசும் நா மனிதனைத் தாழ்த்துகிறது. 'பிழையா நன்மொழி' என்று வாய்மையை நற்றிணை
குறிப்பிடுகின்றது. இதற்கு மாறாகப் 'பொய்மொழிக் கொடுஞ்சொல்' என்று பொய்யைக் குறிப்பிடுகிறது. நிலம்
புடைபெயர்ந்தாலும் பொய் சொல்லக்கூடாது என்பது பல இலக்கியங்களில்
வற்புறுத்தப்பட்டுள்ளது.
1) வாய்மையை நற்றிணை எவ்வாறு
குறிப்பிடுகின்றது?
'பிழையா நன்மொழி' என்று வாய்மையை நற்றிணை
குறிப்பிடுகின்றது.
ii) வாய்மை பேசும் நாவே உண்மையான நா என்ற
கருத்தை இலக்கியங்கள் எவ்விதம்
கூறுகின்றன?
வாய்மை பேசும் நாவே உண்மையான நா என்ற
கருத்தை, "பொய்யாச்
செந்நா", "பொய்படுபறியா
வயங்கு செந்நா" என்று இலக்கியங்கள் கூறுகின்றன.
iii) மனிதனைத் தாழ்த்துவது எது?
பொய்பேசும் நா மனிதனைத் தாழ்த்துகிறது
iv) நிலம் புடைபெயர்ந்தாலும் செய்யக்கூடாதது
எது?
நிலம் புடைபெயர்ந்தாலும் பொய்
சொல்லக்கூடாது
v) நாக்கு எதனால் அதிசயத் திறவுகோலாகிறது?
இன்பத்தின் கதவைத் திறப்பதுவும் அதுதான். துன்பத்தின் கதவுகளைத் திறப்பதும் அதுதான்.
5.
உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக. PTA -4
பிறருக்கு உதவுதல் என்பதைச் சிறந்த
அறமாகச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. உதவி செயதலை ஈழத்துப் பூதன் தேவனார் 'உதவியாண்மை' என்று குறிப்பிடுகிறார். தன்னைத்
தாண்டிப் பிறரைப் பற்றிச் சிந்திக்கும்போது, இருக்கும் நிலையை ஒதுக்கி, தான் இருக்க வேண்டிய நிலை எது என்பதை
மனிதன் உணர்கிறான் எனலாம். அன்பு என்ற சுடருக்குத் தியாகம் தானே எண்ணெயாக இருக்க
முடியும்? பிறர்
துன்பத்தைத் தம் துன்பமாகக் கருதி, உதவுதல் சான்றோர்க்குக் கடன் என்கிறார்
நல்லந்துவனார். அவ்வாறே, உண்மையான செல்வம் என்பது பிறர் துன்பம்
தீர்ப்பதுதான் என்கிறார் நல்வேட்டனார்.
i) அன்பு என்னும் சுடருக்கு எண்ணெய்யாக
இருப்பது எது?
அன்பு என்னும் சுடருக்கு எண்ணெய்யாக
இருப்பது தியாகம்.
ii) சிறந்த அறமாகச் சங்க இலக்கியங்கள் எதைக்
காட்டுகின்றன?
பிறருக்கு உதவுதல் என்பதைச் சிறந்த
அறமாகச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.
iii) உண்மையான செல்வம் என்று நல்வேட்டனார்
குறிப்பிடுவது எதனை?
உண்மையான செல்வம் என்பது 'பிறர் துன்பம் தீர்ப்பதுதான்' என்கிறார் நல்வேட்டனார்.
iv) உதவி செய்தலை 'உதவியாண்மை ' என்று குறிப்பிடுபவர் யார்?
உதவி செய்தலை ஈழத்துப் பூதன் தேவனார் 'உதவியாண்மை ' என்று குறிப்பிடுகிறார்.
v) சான்றோர்க் கடனாக நல்லந்துவனார்
குறிப்பிடுவது யாது?
பிறர் துன்பத்தைத் தம் துன்பமாகக் கருதி, உதவுதல் சான்றோர்க்குக் கடன் என்கிறார் நல்லந்துவனார்.
6.உரைப்பத்தியைப்
படித்து வினாக்களுக்கு விடை தருக.
ஒரு மொழி பொதுமக்களாலும் அதன் இலக்கியம், புல மக்களாலும் அமையப்பெறும். தமிழ்ப்
பொதுமக்கள் உயர்ந்த பகுத்தறிவுடையர். எத்துணையோ ஆராய்ச்சி நடந்துவரும்
இக்காலத்திலும் எத்துணையோ மொழிகளினின்றுகடன்கொண்ட ஆங்கில மொழியிலும் நூலிலும்
இலையைக் குறிக்கலீஃப் (Leaf) என்னும் வரே சொல் உள்ளது. ஆங்கில
நூல்களிலும் வேறு பல வகைகளில் இலைகளைப் பாகுபாடு செய்தனரேயன்றி.
தமிழ்ப்பொதுமக்களைப் போல வன்மை மென்மை பற்றித் தாள், இலை, தோகை ஓலை எனப் பாதபாடு செய்தாரில்லை.
இத்தகைய பாகுபாடு ஏனைய உறுப்புகளுக்குள்ளும் செய்யப்பட்டது. தமிழ்நாடு எத்துணைப்
பொருள்வளமுடையதென்பது, அதன் விளைபொருள் வகைகளை நோக்கினாலே விளங்கும்.
i) ஒரு மொழியும், அதன் இலக்கியமும் எவ்வாறு அமையும்?
விடை: ஒரு மொழி பொதுமக்களாலும் அதன்
இலக்கியம், புல மக்களாலும்
அமையப்பெறும்.
ii) தமிழ்மக்கள் இலைகளை எவ்வாறு பாகுபாடு
செய்தனர்?
விடை: வன்மை மென்மை பற்றித் தாள், இலை, தோகை, ஓலை
iii) தமிழ்நாட்டின் பொருள்வளத்தினை எவ்விதம்
விளங்கிக்கொள்ளலாம்?
விடை : தமிழ்நாடு எத்துணைப்
பொருள்வளமுடையதென்பது, அதன் விளைபொருள் வகைகளை நோக்கினாலே விளங்கும்.
iv) மொழி ஆராய்ச்சிக்கு ஓர் எடுத்துக்காட்டு
தருக.
விடை: ஆங்கில மொழியிலும் நூலிலும் இலையைக் குறிக்க Leaf (லீஃப்) என்னும் ஒரேசொல் உள்ளது. ஆங்கில நூல்களிலும் வேறு பல வகைகளில இலைகளைப் பாகுபாடு செய்தனரேயன்றி,தமிழ்ப்பொதுமக்களைப் போல வன்மை மென்மை
பற்றித் தாள், செய்தாரில்லை.
V) இப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பு ஒன்று
தருக.
விடை : தமிழ்ச் சொல் வளம்
7. பின்வரும் பத்தியைப் படித்து
வினாக்களுக்கு விடையளி.
அ) 1942
ஆகஸ்டு 8ஆம் நாள், இந்திய வரலாற்றில் பொன்
எழுத்துகளால் பொறிக்கத்தக்க புனித நாளாகும்.அன்று தான் 'இந்தியாவை விட்டு வெளியேறு'
என்ற
தீர்மானத்தைப் பம்பாயில் கூடிய அகில இந்திய பேராயக்கட்சி ஒரு மனதுடன்
நிறைவேற்றியது. தேசம் முழுவதுமே அன்று புத்துயிர் பெற்றது. நாடெங்கும் தலைவர்கள்
கைதான நிலையில் நானும் ஆகஸ்டு 13 ஆம் நாள் வேலூர் மத்திய
சிறைச்சாலையில் அடைக்கப்பட்டேன். காமராசர், தீரர் சத்தியமூர்த்தி,
பிரகாசம்
உட்பட, தென்னகத்தின்
முன்னணித் தலைவர்கள் பலரை அங்கு நான் கண்டேன். சில நாள்களுக்குப் பின் அங்கிருந்து
அமராவதிச் சிறைக்கு மாற்றினர். சிறைச் சாலையில்
எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தின் மேற்கூரை துத்தநாகத் வேயப்பட்டிருந்தது.
கோடைக்காலத்தில் 120 பாகை அளவில் வெயில் காயக்கூடிய பகுதியில் மின்சார விசிறிகூட இல்லாமல் எங்களுடைய
நிலை மிகவும் இரங்கத்தக்கதாக இருந்தது. - ம.பொ.சிவஞானம்
வினா - விடை:
1. 1942 ஆகஸ்டு 8
ஆம் நாள்
நடைபெற்றது என்ன?
இந்தியாவை விட்டு வெளியேறு' என்ற தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
2. ம.பொ. சிவஞானம் எப்போது எங்குச் சிறையில்
அடைக்கப்பட்டார்?
1942 ஆகஸ்டு 13 ஆம் நாள் வேலூர் சிறையில்
அடைக்கப்பட்டார்.
3. ம.பொ.சிவஞானம் யார் யாரைச்
சிறையில் சந்தித்தார்?
காமராசர்,
தீரர்
சத்தியமூர்த்தி, பிரகாசம்
போன்ற தென்னிந்தியத் தலைவர்களைச் சிறையில் சந்தித்தார்.
4.சிறைச்சாலையின் கூரை எதனால் ஆனவை?
துத்தநாகத் தகடுகளால் வேயப்பட்டிருந்தது.
5. இவ்வுரைப்பகுதிக்குப் பொருத்தமான
தலைப்பு ஒன்று தருக.
ம.பொ.சி-யின் சிறைவாசம்
8.அம்மானை பாடல்கள்,
சித்தர்
பாடல்கள், சொற்பொழிவுகள்
போன்றவற்றின் மூலமாக நான் இலக்கிய அறிவு பெற்றேன். அப்போது அவர்கள் வெளியிடும் சிறந்த கருத்துகளை ஏடுகளில்
குறித்து வைத்துக்கொள்வேன். யான் முறையாக ஏட்டுக்கல்வி பெற இயலாமல் போனதால்
ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யக் கேள்வி ஞானத்தைப் பெறுவதிலேயே மிகுந்த ஆர்வம்
காட்டினேன். எனது கேள்வி ஞானத்தைப் பெருக்கிய பெருமை திருப்பாதிரிப்புலியூர்
ஞானியாரடிகளுக்கே அதிகம் உண்டு என்றெல்லாம் தமது செவிச் செல்வம் பற்றி ம.பொ.
சிவஞானம் குறிப்பிட்டுள்ளார். (PTA
– 2)
அ) மாபொ.சி அவர்கள் கேள்வி
ஞானத்தை அதிகமாக யாரிடம் பெற்றதாகக் குறிப்பிடுகிறார்?
ம.பொ.சி அவர்கள் கேள்வி ஞானத்தை திருப்பாதிரிப்புலியூர்
ஞானியாரடிகள் மூலமாகப் பெற்றதாகக் குறிப்பிடுகிறார்.
ஆ) ம.பொ.சி அவர்கள் இலக்கிய அறிவினை எவ்வாறு பெற்றார்?
அம்மானை பாடல்கள், சித்தர் பாடல்கள், சொற்பொழிவுகள் போன்றவற்றின் மூலமாக ம.பொ.சி அவர்கள் இலக்கிய அறிவு பெற்றார்.
இ) ஏட்டுக்கல்வி பெற இயலாத ம.பொ.சி அதனை எவ்வாறு ஈடு செய்தார்?
ஏட்டுக்கல்வி பெற இயலாமல் போனதால் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்யக்
கேள்வி ஞானத்தைப் பெறுவதால் ஈடுசெய்தார்.
CLICK TO DOWNLOAD BUTTON TO GET ANSWER KEY PDF
Prakashraj
ReplyDelete