ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். மார்ச் 28 முதல் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு,பனிரெண்டாம் வகுப்பு ஆகிய வகுப்புகளுக்கு இரண்டாம் திருப்புதல் தேர்வு பள்ளிக்கல்வித்துறையால் நடத்தப்படுகிறது. பத்தாம் வகுப்பு மாணவர்கள் தமிழ் பாடத்தில் அதிக பட்ச மதிப்பெண் பெறும் நோக்கில் நமது தமிழ்விதை வலைதளமானது மாதிரி வினாத்தாள்கள், மெல்லக் கற்போர் வழிகாட்டி, இணைய வழித் தேர்வுகள் என சிறப்பான சேவைகளை வழங்கி வருவது நீங்கள் அறிந்த ஒன்று. இப்போது நமது வலைதளம் இரண்டாம் திருப்புதல் தேர்வுக்குரிய பத்தாம் வகுப்பு தமிழ் பாடங்களான இயல் 4, இயல் 5 , இயல் 6 ஆகிய பாடங்களிலிருந்து ஒரு மதிப்பெண் வினாக்கள் இங்கு உங்களுக்கு வினாடி -வினாவாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாடி - வினாவில் பங்கு பெற அனுமதி முற்றிலும் இலவசம். பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் இதில் கலந்துக் கொள்ளலாம். இந்த வினாடி வினாவில் கலந்துக் கொண்டு 85% சதவீத மதிப்பெண் பெறும் மாணவர்கள் அனைவருக்கும் இலவச மின் சான்றிதழ் அவரவர் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். மாணவர்கள் சரியான மின்னஞ்சல் முகவரியைக் கொடுக்கவும். நாளொன்றுக்கு 100 மின் சான்றிதழ் மட்டுமே வழங்கப்படும். மாணவர்கள் தங்கள் கற்ற பாடங்களிலிருந்து திருப்புதல் தேர்வுக்குரிய வினாக்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் வினாக்களை ஒருமுறைக்கு இரு முறை நன்குப் படித்து பின் விடையளிக்க வேண்டும்.மாணவர்கள் அனைவரும் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகள்