10TH - SECOND REVISION - MODEL QUESTION PAPER - ANSWER KEY

 பத்தாம் வகுப்பு

தமிழ்

இரண்டாம் திருப்புதல் தேர்வு - மார்ச் 2022

மாதிரி வினாத்தாள் - 2 

விடைக்குறிப்புகள்



மாதிரி வினாத்தாள் -1

இரண்டாம் திருப்புதல் தேர்வு

மார்ச்  2022

நேரம் : 15 நிமிடங்கள் + 3 மணி நேரம்                                     மொத்த மதிப்பெண்கள் : 100

பகுதி - 1

அ) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                       15 × 1 = 15

1 ) குலசேகர ஆழ்வார் “ வித்துவக்கோட்டம்மா” என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார்.பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார். – ஆகிய தொடர்களில் இடம் பெற்றுள்ள வழுவமைதி முறையே

மரபு வழுவமைதி,திணை வழுவமைதி       இட வழுவமைதிமரபு வழுவமைதி

பால் வழுவமைதி,திணை வழுவமைதி       கால வழுவமைதிஇட வழுவமைதி

2 ) தென்னை மரங்கள் உள்ள பகுதியைத் “ தென்னந்தோட்டம்” என்று கூறுதல் எவ்வகையான வழு?

அ ) வினா வழு              ஆ) விடை வழு               இ ) மரபு வழு                  ஈ ) கால வழு

3 ) குரலில் இருந்து பேச்சு எனில், விரலில் இருந்து _______________

அ ) சோறு                     ஆ ) எழுத்து                   இ ) பேச்சு                       ஈ ) கற்றல்

4 ) செய்யுளில் எழுவாய்களை வரிசைப்படுத்தி அவை ஏற்கும் பயனிலைகளை எதிர் எதிராக கொண்டு பொருள் கொள்ளுதல் _______________

அ ) நேர் நிறைப் பொருள்கோள்               ஆ ) ஆற்று நீர் பொருள் கோள்

இ ) எதிர் நிரல் நிறைப் பொருள் கோள்      ஈ )  கொண்டுகூட்டுப் பொருள்கோள் 

5 ) தூவல் – என்பதன் பொருள் யாது?

அ ) சொற்கோவை                      ஆ ) மயக்கம்      இ ) திருமணம்               ஈ ) எழுதும் இறகு

6 ) அருந்துணை என்பதைப் பிரித்தால்_______________

அருமை + துணை        அரு + துணை   

அருமை + இணை         அரு + இணை

7 ) பார் – என்னும் வேர்ச்சொல்லைக் கொண்டு உருவாக்கப்பட்ட பெயரெச்சத் தொடரைக் காண்க.

அ ) பார்த்த விழி            ஆ ) பார்த்தாள்   இ ) பார்த்துச் சென்றாள்             ஈ ) பார் மகளே

8 ) கம்பரை ஆதரித்தவர் _____________

அ ) சொக்கநாதன்                      ஆ ) சடையப்ப வள்ளல்    


இ ) குலசேகரர்                            ஈ ) குலோத்துங்கன்

9 ) கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் ___________

அ ) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்              

 ஆ ) ஊரில் விளைச்சல் இல்லாததால்                

இ ) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்                       

ஈ ) அங்கு வறுமை இல்லாததால் 

10 ) பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரைக்குமான  சிறு பொழுது ___________

அ ) நண்பகல்                             ஆ ) யாமம்                     இ ) எற்பாடு                      ஈ ) மாலை

11 ) இவற்றில் எது கூரான ஆயுதம் என திருவள்ளுவர் கூறுகிறார்?

அ ) பெரிய கத்தி                                                ஆ ) இரும்பு ஈட்டி

இ ) உழைத்ததால் கிடைத்த ஊதியம்                      ஈ ) வில்லும் அம்பும்

பாடலைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு ( வினா எண்கள் 12 , 13 , 14 , 15 ) விடை தருக.

ஆழ நெடுந்திரை யாறு கடந்திவர் போவாரோ

வேழ நெடும்படை கண்டு நடுங்கிடும் வில்லாளோ

தோழமை யென்றவர் சொல்லிய சொல்லொரு சொல் அன்றே

ஏழமை வேட னிறந்தில னென்றெனை யேசாரோ

12 ) இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது ?

அ ) கனிச்சாறு               ஆ ) காற்றே வா

இ ) சிலப்பதிகாரம்           ஈ ) கம்பராமாயணம்

13 ) இப்பாடலின் ஆசிரியர் யார் ?

அ ) இளங்கோவடிகள்                 ஆ ) கம்பர்

இ ) பெருஞ்சித்திரனார்                ஈ ) கண்ணதாசன்

14 ) நெடுந்திரை - இலக்கணக்குறிப்புத் தருக.

அ ) எண்ணும்மை                       ஆ ) பண்புத்தொகை

இ ) வினைத்தொகை                   ஈ ) வினை முற்று

15 )வேடன் என குறிப்பிடப்படுபவர் யார்?

அ. கம்பர்           ஆ. இராமன்                   இ) இலக்குவன்               ஈ) குகன்

                                                            பகுதி - II   ( மதிப்பெண்கள் - 18 )

                                                                                                 பிரிவு - I

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. 21 - வது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்கவேண்டும்.                                                                                                ( 4 × 2 = 8 )

16 ) விடைக்கேற்ற வினாக்கள் அமைக்க.

அ ) தமிழர் பண்டைய நாட்களிலிருந்தே அறிவியலை வாழ்வியலோடு இணைத்துக் காணும் இயல்புடையவர்களாக இருக்கிறார்கள்.

அ. யார் பண்டைய நாட்களிலிருந்தே அறிவியலை வாழ்வியலோடு இணைத்துக் காணும் இயல்புடையவர்களாக இருக்கிறார்கள்?

ஆ ) ஒரே நேரத்தில் நூறு செயல்களை நினைவில் கொண்டு விடையளித்தலே சதாவதானம் ஆகும்.

ஆ. சதாவதானம் என்பது யாது?

 17 ) கா.ப.செய்குதம்பி பாவலர் “ சதாவதானி “ என்ற பட்டம் பெற்ற நிகழ்வினை எழுதுக.

1907 மார்ச் 10ஆம் நாளில் சென்னை விக்டோரியா அரங்கத்தில் அறிஞர் பலர் முன்னிலையில் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி “ சதாவதானி “ என்று பாராட்டுப் பெற்றார்.

18 ) நாலாயிர திவ்விய பிரபந்தம் – நூற் குறிப்பு தருக.

·       பெருமாளைக் குறித்துப் பாடப்பட்ட பக்தி பாடல்களின் தொகுப்பு.

·       ஆழ்வார்கள் 12 பேர் பாடிய பாடல்களின் தொகுப்பு

·       10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நாத முனிகள் என்பார் இப்பாடல்களைத் தொகுத்தார்.

·       இந்நூல் ஆன்ற தமிழ் மறை, ஐந்தாவது வேதம், திராவிட வேதம், திராவிட பிரபந்தம் என வர்ணிக்கப்படுகிறது.

19 ) உறங்குகின்ற கும்பகன்ன ‘ எழுந்திராய் எழுந்திராய்’

      காலதூதர் கையிலே ‘ உறங்குவாய் உறங்குவாய் ‘

      கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்பிகிறாரகள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?

·       . கும்பகர்ணனே எழுந்திடுவாய்!ஏழுந்திடுவாய்!

·       கால தூதர் கையிலே படுத்து உறங்கிடுவாய்.

20 ) ஒன்றின் இருப்பால் இன்னொன்று அடையாளப்படுத்தப்படுகிறது என்ற மெய்யிலைக் கொண்டு ஒரு நாட்டின்பெருமையை கம்பர் எவ்வாறு புலப்படுத்துகிறார்?

·       கோசல நாட்டில் வறுமை இல்லை அதனால் அங்கு கொடைக்கு இடமில்லை.

·       நேருக்கு நேர் போர் புரிபவர்கள் இல்லாத காரணத்தால் உடல் வலிமையைக் காட்ட வாய்ப்பில்லை

·       பொய் இல்லாத காரணத்தால் மெய் தனித்து விளங்கவில்லை.

·       கேள்விச் செல்வம் மிகுந்து காணப்படுவதால் அறியாமை சிறிதும் இல்லை.

21 )  ஒருவரை மதிப்புடையவராகச் செய்வது செல்வம் அது அல்லாமல் உலகில் சிறந்த பொருள் வேறு இல்லை  என்பதனை உணர்த்தும் குறளை எழுதுக.

             பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

            பொருளல்ல தில்லை பொருள்

பிரிவு - II

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகியவிடையளிக்க.                      5 × 2 = 10

22 ) தொடரில் விடுபட்டுள்ள வண்ணங்களை குறிக்கும் சொற்களை உங்கள் எண்ணங்களால் நிரப்புக.

            அ. _வெள்ளந்தி___ மனம் உள்ளவரை அப்பாவி என்கிறோம்.

            ஆ. வெயில் அலையாதே; உடல் _கருக்கும் _

 

23 )  இந்த அறை இருட்டாக இருக்கிறது. மின் விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது?இதோ இருக்கிறது ! சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே ! மின்சாரம் இருக்கிறதா? இல்லையா?

       மேற்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின் வகைகளையும், விடையின் வகைகளையும் எடுத்தெழுதுக.

 

மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது? – அறியாவினா

மின்சாரம் இருக்கிறதா?இல்லையா? – ஐய வினா

24 ) கலைச்சொல் அறிவோம் -                அ ) THESIS -  ஆய்வேடு  ஆ ) TERMINOLOGY - கலைச்சொல்

25 ) தொழிற்பெயர்களின் பொருளை புரிந்துக் கொண்டு தொடர்களை முழுமை செய்க.

            அ. பசுமையான _காட்சியை_ __காணுதல்__ கண்ணுக்கு நல்லது ( காணுதல்/காட்சி )

            ஆ. காட்டு விலங்குகளைச் __சுடுதல்__ தடை செய்யப்பட்டுள்ளது.செய்த தவறுகளைச் __சுட்டல்___திருத்த உதவுகிறது.

26 ) தொடர்களை அடைப்புக் குறிக்குள் உள்ளவாறு மாற்றுக.

அ. தந்தை,” மகனே! நாளை உன்னுடைய தோழன் அழகனை அழைத்து வா” என்று சொன்னார் ( ஆண்பாற் பெயர்களைப் பெண்பாலாக மாற்றித் தொடர் அமைக்க ).

விடை : தாய் “ மகளே ! நாளை உன்னுடைய தோழி அழகியை அழைத்து வா “ என்று சொன்னார்

ஆ. அவன் உன்னிடமும் என்னிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை. ( படர்க்கையை முன்னிலையாக, முன்னிலையைத் தன்மையாக, தன்மையைப் படர்க்கையாக மாற்றி தொடர் அமைக்க )

விடை : நீ என்னிடமும்,அவனிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை

27 ) தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க.

            அ. கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்

            விடை : உயர்கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்,

            ஆ. குழந்தைகள் தனித் தனியே எழுதித் தர வேண்டும்

            விடை : சுட்டிக் குழந்தைகள் தனித்தனியே எழுதித் தர வேண்டும்.

28 ) காட்டில் விளைந்த வரகில் சமைத்த உணவு மழைக்கால மாலையில் சூடாக உண்ணச் சுவை மிகுந்திருக்கும். இத்தொடரில் அமைந்துள்ள முதற்பொருள், கருப்பொருள்களை வகைப்படுத்தி எழுதுக.

            விடை : முதற்பொருள்:

Ø  நிலம்                             காட்டில்

Ø  பெரும் பொழுது              - மழைக்காலம்

Ø  சிறுபொழுது                  - மாலை

கருப்பொருள்:

Ø  உணவு              - வரகு

 

                                                            பகுதி - 3 - சிறுவினா                                       2 × 3 = 6

                                                                         பிரிவு - I

29) பலரிடம் உதவி பெற்று கடின உழைப்பால் முன்னேறிய ஒருவர், அவருக்கு உதவிய நல்ல உள்ளங்களையும் சுற்றங்களையும் அருகில் சேர்க்கவில்லை. அவருக்கு உணர்த்தும் நோக்கில் வள்ளுவர் குறிப்பிடும் கருத்துகள் யாவை?

·       விடை : சுற்றத்தாரிடம் ஒருவர் அன்பு இல்லாமலும் பொருந்திய துணை இல்லாமலும்,வலிமையில்லாமலும் இருந்தால் அவர் எப்படிப்பகைவரின் வலிமையை எதிர்க்கொள்ள முடியும்.

·       மனத்தில் துணிவு இல்லாதவராய், அறிய வேண்டியவற்றை அறியாதவராய்,பொருந்தும் பண்பு இல்லாதவராய்,பிறருக்குக் கொடுத்து உதவாதவராய் இருந்தால் எளிதில் பகைக்கு ஆட்பட நேரிடும்.

30 ) கம்பராமாயணம் பற்றியும் ,கம்பர் குறித்தும் எழுதுக

கம்பராமாயணம்

                        நூலின் பெயர் : கம்பராமாயணம்

                        இயற்றியவர் : கம்பர்

                        முதலில் இட்ட பெயர் : இராமாவதாரம்

                        காண்டங்கள் : ஆறு

1.       பால காண்டம்

2.     அயோத்தியா காண்டம்

3.      ஆரண்ய காண்டம்

4.      கிட்கிந்தா காண்டம்

5.      சுந்தர காண்டம்

6.      யுத்த காண்டம்

சிறப்பு :             கம்பராமாயணப் பாடல்கள் சந்த நயம் மிக்கவை.

 

கம்பர்

பெயர் : கம்பர்

ஊர் : சோழ நாடு – திருவழுந்தூர்

ஆதரித்த வள்ளல் : திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல்.

இயற்றிய நூல் : சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம்,ஏரெழுபது,சிலைஎழுபது

முதுமொழிகள் : கல்வியில் பெரியவர் கம்பர்,

                        கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்.

                        விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்

31 ) உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக .

பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல   காலங்கள் கடந்து சென்றன. புவி உருவானபோதுநெருப்புப் பந்துபோல் விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது. பின்னர்ப் புவி குளிரும்படியாகத்  தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக்காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும் மீண்டும் சிறப்பாக ஆற்றல் மிகுந்து செறிந்து திரண்டு இப்படியாக ( வெள்ளத்தில் மூழ்குதல் ) நடந்த இந்தப் பெரிய உலகத்தில், உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியது. உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியாக இப்பெரிய புவியில் ஊழிக்காலம் கடந்தது.

 
1. பத்தியில் உள்ள அடுக்குத்தொடர்களை எடுத்து எழுதுக.

            மீண்டும் மீண்டும்

2. புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது?

            பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல   காலங்கள் கடந்து சென்றன. புவி உருவானபோதுநெருப்புப் பந்துபோல் விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது. பின்னர்ப் புவி குளிரும்படியாகத்  தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக்காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது.

3. பெய்த மழைஇத்தொடரை வினைத்தொகையாக மாற்றுக.

            பெய்மழை

                                                                                                பிரிவு -                          2 × 3 = 6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க. வினா எண் 34 கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.

32 ) மாளாத காதல் நோயாளன் போல்என்னும் தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.

                        மருத்துவர் கத்தியால் அறுத்து சுட்டாலும் அது நன்மைக்கே என நோயாளி மருத்துவரை நேசிப்பார். அதுப்போல நீங்காத துன்பத்தை எனக்கு தந்தாலும் உன் அருளையே எதிர்பார்த்து வாழ்கிறேன்.

33 ) உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி வேலைக்குச் செல்ல விரும்புகிறார். அவரிடம் கற்பதன் இன்றியமையாமையை எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள்?

Ø  கல்வி நமக்கு மகிழ்ச்சியான வாழ்வைத் தரும்

Ø  சமூகத்தில் நற்பெயருடன் இருக்க கல்வி அவசியம்.

Ø  பிறருடைய உதவி நாடாமல் சுயமாக வாழ கல்வி அவசியம்

Ø  கல்வி நமக்கு உறுதியான பாதுகாப்பு தரும்

 

34 ) “ அருளைப் பெருக்கி “  எனத் தொடங்கும் நீதி வெண்பா -பாடலை எழுதுக.

அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

மருளை அகற்றி மதிக்கும் தெருளை

அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்

பொருத்துவதும் கல்வியென்றே போற்று.

-    கா.ப.செய்கு தம்பி பாவலர்

                                    அல்லது

        இராமனின் வடிவழகினை வருணிக்கும் கம்பரின் பாடலை எழுதுக.

வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறையப்

பொய்யோவெனு மிடையாளொடு மிளையானொடும் போனான்;

மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ

ஐயோவிவன் வடிவென்பதொ ரழியாவழ குடையான்.

 

                                                                                    பிரிவு - 3                                   2 × 3 = 6 

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க.

35 )  முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை    

        இன்மை புகுத்தி விடும் – இக்குறட்பாவில் அமைந்துள்ள பொருள்கோளின் வகையைச் சுட்டி விளக்குக.

Ø  ஆற்றுநீர் பொருள்கோள்

Ø  விளக்கம் : பாடலின் தொடக்கம் முதல் இறுதி வரை நேராக பொருள் கொள்ளுமாறு அமைவது.

Ø  பொருத்தம் : முயற்சி ஒருவனுக்கு செல்வத்தைப் பெருக்கும். முயற்சி இல்லாதிருந்தால் வறுமை சேரும். இக்குறள் தொடக்கம் முதல் இறுதி வரை நேராக பொருள் கொள்ளுமாறு அமைந்துள்ளது.

 

36 )   செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்

        எஃகதனிற் கூரிய தில்.         - அலகிட்டு வாய்ப்பாடு தருக.

           

வ.எண்

சீர்

அசை

வாய்பாடு

1

செய்-க

நேர் - நேர்

தேமா

2

பொரு-ளைச்

நிரை - நேர்

புளிமா

3

செறு - நர்

நிரை - நேர்

புளிமா

4

செருக்-கறுக்-கும்

நிரை – நிரை - நேர்

கருவிளங்காய்

5

ஏஃ-கத-னிற்

நேர் – நிரை - நேர்

கூவிளங்காய்

6

கூ-ரிய

நேர் - நிரை

கூவிளம்

7

தில்

நேர்

நாள்

 இக்குறளின் ஈற்றுச் சீர்  "நாள்" என்னும் வாய்பாட்டில் முடிந்துள்ளது.

37 ) கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது;மலைப்பகுதிகளில் மலைப் பயிர்களும் நிலப் பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன.” – காலப் போக்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும், பண்டைத் தமிழரின் திணைநிலைத் தொழில்கள் இன்றளவும் தொடர்வதையும் அவற்றின் இன்றைய வளர்ச்சியையும் எழுதுக.

·       கடற்கரைகளில் ஓய்வு விடுதிகள் பெருகி உள்ளன.எனினும் மீன் பிடித்தல், உப்பு காய்ச்சுதல் தொழில்கள் நடைபெறுகின்றன.

·       மலைப்பகுதிகளில் ஓய்வு இல்லங்கள் கட்டப்பட்டுள்ளன.எனினும் காபி,தேயிலைத் தோட்டங்கள் அமைக்கப் பெற்றுள்ளன.

·       நிலப்பகுதிகளில் வீடுகள்,தொழிற்சாலைகள் பெருகி உள்ளன. எனினும் உழவுத் தொழில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

                                                                                     பகுதி - IV                                5 × 5 = 25

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.

38 ) அ) சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன் என்ற தலைப்பில் இலக்கிய உரை எழுதுக.

      அன்பும் பண்பும் குணச்சித்திரமும் கொண்ட தலைவர் அவர்களே! தேர்ந்தெடுத்த பூக்களைப் போன்று வரிசை தொடுத்துஅமர்ந்திருக்கும் ஆன்றோர்களே! அறிஞர் பெருமக்களே! வணக்கம், இயற்கை கொலு வீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலைநிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன் காட்டும் கவி..... தண்டலை மயில்கள் ஆட.......  இவ்வுரையைத் தொடர்க.

Ø  அன்பும் பண்பும் குணச்சித்திரமும் கொண்ட தலைவர் அவர்களே! தேர்ந்தெடுத்த பூக்களைப் போன்று வரிசை தொடுத்து அமர்ந்திருக்கும் ஆன்றோர்களே!

Ø  அறிஞர் பெருமக்களே! வணக்கம், இயற்கை கொலு வீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலைநிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன் காட்டும் கவி

Ø  தண்டலை மயில்கள் ஆட.

Ø  மயில்கள் அழகுற ஆடுகிறது.

Ø  தாமரை மலர்கள் விளக்கு போல் விரிகிறது.

Ø  மேகங்களின் இடி மத்தளமாய் ஒலிக்கிறது.

Ø  குவளை மலர்கள் கண்கள் விழித்து பார்ப்பது போல உள்ளது.

Ø  அலைகள் திரைச்சீலைகளாய் விரிகிறது.

Ø  வண்டுகளின் ரீங்காரம் மகர யாழின் இசைப் போல இருக்கிறது.

 

( அல்லது )

         ஆ) தமிழர் மருத்துவமுறைக்கும், நவீன மருத்துவமுறைக்கும் உள்ள தொடர்பினை குறித்து எழுதுக.

                       

தமிழ் மருத்துவ முறை

நவீன மருத்துவ முறை

Ø  வெளிப்பூச்சு மருந்து, உட்கொள்ளும் மருந்து என இரு முறையில் அமைந்தது.

Ø  இருவகையிலும் மருத்துவம் அளிக்கப்படுகிறது.

Ø  இலைகள்,வேர்கள் முதலிய மூலிகை மருந்துகள் கொடுக்கப்படுகிறது.

Ø  மருந்துகள் மாத்திரைகள் மற்றும் கூழ்மமாக வழங்கப்படுகிறது.

Ø  சுக்கு,மிளகு,திப்பிலி போன்ற பொருட்களும் மருந்தாக வழங்கப்படுகிறது.

Ø  மூலிகைப்பொருட்களை மாத்திரையாகவும்,ஊசிகளாகவும் வழங்கப்படுகிறது.

Ø  நோய்களின் தன்மையை வாதம்,பித்தம்,சீதம் மூலம் அறியப்படுகிறது.

Ø  மருத்துவக் கருவிகள் மூலம் நோய் தன்மை அறியப்படுகிறது.

Ø  நோய்கள் மெதுவாக முழுவதும் குணமாகும் வரை மருந்துகள் கொடுக்கப்படுகிறது.

Ø  நோய் விரைவில் குணமாக பலவகையான மருந்துகள் கொடுக்கபடுகிறது.

 

39 )  அ. பள்ளி ஆண்டு விழா மலருக்காக நீங்கள் நூலகத்தில் படித்த கதை / கட்டுரை / சிறுகதை / கவிதை நூலுக்கான மதிப்புரை எழுதுக.

            குறிப்பு ; நூலின் தலைப்பு – நூலின் மையப்பொருள் – மொழிநடை – வெளிப்படுத்தும் கருத்து – நூலின் நயம் – நூலின் கட்டமைப்பு – சிறப்புக்கூறு – நூல் ஆசிரியர்

குறிப்புச்சட்டகம்

நூலின் தலைப்பு

நூலின் மையப் பொருள்

மொழிநடை

வெளிப்படுத்தும் கருத்து

நூலின் நயம்

நூல் கட்டமைப்பு

சிறப்புக்கூறு

  நூல் ஆசிரியர்

 

நூலின் தலைப்பு:

                        பரமார்த்தகுரு கதை

நூலின் மையப் பொருள்:

                        சீடர்கள் குருவிடம் கொண்டுள்ள பக்தியும்,விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பது நூலின் மையப் பொருள்.

மொழிநடை:

                        நகைச்சுவையுடன் யாவருக்கும் புரியும் வண்ணம் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது.

வெளிப்படுத்தும் கருத்து:

                        பகுத்தறிவுடன் செயலபட வேண்டும் என ஒவ்வொரு கதையிலும் வெளிப்பட்டு இருக்கிறது.

நூலின் நயம்:

                        விழிப்புணர்வுடனும் நகைச்சுவையுடனும் எழுதப்பட்டுள்ளது.

நூல் கட்டமைப்பு:

                        சிறுவர்கள் ஆர்வமுடன் படிக்கும் வகையில் நூலின் கட்டமைப்பு உள்ளது.

சிறப்புக்கூறு:

                        ஒவ்வொரு கதையும் பகுத்தறியும் திறனை வெளிப்படுத்துவதாக உள்ளது.

நூல் ஆசிரியர்:

                        வீரமாமுனிவர்.

 

                                                                         ( அல்லது )

      ஆ. பள்ளியைத் தூய்மையாக வைத்திருத்தல் – என்பது குறித்த செயல் திட்ட வரைவினை உருவாக்குக.

1. பள்ளியின் வளாகத்தில் உள்ள மரம்,செடி,கொடிகளிலிருந்து விழும் இலைகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும்.

2. நம் பள்ளியை தூய்மையாக வைத்திருக்க ஆசிரியர்களுடன் சேர்ந்து செயல்புரிந்துக் கொண்டு இருப்போம்.

3. பள்ளி மைதானங்களில் காணப்படும் பள்ளமான இடங்களில் நீர் தேங்கி நிற்கும் .எனவே பள்ளமான இடங்களில் மண்களைக் கொட்டி அவற்றை மேடு,பள்ளம் இல்லாமல் சமமாக வைத்திருக்க வேண்டும்.

4. குப்பைகளை மட்கும் குப்பை,மட்காத குப்பை என குப்பைகளை தரம் பிரித்து தனித்தனியே போட வேண்டும்.

5. பள்ளிகளில் தூய்மை இயக்கம் துவங்கி பள்ளியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

6. மாணவர்கள் கைகளை கழுவும் போது நீர் தேவையில்லாமல் வீணாகிறது. எனவே அந்த நீரை செடி,கொடிகளுக்கு செல்லும் வண்ணம் நீரோட்ட பாதையை அமைக்க வேண்டும்.

7. வகுப்பறையினை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது ஒவ்வொரு மாணவரின் கடமையாகும்.

8. பள்ளியில் காணப்படும் தளவாடப் பொருட்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும், இல்லையெனில் துரு பிடித்துக் கொள்ளும். எனவே உடற்கல்வி பாட வேளைகளில் அவற்றை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

40 ) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக . 

              


 

ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத      

என்னை எழுது என்று சொன்னது

இந்தக் காட்சி      

மரம் என் அழிவைப் பற்றி எழுது என்றது

மனிதன் என் அறியாமையைப் பற்றி எழுது என்றான்

நான் எழுதுகிறேன்

மரமே வரம் என்று

 

41 )  திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அறிவழகனின்  23 வயது மகன் அன்பழகன், இளங்கலை தமிழ் படித்து போட்டித் தேர்வில் பங்கேற்பதற்காக சேலம் மாவட்டத்தில் காமராஜர் நகர், பாரதியார் தெருவில், 51 இலக்க எண்ணில்  தனது நண்பர்களுடன் அறை எடுத்து பயில்கிறார். அதற்காக அவர் அங்குள்ள மைய நூலகத்தில் உறுப்பினராக சேர  விரும்புகிறார். திரு.சுந்தர வடிவேலு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அவருக்கு பிணைப்பாளராக கையொப்பமிடுகிறார்.  தேர்வர் தம்மை அன்பழகனாக கருதி உரிய படிவத்தை நிரப்புக.



       

42 ) பள்ளியிலும், வீட்டிலும் நீங்கள் நடந்துக் கொள்ளும் விதம் குறித்து அட்டவணைப்படுத்தி எழுதுக.

 

பள்ளியில் நான்

வீட்டில் நான்

ஆசிரியர் சொல்படி நடப்பேன்

வீட்டில் பெரியோர் சொல்படி நடப்பேன்.

மற்ற மாணவர்களுக்கு புரியாத பாடங்களை புரிய வைப்பேன்

வீட்டில் அனைவருக்கும் உதவிகரமாக இருப்பேன்

பள்ளியை தூய்மையாக வைத்திருப்பேன்

வீட்டில் அன்றாட பாடவேலைகளைச் செய்து முடிப்பேன்

பள்ளியில் தண்ணீர் அவசியமறிந்து சிக்கனமாகப் பயன்படுத்த அனைத்து மாணவர்களுக்கும் எடுத்துரைப்பேன்

அந்தந்த தேர்வுகளுக்கான பாடங்களை வீட்டில் தினமும் படிப்பேன்.

மற்ற மாணவர்களின் திறமையை பாராட்டி ஊக்குவிப்பேன்

வீட்டையும் சுத்தமாக வைத்திருப்பேன்

 

                                                                                    அல்லது

மொழி பெயர்க்க.

   Malar: Devi,switch off the lights when you leave the room

Devi : Yeah! We have to save electricity

Malar : Our nation spends a lot of electricity for lighting up our streets in the night.

Devi: Who knows? In future our country may launch artificial moons to light our night time sky!

Malar: I have read some other countries are going to launch these types of illumination satellites near future.

Devi: Superb news! If we launch artificial moons,they can assist in disaster relief by beaming light on areas that lost power!

மலர்: தேவி,அறையை விட்டு வெளியே வரும் போது மின்விளக்கை அணைத்துவிட்டு வா.

தேவி: ஆமாம்! நாம் மின்சாரத்தை சேமிக்க வேண்டும்.

மலர்: நம்முடைய தேசம் தெருவிளக்குகளுக்கு அதிக மின்சாரத்தை செலவிடுகிறது.

தேவி: யாருக்கு தெரியும்? எதிர்காலத்தில் இரவில் வெளிச்சம் தர செயற்கை நிலவையும் படைக்கலாம்.

மலர்: நான் படித்திருக்கிறேன். சில நாடுகள் செயற்கைக்கோள் வழியாக செயற்கை நிலவை உருவாக்கி வெளிச்சம் பரப்புகிறார்கள்

தேவி: அருமையான செய்தி. நாமும் இது போல் செயற்கை நிலவை உருவாக்கி, வாழும் பகுதியில் வெளிச்சத்தை ஏற்படுத்தித் தந்தோமானால்,நிறைய மின்சக்தி செலவாவதைத் தடுக்க இயலும்.

 

                                                                        பகுதி - 5                                  3 × 8 = 24  

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.

43 ) அ ) கம்பராமாயணத்தில் உமது பாடப்பகுதியில் உள்ள பாலகாண்டம் – நாட்டுப்படலம் மற்றும் அயோத்தியா    காண்டம்  பாடல் கருத்துகளைத் தொகுத்து ஒரு பக்க அளவில் கட்டுரை வரைக.

 

குறிப்புச்சட்டகம்

முன்னுரை

கலைநிகழ்வு

நாட்டின் பெருமை

இராமனின் மேனி

குகனின் மன வருத்தம்

முடிவுரை

            முன்னுரை

                        உள்ளதை உணர்ந்தபடி கூறுவது கவிதை. கவிஞனின் உலகம் இட எல்லை அற்றது. கால எல்லை அற்றது. கவிஞனின் சிந்தைக்குள் உருவாகும் காட்சியைச் சொல்லைக் கொண்டு எழுப்புகிறான். அப்படிப்பட்ட அழகுணர்ச்சி மிக்க கம்பராமாயண பாடல்களில் பாலகாண்டம் – நாட்டுப்படல பாடலையும், அயோத்தியா காண்டப் பாடல்களையும் கட்டுரையாக காண்போம்.

            கலைநிகழ்வு

                        மயில்கள் தன் சிறகை விரித்து ஆடுகிறது. தாமரை மலர்கள் விளக்குகள் போல் விரிகிறது. மேகங்கள் மத்த ஒலியாய் ஒலிக்கிறது. நீரலைகள் திரை சீலைகளாக எழுகிறது. வண்டுகளின் ரீங்காரம் யாழினி இசையை ஒத்து இருக்கிறது.

            நாட்டின் பெருமை

                        கோசல நாட்டில் வறுமை இல்லாத காரணத்தால் கொடை இல்லை. நேருக்கு நேர் போர் புரிபவர் இல்லாமையால் உடல் வலிமையை காட்ட வாய்ப்பில்லை. பொய்கள் இல்லாத காரணத்தால் மெய் தனித்து இல்லை. கேள்விச் செல்வம் மிகுந்து உள்ளமையால் அறியாமை இல்லை.

            இராமனின் மேனி

                        ஆதவனின் கதிர்கள் இராமனின் உடலில் பட்டு மறைய, நுண்ணிய இடைக் கொண்ட சீதையொடும், இளையவன் இலக்குவனொடும் போனான். இராமனின் நிறம் மையோ?மரகதமோ?நீலக் கடலோ? கார்மேகமோ? ஒப்பற்ற அழியாத அழகுடையவன் இராமன்.

            குகனின் மன வருத்தம்

                        ஆழமும் பெரிய அலைகளையும் உடைய கங்கை ஆற்றை கடப்பார்களோ? யானைகள் கொண்ட சேனையைக் கண்டு, புறமுதுகு காட்டி செல்கின்ற வில் வீரனோ குகன். தன்னை உடன் பிறவா சகோதரனாக கூறிய இராமனை இந்த ஆற்றைக் கடந்து போகவிட்டால் இந்த வேடன் இறந்திருக்கலாமே என உலகத்தார் என்னை பழிச் சொல்ல மாட்டார்களா? என குகன் மன வருத்தமடைந்தான்.

            முடிவுரை

                        கம்பராமாயணப் பாடல்கள் சந்த நயம் மிக்கவை. பாடுவதற்கேற்றது. இவற்றுள் அழகுணர்ச்சி மிக்க கவிதைகளில் பால காண்ட நாட்டுப் படலமும், அயோத்தியா காண்ட பாடல்களும் இங்கு கட்டுரையாக நாம் கண்டோம்.

( அல்லது )

              ஆ)   நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்

                                    நேர்ப்பட வைத்தாங்கே

                        குலாவும் அமுதக் குழம்பைக் குடிதொரு

                                    கோல வெறிபடைத்தோம்;

                        உலாவும் மனச்சிறு புள்ளினை எங்கணும்

                                    ஓட்டி மகிழ்ந்திடுவோம்;

                        பலாவின் கனிச்சுளை வண்டியில் ஓர் வண்டு

                                    பாடுவதும் வியப்போ?                 - பாரதியார்

பாடலில் காணப்படும் நயங்களைப் பாராட்டி உரை செய்க.

திரண்ட கருத்து:

Ø  நிலவையும்,நட்சத்திரங்களையும் வரிசையாக வைப்போம்

Ø  அமுத குழம்பினை குடிப்போம்

Ø  பட்டாம் பூச்சியை எங்கு வேண்டுமானாலும் பறக்க வைப்போம்

Ø  பலாக்கனிகள் ஏற்றிவரும் வாகனத்தில் வண்டின் ஓசையை கேட்போம்.

மையக் கருத்து:

Ø  நிலவிலும்,நட்சத்திர ஒளியிலும்,காற்றிலும், அமுதத்தைப் பருகி மனதை இலேசாக்கி எங்கும் பறந்து இனிமை நிறைந்த பலாவின் சுவையை சுவைத்து இன்பம் பெறுவோம்.

மோனை:

            முதலெழுத்து ஒன்றி வருவது மோனை

                        நிலாவையும்நேர்ப்பட

எதுகை :

            முதலெழுத்து அளவொத்து இருக்க இரண்டாமெழுத்து ஒன்றி வருவது எதுகை.

                        நிலாவையும்      -          குலாவும்

இயைபு :

            செய்யுளில் ஒவ்வொரு அடியிலும் இறுதியில் வரும் எழுத்தோ,சீரோ,அசையோ ஒன்றி வருவது.           

            வெறிபடைத்தோம்           -          மகிழ்ந்திடுவோம்

 

அணி நயம்:

            இப்பாடலில் மனதை சிறு பறவையாக உருவகம் செய்யப்பட்டுள்ளமையால் இதில் உருவக அணி வந்துள்ளது.

தலைப்பு:

            இயற்கை இன்பம்

                                               

44 ) அ) கம்பராமாயணக் கதை மாந்தர்களுள் எவரேனும் ஒருவர் குறித்து ஒரு பக்க அளவில் எழுதுக.

(அல்லது)

குறிப்புச் சட்டகம்

குகனின் தோற்றம்

குகனின் பண்புநலன்

இராமனைச் சந்தித்தல்

இராமனின் நட்பு

குகனின் வருத்தம்

குகனின் தோற்றம்

            இராமன் வனவாசம் செல்லத் தொடங்கும் பொழுது முதன் முதல் அறிமுகமானவனும் துணை செய்தவனும் குகன். குகன் கருமை நிறமானவன். காலில் தோல் செருப்பு அணிந்தவன்.பரந்த மார்பை உடையவன். நீண்ட கைகளை உடையவன்.சிருங்கிபேரத்தின் தலைவன்.

குகனின் பண்புநலன்

            பொய் நீங்கிய மனத்தினன். இராமனிடம் அன்புக் கொண்டவன்.அதிகச் சுற்றத்தினரை பெற்றவன்.

ஆயிரம் ஓடங்களுக்கு தலைவன்.கங்கை ஆற்றின் ஆழம் அளவு உயர்ந்தவன். வேட்டைக்கு நாயினை உடையவன்.

இராமனைச் சந்தித்தல்

            கங்கையாற்றின் கரையில் தவப் பள்ளிக்கு இராமன் வந்துள்ளான் என அறிந்ததும், இராமனைக் காண தேனும்,மீனும் காணிக்கையாக் கொண்டுச் சென்றான். இராமனைக் கண்டதும் மிக்க பணிவுடன் வீழ்ந்து வணங்கினான்.

இராமனின் நட்பு

            இவன் நம்மிடம் நீங்காத அன்பு உடையவன். கருணையினால் மலர்ந்த கண்களை உடையவனாகிய எல்லாவற்றிலும் இனிய நண்பனே என இராமன் குகனை நோக்கிக் கூறினான்.

குகனின் வருத்தம்

            ஆழமும் பெரிய அலைகளையும் உடைய கங்கை ஆற்றை கடப்பார்களோ? யானைகள் கொண்ட சேனையைக் கண்டு, புறமுதுகு காட்டி செல்கின்ற வில் வீரனோ குகன். தன்னை உடன் பிறவா சகோதரனாக கூறிய இராமனை இந்த ஆற்றைக் கடந்து போகவிட்டால் இந்த வேடன் இறந்திருக்கலாமே என உலகத்தார் என்னை பழிச் சொல்ல மாட்டார்களா? என குகன் மன வருத்தமடைந்தான்

           

      ஆ) எதிர்காலத்தில் நீ பயில விரும்பும் கல்விக் குறித்தும், அதன் பயன் குறித்தும், அக்கல்வியினால் சமூகத்தில் எவ்வகையிலான பங்களிப்பு அளிக்க முடியும்? என்பது குறித்து கட்டுரை வரைக.

நான் பயில விரும்பும் கல்வி

Ø  எதிர் காலத்தில் கணினி தொழில் நுட்ப படிப்பு பயில விரும்புகிறேன்.

Ø   நாளைய உலகத்தில் அனைவரின் கைகளிலும் திறன் பேசி, மடிக்கணினி என இருக்கும்.

Ø  இருக்கும் இடத்திலிருந்து உலகின் பல்வேறு தகவல்களை சேகரிக்க முடிகிறது.

Ø   பணி வாய்ப்புகளை பெற முடிகிறது.

Ø  இதற்கு மிக அவசியமானது கணினி சார்ந்த தொழில் நுட்ப அறிவு.

Ø  அத்தகைய கல்வியை நான் பயில விரும்புகிறேன்.

 

கணினி தொழில் நுட்ப படிப்பு பயன் :

Ø  அரசின் திட்டங்கள் உடனடியாக மக்களுக்கு தெரிவிக்கலாம்.

Ø  அரசு அலுவலங்களில் பணி பளுவினைக் குறைக்கலாம்.

Ø  உலகத்தின் பல்வேறு தகவல்களை நொடிப் பொழுதில் பெறலாம்.

Ø  மாணவர்களின் கற்றல் அடைவுகளை உடனடியாக மதிப்பீடு செய்யலாம்

Ø  மக்களுக்கு தேவைப்படும் ஆவணங்கள் இணையம் வழியாக பெறகூடிய வகையில் வரைவுத் திட்டங்களை கொடுக்கலாம்.

சமூகத்தின் விளைவுகள் :

Ø  கணினி தொழில் நுட்ப படிப்பின் மூலம், திறன் பேசிகளில் பயனுள்ள செயலிகளை உருவாக்க இயலும்.

Ø  கற்றல் சார்ந்த  படிநிலைகளை உருவாக்க முடியும்.

Ø  உலகத்தின் பல்வேறு வகைப்பட்ட தகவல்களைத் திரட்ட முடியும்.

Ø  அனைவரும் கணினி சார்ந்த அடிப்படை அறிவுப் பெற்றிருப்பர்.

Ø  நிதி சார்ந்த அனைத்து தகவல்களும் நொடிப் பொழுதில் பெறுவர்.

Ø  நிவாரணங்கள் உடனடியாக பெறலாம்.

Ø  வீட்டிலிருந்த படியே அரசின் திட்டங்களை பெறலாம்.

Ø  மாணவர்கள் தங்களின் பொதுத் தேர்வு மதிப்பெண்ணை உடனடியாக அறியலாம்.

Ø  அனைத்துவகையான போக்குவரத்திற்கும் வீட்டில் இருந்த படியே பயணச் சீட்டுப் பெறலாம்.

 

45 )  அ) உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.

குறிப்புச்சட்டகம்

முன்னுரை

பொருட்காட்சி

நுழைவுச் சீட்டு

பல்துறை அரங்கம்

அங்காடிகள்

பொழுதுபோக்கு

முடிவுரை

 

முன்னுரை :

எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப்பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வை இக்கட்டுரையில் காண்போம்.

பொருட்காட்சி :

            மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் பொருட்காட்சி நடைபெற்றது.

நுழைவுச் சீட்டு:

            பொருட்காட்சி நடைபெறும் இடத்தின் உள்ளே செல்ல நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டது.பெரியவர்களுக்கு 30 ரூபாயும்,சிறுவர்களுக்கு 15 ரூபாயும் என நுழைவுச்சீட்டு நிர்ணயம் செய்யப்பட்டது.

பல்துறை அரங்கம் :

            அரசின் சாதனைகள் கூறும் பல்வேறு அரசுத்துறை அரங்கங்களும்,தனியார் பொழுது போக்கு நிறுவனங்களும் நிறைய இருந்தன.

அங்காடிகள்:

            வீட்டு உபயோகப் பொருட்கள்,விளையாட்டுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் என பல்வேறு பொருட்களும் ஒரே இடத்தில் கிடைத்தன.

பொழுதுபோக்கு :

            சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் விளையாட பொம்மை அரங்கம் போன்ற பல்வேறு அரங்கங்களும்,இராட்டின்ங்களும் நிறைய இருந்தன.

முடிவுரை:

            எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வினை இக்கட்டுரையில் கண்டோம்.

 

(அல்லது)

        ஆ) அமைச்சு, பொருள் செயல் வகை, பகை மாட்சி, குடி செயல் வகை, கயமை என்ற அதிகாரங்கள் வழியே வான்புகழ் வள்ளுவர் கூறும் அறக் கருத்துகள் இன்றைய வாழ்வியல் சூழலோடு எவ்வாறு இணைந்துள்ளது என்பது குறித்து கட்டுரை வரைக.

முன்னுரை

அமைச்சு

பொருள் செயல் வகை

பகை மாட்சி

குடி செயல் வகை

கயமை

முன்னுரை

            வான்புகழ் கொண்ட வள்ளுவர், தமது குறட்பாக்களால் தமிழ் மக்களுக்கு மட்டுமல்லாது, உலக மக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வாழ்வியலுக்குத் தேவையான அறக்கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார். பல நூற்றாண்டுக்கு முன் அவர் எழுதிய குறட்பாக்கள் இன்றும் அவை வாழ்வியல் சூழலோடு பொருந்துகிறது. அந்த வகையில் சில அதிகாரங்கள் எவ்வாறு நம் வாழ்வியலோடு பொருந்துகிறது என்பதனை இக்கட்டுரையின் வாயிலாகக் காணலாம்

அமைச்சு

            நாட்டை ஆளும் அமைச்சர்களுக்கெல்லாம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனை அமைச்சு அதிகாரத்தின் வழியாக வள்ளுவர் விளக்குகிறார்.

Ø  தொழில் செய்தவதற்கான கருவி,காலம், செயலின் தன்மை,செய்யும் முறை ஆகியவற்றை அறிந்து செய்பவரே அமைச்சர்.

Ø  மன வலிமை,குடிகளைக் காத்தல், ஆட்சி முறைகளைக் கற்றல், நூல்களைக் கற்றல்,விடாமுயற்சி ஆகிய ஐந்தும் சிறப்பாக அமைந்தவரே அமைச்சர்.

Ø  இயற்கையான நுண்ணறிவும், நூலறிவும் உடைய அமைச்சர் முன் எந்த சூழ்ச்சியும் நிற்காது.

Ø  அமைச்சர் செயலை செய்வதற்கு நூல் வழியாக அறிந்திருப்பினும் உலகியல் நடைமுறைகளை அறிந்து செயல் பட வேண்டும்.

பொருள் செயல் வகை

            பொருள் எவ்வளவு முக்கியமானது,அதன் தன்மைகள் இன்றைய மக்களுக்கும் பொருந்துவதாக விளக்குகிறார்.

Ø  ஒருவரை மதிப்புடையவராக மாற்றுவது செல்வம். அதனை விடச் சிறந்த செல்வம் இல்லை

Ø  தீமையற்ற வழியில் சேர்த்த பொருள் அறத்தையும், இன்பத்தையும் கொடுக்கும்.

Ø  மற்றவர்களிடம் அன்பும் இரக்கமும் இல்லாமல் ஈட்டும் பொருளை ஏற்காமல் நீக்க வேண்டும்.

Ø  தன் கைப்பொருளைக் கொண்டு செய்யும் செயலானது பாதுகாப்பாக மலை மீது நின்று யானைப் போர் காண்பதற்கு சமம்.

Ø  ஒருவரை வெல்லும் கூர்மையான ஆயுதம். நேர் வழியில் பொருள் ஈட்ட வேண்டும்.

பகை மாட்சி

            பகையை எவ்வாறு எதிர்க் கொள்வது? எவ்வாறு பகைக்கு ஆளாக நேரிடும் என்பதனை பகைமாட்சி அதிகாரம் நமக்கு கூறுகிறது.

Ø  சுற்றத்தாரிடம் அன்பு இல்லாமல், துணை இல்லாமலும்,வலிமை இல்லாமலும் இருந்தால் பகைவரை எதிர்க் கொள்ள இயலாது.

Ø  மனதில் துணிவு இல்லாதவர், அறிய வேண்டியதை அறியாதவர், பொருந்தும் பண்பு இல்லாதவராய்,கொடுத்து உதவாதவராய் இருப்பின் எளிதில் பகைக்கு ஆளாக நேரிடும்.

குடி செயல் வகை

ஒருவரின் குடி எவ்வாறு உயர்ந்து விளங்க வேண்டும் என்பதனை குடி செயல் வகை அதிகாரம் மூலம் வள்ளுவர் அறிவுறுத்துகிறார்.

Ø  விடா முயற்சி, சிறந்த அறிவாற்றல் இவ்விரண்டையும் இடைவிடாமல் பின்பற்றுபவரின் குடி உயர்ந்து விளங்கும்.

Ø  குற்றம் இல்லாமல் தன் குடிப்பெருமையை உயரச் செய்து வாழ்பவரை உலகத்தார் உறவாகக் கொண்டு போற்றுவர்

கயமை

கயவர் குணங்களையும், அவர் தம் பண்புகளையும் வள்ளுவர் கயமை என்னும் அதிகாரம் மூலம் விளக்குகிறார்.

Ø  கயவர்கள் மக்களைப் போலவே இருப்பர்.

Ø  கயவர்கள் தேவர்களைப் போன்றே தாம் விரும்பியச் செயல்களை செய்வர். தெய்வம் நன்மை செய்யும், கயவர் தீமை செய்வர்.

Ø  கயவர்கள் கரும்பைப் பிழிவது போல நெருக்கிப் பிழிந்தால் தான் பயன்படுபவர்.


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post