நாள் : 28- 02 -2022 முதல் 05 - 03 - 2022
மாதம் : மார்ச்
வாரம் : மார்ச் - முதல் வாரம்
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. வருமுன் காப்போம்
2. தமிழர் மருத்துவம்
கருபொருள் :
Ø உடலின்
சிறப்பையும், உடல் ஓம்பும் முறைகளையும் இலக்கியங்கள் வழி அறிதல்
Ø தமிழர்
மருத்துவத்தின் தொன்மையையும் சிறப்பையும் அறிந்து பெருமிதம் கொள்ளுதல்
உட்பொருள் :
Ø உடலை
நோயிலிருந்து காக்கும் வழிமுறைகளை பாடல் வழியாக அறிதல்
Ø நேர்காணல்,உரையாடல்
வடிவில் அமைந்துள்ள கருத்துகளை அறிதல்
கற்றல் மாதிரிகள் :
Ø கரும்பலகை,சுண்ணக்கட்டி,
சொல்லட்டை,கணினி,ஒளிப்பட வீழ்த்தி, வலையொளி காணொளிகள்
கற்றல் விளைவுகள் :
Ø உடலின்
சிறப்பையும், உடல் ஓம்பும் முறைகளையும் இலக்கியங்கள் வழி அறிதல்
Ø தமிழர்
மருத்துவத்தின் தொன்மையையும் சிறப்பையும் அறிந்து பெருமிதம் கொள்ளுதல்
ஆர்வமூட்டல் :
Ø அன்றாடம்
நீ வீட்டில் செய்யும் வேலைகள் என்னென்ன?
Ø உனது
தாத்தா, பாட்டி உட்கொண்ட உணவுகள், உட்கொண்ட முறைகள் தெரியுமா? என உடல் நலத்திற்கான
வினாக்களை வினவி ஆர்வமூட்டல்
படித்தல் :
Ø ஆசிரியர் படித்தல், பின்
தொடர்ந்து மாணவர்களும் படித்தல்.
Ø நேர்காணல் வடிவில் உள்ள
பாடப்பகுதியினை மாணவர்கள் பங்கேற்று நேர்காணல் வடிவிலேயே பாடத்தைப் படித்தல்
Ø முக்கியப் பகுதிகளை அடிக்கோடிடல்
Ø புதிய வார்த்தைக்கான
பொருள் அறிதல்
நினைவு வரைபடம் :
வருமுன்காப்போம்
தமிழர்
மருத்துவம்
தொகுத்து வழங்குதல் :
வருமுன்
காப்போம்
Ø ஆசிரியர் : கவிமணி தேசிக
விநாயகனார்
Ø ஊர் : குமரி மாவட்டம்
– தேரூர்
Ø பணி : 36 ஆண்டுகள் ஆசிரியர்
Ø எழுதிய நூல்கள் : ஆசிய
ஜோதி, மருமக்கள் வழி மான்மியம்,கதர் பிறந்த
கதை, உமர்கய்யாம் பாடல்கள் ( மொழிபெயர்ப்பு நூல் ),
Ø உடலினை உறுதியாக்கும்
வழிமுறைகள்
o
சுத்தமான
இடம்
o
காலை,
மாலை நடைப்பயிற்சி
o
குளித்தப்பின்
உணவு
o
இரவில்
நன்றாய் உறங்குதல்
o
அளவாக
உண்ணுதல்
o
தூய
காற்றினை சுவாசித்தல்
o
நல்ல
நீரைப் பருகுதல்
o
நன்கு
பசித்த பின் உணவு
Ø இவற்றை தினமும் கடைபிடித்தால்
நோய் அணுகாது, நூறு வயது தரும் செயல்கள்.
தமிழர் மருத்துவம்
Ø நேர்காணல் வடிவம்
Ø மனிதர்கள் மருத்துவத்தை
தொடக்கக் காலத்தில் இயற்கைப் பொருட்களைக் கொண்டு அறிந்திருப்பர்
Ø பழந்தமிழர்கள் மூலிகை
மருத்துவம், அறுவை மருத்துவம், மருத்தில்லா மருத்துவம் மற்றும் யோக கலைகள் அறிந்திருந்தனர்.
Ø தமிழர் மருத்துவம் பண்பாட்டுக்
கூறாக ஆகும் போது நாட்டு வைத்தியமாகவும், பாட்டி வைத்தியமாகவும்,மரபு சார்ந்த சித்த
வைத்தியமாகவும், உணவு சார்ந்த மருத்துவமாகவும், பண்பாடு சார்ந்த மருத்துவமாகவும் விரிந்திருக்கிறது.
Ø தமிழர்கள் வேர்,தழை,உலோகங்கள்,
பாஷாணங்கள் போன்றவற்றை மருந்துகளாகப் பயன்படுத்திக் கொண்டனர்
Ø மருந்து என்பது உணவின்
நீட்சி
Ø நடைமுறையில் உள்ள சில
மருத்துவ முறைகள் : சித்த மருத்துவம், ஆயுர் வேத மருத்துவம், யுனானி மருத்துவம், அலோபதி
மருத்துவம்
வலுவூட்டல் :
Ø காணொளி காட்சிகள் மூலம்
பாடப்பொருளை வலுவூட்டல்
மதிப்பீடு :
Ø உடல் நலம் என்பது
______ இல்லாமல் வாழ்தல் ஆகும்
Ø திட்டு முட்டு என்பதன்
பொருள் ____________
Ø நூறு வயது வாழ செய்ய
வேண்டிய செயல்கள் சில வற்றைக் கூறுக
Ø தொடக்க காலத்தில் மனிதர்கள்
மருத்துவத்திற்கு _________ பயன்படுத்தினர்.
Ø உடல் எடை அதிகரிப்பதால்
ஏற்படும் நோய்களுள் ஒன்று ___________
Ø சமையலறையில் செலவிடும்
நேரம் __________ செலவிடும் நேரமாகும்.
குறைதீர் கற்றல் :
Ø பாடநூலில் உள்ள விரைவுத்
துலங்கள் குறியீடு மற்றும் மனவரைபடம் கொண்டு மீண்டும்
பாடப்பகுதியினை மீள்பார்வை செய்து குறை தீர் கற்றலை
மேற்கொள்ளுதல்.
எழுத்துப் பயிற்சி :
Ø பாடப்புத்தகத்தில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதி
வருதல்.
மெல்லக் கற்போர் செயல்பாடு
:
Ø எளிய வகை செயல்களின் சொற்களை எழுதுதல்.
Ø மனப்பாடப்பகுதியினை மனனம் செய்தல்.
Ø ஒரு மதிப்பெண் வினாக்களை படித்தல்
Ø அன்றாடம் மாணவர் செய்யக் கூடிய எளிய வகை செயல்பாடுகளை
வகைப்படுத்துதல்
தொடர் பணி :
Ø “ தன் சுத்தம் “ என்னும்
தலைப்பில் படத்தொகுப்பு உருவாக்குக.
Ø உங்கள் பகுதியில் கிடைக்கும்
மூலிகைகள் மாதிரிகள் திரட்டி அவற்றின் பயன்களை எழுதிக் காட்சிப்படுத்துக.
________________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை