அன்பிற்கினிய ஆசிரியப் பெருமக்கள் மற்றும் மாணவர்களுக்கு வணக்கம். பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு,பனிரெண்டாம் வகுப்பு ஆகிய வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மே மாதம் 5 முதல் நடைபெற உள்ளது. அதற்கு முன் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 21 முதல் இரண்டாம் திருப்புதல் தேர்வு நடைபெற உள்ளது என்பதனை நாம் அனைவரும் அறிந்தது. எனவே மாணவர்கள் இனியும் காலம் தாழ்த்தாமல் இருக்கின்ற நாட்களை பயனுள்ளவகையில் படித்து நமது கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும். உங்களின் கற்றலுக்கு இந்த தமிழ் விதை வலைதளம் வேண்டிய கற்றல் வளங்களை உங்களுக்கு இலவசமாக வழங்குகிறது. அந்த வகையில் பத்தாம் வகுப்புத் தேவையான நான்கு முக்கியப் படிவங்களை உங்களுக்கு கொடுக்கின்றோம். இந்த படிவத்தில் முக்கியமானது என்னவெனில் நீங்கள் இணையம் வழியாகவும் படிவங்களை நிரப்பலாம். மேலும் அதனை நகல் எடுத்து வீட்டிலும் பயிற்சி பெறலாம். இந்த நான்கு படிவங்களையும் ஒரே தாளில் முன்,பின் என எடுத்துக் கொள்ளலாம்.
நான்கு படிவங்களை இணைய வழியில்
தேர்வு எழுத
நான்கு படிவங்களையும் - PDF
வடிவில் பதிவிறக்கம் செய்ய