10TH - TAMIL - UNIT 5 - SPECIAL GUIDE

  WWW.THAMIZHVITHAI.COM 

குறைக்கப்பட்ட தமிழ் பாடத்திற்கான வழிகாட்டி

இரண்டாம் திருப்புதல் தேர்வு - 2022

மெல்ல கற்போர் சிறப்பு வழிகாட்டி

பத்தாம் வகுப்பு – தமிழ்

இயல் – 5

பலவுள் தெரிக:-

1. அருந்துணை என்பதைப் பிரித்தால்_______________

அருமை + துணை                அரு + துணை      அருமை + இணை                 அரு + இணை

2.இங்கு நகரப் பேருந்து நிற்குமா?” என்று வழிப்போக்கர் கேட்டது______________வினா“ அதோ,அங்கே நிற்கும்” என்று மற்றொருவர் கூறியது ___________ விடை.

ஐய வினா,வினா எதிர் வினாதல்            அறிவினா,மறைவிடை

அறியா வினா,சுட்டு விடை கொளல்வினா,இனமொழிவிடை

3. அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

  மருளை அகற்றி மதிக்கும் தெருளை

 -என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?

தமிழ்                   அறிவியல்            கல்வி   இலக்கியம்

2. குறு வினா

1.செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத் தொடர்களாக்குக:-

Ø  அறிவைத் திருத்தி சீராக்குவோம்

Ø  கல்வி பெற்று மயக்கம் அகற்றுவோம்

2. தாய்மொழியும் ஆங்கிலமும் தவிர நீங்கள் கற்க விரும்பும் மொழியினைக் குறிப்பிட்டுக் காரணம் எழுதுக.

Ø  இந்தி

Ø  இந்தியா முழுவதும் பேசப்படுகிறது

3. இந்த அறை இருட்டாக இருக்கிறதுமின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது?இதோ...இருக்கிறதேசொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே!

மின்சாரம் இருக்கிறதா?இல்லையா?

  மேற்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின் வகைகளை எடுத்தெழுதுக.

மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது? – அறியாவினா

மின்சாரம் இருக்கிறதா?இல்லையா? – ஐய வினா

3. சிறு வினா:-

1. உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி வேலைக்குச் செல்ல விரும்புகிறார்அவரிடம் கற்பதன் இன்றியமையாமையை எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள்?

Ø  கல்வி நமக்கு மகிழ்ச்சியான வாழ்வைத் தரும்

Ø  சமூகத்தில் நற்பெயருடன் இருக்க கல்வி அவசியம்.

Ø  பிறருடைய உதவி நாடாமல் சுயமாக வாழ கல்வி அவசியம்

Ø  கல்வி நமக்கு உறுதியான பாதுகாப்பு தரும்

2. முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

   இன்மை புகுத்தி விடும்.-இக்குறட்பாவில் அமைந்துள்ள பொருள்கோளின் வகையைச் சுட்டி விளக்குக.

Ø  ஆற்றுநீர் பொருள்கோள்

Ø  விளக்கம் : பாடலின் தொடக்கம் முதல் இறுதி வரை நேராக பொருள் கொள்ளுமாறு அமைவது.

Ø  பொருத்தம் : முயற்சி ஒருவனுக்கு செல்வத்தைப் பெருக்கும்முயற்சி இல்லாதிருந்தால் வறுமை சேரும்இக்குறள் தொடக்கம் முதல் இறுதி வரை நேராக பொருள் கொள்ளுமாறு அமைந்துள்ளது.

 மொழியை ஆள்வோம்

மொழி பெயர்ப்பு:-

ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களைக் கவிதையில் கண்டு எழுதுக:-

யாழிசை

It’s like new lute music

அறைக்குள் யாழிசை

ஏதென்று சென்று

எட்டிப் பார்த்தேன்

பேத்தி,

நெட்டுருப் பண்ணினாள்

நீதிநூல் திரட்டையே.

               பாரதிதாசன்

Wondering at the lute music

Coming from the chamber

Entered I to look up to in still

My grand – daughter

Learning by rote the verses

Of a didactic compilation

 

Translated by Kavingar Desini

Ø   

Lute music

யாழிசை

Grand - daughter

பேத்தி

chamber

அறை

rote

நெட்டுரு

To look up

பார்த்தல்

Didactic compilation

நீதிநூல் திரட்டு

2. அட்டவணையில் விடுபட்டதை எழுதுக.

வேர்ச்

சொல்

எழுவாய்த் தொடர்

பெயரெச்சத் தொடர்

வினையெச்சத் தொடர்

விளித் தொடர்

வேற்றுமைத் தொடர்

ஓடு

அருணா ஓடினாள்

ஓடிய அருணா

ஓடி வந்தாள்

அருணா ஓடாதே!

அருணாவிற்காக ஓடினாள்

சொல்

அம்மா சொன்னார்

சொன்ன அம்மா

சொல்லிச் சென்றார்

அம்மா சொல்லாதே!

கதையைச் சொன்னார்

தா

அரசர் தந்தார்

தந்த அரசர்

தந்து சென்றார்

அரசே தருக!

புலவருக்குத் தந்தார்

பார்

துளிர் பார்த்தாள்

பார்த்த துளிர்

பார்த்துச் சிரித்தாள்

துளிரே பார்க்காதே

துளிருடன் பார்த்தேன்

வா

குழந்தை வந்தது

வந்த குழந்தை

வந்து பார்த்தது

குழந்தையே வா

குழந்தைக்காக வந்தாள்

3. தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க.

Ø  1. கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான்.

Ø  விடைஅழகிய குளிர்ந்த கடம்பவனத்தை விட்டு இறைவன்     நீங்கினான்

Ø  2. மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.

Ø  விடைநிழல் தரும் மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.

Ø  3. வாழ்க்கைப்பயணமே வேறுபட்ட பாடங்களைக் கற்றுத் தருகிறது.

Ø  விடைஇன்பத் துன்பம் நிறைந்த வாழ்க்கைப்பயணமே வேறுபட்ட           பாடங்களைக் கற்றுத் தருகிறது.

4. கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்.

Ø  விடைசிறந்த கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்.

Ø  5. குழந்தைகள் தனித்தனியே எழுதித் தர வேண்டும்.

Ø  விடைசுட்டிக் குழந்தைகள் தனித்தனியே எழுதித் தர வேண்டும்         

மொழியோடு விளையாடு

Ø  புதிர்ப் பாடலைப் படித்து விடையைக் கண்டுபிடிக்க:-

Ø    தார்போன்ற நிறமுண்டு கரியுமில்லை

Ø    பார் முழுதும் பறந்து திரிவேன் மேகமுமில்லை

Ø    சேர்ந்து அமர்ந்து ஒலிப்பேன் பள்ளியுமில்லை

Ø    சோர்ந்து போகாமல் வீடமைப்பேன் பொறியாளருமில்லை

Ø    வீட்டுக்கு வருமுன்னேவருவதைக் கூறுவேன்

Ø  .நான் யார்?________காகம்_____________

Ø  தொழிற்பெயர்களின் பொருளைப் புரிந்து கொண்டு தொடர்களை முழுமை செய்க

Ø  1. நிலத்துக்கு அடியில் கிடைக்கும் ____புதையல் _____யாவும் அரசுக்கே சொந்தம்.நெகிழிப் பொருள்களை மண்ணுக்கு அடியில் ___ புதைத்தல் __ நிலத்தடி நீர் வளத்தைக் குன்றச் செய்யும்.(புதையல்,புதைத்தல்)

Ø  2. காட்டு விலங்குகளைச் ____ சுடுதல் ____தடை செய்யப்பட்டுள்ளதுசெய்த தவறுகளைச் _______ சுட்டல் ____திருத்த உதவுகிறது.(  சுட்டல்,சுடுதல் )

Ø  3. காற்றின் மெல்லிய __ தொடுதல் ____ பூக்களைத் தலையாட்ட வைக்கிறதுகைகளின் நேர்த்தியான ____ தொடுத்தல் ____பூக்களை மாலையாக்குகிறது. ( தொடுத்தல்,தொடுதல் )

Ø  4. பசுமையான ____ காட்சி ___ஐக்____ காணுதல் ______ கண்ணுக்கு நல்லது.( காணுதல்,காட்சி)

Ø  5. பொது வாழ்வில்__ நடித்தல்____கூடாது ____நடிப்பு ____இல் அவரை மிஞ்ச ஆள் கிடையாது. ( நடித்தல்,நடிப்பு )

அகராதியில் காண்க.

மன்றல்

திருமணம்,மணம் ( வாசனை )

அடிச்சுவடு

காலடிச்சுவடு

அகராதி

அகரவரிசையில் பொருள் தரும் நூல்

தூவல்

தூவானம்,இறகு,எழுதுகோல்

மருள்

மயக்கம்,பேய்,வியப்பு

கலைச் சொல் அறிவோம்.

Emblem

சின்னம்

Thesis

ஆய்வேடு

Intellectual

அறிவாளர்

Symbolism

குறியீட்டியல்

 


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post