நாள் : 07-02-2022 முதல் 12-02-2022
மாதம் : பிப்ரவரி
வாரம் : பிப்ரவரி - இரண்டாம் வாரம்
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. சொற்பூங்கா
2. எழுத்துகளின் பிறப்பு
கருபொருள் :
Ø ஓரெழுத்து
ஒரு மொழியை அடிப்படையாக் கொண்டு சொல்லாட்சித் திறனை வளர்த்தல்
Ø சொற்களின்
பிறப்பு முறைகளை அறிந்து உரிய முறையில் ஒலித்தல்
உட்பொருள் :
Ø ஓரெழுத்து
ஒரு மொழிகளின் வகைகள் அறிதல்
Ø எழுத்துகள்
பிறக்கும் இடங்களை அறிதல்
Ø தமிழ்
எழுத்துகளை முறையாக ஒலித்தல்
கற்றல் மாதிரிகள் :
Ø கரும்பலகை,சுண்ணக்கட்டி,
சொல்லட்டை,கணினி,ஒளிப்பட வீழ்த்தி, எழுத்துகள் அட்டவணை
கற்றல் விளைவுகள் :
Ø ஓரெழுத்து
ஒரு மொழியை அடிப்படையாகக் கொண்டு சொல்லாட்சித் திறன் வளர்த்தல்
Ø ஓரெழுத்து
ஒரு மொழிகளின் வகைகளை அறிதல்.
Ø எழுத்துகள்
பிறக்கும் இடங்களை அறிந்து முறையாக ஒலித்தல்
ஆர்வமூட்டல் :
Ø தமிழ்
சொல் விளையாட்டு மூலம் பாடப்பொருளை ஆர்வ மூட்டல்.
Ø எழுத்துகளை
ஒலிக்கச் சொல்லி ஆர்வமூட்டல்
படித்தல் :
Ø உரை நடைப் பகுதியினை
நிறுத்தற் குறி அறிந்து வாசித்தல்
Ø புதிய சொற்களை அடையாளம்
காணுதல்
Ø முக்கியப் பகுதிகளை அடிக்கோடிடல்
நினைவு வரைபடம் :
சொற்
பூங்கா
எழுத்துகளின்
பிறப்பு
தொகுத்து வழங்குதல் :
சொற்பூங்கா
Ø எல்லாச் சொல்லும் பொருள்
குறித்தனவே – தொல்காப்பியர்
Ø நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து
ஒரு மொழி – தொல்காப்பியர்
Ø நொ,து என்னும் குறில்களையும்
சேர்த்து நாற்பத்தி இரண்டு - நன்னூலார்
Ø காட்டுப்பசுவுக்கு “
ஆமா” என்று பெயர்
Ø நாட்டிலுள்ள பெருமக்கள்
கூடும் அவை மாநாடு
Ø எழுத்துகளின் பிறப்பு
: 1. இடப் பிறப்பு, 2. முயற்சிப் பிறப்பு
Ø இடப்பிறப்பு : மார்பு,தலை,கழுத்து,
மூக்கு
Ø முயற்சிப் பிறப்பு :
இதழ்,நாக்கு,பல்,மேல்வாய்
Ø உயிர் எழுத்துகள் பனிரெண்டும்
கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
Ø ஆய்த எழுத்து தலையை இடமாகக்
கொண்டு பிறக்கிறது.
Ø வல்லின மெய் பிறக்கும்
இடம் – மார்பு
Ø மெல்லின மெய் பிறக்கும்
இடம் – மூக்கு
Ø இடையின மெய் பிறக்கும்
இடம் - கழுத்து
வலுவூட்டல் :
Ø தமிழ் மொழி எழுத்துகளின்
சிறப்புகளைக் கூறி வலுவூட்டல்
Ø எழுத்துகள் பிறக்கும்
முறையை மாணவர்களுக்கு ஒலித்துக் காட்டி வலுவூட்டல்.
மதிப்பீடு :
Ø செந்தமிழ் அந்தணர் என
அழைக்கப்படுபவர் _____________
Ø அம்பு விடும் கலை
__________ என்றது தமிழ்.
Ø ஓரெழுத்து ஒரு மொழிகளின்
எண்ணிக்கை _____________
Ø எழுத்துகள் பிறக்கும்
இடம் ___________, _________________
Ø முயற்சி பிறப்புக்கு
செயல்படும் உறுப்புகள் யாவை?
Ø ஆய்த எழுத்து பிறக்கும்
இடம் __________
குறைதீர் கற்றல் :
Ø பாடநூலில் உள்ள விரைவுத்
துலங்கள் குறியீடு மற்றும் மனவரைபடம் கொண்டு மீண்டும் பாடப்பகுதியினை மீள்பார்வை செய்து
குறை தீர் கற்றலை மேற்கொள்ளுதல்.
எழுத்துப் பயிற்சி :
Ø பாடப்புத்தகத்தில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதி
வருதல்.
மெல்லக் கற்போர் செயல்பாடு
:
Ø ஓரெழுத்து ஒரு மொழிகளை அடையாளம் கண்டு எழுதுதல்
மற்றும் வாசித்தல்
Ø எழுத்துகள் பிற்க்கும் இடங்கள் அறிந்து எழுத்துகளை
உச்சரித்தல்.
தொடர் பணி :
Ø ஓரெழுத்து ஒரு மொழிகள் இடம் பெறுமாறு ஐந்து தொடர்கள்
எழுதி வருக.
Ø உனது வீட்டில் உள்ளோரின் பெயர்களை எழுதி அந்த எழுத்துகள்
வகை மற்றும் பிறக்கும் இடம் குறித்து எழுதி வருக.
________________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை