10TH -TAMIL - 2ND REVISION - MODEL QUESTION PAPER -2

 ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். எதிர் வரும் இரண்டாம் திருப்புதல் தேர்வுக்கு நாம் அனைவரும் தயாராகிக் கொண்டு இருப்போம். உங்களின் தேடலுக்கு இந்த வலைதளம் மிகவும் உதவும். இரண்டாம் திருப்புதல் தேர்வுக்குத் தேவையான மாதிரி வினாத்தாள் நமது வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பதிவிறக்கம் செய்து இருப்பீர்கள். இப்போது அந்த மாதிரி வினாத்தாளுக்கான விடைக்குறிப்பும் பதிவிடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் இந்த விடைக்குறிப்பினை பயன்படுத்திக் கொள்ளவும். மாதிரி வினாத்தாள் -2 விரைவில் வெளியிடப்படும். அதற்கு முன் இயல் வாரியான அலகுத் தேர்வுகள், இணையவழி ஒரு மதிப்பெண் தேர்வுகள் என நமது வலைதளத்தில் பகிரப்பட்டுள்ளது. அவற்றையும் பயன்ப்படுத்திக் கொள்ளவும்.ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொண்டு பயன் அடையும் படி கேட்டுக் கொள்கிறோம்.

இரண்டாம் திருப்புதல் தேர்வு

பத்தாம் வகுப்பு

தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்

மாதிரி வினாத்தாள் -2

இரண்டாம் திருப்புதல் தேர்வு

மார்ச்2022

நேரம் 15 நிமிடங்கள் + 3 மணி நேரம்                 மொத்த மதிப்பெண்கள் : 100

பகுதி - 1

அ) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                                              15 × 1 = 15

1 ) மீளாத் துயர் – கோடிட்ட சொல்லின் எதிர்மறையான சொல் எது?

) மீளாத          ) மீண்ட          இ) காணாத       ) இல்லாத

2 ) கா.ப.செய்கு தம்பி பாவலர் சதாவதானி பட்டம் பெற்ற ஆண்டு ___________

அ ) 1907                       ஆ) 1908            இ) 1909             ஈ ) 1910

3 ) “ தா “ என்னும் வேர் சொல்லுக்கு உரிய வினையெச்சத் தொடர் எது?

அ ) தருதல்                     ஆ ) தந்த அரசர்              இ ) தந்து சென்றார்                     ஈ ) அரசே தருக!

4 ) இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது – இக்குறளில் பயின்று வரும் அணி எது?

அ ) உவமை அணி                                  ஆ ) எடுத்துக்காட்டு உவமை அணி

இ ) இல்பொருள் உவமை அணி                ஈ )  சொற்பொருள் பின் வரு நிலையணி 

5 ) பொருத்தமான சொல்லைத் தேர்வு செய்க:- மலை முகட்டில் மேகம் _____________

அ ) அவிழும்                  ஆ ) தயங்கும்                 இ ) கவிழும்                   ஈ ) உறங்கும்

6 ) ஆறு பெரும் பொழுதுகளும் பெற்று வரும் திணைகள் __________. ____________

) குறிஞ்சி,முல்லை                    ) முல்லை,மருதம்                      ) மருதம்,நெய்தல்          ) நெய்தல்,பாலை

7 ) கம்பர் ____________ நாட்டைச் சார்ந்தவர்

அ ) சோழ நாடு                          ஆ ) சேர நாடு                            இ ) பாண்டிய நாடு          ஈ ) பல்லவ நாடு

8 ) வித்துவகோடு ______ மாநிலத்தில் உள்ளது.

அ ) ஆந்திரா                              ஆ ) கேரளா                              இ ) கர்நாடகா                ஈ ) தமிழ்நாடு

9 ) “ நேற்று வருவான் “ – இத்தொடரில் காணப்படும் வழு ___________

அ ) இட வழு                              ஆ ) மரபு வழு                            இ ) கால வழு                 ஈ ) வினா வழு 

10 ) அகராதியில் காண்க: - உவா

அ ) நாள்                                   ஆ ) கடல்                                   இ ) சூரியன்                   ஈ ) மாலை

11 ) “ நீ விளையாடவில்லையா?” என்ற வினாவிற்கு “ கால் வலிக்கிறது “ எனக் கூறுவது _______ விடை

அ ) உறுவது கூறல்                                             ஆ ) உற்றது உரைத்தல்

இ ) இனமொழி                                                   ஈ ) ஏவல்

பாடலைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு ( வினா எண்கள் 12 , 13 , 14 , 15 ) விடை தருக.

 

            அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி                              

மருளை அகற்றி மதிக்கும் தெருளை

அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்

பொருத்துவதும் கல்வியென்றே போற்று.

 

12 ) இப்பாடல் இடம்பெற்றுள்ள அடி எதுகை சொற்கள் எவை ?

 

அ ) அருளை - பெருக்கி              ஆ ) மருளை - தெருளை

இ ) அருத்துவதும் – அருந்துணை ஈ ) அருளை - மருளை

13 ) இப்பாடலில் “ உயிர் “ என்பதனை உணர்த்தக் கூடிய சொல் எது?                                              

அ ) அருள்                     ஆ ) மருள்                      இ ) தெருள்                     ஈ ) ஆவி

14 ) மருள் என்பதன் பொருள் யாது?

அ ) அறிவு                     ஆ ) அருள்                     இ ) உயிர்                      ஈ ) மயக்கம்

15 ) இப்பாடலில் எதனை வலியுறுத்துகிறது?

அ. அருள்                       ஆ. செல்வம்                   இ) கல்வி                       ஈ) மயக்கம்

                                                            பகுதி - II   ( மதிப்பெண்கள் - 18 )

                                                                                                 பிரிவு - I

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. 21 - வது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.                                                                                                                                    ( 4 × 2 = 8 )

16 ) விடைக்கேற்ற வினாக்கள் அமைக்க.

அ ) தோண்டும் அளவு ஊறும் நீர் போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும் என்கிறது திருக்குறள்.

ஆ ) பெருமாள் திருமொழி நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழியாக உள்ளது.

 17 ) உய்யவந்த பெருமாள் கோவில் எங்கு, எவ்விடத்தில் உள்ளது?.

18 ) சதாவதானம் என்றால் என்ன?

19 ) செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத் தொடர்களாக்குக.

20 ) கம்பர் எழுதிய நூல்கள் யாவை?

21 )  ஒருவருக்கு வறுமையைப் போன்ற துன்பத்தை தருவது வறுமையே என்ற கருத்தினை வலியுறுத்தும் குறட்பாவை அடிமாறாமல் எழுதுக.

பிரிவு - II

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.                                                  5 × 2 = 10

22 ) தொடர்களை அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டுள்ளவாறு மாற்றுக

அ. இன்னாசியார் புத்தகங்களை வரிசைப்படுத்தினார். அவற்றைப் புத்தக அடுக்கங்களில் அடுக்கிவைத்தார்.புத்தகங்களைக் கேட்டவர்களுக்கு எடுத்துக் கொடுத்தார்.(தொடர் சொற்றொடராக மாற்றுக )

            ஆ.கூத்துக் கலைஞர் பாடத் தொடங்கினார். கூடியிருந்த மக்கள் அமைதியாயினர். ( கலவைச் சொற்றொடராக மாற்றுக )

23 ) வினா வழுவினை விளக்குக.

24 ) கலைச்சொல் அறிவோம் -                அ ) SPACE TECHNOLOGY                         ஆ ) MYTH -

25 ) கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களைப் பயன்படுத்தி தொடர் அமைக்க:- அ. விதி – வீதி   ஆ) தான் - தாம்

26 ) கொண்டுகூட்டுப் பொருள்கோளை உதாரணத்துடன் விளக்குக.

27 ) குறிப்பை பயன்படுத்தி எதிர்மறை தொடராக மாற்றி எழுதுக: அ) மறைத்துக் காட்டு         ஆ.) எழுதாக் கவிதை

28 ) கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத கருப்பொருளைத் திருத்தி எழுதுக:-

            அ) உழவர்கள் மலையில் உழுதனர்.

            ஆ) முல்லைப் பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.

                                                            பகுதி - 3 - சிறுவினா                                                   2 × 3 = 6

                                                                         பிரிவு - I

29) வள்ளுவம் சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள் வழி விளக்குக.

30 ) இராமனின் மாநிற மேணியை கம்பர் எவ்வாறு விவரிக்கிறார்?

31 ) உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக .

பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல   காலங்கள் கடந்து சென்றன. புவி உருவானபோதுநெருப்புப் பந்துபோல் விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது. பின்னர்ப் புவி குளிரும்படியாகத்  தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக்காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும் மீண்டும் சிறப்பாக ஆற்றல் மிகுந்து செறிந்து திரண்டு இப்படியாக ( வெள்ளத்தில் மூழ்குதல் ) நடந்த இந்தப் பெரிய உலகத்தில், உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியது. உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியாக இப்பெரிய புவியில் ஊழிக்காலம் கடந்தது.

 

1. பெய்த மழை – இலக்கணக் குறிப்பு தருக.

2. இப்பத்தி உணர்த்தும் அறிவியல் கருத்து யாது?

3. உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாக நீவிர் கருதுவன யாவை?

                                                                                                பிரிவு -                                            2 × 3 = 6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க. வினா எண் 34 கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.

32 ) கா.ப. செய்கு தம்பி பாவலர் குறித்தும், அவர் “ சதாவதானி “ பட்டம் பெற்ற நிகழ்வு குறித்தும் எழுதுக.

33 ) இராமனின் மாநிற மேனியை கம்பர் எவ்வாறு விவரிக்கிறார்?

34 ) “ மாளாத காதல் “  எனத் தொடங்கும் பெருமாள் திருமொழி -பாடலை எழுதுக.

                                    அல்லது

        “ தண்டலை “ எனத் தொடங்கும் கம்ப ராமாயணப் பாடலை எழுதுக.

                                                                                    பிரிவு - 3                                            2 × 3 = 6 

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க.

35 )  நிரல் நிறை பொருள்கோளின் வகைகளை  எடுத்துக்காட்டுடன் விளக்குக.

36 )   கருவியும் காலமும் செய்கையும் செய்யும்

        அருவினையும் மாண்ட தமைச்சு         - அலகிட்டு வாய்ப்பாடு தருக.

37 ) உரையாடலில் இடம் பெற்றுள்ள வினா விடை வகைகளைக் கண்டு எழுதுக.

பாமகள் : வணக்கம் ஆதிரை! ஏதோ எழுதுகிறீர்கள் போலிருக்கிறதே? ( அறியா வினா)

ஆதிரை : ஆமாம்! கவியரங்கத்துக்குக் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன். _____________

பாமகள் : அப்படியா! என்ன தலைப்பு? _________

ஆதிரை : கல்வியில் சிறக்கும் தமிழர்!(---------------). நீங்கள் கவியரங்கத்துக்கு எல்லாம் வருவீர்களோ? மாட்டீர்களோ? ______

பாமகள் : ஏன் வராமல்? __________

 

                                                                                     பகுதி - IV                                            5 × 5 = 25

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.

38 ) அ) சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன் என்ற தலைப்பில் இலக்கிய உரை எழுதுக.

      அன்பும் பண்பும் குணச்சித்திரமும் கொண்ட தலைவர் அவர்களே! தேர்ந்தெடுத்த பூக்களைப் போன்று வரிசை தொடுத்துஅமர்ந்திருக்கும் ஆன்றோர்களே! அறிஞர் பெருமக்களே! வணக்கம், இயற்கை கொலு வீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலைநிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன் காட்டும் கவி..... தண்டலை மயில்கள் ஆட.......  இவ்வுரையைத் தொடர்க.

( அல்லது )

         ஆ) பண்டைத்தமிழர் திணைநிலை வாழ்க்கை முறையையும், இன்றைய தமிழரின் வாழ்க்கை முறையையும் ஒப்பிடுக.

39 )  அ. பள்ள்யில் இடையில் நின்ற உமது வகுப்பு தோழனுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தி மீண்டும் பள்ளியில் கல்வியினைத் தொடர நீ தோழனுக்கு கடிதம் வரைக.

                                                                         ( அல்லது )

      ஆ. உமது பள்ளியில் பெருந்தொற்றி நோயிலிருந்து தம்மைப் பாதுக்காக்கும் வழிமுறைகளைக் குறித்து கூற விழிப்புணர்வு முகாம் நடைத்திட சுகாதார அலுவலருக்கு விண்ணப்பம் வரைக.

40 ) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக .   

 


41 )  ஈரோடு மாவட்டத்தில் , பாரதிதாசன் தெரு, அண்ணாநகரில் 31ம் இலக்க வீட்டில் வசிக்கும் இராமசாமியின் மகன் இளவேலன், தான் பயின்ற இளநிலை கணினி அறிவியல் படிப்புக்கு கோவை மாநகரில் அமைந்துள்ள தமிழ் டெக் என்ற அலுவலகத்தில் காலியாக இருக்கும்  கணினி செயல் திட்ட வரைவாளர்  பணிக்கு விண்ணப்பிக்கிறார். கூடுதல் தகுதியாக தட்டச்சுப் பிரிவில் மேல்நிலை தமிழ் தட்டச்சு, மேல்நிலை ஆங்கில தட்டச்சும் நிறைவு செய்துள்ளார். தேர்வர் தம்மை இளவேலனாக நினைத்து உரிய படிவத்தினை நிரப்புக.

       

42 ) பள்ளியில் தூய்மையாக வைத்திருக்க வேண்டிய செயல்திட்ட மாதிரியை உருவாக்குக.

                                                                                    அல்லது

தொலைக்காட்சி நிகழ்வுகளையே பார்த்துக் கொண்டிருக்கும் தம்பி; திறன் பேசியிலேயே  விளையாடிக் கொண்டிருக்கும் தங்கை; காணொளி விளையாட்டுகளில் மூழ்கியிருக்கும் தோழன். எப்போதும் சமூக ஊடகங்களில் இயங்கியபடி இருக்கும் தோழி. இவர்கள் எந்நேரமும் நடப்புலகில் இருக்காமல் கற்பனை உலகில் மிதப்பவர்களாக இருக்கிறார்கள்! இவர்களை நெறிப்படுத்தி நடைமுறை உலகில் செயல்பட நீங்கள் செய்யும் முயற்சிகளை பட்டியலிடுக.

                                                                        பகுதி - 5                                                           3 × 8 = 24  

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.

43 ) அ ) கம்பராமாயணத்தில் உமது பாடப்பகுதியில்   பாடல் கருத்துகளைத் தொகுத்து ஒரு பக்க அளவில் கட்டுரை வரைக.

( அல்லது )

              ஆ)   தமிழர் மருத்துவ முறைக்கும், நவீன மருத்துவ முறைக்கும் உள்ள தொடர்புக் குறித்து எழுதுக

44 ) அ) இயற்கை வழங்கிய சுற்றுச்சூழலை அதன் தன்மை மாறாமல் அதனை பேணி காக்கும் வழிமுறைகளை பட்டியலிட்டு எழுதுக

(அல்லது)

      ஆ) எதிர்காலத்தில் நீ பயில விரும்பும் கல்விக் குறித்தும், அதன் பயன் குறித்தும், அக்கல்வியினால் சமூகத்தில்

                 எவ்வகையிலான பங்களிப்பு அளிக்க முடியும்? என்பது குறித்து கட்டுரை வரைக.

45 )  அ) உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.

(அல்லது)

        ஆ) விண்வெளியும் கல்பனா சாவ்லாவும் என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக

 

குறிப்பு : அரசு வழங்கிய  குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் இந்த வினாத்தாள் உருவாக்கப்பட்டது.

             மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த இரண்டாம் திருப்புதல் தேர்வு வினாத்தாளினை ஒரு பயிற்சிக்காக

            எடுத்துக்கொள்ளவும். இதிலிருந்து வினாக்கள் வரும் என எதிர்ப்பார்க்க வேண்டாம். இது முழுக்க முழுக்க ஒரு

            பயிற்சிக்காக கொடுக்கப்பட்டது என மீண்டும் நினைவூட்டப்படுகிறது. இரண்டாம் திருப்புதல் தேர்வுக்குரிய

            பாடங்களை அரசு வழங்கிய பாடத்திட்டத்தினை மீள்பார்வை செய்துக் கொள்ளவும்.

                                               

                                                                                                                        நன்றி, தமிழ்விதை

மேலும் வினாத்தாள் தொடர்பான சந்தேகங்களுக்கு…….

மின்னஞ்சல் முகவரி : thamizhvithai@gmail.com

புலன எண் : 8695617154

மேலும் கற்றல் வளங்களுக்கு : www.tamilvithai.com


மாதிரி வினாத்தாள் - 2 PDF பெற

 


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post