9TH - NOTES OF LESSON - FEBRUARY - 2ND WEEK

 



நாள்                 :           07-02-2022 முதல்  12-02-2022         

மாதம்                           பிப்ரவரி            

வாரம்               :           பிப்ரவரி  - இரண்டாம் வாரம்                                     

வகுப்பு              :            ஒன்பதாம் வகுப்பு          

 பாடம்               :           தமிழ்                                                     

பாடத்தலைப்பு     :           1. இந்திய தேசிய இராணுவத்தில் தமிழரின் பங்கு

                                              2. சீவக சிந்தாமணி

கரு பொருள்:

·        விடுதலைப் போரில் தமிழர்கள் ஆற்றிய தொண்டினை உணர்ந்து நாட்டுணர்வு பெறுதல்

·        இலக்கியங்கள் காட்டும் நாட்டு வளம் குறித்த செய்திகளை அறிந்து நாட்டை வளப்படுத்தும் ஊக்கத்தைப் பெறுதல்.

உட்பொருள்:

Ø  இந்திய தேசிய இராணுவம் உருவாக்கப்பட்ட அமைப்பின் நோக்கம் அறிதல்.

Ø  இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு அறிதல்

Ø  சீவக சிந்தாமணி பற்றிய குறிப்பு அறிதல்

Ø  சீவக சிந்தாமணி காட்டும் ஏமாங்கத நாட்டின் வளம் அறிதல்

கற்றல் விளைவுகள் :

Ø  விடுதலைப் போரில் தமிழர்கள் ஆற்றிய தொண்டினை உணர்ந்து நாட்டுணர்வு பெறுதல்.

Ø  இலக்கியங்கள் காட்டும் நாட்டு வளம் குறித்த செய்திகளை அறிந்து நாட்டை வளப்படுத்தும் ஊக்கத்தைப் பெறுதல்

Ø  நேதாஜியின் வீரச்செயல்களை போற்றுதல்

 

பாட அறிமுகம்(ஆர்வமூட்டல்)

Ø  நமது இந்திய இராணுவப் படையில் உங்களது தெரிந்த யாராவது இருக்கிறார்களா? நமது இந்திய இராணுவப் படையில் சேர்வதற்கான தகுதிகள் யாவை? என்பன போன்ற வினாக்கள் கேட்டு பாடப்பொருளை அறிமுகம் செய்தல்

Ø  ங்கள் ஊரில் காணப்படும் சுற்றுலாப் பகுதிகள் யாவை? அங்கு சென்றுள்ளீர்களா? என்பன போன்ற வினாக்கள கேட்டு வினாக்கள் கேட்டு பாடப்பொருளை ஆர்வமூட்டல்.

கற்பித்தல் துணைக்கருவிகள்:

                              வலையொளிப்பதிவுகள், உயர்தொழில்நுட்ப ஆய்வகம், பாடநூல், சுண்ணக்கட்டி, கரும்பலகை,செய்தித்தாள் தகவல்கள் முதலியன.

முக்கியக் கருத்துகள் மற்றும் பாடப்பொருள் சுருக்கம்:

       இந்திய தேசிய இராணுவத்தில் தமிழரின் பங்கு

·        மோகன் சிங் என்பவர் தலைமையில் 1942 பிப்ரவரி 15 ஆம் நாள் இந்திய தேசிய இராணுவம் ( ஐ.என்.ஏ ) என்ற படை உருவாக்கப்பட்டது.

·        நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய இராணுவத்தின் பொறுப்பை ஏற்க, 09-07-1943ஆம் தேதி பதவியேற்றார். 

·        இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும்,ஆத்மாவும் தமிழர்கள் தான் – தில்லான். ( இந்திய தேசிய இராணுவப் படைத் தலைவர் )

·        தமிழகத்திலிருந்து பெரும்ப்டையைத் திரட்டி இந்திய தேசிய இராணுவத்திற்கு வலு சேர்த்த பெருமைக்குரியவர் பசும்பொன்,முத்துஇராமலிங்கனார்.

·        டோக்கியோ கேடட்ஸ் – வான்படைப்பிரிவு

·        இந்திய தேசிய இராணுவத்தில் மகளிர் படை உருவாக்கப்பட்டது. இதன் தலைவர் டாக்டர்.இலட்சுமி

·        மலேயாவில் உள்ள தமிழர்களி இரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உள்ளது – சர்ச்சில்

·        மரணத்தைப் பெரியதாக தமிழர்கள் கருதவில்லை

·        விடுதலையினால் உண்டாகும் மகிழ்ச்சியும் சுதந்திரத்தினால் உண்டாகும் மன நிறைவும் வேண்டுமா? அப்படியானால் அதற்கு விலையுண்டு. அவற்றிற்கான விலை துன்பமும்,தியாகமும் தான் - நேதாஜி

சீவக சிந்தாமணி

·        சீவக சிந்தாமணி நூற் குறிப்பு அறிதல்

·        சீவகனின் வரலாற்றை சுருக்கமாக அறிதல்

·        இன்பங்களைத் துறந்து துறவு பூண வேண்டும் என்பது சீவக சிந்தாமணியின் மையக் கருத்து.

·         ஏமாங்கத நாட்டின் வளத்தினை அறிதல்

ஆசிரியர் செயல்பாடு:

Ø    இந்திய இராணுவத்தின் முக்கியத்துவத்தை கூறுதல்.

Ø    இந்திய தேசிய இராணுவம் உருவானதற்கு நோக்கம் பற்றிக் கூறுதல்.

Ø    இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர்களின் பங்கு பற்றி விளக்குதல்.

Ø    தேசத்தின் முக்கியத்துவத்தை விளக்குதல்

Ø    சீவகன் வரலாற்றை சுருக்கமாக காணுதல்.

Ø    சீவக சிந்தாமணியின் நூற் குறிப்பு மற்றும் மையக் கருத்தினைப் பற்றி கூறுதல்

Ø    ஏமாங்கத நாட்டின் வளத்தினை விளக்குதல்

Ø    மனப்பாடப்பாடலை இனிய இராகத்தில் பாடுதல்

மாணவர் செயல்பாடு:

Ø    இந்திய விடுதலைப் போரில் இராணுவத்தின் முக்கியத்துவம் பற்றி அறிதல்

Ø    இராணுவத்தின் முக்கியச் செயல்பாட்டினை உணர்தல்.

Ø    இந்திய இராணுவத்தில் தமிழர்களின் பங்கினைப் போற்றுதல், அவர்களின் வீரத்தை மதித்தல்.

Ø    சீவகசிந்தாமணி பற்றி அறிதல்

Ø    சீவக சிந்தாமணி உணர்த்தும் ஏமாங்கத நாட்டின் வளத்தைப் போற்றுதல்

Ø    மனப்பாடப்பாடலை இனிய இராகத்தில் பாடுதல்.

கருத்துரு வரைபடம்

இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு

 

 

சீவக சிந்தாமணி

 

வலுவூட்டல்:

                                            விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

குறைதீர் கற்றல்:

                                              மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பாடக் கருத்துகளை கூறி குறைத் தீர் கற்றலை

மேற்கொள்ளல்.

மெல்லக் கற்போர் செயல்பாடு:

Ø  இந்திய தேசிய இராணுவம் பற்றி அறிதல்

Ø  இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர்கள் பங்கினை அறிதல்

Ø  எளியத் தொடர்களைப் படித்தல்

Ø  மனப்பாடப்பாடலை இனிய இராகத்தில் பாடுதல்

மதிப்பீடு:

Ø  இந்திய தேசிய இராணுவம் யாருடைய தலைமையில் உருவாக்கப்பட்டது?

Ø  இந்திய தேசிய இராணுவத்தில் நேதாஜி எப்போது தலைமை ஏற்றார்?

Ø  இந்திய தேசிய இராணுவத்தில் மகளிர் படைக்கு தலைவராக இருந்தவர் யார்?

Ø  சீவக சிந்தாமணி நூலின் மையக்கருத்து _____________

Ø  சீவக சிந்தாமணியின் பாட்டுடைத்தலைவன் யார்?

Ø சீவக சிந்தாமணியில் எந்த நாட்டின் வளம் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது?

தொடர்பணி:

·       பாடப்பகுதியில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கான விடைகளை  எழுதிவரச்செய்தல்.

____________________@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@------------------

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post