ஏழாம் வகுப்பு
தமிழ்
மூன்றாம் பருவம்
கட்டுரை
1. என்னைக் கவர்ந்த நூல்
முன்னுரை |
என்னை
கவர்ந்த நூல் |
நூல்
அமைப்பு |
கருத்துக்களஞ்சியம் |
முடிவுரை |
முன்னுரை
:
மொழி,இனம்,நாடு,சாதி,சமயம் முதலிய வேறுபாடுகள் இல்லாமல் உலக மக்கள் அனைவராலும் ஏற்றுப் போற்றத் தக்க அறநெறிகளைக் கூறும் நூல் திருக்குறள். அந்த நூலே என்னைக் கவர்ந்த நூல்.
என்னை கவர்ந்த நூல் :
திருக்குறள் உலக மொழிகளில் பல மொழிகளில் மொழிப் பெயர்க்கப்பட்டுள்ளது. அதன் வாழ்வியல் கருத்துகள் இன்றைய வாழ்வியல் சூழலோடு மிகவும் பொருந்தி அமைவது திருக்குறளின் சிறப்பு. திருக்குறளில் உள்ள 1330 குறட்பாக்கள் இன்றைய மக்கள் அனைவரும் படித்துப் புரிந்து கொண்டு வாழ வேண்டும்.
நூல்
அமைப்பு :
திருக்குறள் அறத்துப்பால்,பொருட்பால்,இன்பத்துப்பால் என முப்பிரிவுகளைக் கொண்டது. 133 அதிகாரங்களைக் கொண்டது.அதிகாரத்திற்கு 10 குறட்பாக்கள் வீதம் 1330 குறட்பாக்களை உடையது.திருக்குறள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று.
உலகப்
பொதுமறை
திருக்குறள் உலக மக்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.கல்வி, கேள்வி, ஒழுக்கம், அடக்கம், வாய்மை, பொறுமை, ஈகை முதலிய பண்புகள் உலகோர் அனைவருக்கும் பொதுவானது. திருக்குறளில் தமிழ் மொழிப்பற்றியோ, தமிழ் நாட்டினைப் பற்றியோ குறிப்பிடாமல் மனித வாழ்வுக்குத் தேவையான கருத்துகளைக் கூறியுள்ளமையால், இது உலகப் பொதுமறை என வழங்கப்படுகிறது.
கருத்துக்களஞ்சியம்
அறத்தான் வருவதே இன்பம், ஒழுக்கம் விழுப்பம் தரலான், கற்க கசடற, நன்றி மறப்பது நன்றன்று, தொட்டனைத் தூறும் மண்ற்கேணி, கேடில் விழுச்செல்வம் போன்ற மனித வாழ்வினை உயர்த்தக் கூடிய அருள் மொழியாகும்.
முடிவுரை
:
இறைவன் மனிதனுக்கு சொன்னது
கீதை. மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம். மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.
திருக்குறள் உலக மக்களுக்காக படைக்கப்பட்டது. திருக்குறளை கற்போம்! கற்றபடி நிற்போம்.